பத்மஸ்ரீ விவேக்கும் ஊடகக்காரர்களும்!

வசமாக மாட்டிக்கொண்ட விவேக்

http://www.makkalmurasu.com/index.php?mod=article&cat=cinema&article=14822

பத்திரிகை நிருபர்களின் பெரும் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் நகைச்சுவை நடிகர் விவேக், சில மாதங்களுக்கு முன் நடந்த நடிகர்கள் கண்டனக் கூட்டத்தில் ‘எனக்கு எவன் தயவும் தேவையில்லை. நடிகர் சங்கமும் மக்களும் இருக்கிறார்கள்’ என்று கூறியவர், இப்போது பத்திரிகையாளர்களின் தயவைப் பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்து  போகிறார்.

ராஜ் தொலைக்காட்சி தயாரிக்கும் படம் ‘மகனே என் மருமகனே’. இப்படத்தை டி.பி.கஜேந்திரன் இயக்க, நாசர், சரண்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் விவேக்கும் இப்படத்தில் நடிக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகின. பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜ் தொலைக்காட்சி தயாரிக்கும் படம் என்பதாலும், இயக்குநர் டி.பி.கஜேந்திரன் இயக்கியதாலும் எந்த எதிர்ப்பும் இன்றி பத்திரிகையாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி நடுவில் இயக்குநர் டி.பி. கஜேந்திரன் “விவேக் வெளியே காத்திருப்பதாகவும், நீங்கள் அனுமதித்தால் அவரை உள்ளே அழைப்பதாகவும்” கூறினார். மேலும் ” விவேக் உங்களிடம் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து நிருபர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ‘நாங்கள் வந்ததே உங்களை மதித்துதான். விவேக் வருவதாக கூறியிருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம்’ என்று நிருபர்கள் கூற, ‘இது வேறு நிகழ்ச்சி. அவரது பிரச்சனை வேறு. இரண்டையும் ஒன்றாக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்ட நிருபர்கள், பாதியிலேயே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருந்து வெளியேறினார்கள்.

இதுபோல் பல விழாக்களில் விவேக்கைப் பத்திரிகையாளர்கள் புறக்கணித்து வருகிறார்கள். இதனால் தங்கள் படங்களில் விவேக்கை ஒப்பந்தம் செய்தால் இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுமோ என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது.

விமர்சனம்:

1. உண்மையிலேயே அப்படியென்ன ஊடகக்காரர்கள் விவேக்கிற்கு விரோதியா? அவ்வாறே இர்யுக்கப் போகின்றனரா?

2. அவர் மன்னிப்புக் கேட்டாலோ அல்லது வேறுவிதமாகவோ சமரசம் செய்துவிட்டால், விஷயம் சரியாகிவிடுமா?

3. இதுவும் அரசியல் மாதிரி “இதெல்லாம் சகஜமப்பா” என்று ஊடல் போய் கூடிவிடுவார்களா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: