குஷ்புவின் இன்னுமொரு அவதாரம்!

திரைப்படத்துறையினர் நலவாரியம்: அலுவல்சாரா உறுப்பினர்களாக குஷ்பு, சிவகுமார் நியமனம்
First Published : 15 Dec 2009 04:09:12 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%MainSectionID=164&SEO=&SectionName=Latest

https://i2.wp.com/www.newsinlive.com/wp-content/uploads/2008/09/sivakumar-image.jpg https://i0.wp.com/www.makkalmurasu.com/images/articles/2009_04/7892/u1_bb.jpg

சென்னை, டிச.15- திரைப்படத் துறையினர் நலவாரியம் அமைக்கப்படுவற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளார். அதன் நிர்வாகக் குழுவின் அலுவல்சாரா உறுப்பினர்கள் விபரமும் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், குஷ்பு, சிவகுமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத் துறையினர் நலவாரியத்தின் தலைவராக செய்தித்துறை அமைச்சரும், செயலராக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநரும் பதவி வகிப்பார்கள்.

நிர்வாகக் குழுவின் அலுவல்சாரா உறுப்பினர்கள் விபரம்:

நடிகை குஷ்பு [தொடர்ந்து அசுர பலம் பெற்று வளர்வது வியப்பாக இருக்கிறது]

நடிகர் சிவகுமார் [எந்த சர்ச்சையிலும் சிக்காதவர், கடைசியில் சிக்கிவிட்டார் போலும்!]

நடிகர் சந்திரசேகர் [திமுக அபிமானி]

தயாரிப்பாளர் ஏவிஎம். பாலசுப்பிரமணியம் [அமைதியான ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தவர்]

தயாரிப்பாளர் கோவை தம்பி [திமுக அபிமானி]

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் [திமுக அபிமானி]

தயாரிப்பாளர்அன்பாலயா பிரபாகரன்

தயாரிப்பாளர்டி.ஜி. தியாகராஜன் [அப்படியே]

இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் [மாறிவிட்டார்]

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் [?]

பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் [?]

சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை [!]

திரைப்படத்துறை நலவாரிய‌த்தை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அமை‌த்து‌ள்ளா‌ர். இத‌ன் உறு‌ப்‌பின‌ர்களாக நடிக‌ர், ‌சிவகுமா‌ர், நடிகை கு‌ஷ்பு ஆ‌கியோ‌ர் ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.

முதலமைச்சர் கருணாநிதி அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் மாநாட்டில் 9.10.2009 அன்று உரையாற்றிய போது, “தொழிலாளர் சமுதாயத்தின் நலன்களை உறுதிப்படுத்திடும் வகையில், அரசின் சார்பில் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு, அந்த வாரியங்களின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ் திரையுலக வளர்ச்சியிலும், அதன் வாழ்விலும் பல்வேறு நிலைகளில் தங்கள் உழைப்பை நாளும் அளித்திடும் கலையுலகத்தினரின் நலன்களுக்காக தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பிலும், தமிழ்த் திரையுலகின் சார்பிலும் அளிக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, தமிழக அரசு சின்னத்திரையினருக்கும் சேர்த்து “திரைப்படத்துறையினர் நலவாரியம்” ஒன்றினை புதிதாக உருவாக்கும்” என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக முதலஅமைச்சர் கருணாநிதி இன்று திரைப்படத்துறையினர் நலவாரியத்தைப் அமைத்து ஆணையிட்டுள்ளார்.

குறிச்சொற்கள்: , ,

4 பதில்கள் to “குஷ்புவின் இன்னுமொரு அவதாரம்!”

 1. குப்புசாமி Says:

  நிச்சயமாக அரசியல் அதிகாரம் வளர வளர எல்லாமே வளரும்.

  அவர் எப்பொழுது, வழக்குகளிலிலிருந்து தப்பி விட்டாரோ, அப்பொழுதே கருணாநிதியின் ஆசியைப் பெற்றுவிட்டார்.

  எப்படி திராவிட அரசியல்வாதிகள் அடிக்கடி தாங்கள் நீதிமன்றங்களைக் கொண்டு நாங்கள் அஞ்சமாட்டோம், எத்தகையெ வழக்கையும் சந்திப்போம் என்று ஆர்ப்பரிப்பர், ஆனால் நீதிமன்றத்திற்கு போகவே மாட்டார்கள்!

  இப்படி, குறுக்குவழியில், அரசியல் அதிகாரத்தில் நிதியை வளைத்து, வழக்குகளிலிருந்து விடுபடுவர்!

  ஒரு பெரிய அரசியல்வாதியாக எல்லா தகுதிகளும் குஷ்புவிற்கு இருக்கின்றன.

  அவர் அஞ்சவேண்டிய அரசியல்-நடிகை புவனேஸ்வரிதான்!

 2. நடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்? | சின Says:

  […] [1]https://evilsofcinema.wordpress.com/2009/12/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81… […]

 3. குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – Says:

  […] [7]https://evilsofcinema.wordpress.com/2009/12/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81… […]

 4. குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – Says:

  […] [7]https://evilsofcinema.wordpress.com/2009/12/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: