ரஜினி மகள் பணம் பாக்கி; படத்தை திரையிட கோர்ட் தடை

ரஜினி மகள் பணம் பாக்கி; படத்தை திரையிட கோர்ட் தடை
டிசம்பர் 02,2009,08:38  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5817

Front page news and headlines todayசென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள, “கோவா’ படத்தை வெளியிட, சென்னை ஐகோர்ட் இடைக் காலத் தடை விதித்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த வருண் மணியன் என்பவர் தாக்கல் செய்த மனு: நான் என்.ஏ.பி.சி., பிராப்பர்டீஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக உள்ளேன். என்.ஏ. பி.சி., குரூப் நிறுவனங்களின் இயக்குனராகவும் உள் ளேன். சென்னையில் உள்ள “ஆக்கர் ஸ்டூடியோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளார். அவரை எனக்கு நன்கு தெரியும். “கோவா’ என்ற படத்தை தயாரிப்பதற்காக “ஆக்கர் ஸ்டூடியோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்னிடம் நிதியுதவி கோரினார். 24 சதவீத வட்டியுடன் திருப்பித் தருவதாக உறுதி அளித்தார்.

கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்சத்திற்கு இரண்டு காசோலைகளை வழங்கினேன். வாங்கிய பணத்திற்கான ஆவணங்களை பின்னால் தருவாக சவுந்தர்யா தெரிவித்தார். அவர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரம் உள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டு, கடிதமும் எழுதியுள்ளார். எனது தனிப்பட்ட கணக்கில் இருந்து கொடுத்தது போக, என்.ஏ.பி.சி., பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் கணக்கு மூலமாக, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய், “கோவா’ படத்துக்காக கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக் கொண்ட பின், சவுந் தர்யாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார். ஆகையால், அவரிடம் இருந்து இதுவரை எனக்கு ஆவணங்கள் எதுவும் வரவில்லை.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. எனக்கு பணத்தை தராமல், அந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது. பணத்தை கேட்கும் போதெல்லாம் சவுந்தர்யா ரஜினிகாந்த் தவிர்த்து வருகிறார். இதுவரை ஒரு பைசா கூட எனக்கு தரவில்லை. என்னிடம் மட்டுமல்லாமல், வேறு பலரிடம் இருந்தும் பணம் பெற்றுள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிந்தும் இதுவரை பணத்தை செலுத்தவில்லை. பணத்தை தராமல் படத்தை வெளியிட்டால், நான் பாதிக்கப்படுவேன். எனவே, “கோவா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனக்கு தரவேண்டிய 73 லட்சத்து 14 ஆயிரத்து 521 ரூபாயை தருவதற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று என்.ஏ.பி.சி., பிராப்பர்டீஸ் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக இயக்குனராக வருண் மணியன் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அதில், நிறுவனம் சார்பில் வழங்கிய விதத்தில் ஒரு கோடி யே 36 லட்சத்து 37 ஆயிரத்து 589 ரூபாயை டிபாசிட் செய்ய ஆக்கர் ஸ்டூடியோவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், “கோவா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இம்மனுக்கள் நீதிபதி ராஜசூர்யா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அபுடுகுமார் வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, இந்த படத்தை வெளியிட வரும் 11ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தார்.

விமர்சனம்:

1. இதென்ன வேடிக்கை? இவர்கள் எல்லாம் என்ன ஏழைகளா, மற்றவர்களிடம் கடன் வாங்க?

2. முன்புகூட கமலஹாசன் “மருதநாயகம்” படத்திற்கு ஆர்.பி.எஃப் நிறுவனத்திலிருந்து பணம் கடனாகப் பெற்றுத் திரும்பத் தரவில்லை என்று செய்திகள் வந்தன!

3. இவர்களே இப்படி என்றால், சாதாரண மக்கள் எங்கே போவது?

Advertisements

2 பதில்கள் to “ரஜினி மகள் பணம் பாக்கி; படத்தை திரையிட கோர்ட் தடை”

 1. vedaprakash Says:

  மன்சூர் அலிகான் வழக்கு-நடிகர் சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்ட்
  திங்கள்கிழமை, நவம்பர் 30, 2009, 15:41[IST]
  http://thatstamil.oneindia.in/movies/news/2009/11/30-arrest-warrant-issued-against-actor-city-babu.html

  சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், காமெடி நடிகர் சிட்டிபாபுவுக்கு சென்னை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

  மன்சூர் அலிகான் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

  அதில், திரைப்படம் தயாரிப்பதற்காக சிட்டிபாபு என்கிற சாஜித் அதீப் கடந்த 22.12.2008 அன்று என்னிடம் ரூ. 6 லட்சம் வாங்கினார். இந்த தொகையை பல்வேறு தவணைகளாக என்னிடம் பெற்றுக் கொண்டார். இந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை.

  இதே போல அவரது மனைவி ஜெரீனா என்பவரும் என்னிடம் ரூ. 7 லட்சத்து 17 ஆயிரம் கடன் வாங்கினார். இவரும் பணத்தை திருப்பித் தரவில்லை.

  அதற்கு பதில் காசோலைகளை இருவரும் தனித்தனியாக கொடுத்தனர். ஆனால் அவர்களது வங்கி கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

  எனவே அவர்கள் மீது செக் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் மன்சூர்.

  இந்த மனு எழும்பூர் 14வது கோர்ட் நீதிபதி காஞ்சனா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிட்டிபாபுவும், ஜெரீனாவும் ஆஜராகவில்லை.

  இதையடுத்து இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி மாஜிஸ்திரேட் காஞ்சனா பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

  சிட்டிபாபு பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • vedaprakash Says:

   அதென்ன – சிட்டிபாபு என்கிற சாஜித் அதீப்?

   செபாஸ்டியன் சீமான் போல, ஏன் இப்படி இவர்கள் தங்கள் பெயர்களை மறைக்கின்றனர்?

   பெயர்களை மறைக்கின்றனரா அல்லது “இந்து” போல நடிக்கின்றனரா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: