கருணாநிதியை சந்தித்தார் நடிகை குஷ்பு!

குஷ்புவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுடன் நடிகை குஷ்பு சந்திப்பு

சென்னை, நவ.18  தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை குஷ்பூ இன்று துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் எஸ்.வி. சோலைராஜா, இணைச் செயலாளர் இ.ராமதாஸ், பொருளாளர் டி.வி. சங்கோர் ஆகியோரும் வாழ்த்துப் பெற்றனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

stalin-kushbu

தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை குஷ்பூ துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

 

மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் எஸ்.வி. சோலைராஜா, இணைச் செயலாளர் இ.ராமதாஸ், பொருளாளர் டி.வி. சங்கோர் ஆகியோரும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்தார் நடிகை குஷ்பு.

கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. தொடர்ந்து நடிகைகள் கருணாநிதியைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது போலும்!
Kushbu_with_Karu
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் நடிகை குஷ்பூ. அவ்வளவுதான், இனி செய்தி வாசித்தாலும் ஆச்சரியப்படுவத்ற்கு ஒன்றும் இல்லை. கூடிய சீக்கிரம் கலைஞர் டிவி கவர்ச்சிகரமாகிவிடும்!

இதையடுத்து மரியாதை நிமித்தமாக கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் என முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குஷ்புவுடன் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் துணைத் தலைவர் எஸ்.வி.சோலைராஜா, சுஜாதா விஜயகுமார், பொதுச்செயலளார் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, குட்டி பத்மினி உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Advertisements

2 பதில்கள் to “கருணாநிதியை சந்தித்தார் நடிகை குஷ்பு!”

 1. M. Nachiappan Says:

  Aha!

  The Big Actress now wants to be nig and accordingly becoming a leader and meeting the Big Boss!

  Power corrupts and absolute power corrupts politicians, but with the cine actresses, we do not know what would happen?

  It is also intriguing as to why the actresses lining up and meeting this man – as a CM, or owner of publicity empire or otherwise?

 2. vedaprakash Says:

  மோசடி…சின்னத் திரை விருதை திருப்பிக் கொடுத்த ராதிகா!
  புதன்கிழமை, நவம்பர் 18, 2009, 13:53 [IST]
  http://thatstamil.oneindia.in/movies/interview/2009/11/radhika-returns-best-actress-award.html

  விருதுக்கான நடிகர் நடிகை பரிசீலனையில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி, தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதினை திருப்பி அனுப்பியுள்ளார் ராதிகா. மேலும் இது தொடர்பான தனது படங்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இது தொடர்பாக தமிழ்நாடு [^] சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கு நடிகை ராதிகா கண்டன கடிதம் அனுப்பியுள்ளார். இன்று அதை தனி அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.

  அறிக்கையில் ராதிகா கூறியிருப்பதாவது:

  கடந்த 14 ந்தேதி மாலை சென்னை காமராஜர் அரங்கில் பெஸ்ட் (சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு) சார்பில் நடந்த விருது [^]கள் வழங்கும் விழாவில் பல சங்கடமான நிகழ்வுகள் நடந்தேறின. அது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் மனதையும் பெரிதும் பாதித்துள்ளது.

  சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர் [^], கதை, வசன கர்த்தா வரிசையில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவே இல்லை. என்ன காரணத்துக்காக அவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டன? என்பதும் தெரியவில்லை. மேற்படி விழாவில் கலந்து கொள்ளமாட்டார்களோ என்ற சந்தேகத்தின் பேரில் சில பேரிடம், குறிப்பாக நடிகர், நடிகைகளிடம் உங்களுக்குத் தான் விருது தரப்போகிறோம் என்று உறுதியளித்து விழாவிற்கு வரவழைத்ததாக அறிகிறேன்.

  தகுதியும், திறமையும் படைத்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் விழாவிற்கு வரவழைப்பதற்காகவே பலரையும் அழைத்து அதைப் படம் பிடித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காட்ட முனைவது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.

  எனவே தகுதி, திறமையின் அடிப்படையில் எனக்கு விருது வழங்கப்பட்டு இருந்தாலும் இதே போல் திறமை வாய்ந்த பலபேர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகைக்கான விருதை ஏற்றுக்கொள்ள என் மனசாட்சி விரும்பவில்லை.
  இந்த தவறுகள் மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும் பெஸ்ட் அமைப்பின் எதிர்கால நலனை கருதியும் இது போன்ற நிகழ்வுகள் மேலும் தொடரக் கூடாது என்ற நல்ல எண்ணத்தோடும் எனக்கு வழங்கிய விருதை உங்களிடமே திருப்பி ஒப்படைக்கிறேன்.

  மேற்படி விருது வழங்கிய நிகழ்ச்சியில் நான் இடம் பெறும் எந்த ஒரு புகைப்படம் அல்லது படக்காட்சிகள் உள்பட எவையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்…” என்று ராதிகா கூறியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: