லாப நோக்கத்தோடு மட்டும் சினிமாவுக்கு வரக் கூடாது!

கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
ரஜினிகாந்திற்குப் பிறகு, கமல் ஹஸனும் தத்துவம் பேச ஆரம்பித்து விட்டார் போலும்.

நன்றாக சம்பாதித்தப் பிறகு,எந்தவிதமான தத்துவமும் பேசலாம்!

முன்னம் வேறுமாதிரி தாகம் இருக்கும், இப்பொழுது தாகம் மாறியிருக்கும், அதற்கேற்றவாறு குடிக்கும் திரவங்களும் மாறும்!

.
சென்னை, டிச.13: வியாபார நோக்கத்தோடு சினிமாவுக்கு வரக்கூடாது என்றும், கனவோடும், கலைதாகத்தோடும் திரைப்படத் துறைக்கு வர வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆன்டிரியா உள்ளிட்டோர் நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன் படத்தின் டிரைலர் வெளியீடு இன்று காலை நடைபெற்றது.

நடிகர் கமல்ஹாசன் படத்தின் டிரைலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சினிமா ஒரு வியாபாரம்தான். ஆனால் லாப நோக்கத்தோடு மட்டும் சினிமாவுக்கு வரக் கூடாது. லாபம் சம்பாதிக்க வேண்டுமென்றால் எத் தனையோ தொழில்கள் இருக்கின்றன.

சினிமாவை சொந்த வீடு கட்டுவது போல ஒரு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். கலைதாகமும், கனவும் உள்ளவர்கள் சினிமா எடுக்க வர வேண்டும்.

நன்றாக இருக்கும் தமிழ் படங்கள், ஆங்கிலப்படத்திற்கு இணையாக வந்திருப்பதாக சொல்லப்படுகின்றன. ஹாலிவுட்டோடு நம்மை ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

இந்த படம் தாமதமானதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் டிரைலரை பார்த்தால் அதன் பின்னே உள்ள உழைப்பு தெரிகிறது.

தாமதம் பிரச்சனையல்ல; படத்தின் மீது இயக்குனருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் எதுவும் ஜெயிக்கும்.

ஆனால் திட்டமிட்டு படமெடுப்பது நல்லது. இந்த படத்தை திட்டமிட்டி ருந்தால் முன்னதாகவே முடித்திருக்க லாம். மேலும் ஒரு படம் வெற்றி பெற்றால் அதே போன்ற படத்தை தயாரிப்பாளர்கள் கேட்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் இயக்குனர் செல்வராகவன், தயாரிப்பாளர் ரவீந்திரன், ரீமா சென், ஆன்டிரியா, பார்த்திபன், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisements

ஒரு பதில் to “லாப நோக்கத்தோடு மட்டும் சினிமாவுக்கு வரக் கூடாது!”

 1. குப்புசாமி Says:

  இவர் பணத்திற்காக எப்படி அலைந்தார் என்று அவர்களது உறவினர்களுக்குத் தான் தெரியும்!

  கனவோடும், கலைதாகத்தோடும் தான் வருகிறார்கள்! ஆகையால்தான் நிறைய கனவுகளை நனவாக்குகிறார்கள்!

  கலைத்தாகம், பிறகு வேறுதாகமாக மாறுகிறது!

  ஒரு தாகம் அல்ல, பல்ற்பல தாகங்களுடன், பல பேர்களுடன் அலைகிறார்கள், தாகத்தை தணிக்கிறர்ர்கள்!

  பல தாகங்களுக்கு ஏற்ப, பல பானங்களும் வருகின்றன!

  ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்!

  பணம் இல்லையென்றால் இவையெல்லாம் வருமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: