ஆபாச சினிமா போஸ்டர்களை செருப்பால் அடித்து கிழிப்பு!

ஆபாச சினிமா போஸ்டர்களை செருப்பால் அடித்து கிழிப்பு
அக்டோபர் 27,2009,00:00  IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13625

Important incidents and happenings in and around the world

புதுச்சேரி: புதுச்சேரியில், ஆபாச சினிமா போஸ்டர்களை செருப்பால் அடித்து கிழிக்கும் போராட்டம் நடந்தது. ஆபாச சினிமா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளன அமைப்பினர், புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ரத்னா திரையரங்கம் முன் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை, செருப்பால் அடித்து கிழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு, இந்திய மாதர் தேசிய சம்மேளன நகர தலைவர் ராஜலட்சுமி, நகர செயலர் லதா ஆகியோர் தலைமை தாங்கினர். பொது செயலர் சரளா, மாநிலத் தலைவர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்படும் சினிமா படங்களைத் தடை செய்ய வேண்டும். ஆபாச திரைப்படங்களை வெளியிடும் சினிமா தியேட்டர் உரிமையாளரை கைது செய்ய வேண்டும், இளைஞர்களை சீரழிக்கும் ஆபாச திரைப்படங்களை வெளியிடக் கூடாது என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

———————————————————————————————————————————

ஆபாசமாக நடிக்கும் நடிகைகளை என்ன செய்யப் போகிறார்கள்?

அவர்களையும், இதே மாதிரி கவனிப்பார்களா?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: