இன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி!

இன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=22410

https://i0.wp.com/www.paristamil.com/tamilnews/wp-content/uploads/senha6292_13.jpg

நடிகை சினேகா ரஜினி மகள் சவுந்தர்யா தயாரிக்கும் கோவா படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். நீச்சல் உடையிலும் கலக்கியிருக்கிறாராம். அவர் நடித்த காட்சிகள் ரகசியமாக படமாக்கப்பட்டுள்ளன.

படம் ரிலீசாவது வரை தனது நீச்சல் உடை ஸ்டில்களை வெளியிடக்கூடாது என்று நிபந்தனை விதித்தாராம். ஆனால் அதை மீறிபடங்கள் வெளியாகி விட்டன.

கோவாவில் பிகினி உடையில் சினேகா என்ற அறிவிப்புடன் அவரது படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளன.

இதனால் அதிர்ச்சியாகியுள்ளார். பொங்கலுக்கு இப்படம் ரிலீசாகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நீச்சல் உடையில் சினேகா

ஆடையின் அளவு குறையக் குறைய சம்பளம் உயரும் என்பது தமிழ் சினிமா விதி. இந்த விதிக்குத் தப்பாத நாயகிகளே கிடையாது. கேபி சுந்தராம்பாள் தவிர!

பக்கத்து வீட்டுப் பெண் இமேஜை கட்டிக் காப்பதில் குறியாக இருந்த சினேகாவுக்கு இந்த உண்மை புரியத் துவங்கியதுமே, அவரது ஆடையின் அளவும் குறையத் தொடங்கி விட்டது.

தெலுங்கில் சூடான ஸ்னேகாவாக வலம் வந்தவர், அதே தரிசனத்தை தமிழில் காட்டத் துவங்கிவிட்டார்.

இதனாலேயே, பெரிய வெற்றிப் படம் எதிலும் நடிக்காவிட்டாலும், அவரது சம்பளமும் குறையாமல் இருந்து வருகிறது.

இப்போது வரவிருக்கும் கோவா படத்தில் நீச்சல் உடையில் வலம் வருகிறாராம் ஸ்னேகா. இதற்காக அவருக்கு பெரிய சம்பளம் தரப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த போட்டிடோக்களை ஆரம்பத்தில் விளம்பரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என கூறிவந்தவர், இப்போது பரவாயில்லை பயன்படுத்துங்க என்று தாராள அனுமதி தந்துவிட்டாராம்.

ஒரு பக்கம் படத்துக்கு விளம்பரம் மறுபக்கம் தனது சம்பளத்தை உயர்த்த ஒரு டெக்னிக், என்ற உண்மை புரிந்ததால் இந்த திடீர் தாராளமாம்!

https://i1.wp.com/www.nkdreams.com/cinema/wp-content/uploads/2009/12/original_sneha_4a7f701630389.jpg

இதுக்குதான் இவ்வளவு கலாட்டாவா?

என்னவோ, ஏதோவென்று பார்த்தால்!

விமர்சனம்:

* விலைவாசி ஏறி மக்களைச் சாகடிக்கும் நிலையில், இப்பொழுது இதுதான் முக்கியமான தேவையா?

* நடிக்க வந்த நடிகைகள், எல்லாவேடங்களிலும் தான் நடிக்கிறார்கள்! அதேபோலத்தான் எல்லா உடைகளிலும் நடிக்கிறார்கள்!!

* அவ்வாறு நடித்துவிட்டு, பிறகு ஏன் மறுக்கவேண்டும்?

* நீச்சல் உடையிலே அவர் கலக்கினால் என்ன, கலக்காவிட்டால் என்ன? அர்சி, துவரம் பருப்பு விலைகள் எல்லாம் குறைந்துவிடப் போகிறாதா?

5 பதில்கள் to “இன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி!”

 1. vedaprakash Says:

  நீச்சல் உடை காட்சி: இன்டர்நெட்டில் பரவும் சினேகா கவர்ச்சி படம்
  http://www.maalaimalar.com/2009/12/09123137/CNI0120901209.html

  தமிழ், தெலுங்கு படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் சினேகா. கவர்ச்சியாக நடிக்கும்படி நிறைய பட வாய்ப்புகள் வந்தன. சம்பளத்தையும் உயர்த்தி ஆசை காட்டினார்கள். ஆனால் சினேகா சம்மதிக்கவில்லை.

  சக நடிகைகளான நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, பிரியாமணி என பல கதாநாயகிகள் நீச்சல் உடைக்கு இறங்கி வந்த பிறகும் சினேகா கவர்ச்சிக்கு மறுப்பு சொல்லியே வந்தார். இதனால் நிறைய பட வாய்ப்புகள் பறிபோனது.

  இப்போது திடீரென மனதை மாற்றிக் கொண்டு உள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா தயாரிக்கும் “கோவா” படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார். நீச்சல் உடையிலும் கலக்குகிறாராம். அவர் நடித்த காட்சிகள் ரகசியமாக படமாக்கப்பட்டு உள்ளன. படம் ரிலீசாவது வரை தனது நீச்சல் உடை ஸ்டில்களை வெளியிடக்கூடாது என்று நிபந்தனை விதித்தாராம். ஆனால் அதை மீறிபடங்கள் வெளியாகி விட்டன.

  கோவாவில் பிகினி உடையில் சினேகா என்ற அறிவிப்புடன் அவரது படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளன.

  இதனால் அதிர்ச்சியாகி யுள்ளார். பொங்கலுக்கு இப்படம் ரிலீசாகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

  விஜயசாந்தியின் “வைஜெயந்தி ஐ.பி.எஸ்.படம் பவானி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இந்த படத்துக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து ஒல்லியாக மாறியுள்ளார் சினேகா.

 2. குப்புசாமி Says:

  நீச்சல் உடை என்ன, இவர்களுக்கு பயமா?

  அதுவல்லவோ, இவர்களைக் கண்டு பயப்பட வேண்டியதுள்ளது?

  உடையை மறைக்க ஆடையா, அல்லது ஆடையை மறைக்க உடலா என்ற நிலையில் உள்ள இவர்கள் ஏன் இப்படி அலர வேண்டும்?

  எல்லாம் பொய்விட்ட பிறகு, ஏதோ பறிபோகின்ற மாதிரி போலி நடிப்பு எதற்கு?

  நிர்வாண ஆட்டங்களில் மற்ற ஆபாச நடிகளையும் எப்படி மிஞ்சலாம் என்று கணக்குப் போடும் நிலையில் ஆடி குலுக்கி பணம் சம்பாதிக்கும்போது, எதற்கு இந்த அலரல்கள்?

 3. குப்புசாமி Says:

  அடடா,

  என்னாய்யா, இது?

  நீரும் கெட்டுப் போய் விட்டீர் போல?

 4. vedaprakash Says:

  இனி கிளாமர்தான்: சினோகா முடிவு
  செவ்வாய்க்கிழமை, 12, ஜனவரி 2010 (15:27 IST)

  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24627

  கிளாமர் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இதனால் சினேகாவிடம் மனமாற்றம் ஏற்பட்டு கிளாமருக்கு இறங்கி வந்துள்ளார்.

  பவானி ஐ.பி.எஸ். படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை ஒல்லியாக மாற்றியுள்ளார் சினேகா. இந்த தேகத்தில் கவர்ச்சியாக நடித்தால் இன்னும் அழகாக தெரிவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் யோசனை சொன்னதால் ஆடை குறைப்புக்கு சம்மதித்துள்ளாராம்.

  ஏற்கனவே லாரன்சுடன் பாண்டி படத்தில் நடித்த போது ஓரளவு கவர்ச்சி காட்டினார். குடிபோதையில் அவர் ஆடிய குத்தாட்டம் இளைஞர்களை கவர்ந்தது. அதன் பிறகு குடும்ப பாங்குக்கு மாறிய அவர் இப்போது மீண்டும் கவர்ச்சிக்கு தாவி உள்ளார்.

  தற்போது தமிழில் முரட்டுக்காளை, அங்காடித்தெரு, பொன்னர் சங்கர், நூற்றுக்கு நூறு படங்களிலும் மலையாளத்தில் போக்கிரி ராஜா பிரமாணி படங்களிலும் நடித்து வருகிறார். இப்படங்களில் சினேகாவை கவர்ச்சியாக பார்க்கலாம் என்கின்றனர்.

  தமிழ் படங்களில் குடும்பபாங்கான வேடங்களில் நடித்தவர் சினேகா. சக கதாநாயகிகள் கிளாமருக்கு மாறி குத்தாட்டம், நீச்சல் உடை என போன பிறகும் கவர்ச்சியாக நடிப்பதில்லை என உறுதியாக இருந்தார். காலம் அவரை மாற்றிவிட்டது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: