பலான விஷயங்களை படமாக்கும் திராவிடத்துவம்!

காஞ்சீபுரம் அர்ச்சகரின் கதை சினிமா படம் ஆகிறது

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=23913
காஞ்சீபுரம் மச்சேரஸ்வர் கோவிலின் கருவறையில் 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் சிவகாஞ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, சிவ சிவா’ என்ற படம் தயாராகிறது.

கதையின் நாயகனாக, குமரன் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுஹானி நடிக்கிறார். மகாநதி சங்கர், லட்சுமி பிரபா ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி, சிவாஷ் டைரக்டு செய்கிறார். மாறன், இசையமைக்கிறார். டி.புண்ணியமூர்த்தி தயாரிக்கிறார்.

சென்னையில் நடந்த 9 கொலை வழக்கு, ஆட்டோ சங்கர் செய்த கொடூர கொலைகள் ஆகிய உண்மை சம்பவங்கள் படமானது போல், கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள தேவநாதனின் கதையும் படமாகிறது.

இதுபற்றி  சிவ சிவா’ படத்தின் டைரக்டர் சிவாஷிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:

கோவில் அர்ச்சகர் தேவநாதனின் வாழ்க்கை வேறு. நாங்கள் படமாக்குகிற கதை வேறு. உலகமே தனது அம்மாதான் என்று ஒழுக்கமாக வாழ்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கை, ஒரு இளம் பெண்ணின் வருகையால் எப்படியெல்லாம் மாறி, எவ்வளவு பெரிய குற்றவாளி ஆகிறான்? என்பதே இந்த படத்தின் கதை.

கதாநாயகனின் கதாபாத்திரம், கோவில் அர்ச்சகர் என்பது உண்மைதான் என்கிறார் டைரக்டர் சிவாஷ்.

அர்ச்சகர் தேவநாதனின் கதை படமாவதை முன்கூட்டியே கூறிவிட்டால், தணிக்கையின்போது பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதாலும், சிலர் வழக்குகள் தொடரக்கூடும் என்பதாலும்,  சிவ சிவா’ படம் ரகசியமாக படமாகி வருவதாக கூறப்படுகிறது.

காஞ்சீபுரம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தாளாளர் மீது 16 ஆசிரியைகள் பாலியல் புகார்! காஞ்சிபுரத்தில் மீண்டும் பரபரப்பு!

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=23872

காஞ்சீபுரம் டோல்கேட் தெற்கு மாட வீதியில் ஸ்ரீகிருஷ்ணா நிதி நாடும் நடு நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இதன் தாளாளராக ராஜகோபால் இருந்து வருகிறார். இந்த பள்ளியில் 14 பெண் ஆசிரியர்கள் உள்பட 16 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 14 பெண் ஆசிரியர்களும், மனித உரிமை அமைப்புக்கு ஒரு புகார் அனுப்பினார்கள்.

அதில் புகாரில் கூறி இருப்பதாவது,

தாளாளர் ராஜகோபால் எங்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கிறார். விசாரணை என்ற பெயரில் தனி அறைக்கு அழைத்து சென்று அங்கு வைத்து குறும்பு செய்கிறார்.

சமீபத்தில் பள்ளியில் எல்லோரும் சுற்றுலா சென்று இருந்தோம். அங்குள்ள குளத்தில் ஆசிரியைகள் இறங்கி குளித்தோம். அப்போது எங்களோடு ராஜகோபாலும் குளத்தில் இறங்கி குளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது அவர் அத்துமீறி நடந்து கொண்டார்.

எங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் மாதம் ரூ.1,300 பிடித்தம் செய்து கொள்கிறார். எங்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுதான் வேலையே வழங்கினார்கள். இப்போதும் முழு சம்பளத்தை தராமல் எடுத்து கொள்கிறார் என்று புகாரில் கூறியிருந்தனர்.

இது பற்றி நேரில் விசாரணை நடத்துவதற்காக வேலூர் மாவட்ட மனித உரிமை கழக அமைப்பாளர் சேதுராமன், தலைமை அமைப்பாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் மனித உரிமை அமைப்பினர் இன்று பள்ளிக்கு வந்தனர். அவர்கள் ராஜகோபாலிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்கள். புகார் கூறிய ஆசிரியர்கள் முன்னிலையிலேயே இந்த விசாரணை நடந்தது.

மனித உரிமை அமைப்பினர் விசாரணை நடப்பது தெரிந்ததும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டு விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

காஞ்சீபுரம் மச்சேரஸ்வர் கோவிலின் கருவறையில் 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மீண்டும் காஞ்சிபுரத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் 16 ஆசிரியைகளை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கூறப்பட்டிருப்பது காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: