நமீதா, நயன்தாரா, ஸ்ரோயாவை கண்டித்து 500 பெண்கள் ஆர்ப்பாட்டம்
திரைப்படத்தில் பெண்களை ஆபாசமாக காட்டுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தின் சார்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகே மனித உரிமைகள் கழகத்தின் சார்பாக 500 பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் திரைப்படங்களில் இடம் பெறுவதையும், பெண்களை ஆபாசமாக படம் எடுத்து காட்டுதவற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நடிகைகள் நமீதா, நயன்தாரா, ஸ்ரேயா, ரகசியா ஆகியோர் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்கிறார்கள் என்று அவர்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
குறைக்காதே குறைக்காதே பெண்களின் ஆடைகளை குறைக்காதே
கெடுக்காதே கெடுக்காதே தமிழ் கலாச்சாரத்தை கெடுக்காதே போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் எழுப்பினர்.
சென்னை:சினிமாவில் ஆபாச உடைகளை நடிகைகள் அணிவதை எதிர்த்தும், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறுவதைக் கண்டித்தும் மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பின் மகளிர் அணியினர் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா பேசியதாவது:சினிமாவில் ஆபாசமாக நடிப்பது எல்லை மீறிவிட்டது. எப்படியும் ஆடை அணியலாம் என நடிகைகள் நினைத்து, மிகவும் கவர்ச்சியாக உடைகள் உடுத்தி நடிக்கின்றனர். இது கலாசார சீரழிவை ஏற்படுத்தும். நடிகைகளின் ஆபாசம், தனியார் “டிவி’ சேனல்களில் ஒளிபரப்பப் படுவதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கிறது. இப்போதைய சினிமாக்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம் பெறுகிறது. இதை சென்சார் குழு எப்படி அனுமதிக்கிறது?.
இனி வரும் சினிமாக்களில் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றால் அந்த படங்ளை சென்சார் குழு அனுமதிக்கக்கூடாது. முன்னணி இளம் நடிகைகளில் சிலரும் மிகவும் ஆபாசமாக நடிக்கின்றனர். அவர்களுக்கு வெட்கம், மானம், இருந்தால் இனி ஆபாசமாக நடிக்கக்கூடாது. ஆபாசமாகவே உடை அணியும் நடிகைகளுக்கு சேலை கட்டும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். தொடர்ந்து அப்படியே நடித்தால் ஷூட்டிங் நடக்கும் இடத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை படிக்கும் போது, பழைய செய்தி ஞாபகம் வருகிறது. ஏப்ரலில் பிரமோத் முதாலிக் என்பவர் சென்னைக்கு வந்திருந்தார். அவரது ஸ்ரீராம்-சேனா, அதற்கு முன்பு பெங்களூரில் இரவில் பப்பில் மது அருந்தி ஆண்களுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளம்பெண்களை அடித்து விரட்டியதால், திடீரென்று அகில இந்திய பெயர் பெற்றார்.கர்நாடகாவுடன் நிறுத்திக்கொள்ளாமல் இவர் தனது கட்சியின் கொள்கைகளை இந்தியா முழுக்க பரப்பத்தான் சென்னை வந்தார். தேவர் கல்யாண மண்டபத்தில் அவர் வந்தபோது, பார்வையாளர்களைவிட, ஊடகத் துறையினர் அதிகமாக வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஆபாசமாக நடிக்கும் தமிழ் நடிகைகளை என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கலுக்கு புடவை அனுப்புவேன் என்றார்!
பெண்கள் சுய புத்தி இல்லாமல் அரை நிர்வாணமாக கூத்தடித்து மது அருந்தி வாந்தி எடுக்கும் கலாசார சீரழிவு நாட்டில் ஏற்பட்டுள்ளது. இவர்களை ஓட்டலுக்குள் புகுந்து நாங்கள் வெளியேற்றியதை தவறாக விமர்சிக்கின்றனர். எங்கள் காசு குடிப்போம். கூத்தடிப்போம். அதை கேட்க நீங்கள் யார்? என்று செருப்பை தூக்கி காட்டும் இவர்களிடம் அஹிம்சையுடன் நியாயம் பேச முடியாது. அதனால் தான் எங்கள் அமைப்பு அடக்குமுறையை கையாண்டுள்ளது.
எங்கள் அதிரடி செயல்கள் காரணமாக கர்நாடகாவில் 75 பப் கள் மூடப்பட்டு விட்டன. அரை குறை ஆடையுடன் கண்ட ஆண்களோடு தன்னுடைய மகள் மது குடித்து ஆடுவதை எந்த தகப்பனும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டான்.அந்த தகப்பன் செய்ய வேண்டிய (அறைய வேண்டிய) வேலையைத்தான் எங்கள் அமைப்பினர் செய்தார்கள்.
ஒரு தாய் தந்தை, இடத்தில் இருந்து பார்த்தால் தான் பெண்கள் பாதை மாறிப்போவதன் வலியும் வேதனையும் புரியும்.
நாங்கள் தாக்குதல் நடத்திய பப் பில் ஆடிக் கொண்டிருந்த பெண்களில் முப்பது பேர் மருத்துவக்கல்லூரி மாணவிகள். அந்த விஷயம் வெளியே வரவில்லை. என்னை கண்டித்து சில பெண் அமைப்பினர் பிங்க் கலர் ஜட்டி அனுப்பினார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு போட்டுள்ளேன்.
நடிகைகளாலும் கலாசார சீரழிவு நடக்கிறது. கவர்ச்சி என்கிற பேரில் கேவலமாக உடை அணியும் திரிஷா. நயன்தாரா, ஸ்ரேயா, பிரியாமணி, நமீதாவுக்கு எதிராக சேலை வழங்கும் போராட்டத்தை நடத்தப்போகிறோம். அந்த நடிகைகளுக்கு அதன் பிறகும் தொடர்ந்து கவர்ச்சியாக ஆடை கட்டி முகம் சுளிக்கும்படி அவர்கள் நடந்தால் அதற்கு வேறு மாதிரி முடிவு கட்டுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிச்சொற்கள்: ஆபாசமாக காட்டு, கற்பு, குஷ்பு, தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், நமீதா, நயன்தாரா, நிர்வாணம், ஸ்ரோயா
12:28 பிப இல் ஒக்ரோபர் 22, 2009 |
நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
http://naamtamilar.wordpress.com
2:18 பிப இல் ஒக்ரோபர் 23, 2009 |
தோழரே,
உமது சிந்தனை ஊட்டதித்திற்கு நன்றி.
நான் சென்னையில் இருப்பவன்.
ஒன்று மட்டும் நிச்சயம், அடிபட்டவனுக்குத் தால் வலி தெரியும்.
உங்கள் உணர்வுகளை வரவேற்று, ஏற்கிறேன்.
ஆனால், நிச்சயமாக, இந்த தளம் அத்தகைய விவாதத்திற்காக இல்ல.