சினிமா ஒரு தொழிற்துறையா, ஆலைத்தொழிலா, மாயைத்தொழிலா?

சினிமா ஒரு தொழிற்துறையா, ஆலைத்தொழிலா, மாயைத்தொழிலா?

சினிமா ஒரு தொழிற்துறையாகக் (Industry) கருதப்படவேண்டும், வங்கிகள் படங்கள் எடுக்க கடன் கொடுக்கவேண்டும், அரசாங்கம் வரிச்சலுகைகள் (Tax exemptions) அளிக்கவேண்டும் என்றெல்லாம் கோடிக்கணக்கில் செல்வத்தில் புரளும் ஆடம்பர வாழ்க்கை வாழும் பணமுதலைகள் படோபடமான விழாக்களில் கோரிக்கைகளை[1] முன்வைக்கின்றனர்! அதில் ஒரு ரூபாய் அரிசி விற்கும் கருணாநிதியும், பல பெண்களுடன் உறவாடும் “உலகநாயகன்” முதலியோரெல்லாம்[2] இருக்கின்றனர்! சினிமா பொதுமக்களுக்கு கேளிக்கைத் தந்தது உண்மைதான், கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையினைக் கெடுத்ததும் உண்மைதான்! தொழிற்துறையில் சலுகைகளைத் தருவது சிறு-மற்றும்-குருந்தொழிற்சாலைகளுக்குத் தான். ஆனால் மதிப்புக்கூட்டிய வரிமுறை (VAT) மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் சட்டம் (GSA) வரும்போது, எல்லா சலுகைகளும் திரும்பபெறப்படும். அதாவது எல்லோருமே வரிவலைக்குள் சிக்கிவிடுவர். அப்படியிருக்க இந்த பெரிய மீன்கள் ஏன் தப்பிக்க முயல்கின்றன என்று தெரியவில்லை.

பணப்புழக்கம் அதிகமாக இருந்தால் ஆலைத்தொழிலாகிவிடுமா? எர்னெஸ்ட் & யங்-ஃபிக்கி (Ernst & Young-Ficci report) அறிக்கையின்படி[3] தென்னிந்திய சினிமாவின் வருவாய் ரூ.17.3 பில்லியன் அதாவது 1730 கோடிகள்! தலையே சுற்றுகிறது. இதில் தெலுங்கு-தமிழ் பங்கு 45%, மலையாளம் 8%, கன்னடம் 2%. அயல்நாட்டு வருவாய் 8-10% ஆகும்[4]. இது இந்தியாவின் சினிமா வருமானத்தில்[5] 75%! நாட்டில் பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும், விலைவாசி ஏற்றங்கள் மக்களது உண்ணும் உணவை பாதித்தாலும், தென்னிந்திய சினிமா மின்னுகிறது[6] என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள்! எப்படி சீரழிவில் ஆந்திரம், தமிழகம், மலையாளம் மற்றும் கன்னட சமூகங்கள் உள்ளன என்னும் உண்மையை இதிலிருந்தே தெரிந்து கொள்லலாம்[7]. ஆகையால்தான் இம்மாநிலங்களில் சிறுவர்கள், பெண்கள்மீதான குற்றங்களும் அதிகமாக நடைபெறுகின்றனவா என்பது ஆய்விற்குரியது[8].

தொழிற்சாலை: இதற்கான விவரணம் ஒவ்வொரு சட்டத்திலும் வேறுபடினும், பொதுவாக இந்திய தொழிற்சாலைகள் சட்டம்[9], 1948, பிரிவு 2(m)ன் படி, தொழிற்சாலை என்பது உற்பத்திக்கான முறையில் ஏதேனும் ஒரு இடத்தில் சக்தி (Power) பயன்படுத்தப்பட்டு 10 வேலையாட்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால் அல்லது சக்தி பயன்படுத்தப்படாமல் 20 அல்லது அதற்கு மேற்பட்டவர்களையும் வேலைக்கு அமர்தப்பட்டிருந்தால் அல்லது தொழிலாளர்களாகக் கொண்டிருந்தால் அந்த இடம் / வளாகம் தொழிற்சாலை எனப்படுகிறது. அவ்வாறே, தொழிற்துறை வளாகம் என்பது தொழிற்சாலை இயங்கும் கட்டிடம், அதன் சுற்றுச்சுவர், அதற்குள் இருக்கும் திறந்த காலி இடங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கும் வகயில் பொருள் கொள்ளப்படும். ஆகவே, இத்தகைய விவரணங்களில் எப்படி சினிமா வரப்போகிறது என்று தெரியவில்லை! “சூட்டிங்” எடுக்கும் இடம் எல்லாம் “ஃபாக்டரி” என்று சட்டம் திருத்தப் பட்டுவிடுமா?

சினிமாத்துறை தொழிற்சாலைப் போன்றதா? தொழிற்துறை என்பதற்கு சினிமா எந்த உருப்படியான, தேவையான, அத்தியாவசியமான பொருளை / பொருட்களை மக்களுக்குத் தருகிறது? யாதாகிலும் பொருளை உற்பத்தி செய்கிறதா? இல்லை, பிறகெப்படி அது ஒரு தொழிற்சாலையாகக் கருத /  மதிக்கமுடியும்? சரி இக்காலத்தில் “சேவை”ப் பற்றியும் அதிகமாக தொழிற், வர்த்தக, வியாபாரத் துறைகளில் பேசப்படுகின்றது. அத்தகைய “சேவை”களுக்கு சேவை வரியும் விதிக்கப்படுகிறது. அதனால் அவை அவ்வாறே சட்டரீதியாக அங்கீகப் படுகிறது.

ஆனால், சினிமா மக்களுக்கு, சாதாரண பொதுமக்களுக்கு என்ன செய்கிறது, என்ன சேவை செய்கிறது? பரிந்துரைக்கும் விற்ப்பன்னர்கள்தாம் பதில் சொக்கவேண்டும்! தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் மக்களுக்கு உதவுகின்றன. அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதால் அவையில்லாமல் மக்கள் வாழ முடியாது என்ற நிலையுள்ளது. இங்கும் பொருள் / பொருட்கள் என்பது “உற்பத்தி” என்ற சொல்லுடன் பிணைந்திருப்பதுடன் அவை சாதாரணமாக சந்தையில் எடுத்துவரப்பட்டு விற்க்கப்படும் அல்லது வாங்கப்படும் என்றத் தன்மையுடன் கொண்டாதாகிறது. சினிமாத்துறையில் அப்படி என்னப்பொருளை வாங்கிவந்து, சந்தையில் மக்கள் உபயோகத்திற்காக கொண்டுவந்து விற்கிறார்கள்?

சினிமாப் பார்ப்பவர்கள் நுகர்வோர்கள் (consumers) ஆவார்களா? சினிமா தொழிற்சாலையானால், பொருட்களை உற்பத்தி செய்யும் பட்டறையானால், மக்கள் நுகர்வோர்கள் ஆவார்கள். ஆனால், மக்கள் என்றுமே அத்தகைய நிலையில் வைக்கப் படவில்லையே? படங்கள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. அவை ஓடினாலும், ஓடாவிட்டாலும் கவலையில்ல என்ற நிலை ஏற்கெனவே வந்துவிட்டது. கருப்புப்பணத்தை வெள்ளையாக்க ஏற்கெனவே முதலைகளும், கழுகுகளும் இத்துறையில் இறங்கிவிட்டனர்[10]. அரசே படம் எடுக்க பணம் கொடுத்தால் என்னவாகும் என்பது “பெரியார்” விஷயத்தில் பல உண்மைகள் வெளிவந்தன. அங்கு பொருள் (அதாவது மேலேக் குறிப்பிடப்பட்ட பொருள் மற்றும் பொருள் படத்திற்கான அர்த்தம்) இருந்ததோ இல்லையோ, அப்படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என வற்புறுத்தப்பட்டு, குறிப்பாக பள்ளி மாணவர்கள் அத்தகைய வற்புறுத்துதல்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள்! ஆகவே, மக்கள் நுகர்வோர்கள் என்ற முறையில் எந்த பொருளையும் பெறுவதில்லை, பலனை அடைவதில்லை. இன்றைய நிலையில் பெண்களும், சிறுவர்களும் நிறைய அளவில் கெட்டுப் போகிறார்கள், சீரழிகிறார்கள், … … என்றுதான் தெரிகின்றது. அத்தகைய தீங்குவிளைக்கும் “பொருளை”த் தான் தாங்க்கள் விற்க்கைன்றனார் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்களா?

சினிமா – பொருளா, சேவையா? உலகம் முழுவதிலும், இப்பொழுது பொருட்கள் மற்றும் சேவைகள் என மக்களுக்கு உபயோகமுள்ளவைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கமும் அவ்வாறே அத்தகையற்றை பற்பலத் தொகுதிகளாகப் பிரித்து பட்டியல் இட்டு அதற்கேற்றமுறையில் வரி வசூலிக்கிறது. ஆகவே சினிமா ஒன்று பொருள் அல்லது சேவை என்ற நிலையில் இருக்கவேண்டும். அடுத்த நிதியாண்டில் உள்ள சட்டங்கள் எல்லாம் மாற்றப்பட்டு, பொதுவாக பொருட்கள் மற்றும் சேவைகள் சட்டம் (Goods and services Act) என்று அறிமுகப்படுத்தி, உடனடியாக அமூல் படுத்துவதாக உள்ளது. அந்நிலையில் ஏன் இவர்கள் தங்களது சக்திகளை முழுஅளவில் பிரயோகித்து கிளம்பி விட்டார்கள்? அவர்களது உற்பத்தியில் ஏன்ன பொருள் உள்ளது என்று அறியப்படவேண்டும். பிறகு, அவை புலன்களால் அறியமுடியும் (Tangible) அல்லது அறியமுடியாது (intangible) என்ற நிலையும் அறியப்படவேண்டியுள்ளது. ஏற்கெனவே சினிமா சம்பந்தப் பட்டுள்ள தொழிற்நுட்பங்கள், அவற்றின் சேவை முதலியன “தொழிலாக”த்தான் பாவிக்கப்படுகின்றன.

சமூகத்திற்கு உபயோகப்படுகிறதா, அத்தியாவசியமாக இருக்கிறதா? எந்த தொழிலும், தொழிற்சாலையும் மக்களுக்கு வேண்டிய பொருட்களை உற்பத்திச் செய்கின்றது. அத்தகைய உற்பத்தி பல சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இருக்கின்றது. உற்பத்திச் செய்யப்படுகின்ற பொருட்கள் தர-நிர்ணய கொள்கைகளுக்கு, சரத்துகளுக்கு, குணாதிசயங்களுக்கு ஒவ்வாமல் உற்பத்தி செய்யப்பட்டால் தொழிற்சாலைகளில் அவை கழித்துக் கட்டப்படும். சினிமாத்துறயில் அவ்விதம் முடியுமா? இங்கென்ன அப்படி தரக்கட்டுப்பாடு உள்ளது? “திரைப்படங்கள்” உற்பத்திப் பொரொருட்கள் ஆகுமா? அவை நல்லது, கெட்டது, ஏற்புடையது, ஏற்புடைதல்ல என்றெல்லாம் தரம் பிரிக்கமுடியுமா? இல்லையென்றே சொல்லிவிடலாம்!

பில்லியனர், மில்லியனர், கோடீஸ்வரர் ஏன் வரிச்சலுகைக் கேட்கவேண்டும்? வரிச்சலுகைக் கேட்பர்கள் யாரென்று பார்த்தால், பிச்சைக்காரர்களோ, ஏழைகளோ, ஓட்டாண்டிகளோ, நடுத்தர வருமானப் பிரிவினரோ அல்லர்! பில்லியனர், மில்லியனர், கோடீஸ்வரர்கள்தாம். அவர்களுக்கு எதற்கு சலுகை? வங்கியில் கடன் எல்லாம்? ஆமாம், மக்கள் பணத்தில் செலவு செய்து, மக்களிடமே பணத்தையும் உறிஞ்சி, நஷ்டம் வந்தால் மக்கள் தலையில் கட்டிவிட்டு ஏய்த்துவிடலாம் என்ற எண்ணம்தான்! சினிமா கம்பெனி[11] ஆரம்பித்து, பங்குவணிகத்தில் இறங்கி, நஷ்டம் கண்டு தற்கொலை செய்துகொண்ட ஜி. வெங்கடேஸ்வரனை ஞாபகம் இருக்கிறதா? பிறகு அத்தகைய கம்பெனிகளே ஆரம்பிக்காமல், குடும்ப கம்பெனிகள் வைத்துக் கொண்டு எப்படி பிக்-பாஸ், பிக்-பீ முதல் ஒரு ரூபாய் அரிசி வரை வெற்றிகரமாக இருக்கமுடிகிறது?

வரி-ஏய்ப்புகளுக்கு ஒத்திகையா? ஞாபகம் இருக்கிறதா? அமிதாப் பச்சன் திவாலா ஆகும் நிலையில் இருந்தார். வருமானத் துறைக்கு கோடிக்கணக்கில் வரி நிலுவை. ஆனால் பெங்களூரில் நடந்த உலக அழகிப் போட்டி டென்டர் அவர் கம்பெனிக்குக் கிடைக்கிறது. கோடி,களை அள்ளுகிறார், வரியைக் கட்டுகிறார். இப்பொழுதுகூட அத்தகைய விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்! உச்சநீதி மன்றத்திலிருந்து[12] வரிஏய்ப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்! “பிக்-பீ” ஆகிறார். மக்கள்தாம் பாவம். பீ-பீ ஊதிக்கொண்டு இருக்கிறார்கள்! வரி ஏய்ப்பு செய்பவர்கள் (Tax-evaders), பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் / பதுக்கல்காரர்கள்  (hoarders), கடத்தல்பேர்வழிகள் (smugglers) போன்றவர்கள் போல, சினிமாத்துறையில் ஏற்கெனவே பல வரி-ஏய்ப்புவாதிகள் உள்ளனர்! அவர்களால் மேன்மேலும் பொருளாதார சீரழிவுதான் ஏற்படும். ரூ. 42,152 கோடிகள் வரிப்பணம் தேவையில்லாத வழக்குகளில் சிக்கியுள்ளதாக 1009-10 நிதிநிலை அறிக்கைக்கூறுகின்றது[13]. இவ்வாறு வழக்குப் போட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் நடிக-நடிகையர், மற்ற திரைத்துறையினர் தாம்! சட்டரீதியாக ஒரு இடத்திலிருந்து மேல் முறையீடு என்று இழுத்துக் கொண்டே பலனை அடைந்து விடுகின்றனர்.

மல்லையாக்களுக்கும், கமல்ஹாசன்களுக்கும் எதற்கு சலுகைகள்? இவ்வாறு வெட்கமில்லாமல் சலுகைகள் கேட்பது யார் என்று பார்த்தால் மல்லையாக்களும், கமல்ஹாசன்களும்[14] தான்! இவர்கள் என்ன ராப்பிச்சைக்காரர்களா, ஓடேந்திகளா, பஞ்சைப்பராரிகளா? பிறகு இவர்கள் எதற்கு வங்கிக்கடன்கள், வரிச்ச்சலுகைகள் எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டனர்? முன்பு விமானத்துறையில் பிரச்சினை என்றவுடன் அத்தகைய விமானத்துறை நிறுவனங்களுக்கு உதவ அரசு வரவேண்டும் என்றெல்லாம் பாட்டுப் பாடினார்கள். மல்லையா போன்ற பணமுதலைகளால் தமது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லையாம்! பைலட்டுகள் வந்துவிட்டார்கள் தெருக்களில், ஏர்ஹோஸ்டஸுக்களுடன்! உடனே, அதற்கு ஒத்து ஊத ஊடங்கங்கள் வேறு ஜால்ரா போட்டன! பல விமான நிறுவனங்களின் முதலாளிகள்தாம், அத்தகைய டிவி செனல்களுக்கும் முதலாளிகளாக இருக்கின்றார்கள் என்பது வேறு உண்மை! ஆகவே அவர்களது லாபங்கள் பெருக சலுகைகள் கொடுப்பதனால், யாருக்கு நஷ்டம்? அப்பண இழப்பீடு எவ்வாறு சரி செய்யப்படும்? சாதாரண மக்களிடமிருந்துதானே வரியாக உறிஞ்சப்போகிறார்கள்?

பாவத்தின் சம்பளம் மரணமானால், சினிமாவின் பாவம் விபச்சாரம் ஆகின்றது! சினிமாவினால் விபச்சாரம் பெருகுகின்றது என்ற உண்மையினை யாராலும் மறுக்கமுடியாது. நடிகைகளில் கற்புள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆகவே, சமூகநோக்கில் பார்த்தாலும், சமூகசீர்கேடுகளை உற்பத்தி செய்வதில், சினிமா முதலிடம் வகிக்கிறது. ஏற்கெனவே கோடிக்கணக்கான பெண்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பாதித்து இருக்கும் நிலையில், சினிமாவின் சமூக நன்மைக்கு என்ன பங்கு என்று சோதித்தால், ஒன்றும் இல்லை. இந்த அழகில் குஷ்பு[15] போன்ற நடிகைகள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள், “கல்யாணத்திற்கு முன்பே பெண்கள் கற்புள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கமுடியாது”, என்று! ஆனால், புவனேஸ்வரி சொன்னபோதுமட்டும் பொத்துக்கொண்டு வந்துவிட்டது அனைவருக்கும்! ஏன் புவனேஸ்வரி பெண் இல்லையா, நடிகை இல்லையா? இவர்கள் எல்லாம் என்ன உற்பத்தி செய்கிறார்கள் மக்களுக்கு? அந்நிலையில் “விபச்சாரத்தையே” தொழில் / தொழிற்துறை என்று அறிவிக்க இந்த மேதாவிகள் முயற்ச்சி செய்யலாமே?

அரசியல்வாதி-நடிகர்-தொழிற்துறை கொள்ளைக்கூட்டு: இந்த உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் என்றெல்லாம் வந்தாலும் வந்தத்அர்து, கூட நிறைய மயக்கங்களும் வந்துள்ளன. இந்த அரசியல்வாதி-நடிக.நடிகையர்-தொழிலதிபதி கூட்டு மிகவும் பெரிய மயக்கமான கொள்ளைக்கூட்டாகும். ஆகையால்தான் இவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் ஆதரித்து வருகின்றனர். ஊடகங்கள் மூலம் பிரச்சாரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடைசியில் பல வழிகளில் பாதிக்கப்படப்போவது, கஷ்டப்படப்போவது சாதாரண மக்கள்தாம். அரிசி, பருப்பு, காய்கறி எல்லாம் இனிமேல் சின்னத்திரை, பெரியத்திரைகளில் பார்த்துக் கொண்டு உயிர்விடவேண்டியதுதான். ஆப்பிரிக்க நாடுகளைவிட பஞ்சம் ஏற்பட்டு இந்தியர்கள் சாக ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கு இல்லை. அந்த சாவிலும் டென்டர் விட்டு காசு சம்பாதிக்க வழி உண்டா என்றுதான் இந்த கூட்டம் பார்க்கும்.

இந்திய சமுதாயம் காக்கப்படவேண்டும்: இன்று இந்திய சமுதாயத்தின் மீதான தாக்குதல்கள் பற்பல வழிகளில், நாடுகளிலிருந்து, பற்பல சித்தாந்தங்கள் பேசிக்கொண்டு, பற்பல முகமூடிகளில் மறைந்துகொண்டு தாக்கியழிக்கத் துணிந்துள்ளனர் இந்திய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியம் என்று பேசினால், பழமைவாதி, இந்துத்வா-வாதி, என்ற முத்திரைகள் குத்தப்பட்டு, தங்ளது முகமூடிகளை கழட்டக் கூட வக்கில்லாத கூட்டங்கள் லட்சக் கணக்கில் கிளம்பிவிட்டன. இந்நிலையில் இந்திய மக்களே அவர்களை அடையாளம் கண்டுகொண்டு தங்களைக் காத்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலயும் ஏற்பட்டுள்ளது. விலைவாசி பிரச்சினை மறைக்க, வரப்போகும் சீரழிவுகளை மறைக்க இதுபோன்று கவர்ச்சி அரசியல், கவர்ச்சி மாநாடுகள், கவர்ச்சி நிகழ்ச்சிகள் எல்லாம் நிறையவே நடக்கும், ஊடகங்களில் 24×7 ரீதியில் ஒளிபரப்பு செய்யப்படும். எனவே உண்மையறியும் மக்கள் மற்றவர்களுக்கு நிலையை  எடுத்துச் சொல்லவேண்டும். மக்கள்தாம் மக்களைக் காக்க வேண்டும்!

வேதபிரகாஷ்

22-11-2009

[1] Film industry demands priority status , TNN 20 November 2009, 06:43am IST. For details, se at:

http://timesofindia.indiatimes.com/city/chennai/Film-industry-demands-priority-status/articleshow/5248737.cms

[2] இவையெல்லாம் தனிப்பட்ட மனிதர்கள் மீதான செய்யப்படும் விமர்சனங்கள் இல்லை. என்று அவர்கள், அவர்களது செயல்கள், செயல்பாடுகள் சமுகத்தைத் தாக்க ஆரம்பித்து விட்டனரோ, பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்க செய்கின்றதாக மாறிவிட்டனவோ சமூகத்திற்கு அவர்கள் பதி சொல்லவேண்டிய நிலையில் வந்து விட்டார்கள். மக்கள்மன்றத்தில் எழுப்பபடும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். அதுமட்டுமல்லாது பல்கலைக்கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அவர்களுக்கு டாக்டர் பட்டங்களை அள்ளிக் கொடுக்கின்றனர். இது மாணவர்கள் மனங்களிலும் பாதிப்பு / தாக்கம் ஏற்படுகின்றது. ஆகவே அவர்கள் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களது ஒழுக்க வாழ்க்கை தெரியவேண்டிய அத்தியாவசியமாகிறது.

[3] http://www.indiantelevision.com/aac/y2k9/aac745.php

[4] BS Reporter / Chennai,   Cross-border revenues of south Indian films Rising November 18, 2009, 0:01 IST;  http://www.business-standard.com/india/news/cross-border-revenuessouth-indian-films-rising/376741/

இந்த அயல்நாட்டு வியாபாரத்தில் தான் பல விஷயங்கள் உள்ளன, இன்று “தமிஷ்” விஷயத்தில் அயல்நாட்டினர் – அயல்நாட்டில் வசிக்கும் “தமிழர்” ஏன் அவ்வளவு தீவிரமாக உள்ளனர் என்பது இதிலிருந்து அறியலாம்.

[5] http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/Southern-movies-account-for-over-75-of-film-revenues/articleshow/5241117.cms

[6] P.Vijian, South Indian Movie Industry Dazzles Even In Economic Lull, விவரங்களுக்கு பார்க்கவும்:

http://www.bernama.com/bernama/v5/newsindex.php?id=456392

[7] https://evilsofcinema.wordpress.com/

[8] http://womanissues.wordpress.com/

[9] Factories Act definition of “factory”.

[10] http://liberalizationprivatizationglobalization.wordpress.com/2009/11…றுப்பு-பணத்துடன்-களமிறங/

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/bc617fe9dd4f7b6d/78b1cc7a8b21cb0a?lnk=gst&q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D#78b1cc7a8b21cb0a

[11] ஜி. வி. ஃபிலிம்ச் பிரைவேட் லிமிடட் என்று கம்பெனி ஆரம்பித்து, பங்குவர்த்தகம் மூலம் பணத்தைக்கூடத் திரட்டினார்.

[12] SC issues notice to Big B on alleged tax evasion, TNN 5 May 2009, 03:38am IST

http://timesofindia.indiatimes.com/india/SC-issues-notice-to-Big-B-on-alleged-tax-evasion/articleshow/4482038.cms

[13] Cases involving Rs 47,152 crore of direct taxes are still pending, while another Rs 16,957.78 crore worth of indirect taxes are under dispute, as per the Budget document for 2009-10.

[14] ஆர்.பி.எஃப். நிதிநிறுவனம் சரிந்ததற்கு கமல்ஹாஸன் ஒரு காரணம் என்றுக் காட்டப்பட்டது.

[15] தங்களது அரசியல் பலத்தால் போடப்படும் வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மேலும் நீதிபதிகளே அவர்களால் நியமிக்கப்ப்பட்டிருப்பதால், அவர்கள் சொல்லியபடித்தான் வழக்குகள் நடக்கும், தீர்ப்புகள் வெளியிடப்படும்.

Advertisements

8 பதில்கள் to “சினிமா ஒரு தொழிற்துறையா, ஆலைத்தொழிலா, மாயைத்தொழிலா?”

 1. சினிமா ஒரு தொழிற்துறையா, ஆலைத்தொழிலா, மாயைத்தொழிலா? « இந்திய-பொருளாதாரப் பிரச்சினைகள் Says:

  […] படோபடமான விழாக்களில் கோரிக்கைகளை[1] முன்வைக்கின்றனர்! அதில் ஒரு ரூபாய் […]

 2. சினிமா ஒரு தொழிற்துறையா, ஆலைத்தொழிலா, மாயைத்தொழிலா? « இந்திய-பொருளாதாரப் பிரச்சினைகள் Says:

  […] 1009-10 நிதிநிலை அறிக்கைக்கூறுகின்றது[13]. இவ்வாறு வழக்குப் போட்டுள்ளவர்களில் […]

 3. சினிமா ஒரு தொழிற்துறையா, ஆலைத்தொழிலா, மாயைத்தொழிலா? « இந்திய-பொருளாதாரப் பிரச்சினைகள் Says:

  […] [5] http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/Southern-movies-account-for-over-75-of-film-revenues/articleshow/5241117.cms […]

 4. சினிமா ஒரு தொழிற்துறையா, ஆலைத்தொழிலா, மாயைத்தொழிலா? « இந்திய-பொருளாதாரப் பிரச்சினைகள் Says:

  […] [11] ஜி. வி. ஃபிலிம்ச் பிரைவேட் லிமிடட் என்று கம்பெனி ஆரம்பித்து, பங்குவர்த்தகம் மூலம் பணத்தைக்கூடத் திரட்டினார். […]

 5. vedaprakash Says:

  உதயசூரியன் என்று யாரோ சிறிதுகூட கூச்சம் இல்லாமல் அப்படியே காப்பியடித்து தனது போல போட்டிருக்கிறார்:

  http://udayasuriyan.wordpress.com/2009/11/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/#comment-2

 6. vedaprakash Says:

  நான் இத்தளத்தாருக்கு அனுப்பிய புகார்:

  [ No Subject ]
  Saturday, 28 November, 2009 8:29 PM
  From:
  This sender is DomainKeys verified
  “Vedaprakash Vedaprakash”
  View contact details
  To:
  dmca@automattic.com
  Cc:
  vedamvedaprakash@yahoo.com
  Dear Sirs,

  I have been a regular blooger in http://www.wordpress.com.

  I have posted a critical essay in Tamil at:

  https://evilsofcinema.wordpress.com/2009/11/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/

  Now, today I find another person has simply copied and posted as follows:

  http://udayasuriyan.wordpress.com/2009/11/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/#respond

  Therefore, I request to take appropriate action against the blooger – “Udhyasuriyan”.

  Thanking you.

  Sincerely yours,
  Vedaprakash
  28-11-2009.

  • vedaprakash Says:

   எனக்கு இத்தளத்தார் அளித்த பதில்:

   Flag this message
   [DMCA #402137]: My article copied by another [Tamil blogs]: Registering a complaint
   Saturday, 28 November, 2009 8:47 PM
   From:
   “Mark – WordPress.com”
   Add sender to Contacts
   To:
   vedamvedaprakash@yahoo.com
   Hi,
   Thanks for the report.

   The blogger now has a warning note for them to get in touch with us.

   Mark

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: