சினிமாவை பிரதான தொழிலாக அறிவிக்க வேண்டும்!

சினிமாவை பிரதான தொழிலாக அறிவிக்க வேண்டும்
First Published : 20 Nov 2009 10:43:00 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=157088&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

சென்னை, நவ. 19: சினிமாவை பிரதான தொழிலாக அறிவிக்க வேண்டும் என இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு மற்றும் ஊடகம் பொழுதுபோக்கு மாநாடு கோரிக்கை வைத்துள்ளது.  சென்னையில் நடைபெற்று வந்த இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு மற்றும் ஊடகம், பொழுதுபோக்கு வர்த்தக மாநாட்டின் இரண்டாம் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை முடிவுற்றன.  இதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதன் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியதாவது: “”இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு மற்றும் ஊடகம் கேளிக்கை தொழில் வர்த்தக கூட்டமைப்பு சென்னையிலும் தொடங்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தியதற்கு இப்போது பலன் கிடைத்து நிறைவேறியுள்ளது. இம்மாநாட்டில் திரைப்படத் துறையின் வளர்ச்சி குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சில கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முன்வைத்துள்ளோம்.  இந்தியாவில் சினிமா என்ற தொழிலை பிரதான தொழிலாக அறிவிக்க வேண்டும். பழைய மற்றும் புதிய திரைப்படங்களை பாதுகாக்க டிஜிட்டல் முறையை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் கலையை எத்தனை வருடங்கள் கடந்தாலும் பாதுகாக்கலாம். திரைபடங்கள் அனைத்தும் பதிப்புரிமை செய்யப்பட வேண்டும். அதற்காக ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார் கமல்ஹாசன்.  இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

திரைப்பட கேளிக்கை வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை: அமைச்சர் அம்பிகா சோனி
First Published : 19 Nov 2009 10:56:00 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=156656&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் ஊடக மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாட்டை சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைத்து விழா தொடர்பான புத

சென்னை, நவ. 18: “திரைப்படத்துறையினருக்கான கேளிக்கை வரியை மேலும் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது’ என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.  இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் ஊடக மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாட்டில் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி பேசியது:  தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் சினிமா துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதிகாலை 3.30 மணிக்கு விழித்திருந்து பணியாற்றும் முதல்வரை தமிழகம் பெற்றிருக்கிறது.  தென்னிந்தியாவில் கே.பாலசந்தர், அடூர்கோபாலகிருஷ்ணன், கமல், மம்மூட்டி, மோகன்லால், ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் போன்ற திறமைவாய்ந்த சினிமா ஜாம்பவான்கள் உள்ளனர்.  தென்னிந்திய சினிமாக்கள், உலக அரங்குக்கு இந்திய சினிமாவை எடுத்து செல்கிறது.  சினிமா துறைக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. கேளிக்கை வரி 70 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதை மேலும் குறைக்கவும் பரிசீலித்து வருகிறோம்.  திரைப்படத் துறைக்கு வரிச்சலுகை உள்பட பல சலுகைகளை வழங்குவது தொடர்பாக நிதியமைச்சகத்திடம் பல கோரிக்கைகளை வைத்துள்ளோம்.தில்லியில் டிச.5-ல் கூட்டம்:   திருட்டு விசிடிக்களால் திரைப்படத் துறைக்கு பல இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. திருட்டு விசிடியை ஒழிக்க தமிழ்நாடு தனி சட்ட மசோதா கொண்டு வந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.  இதுபோல மற்ற மாநிலங்களும் திருட்டி விசிடி சட்ட மசோதாவைக் கொண்டு வர வேண்டும். திருட்டு விசிடி ஒழிப்பு குறித்த கூட்டம் தில்லியில் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.டிவி நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு: நாட்டில் 500-க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் உள்ளன. டிவி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கைக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. நமது கலாசாரம், பண்பாட்டைக் கருத்தில் கொண்டு டிவி சேனல்கள் சுய கட்டுப்பாட்டுடன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும். டிவி நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வருவது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்.  அடுத்து வானொலி முக்கிய சேவையாற்றி வருகிறது. எஃப்.எம். வானொலி சேவை சாமானிய மக்களையும் சென்றடைந்துள்ளது. இந்திய எல்லையையொட்டியுள்ள மக்களுக்கும் வானொலி சேவை அளிப்பதற்காக ஒலிபரப்பு சாதனங்கள் நிறுவ ரூ.100 கோடி முதலீடு செய்துள்ளோம்.அனிமேஷன் பயிற்சி மையம்:   சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் அனிமேஷன் துறையின் வளர்ச்சி நன்றாக உள்ளது. இத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. அதிகளவில் நிபுணர்கள் உருவாக வேண்டும். தேசிய அனிமேஷன் பயிற்சி மையத்தைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். எந்த இடத்தில் தொடங்குவது என்பது பற்றி இன்னமும் திட்டமிடவில்லை என்றார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: