வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்து அறுத்து கொலை!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்து அறுத்து கொலை

பதிவு செய்த நாள் 11/23/2009 2:03:07 AM
http://www.dinakaran.com/crimedetail.aspx?id=880

சென்னை: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பட்டப் பகலில் கழுத்து அறுத்து, 15 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை சிஐடி நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ளது ஸ்ரீதேவி அபார்ட்மென்ட். இதன் 3வது மாடியில் வசிப்பவர் கஜபதி (65). இவரது மனைவி ஜெயலட்சுமி (60). இவர்களுடைய 3 மகன்களில் கண்ணன், சூர்யநாராயணன் ஆகியோர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக இருக்கின்றனர். கடைசி மகன் அருண் கவுசிக், கனடாவில் சாப்ட்வேர் இன்ஜினியர்.

கஜபதி நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு வாக்கிங் சென்றார். வீட்டில் ஜெயலட்சுமி மட்டும் இருந்தார். வாக்கிங் முடித்து மாலை 5 மணிக்கு கஜபதி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீடு வெளியில் தாழ்ப்பாள் போட்டிருந்தது. மனைவி வெளியில் சென்றிருப்பார் என்று நினைத்து, மீண்டும் வெளியில் சென்றுவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்தார். அப்போதும் தாழ்ப்பாள் போட்டிருந்தது.

கதவை திறந்து உள்ளே சென்ற கஜபதி, ரத்தவெள்ளத்தில் ஜெயலட்சுமி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மோப்ப நாயுடன் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயலட்சுமி கழுத்தில் இருந்த 15 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது பற்றி தகவல் கிடைத்தவுடன் காவ‌ல்துறை‌யின‌ர் ரேகை நிபுணர்களுட‌ன் விரைந்து வந்தனர். போலீஸ் மோப்ப நாய் தண்டர் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து தியாகராயநகர் பேரு‌ந்து நிறுத்தம் வரை ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயங்களை சேகரித்த பிறகு கொலையுண்ட ஜெயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த படுகொலை கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் கூறுகை‌யி‌ல், கொலையாளி, இறந்து போன ஜெயலட்சுமிக்கு நன்கு தெரிந்த நபராக தான் இருக்க வேண்டும். அவரே கதவை திறந்து விட்டுள்ளார். கொலையாளியுடன் நீண்ட நேரம் வீட்டிற்குள் உட்கார்ந்து பேசியுள்ளார். அதன் பிறகு தான் கொலை நடந்துள்ளது. கொலையாளி பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன. கொலையாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது’ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

Advertisements

ஒரு பதில் to “வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்து அறுத்து கொலை!”

 1. vedaprakash Says:

  கொடுத்த கடனை திருப்பிக்கேட்டு மிரட்டியதால் ஜெயலட்சுமி கொலை * போலீசில் கொலைகாரர்கள் பரபரப்பு வாக்குமூலம்
  நவம்பர் 27,2009,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14328

  சென்னை:”கொடுத்தக் கடனை திருப்பிக் கேட்டதுடன், போலீசில் பிடித்துக் கொடுப்பேன் என மிரட்டியதால், ஜெயலட்சுமியை கொலை செய்தோம்’ என கொலைகாரர்கள், போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி., காலனி ஸ்ரீதேவ் அபார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் கஜபதி(74). தனியார் நிறுவன அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கஜபதி, தன் மனைவி ஜெயலட்சுமியுடன்(65) வசித்து வந்தார்.

  குதிரைப் பந்தய பிரியரான கஜபதி, தினமும் கிண்டி குதிரைப் பந்தய மைதானத்திற்குச் சென்று வருவது வழக்கம். வழக்கம்போல், கடந்த ஞாயிற்றுக் கிழமை குதிரைப் பந்தய மைதானத்திற்கு சென்றுவிட்டு, மாலை 5 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த ஜெயலட்சுமி, கழுத்து அறுக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து கஜபதி அதிர்ச்சியடைந்தார்.

  இது குறித்து சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.போலீசார், கைரேகை, காலடித் தடங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, மாம்பலம் பஸ் நிலையம் வரை சென்று நின்றது. கஜபதியின் உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.கஜபதியின் நண்பரான சங்கர நாராயணன் வீட்டிற்கு போலீசார் சென்றபோது, வீடு பூட்டி இருந்துள்ளது. இதனால், சங்கர நாராயணன் மீது போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்தது.

  கஜபதி வீட்டிலிருந்த தொலைபேசி எண்ணில் பதிவான மொபைல் எண் மூலம், மதன் என்பவரும் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.இந்நிலையில், சங்கர நாராயணன், மதன் ஆகிய இருவரும், காளஹஸ்திக்கு தப்பி ஓடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க ஆந்திரா விரைந்தனர்.

  ஆனால், குற்றவாளிகள் இருவரும் கோர்ட்டில் சரணடைவதற்காக சென்னை வந்தபோது, வழியில் மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.போலீஸ் விசாரணையில், அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலட்சுமி கொலை செய்யப்பட்ட விதம் குறித்து போலீசார் கூறியதாவது:சங்கர நாராயணன், மதன் இருவரும், குதிரைப் பந்தய “புக்கி’கள். மதனின் தங்கை பிரியங்காவை சங்கர நாராயணன் திருமணம் செய்து கொண்டுள்ளார். கிண்டி குதிரைப் பந்தய மைதானத்திற்கு சென்று வந்தபோது, இவர்களுடன் கஜபதிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

  இந்த பழக்கத்தில் சங்கர நாராயணன், கஜபதியிடம் பணம் கேட்டுள்ளார்.அதற்கு, “பண விஷயத்தை எல்லாம் என் மனைவி ஜெயலட்சுமி தான் கவனிப்பார்; அவரிடம் கேட்டுக்கொள்’ என கஜபதி கூறியுள்ளார். இதையடுத்து, சங்கர நாராயணன், ஜெயலட்சுமியிடம் சிறிது சிறிதாக ஏழு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் வாங்கியுள்ளார்.பணத்தை திருப்பித் தருமாறு சங்கர நாராயணனிடம், ஜெயலட்சுமி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.

  வாங்கிய கடனை சிறிது, சிறிதாக திரும்பித் தந்து விடுகிறேன் எனக் கூறி, ஜெயலட்சுமியை சமாதானம் செய்வது, மீறி வீம்பு பிடித்தால் தீர்த்து விடுவது என சங்கர நாராயணனும், மதனும் திட்டம் தீட்டியுள்ளனர்.அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கர நாராயணனின் மனைவி பிரியங்கா, முன்னதாகவே ஜெயலட்சுமி வீட்டருகே சென்றுள்ளார். மதன், சங்கர நாராயணன், அவரது நண்பர் பாலாஜி மூவரும் ஒரு பைக்கில் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்றனர்.

  பாலாஜியும், பிரியங்காவும் வீட்டின் கீழேயே நின்று கொள்ள, சங்கரநாராயணன், மதன் இருவரும் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்றனர்.ஜெயலட்சுமியிடம் கடனை விரைவில் திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறி சமாதானப்படுத்த முற்பட்டனர். ஆனால், சங்கர நாராயணனை போலீசில் பிடித்துக் கொடுக்கப் போவதாக ஜெயலட்சுமி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர நாராயணன் மற்றும் மதன், கத்தியை எடுத்து ஜெயலட்சுமியின் தொடை, மார்பு பகுதிகளில் குத்தியுள்ளனர். பின், கழுத்தை அறுத்துள்ளனர்.

  அவரது கழுத்திலிருந்து 15 சவரன் தங்க நகையை எடுத்துக் கொண்டு ஓடி வந்துள்ளனர்.பிரியங்கா ஆட்டோவில் ஏறி தப்பித்தார். சங்கர நாராயணன், மதன், பாலாஜி மூவரும், தாங்கள் வந்த பைக்கில் தப்பிச் சென்றனர். ஜெயலட்சுமியிடம் கொள்ளையடித்த நகையை, மேற்கு மாம்பலத்தில் ஒரு அடகுக் கடையில் கொடுத்து 90 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர். இதன்பிறகே ஆந்திராவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.அடகுக்கடையில் இருந்த 15 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.

  கொலையாளிகள் தப்பிச் சென்ற பைக்கை, திருவொற்றியூரில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சங்கர நாராயணனின் மனைவி பிரியங்கா, திருவொற்றியூரைச் சேர்ந்த பாலாஜி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இருவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என்று போலீஸ் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: