நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!

நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!

தமிழச்சிக் கலக்குகிறாள் அங்கே, தமிழச்சி கலங்குகிறாள்

இங்கேதமிழனும் கலங்குகிறான், தமிழன் பதறுகிறான் இப்பாரதத்தில்.

நாகரிகத்தின் அநாகரிகமா, அப்பண்பாட்டுச் செருக்கின் சீரழிவா

நிர்வாணம் அகோரமா, விகாரமா, அசிங்கமா, ஆபாசமா? [1]

புத்தரை வெல்லும் நிர்வாணமா ஜைனத்தை வெல்லும் நிர்வாணமா

இல்லை, கிரேக்க-ரோமானிய நிர்வாணத்தையும் வெல்லும் அவமானமா

நிர்வாணத்திலும் சமதர்மம் பார்க்கும் அம்மணமான பெண்மையே

உன்னை மூட முடியாதலால் மூடுகிறேன் எனது கண்களை. [2]

பத்மா லட்சுமி, அம்மா தாயே, தெய்வமே பயமாக இருக்கிறது!

பத்மஸ்ரீக்கள், கலைமாமணிகள் நோக்க நோகடிக்கவே

சுபாஷினி அலி, பார்வதி கான், என்று கேள்விப்பட்டிருக்கிறோம்

சல்மான் ருஸ்டியின் பத்தினி நீ, கண்ணகியையும் வென்றுவிடாய். [3]

தமிழன் பாடினான் ஓரக்கண்ணால் பார்த்தாலே “பிள்ளத்தாச்சி”

தமிழச்சி நீயோ கண்களைக் கட்டுகிறாய், நீயும் ஒரு “பிள்ளத்தாச்சி”

அச்சம், நாணம், மடம், கற்பு, பயிர்ப்பு என்ற ஐங்குணங்கள்

அச்சம்கொண்டு நாணிமடத்துடன் கற்பைவிட்டு பயிர்ப்போடு பெயர்ந்தன. [4]

பத்மஸ்ரீக்களின் கலக்கல்களின்று மீள்வதற்குள், நீ மீறிவிட்டாய்.

“தமிழச்சி”களின் “முலைகள்” கவிதைக் கொடுமைகள் தீருவதற்குள்

தமிழச்சி நீ குனிந்து விட்டாய், நாங்கள் தலை குனிந்துவிட்டோம்.

கைகால்களை சேர்த்து குவித்துவிட்டாய், நாங்களும் கூனிக்குருகிவிட்டோம். [5]

கற்பாம், மானமாம், கண்ணகியாம், சீதையாம் பாடப்பட்டது அன்று

அதெல்லாம் பார்க்கமுடியாது என்ற குஷ்புவிற்கு காட்டுகிறாய் நீ இன்று

மனம் மாறினால் மணம் மாறுகிறது, மணம் மாறினால் மனம் மாறுகிறது.

இருமனம்-திருமணம், பலமனம்-பலமணம் குஷ்பு மாறுகிறது, நாறுகிறது. [6]

அம்மணத்தில் எம்மணம் பொதுமையானதென ஆயும் கம்யூனிஸ தந்தைல்லை

நிர்வாணத்தில் பகுத்தறிவோடு புகுந்து பார்க்க பெரியாரின் சகோதரனுமில்லை

அம்மணியின் அந்தரங்கங்களைப் பேச நான் மோஹனரங்க புருஷனுமில்லை

இம்மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்றுக்கொண்ட அந்நியன் நான். [7]

பெண்ணின் உடல் என்பது யாருக்குச் சொந்தம் என்பதிலில்லைப் பிரச்சினை

அவ்வுடலின் நிர்வாணம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் சர்ச்சை

ஒழுங்கு-ஒழுங்கீனம் என்று நிர்வாணத்தின் சாரம்-ஆசாரம் கண்டு

பகுத்தறிவோடு தரச்சான்றிதழ் கொடுக்கும் பன்னாட்டு நிருவனங்களுமில்லை [8]

நங்காசாதுக்களுடன் நங்கைசென்றால் தடுப்பது பாரதமில்லை இந்தியா

நங்கைகளையும் மறுத்து, நிர்வாணங்களை அரங்கேற்றுவது இவ்விந்தியா

ஜைன நங்காக்களையும் மறுப்பதும் பெரியாரியம் பேசி கல்லடிப்பதும் தமிழகம்

பாரதத்திற்கு சமாளிக்கவேண்டிய நிலையில்லை, நாரிகளுக்குத்தான் உள்ளது. [9]

காமத்தைக்காதலாக்கி இச்சைகளைக்கொச்சைப்படுத்தி நடத்துவது புனிதப்போர்!

நிர்வாணத்தை நிருவானமாக்கி சித்தாந்தம் பேசி மயக்குவது உலகத்துவப்போர்.

பாற்சமன்பாடுசெய்ய பால்சமத்துவம் பேசும் பால்கார சண்டைகள் வேண்டாம்

பாற்கடலைக்கடைந்தால் மகனெப்படி பிறப்பானென்ற பகுத்தறிவும் வேண்டாம். [10]

நிர்வாணத்தில் நிர்மலமில்லாவிடில் மலமிகும் அம்மணவாழ்க்கையில்

அம்மணத்தை படமிட்டு சமத்துவம் பேசினால் தாயும் வேசியாகுவாள்

நிருவானத்தில் பொதுவுடமை கொண்டால், கொண்டவள் பங்கு போடப்படுவாள்

இப்பெண்மை நிர்வாணத்தில் வேண்டாம் எனக்கு சமத்துவம், சகோதரத்துவம் [11]

அம்மனை அம்மத்தை மறைத்தது தொழில்நுட்பமாவென ஆயும் தகுதியில்லை

நிர்வாணம் அடையத்துடிக்கும் புத்தனாகி போதிமரத்திடியில் தங்க நேரமில்லை

நிரியானம் அடைய வடக்கிருக்க நிருவாண தீட்சையும் பெறவில்லை

நிருவானம் பார்க்க அருகனுமில்லை, அந்த அருகதையும் எனக்கில்லை.[12]

பாசநேசமுள்ள மகளின் தந்தை நான் அன்பு-பண்புடைய அக்காளின் தம்பி நான்

ஆசாபாசமுள்ள கொண்ட தங்கையின் அண்ணன் நான்; பாரததேசத்தவன் நான்

மனைவியின் நிர்வாணம் எனக்குத்தானெண்ணும் பொறாமைக் கணவன் நான்

அவை தவறென்றால் நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்! [13]

வேதபிரகாஷ்

05-12-2009

Advertisements

2 பதில்கள் to “நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!”

 1. vedaprakash Says:

  வேறொரு இழையில் ஒருவர் இப்படி பதில் அளித்திருந்தார்:
  ———————————————————————–
  தந்தை பெரியாரும் நிர்வாணமாகச் செல்லும் துணிவு பெற்றவர்தான்.

  /பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது./
  http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/12eae3a9668c1508

  எனவே அதற்கு கொடுத்த பதில் இது:
  ——————————————————————
  குறிப்பு: விவாதங்களில் சில issues, points, facts etc முதலியவற்றை சுற்றி வளைக்காமல் எடுத்து வைக்கவேண்டுமானால் அல்லது சொல்லவேண்டுமானல், நேரிடையாக சொல்லவேண்டியிருக்கும். என்னுடைய நேற்றைய கவிதையிலேயே (அது கவிதையா இல்லையா என்பது வேறு) என்னால் முடிந்த அளவில் விளக்கி விட்டேன். இனி பார்ப்போம்.

  1. திக நண்பர்களையேக் கேட்டுவிட்டேன், அவர்கள் அத்தகைய நிர்வாண புகைப்படத்தைக் காட்டுவதில்லை [மங்கள முருகேசன் புத்தகத்தில் ஒரு படம் இருக்கிறது. ஆனால் உடையோடத் தான் இருக்கிறது].

  2. ஈரோட்டில் உள்ள நினைவகத்திலும் இல்லை. “பெரியார் படத்திலும்” காட்டவில்லை! யாரிடமாவது இருந்தால் வெளியிடுங்கள் அவரது “துறவுநிலையை”ப் பார்த்துவிடுவோம்.

  3. நண்பர்களுக்கு இன்னும் புரியாமல் இருப்பது நிர்வாணத்தின் மர்மம்தான். பெரியாரைப்பற்றி உதாரணம் கொடுத்துள்ளதால், நான் அதிலேயே அலச விரும்புகிறேன்.

  4. ஈரோட்டில் பலமுறைச் சென்று பெரியாரைப் பற்றி ஆராய்ச்சி நடத்தி இருக்கிறேன்.
  i. ஒரு பெரியவர், அவர் ஒரு கவிதை நூலே வெளியிட்டிருக்கிறார்.
  ii. அதில் அவர் குறிப்பிடுவதாவது, பெரியார் பவானி ஆற்றங்கரையில் பல பெண்களுடன் “அவ்வாறே” இருப்பாராம்.
  iii. அந்த நிர்வாணத்தையும் புகைப்படங்களாக வெளியிடுவதுதானே?
  iv. இன்னும் யதார்த்தமாக பல கேள்விகளைக் கேட்கலாம்.
  v. ஆனால், உண்மை / உண்மை நிலை பற்றி பேசும்போது கோபம் வரும்!

  5. உள்ளேயிருக்கவேண்டிய நிர்வாணம் வேறு, வெளியேயிருக்க வேண்டிய நிர்வாணம் வேறு.

  6. இதைப் புரிந்து கொள்ளாமல், புரிந்தும் புரியாதது மாதிரி “நிர்வாண அத்வைதம்” பேசினால், ஒரு பிரயோஜனமும் இல்லை.

  7. அதுதான் முன்பு கேட்டேன் “மலங்கழித்துக் கொண்டே அரசாட்சி செய்ய முடியுமா?” என்று. பிறகெதற்கு மனிதர்களுக்கு கழிவறை, மறைவு, மறைப்பு எல்லாம். அதையும் [1, 2, 3, 4…..] எல்லாமே வெளியிலேயே செய்யலாமே?

  8. நிர்வாணம் மனத்தில் இருக்கிறது உடலில் இல்லை என்றெல்லாம் வாதம். அவ்வாதம் புரிவோர் நிர்வாணமாக உலா வருவார்களா?

  9. நிர்வாணம் தத்துவம் என்றெல்லாம் வாதம் கூடுகிறது.
  i. ஆனால் மஹாவீரருடைய நிரியானத்திலும் புத்தருடைய நிர்வாணத்திலும் வேறுபாடு இருந்தது [நேற்று இதனைக் குறிப்பிட்டுக் காட்டினேன்].
  ii. ஏசுவின் “ஏலி ஏலி! லாமா சபக்தானி” என்ற அலரலுக்கும், அல்லாவின் மறைப்பிற்கும் அங்குதான் அர்த்தம் உள்ளது. முதலில் இந்த நிர்வாணங்களைப் படித்துப் புரிந்து கொள்ளவேண்டும்.
  iii. இங்குதான் மேலைநாடு/கீழைநாடு; இந்தியா/இந்தியா அல்லாதவர்கள்;
  iv. குழந்தைகளுடன் பார்ப்பேன்/ குழந்தைகளுக்குத் தெரியாமல் பார்ப்பேன்;
  v. இரவில் காட்டுவார்கள் / பகலில் காட்டமாட்டார்கள் என்ற வாதங்களுக்குப் பொருள் கிடைக்கும்.

  10. நிர்வாண சிற்பங்கள், தெய்வங்கள் பற்றி தனியாக எழுதுகிறேன்.

  வேதபிரகாஷ்
  06-12-2009

 2. vedaprakash Says:

  பத்மா லட்சுமியின் நிர்வாணமும், பெரியாரின் நிர்வாணமுன் ஒன்றாகுமா?

  http://mnachiappan.indiainteracts.in/2008/07/09/nudity-evr-and-his-followers/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: