தமிழகத்தில் நிமிடத்திற்கு 2 குழந்தைகள்: “ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி” மெய்யாகிவிட்டதா?

தமிழகத்தில் நிமிடத்திற்கு 2 குழந்தைகள்: “ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி” மெய்யாகிவிட்டதா?

தமிழகம்- நிமி.க்கு 2 குழந்தைகள் பிறப்பு!

சனிக்கிழமை, ஜனவரி 2, 2010, 12:21[IST]

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/a-child-is-born-every-30-seconds-tn.html

மக்கள் தொகை பிரச்சனைகளும், குடும்ப நலத்திட்டமும்: தேனி: தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 10.65 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது நிமிடத்திற்கு 2 குழந்தைகளும் பிறக்கின்றன. தேனி மாவட்டம் குடும்ப நல செயலகம் சார்பில் மக்கள் தொகை பிரச்சனைகளும், குடும்ப நலத்திட்டமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மருத்துவ கல்லூரி டீன் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் முத்துவீரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்லத்துரை, மருத்துவர்கள் உள்பட பலர் பேசினர்.

இதில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்: நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு, கேரளாவும் முதலிடத்தில் உள்ளன. தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 10.65 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது ஒரு மாதத்தில் 88,750 குழந்தைகளும், வாரத்திற்கு 20,500 குழந்தைகளும், ஒரு நாளில் 2,900 குழந்தைகளும், ஒரு மணி நேரத்தில் 120 குழந்தைகளும், நிமிடத்திற்கு 2 குழந்தைகளும் பிறக்கின்றன. மக்கள் தொகை அதிகரிக்க கல்வியறிவின்மையே முக்கிய காரணமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி: இப்படி ஒரு தமிழ் புலவர் பாடியதால், ஒருவேளை அப்படி குழந்தைகள் பிறக்கின்றனவோ? தலைவர்களுக்கெல்லாம் மூன்று, நான்கு……………………….., தலைவிகளுக்கோ இரண்டு…………………..ஐந்து வரைக்கூட உள்ளது. இதனால் தொண்டர்களும், தொண்டிகளும் (தொண்டர் பெண்பால் என்னவோ?) போட்டிப் போடுகின்றனவோ என்னவோ?

பட்டித்தொட்டிகளில் எல்லாம் இப்பாடல் முழங்கியதால் ஏற்பட்ட அதிர்வுகளோ என்னவோ?

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு – உன்
ஒசரம்பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு
கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போறவளே
மெதுவாகச் செல்லேண்டி – உன்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதடி
குதிபோட்டு வந்தேண்டி

உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி

கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
மையா வெக்கும் சாக்க வெச்ச கையா வெப்பே தெரியாதா
அலங்கனல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்துபோனால் ஆகாதா
மாடுபுடிச்சி முடிச்ச கையில் மயிலப் புடிப்பே தெரியாதா
மயிலே மயிலே இறகொண்ணு போடு
தானா விழுந்தா அது உம் பாடு
இறகு எதுக்கடி தொகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு – நீ

கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போறவளே
உருவித்தான் பாக்காதே – என்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
துருவித்தான் கேட்காதே

உசில உசில உசிலம்பட்டி, உசில உசில உசிலம்பட்டிவெடலப்பொண்ணு நுனிநாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்பமரத்துக் கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு?
இடுப்புச் செல எடவெளியில் எனக்கு மட்டும் எடமிருக்கு
ஆசைப்பட்ட மாமனுக்கு ஆண்டிப்பட்டி மடமிருக்கு
தணியும் தணியும் தானா தணியும்
தடியால் அடிச்சா கொடியா மலரும்
மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அதுதான் பெண்ணின் குணம்

உசில உசில உசிலம்பட்டி, உசில உசில உசிலம்பட்டி

மேரி இடைக்கச்சையை நழுவ விட்டாளாம்: சமீபத்தில் கிருத்துவர்கள் ஒரு புரட்டைக் கிளப்பிவிட்டுள்ளனர். அதாவது மேரி மேலே ஏறிச் செல்லும் போது, தனது இடைக்கச்சையை நழுவவிட்டதாகவும், அதனை தாமஸ் பிடித்ததாகவும், சென்னைக்கு நேராக விமானம் ஏறி வந்ததாகவும், திரும்ப எடுத்துச் சென்றதாகவும்……………..இப்படியெல்லாம் கதை காட்டியுள்ளனர். அதாவது கிருத்துவர்களின் நம்பிக்கை என்னவென்றால் அந்த இடைக்கச்சையை வணங்கினால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பதுதான்! மேலே விவரங்களுக்கு http://www.thomasmyth.wordpress.comஐப் பார்க்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: