பூவா தலையா: குஷ்புவா ஸ்ரீபிரியாவா?

பூவா தலையா: குஷ்புவா ஸ்ரீபிரியாவா?

“பூவா? தலையா?’ என்பது ஏதாவது ஒரு நிகழ்வை, குறிப்பாக பெண்களை பாதிக்கும் சம்பவத்தைப் பற்றி இரு சாரார் வரிந்து கட்டிக்கொண்டு வாதாடும் நிகழ்ச்சி மற்றும் அது 8.8.2009 முதல் “கலைஞர்” டிவியில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் என்றேல்லாம் விளம்பரப் படுத்தப் பட்டது .

சர்ச்சையிலுள்ள பெரிய நடிகைகள்: இதற்கு தேர்ந்தெடுக்கப் பட்ட இரண்டு பெரிய நடிகைகள் யார் என்றால், பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள குஷ்புவும், “தினமலர் ரமேஷ் ஒரு Bastard” என்று திட்டி பிரபலமான ஸ்ரீபிரியாவும் தான்! இவர்கள் எப்படி பெண்கள் பிரச்சினைகளை அலசப் போகிறார்கள் என்று தெரியவில்லை!!

நடிகைகளுக்கு சாதாரண பெண்களின் பிரச்சினைகள் தெரியுமா? சாதாரண பெண்கள் மற்றும் அவர்களது நடைமுறை பிரச்சினைகளை அலச, விவாதிக்க, இவர்களுக்கு எந்த தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை. பெண்களின் பிரச்சினைகளை இந்த நடிகைகள் விவாதிப்பது பெண்களுக்கே நல்லதா கெட்டதா என்றும் தெரியவில்லை

kalaignar_tv

 

நாகரிகம் பெண்களுக்கு நல்லதா, கெட்டதா? இன்று 30-10-2009 வெள்ளிக்கிழமை மாலை விளக்கு வைக்கும் 6 முதல் 7 வரை, இந்த இரண்டு நடிகைகளும் “நாகரிகம்” பற்றி விவாதித்து கொட்டம் அடித்தது ஒரு நிகழ்ச்சி போலவே இல்லை. சிறுப்பிள்ளைத் தனமாக, முதிர்ச்சியற்ற, நாகரிகமற்ற அந்த நிகழ்ச்சி அவ்வளவு படுமட்டமாக இருந்தது. இருவரும் போலித்தனமாக பேசுவது, கை, உடம்புகளை ஆட்டுவது முதலியன படு கேவலமாக இருந்தது.
Kushbo

 

குஷ்புவின் கோபம்: ஒரு பெண் சில நாகரிகமற்ற போலி செயல்களை விவரித்தபோது, குஷ்பு நிஜமாகவே தன்னைத் தாக்குவதாகக் கொண்டு, ஆடி காண்பித்து, கைகளை ஆட்டிக் கொண்டு, அப்பெண்ணின்மீது பாய்ந்து சென்றது வேடிக்கையாகவே இருந்தது. இத்தகைய தரமற்ற நிகழ்ச்சிகளை “கலைஞர்” தொலைக் காட்சி தேர்ந்தெடுத்து அதுவும் வெள்ளிக் கிழமை மாலை ஒளிப்பரபுவது  படு அருவருப்பாக இருந்தது, இருக்கிறது.

ஸ்ரீபிரியா

 

குஷ்பு ஏன் குதிக்கிறார்? குஷ்புவின் வாதம் எந்தவித பிடிப்பும், கட்டுப்பாடும் இல்லாமல், பேசவேண்டுமே என்ற தோரணையில், பேசிக்கொண்டே இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், கோர்வையாக எப்படி இந்திய பெண்கள் நாகரிகமன உடையில் இருக்கவேண்டும் என்று மஹாத்மா காந்தியை மேற்கோள் காட்டி பேசியபோது, குஷ்பு கோபம் கொண்டு, மறுபடியும் பாய்ந்தார். அப்பொழுது, அந்த பெண்மணி, இது உங்களுக்கோ அல்லது எனக்கோ இடையில் இருக்கின்ற பிரசினையாகக் கொள்ளவேண்டாம், எல்லா பெண்களின் பொது பிரச்சினையாகும், என்றார்.

தாய்பாலை நேராக தரவேண்டுமா, ஃபிரிட்ஜில் வைத்துத் தரலாமா? அப்பொழுது அப்பொழுது, தேவையானபோது, சமைத்து சாப்பிட்டால்தான் நல்லது என்றால், அதற்க்கும் குதர்க்கமாக வாதம் எழுப்பப்பட்டது பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு, எங்கு தமது அழகு போய்விடுமோ என்று தாய்பாலை கொடுப்பதையே நிறுத்தி விட்டார்கள் என்று சுட்டிக் காட்டியபோது, எதிர் அணி பெண்மணி, நேரமில்லாததால் பெண்கள் “பம்ப்” பண்ணி தாய்பாலை எடுத்து ஃபிரிட்ஜுகளில் சேகரித்து வைப்பதகாவும், அது குழந்தைகளுக்குக் கொடுப்பதாகவும் பதில் அளித்தார். அப்படி கொடுத்தால் அது பெற்ற தாயே கொடுப்பது போல இருக்குமா என்று யோசித்து பார்க்கவில்லை. இதே மாதிரி செயற்கையாக எல்லாவற்றையும் பெண்கள் செய்வார்களா?

பெண்கள் டைட்டாக ஜீன்ஸ் போடலாமா? டைட்டாக பெண்கள் ஜீன்ஸ் போட்டால் பிற்காலத்தில் பல ஆரோக்யப் பிரச்சினைகள் வருவதாக, ஒரு பெண்மணி குறிப்பிட்டார். குஷ்புவோ கிண்டலாக, ஸ்டைல் காட்டிக் கொண்டிருந்தார். ஸ்ரீபிரியா உண்மையிலேயே அவ்வாறு அணிவது கெடுதலா என்று கேட்டபோது, அப்பெண்மணி, டாக்டர் சொன்னதாகக் கூறினார். ஜீன்ஸ் மற்றும் மற்ர உடைகளை பெண்கள் :டைட்டாக” போடுவதால், நரம்பு பிரச்சினைகள் மற்றும் அதனுடன் சம்பந்தம் உடைய பிரச்சினைகள் வரும் என்று கூறினார்.

Advertisements

ஒரு பதில் to “பூவா தலையா: குஷ்புவா ஸ்ரீபிரியாவா?”

 1. M. Nachiappan Says:

  Really, these actresses make the audience feel sick.

  In Tamil, what others used to say “Kuzha-adi-sandai” – the quarrel at water-fetching place, is enacted through the idiot box with invited women.

  Perhaps, it is so nauseating that people may break the TVS one day!

  Psychologically, this type of shows would only rouse the aggressive mentality of women and they would start arguing and fighting with others unnecessarily.

  Nowadays, we note that women always shouts or asks questions instead of answering or responding in a meaningful or acceptable manner. That is why in many families, and even among the husband-wife relationships, the understanding and mutual respect of other feelings are violated leading to fight and break the relations.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: