திருட்டு விசிடி, சினிமாகாரர்கள், தீவிரவாதம், கருணாநிதி!

திருட்டு விசிடி, சினிமாகாரர்கள், தீவிரவாதம், கருணாநிதி!

January 6, 2010

இணையத்தில் ‘ஜக்குபாய்’ விவகாரம்:சினிமா சட்டத்தில் திருத்தம் வேண்டும் : ரஜினி – கமல் : கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் ஸ்ரேயா நடித்து வெளிவர இருக்கும் பிரமாண்ட தமிழ்ப்படம் ஜக்குபாய். இப்படத்தை ராதிகா சரத்குமாருக்குச் சொந்தமான ராடான் நிறுவனம் தயாரித்தது. இந்தப்படம் ரஜினிகாந்த நடிப்பதாக இருந்தது, பின்பு பல்வேறு காரணங்களால் இதில் மாற்றம் ஏற்பட்டு இறுதியில் சரத்குமார் நடித்திருந்தார். இந்தப்படம் ஒரு பிரமாண்டமான ஆங்கிலப்படத்தின் கதைக்கரு என்பது குறிப்பிடத்தக்கது. கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தில் பல்வேறு அனிமேஷன் கிராஃபிக்ஸ் விசயங்களைப் புகுத்தி பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்நிலையில் ஒரு சில தினங்களுக்குமுன் இணையதளத்தில் ‘ஜக்குபாய்’ படம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி இணைய உலகிலும், கோடம்பாக்கம் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே அதை திருடி, விற்பது கொலை செய்வதற்கு சமமான குற்றம் என்று தமிழ் பட உலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் ஆகியோர் கொதித்து எழுந்துள்ளனர்.

இணைதளத்தில் வெளியிட்டவர்கள் உடனடியாக கைது! காஞ்சிபுரம் தேவநாதன் அசிங்க-ஆபாச சிடிக்கள் விற்பனையாகின்றன. அந்த இழவும்தான் இணைதளத்தில் உள்ளது. எந்த போலீஸும் இப்படி பாய்ந்து சென்று பிடிக்கவில்லை! ஏன் அந்த பணம் மட்டும் நல்லா காரியத்திற்கு பயன்படுத்தப் படுகிறதா? ஆனால், அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டதாக, கோவையை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயர் சங்கர்கணேசும், திருட்டு டி.வி.டி. தயாரித்ததாக சென்னையை சேர்ந்த அப்துல் ஜாபர் என்ற பர்மா பஜார் கடை ஊழியரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக, நடிகர்-நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் ஆகியோர் சென்னையில் நேற்று அவசரமாக கூடிப்பேசினார்கள். அந்த கூட்டத்தில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு, திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பதற்கான யோசனைகளை தெரிவித்தார்கள்.

திருட்டு வி.சி.டி. விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது? என்பது பற்றிய அவசர ஆலோசனை கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர்பிரேம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. அதில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, நடிகைகள் ராதிகா சரத்குமார், ஸ்ரீப்ரியா, லிசி பிரியதர்ஷன், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஆர்.கே.செல்வமணி, ஏ.ஆர்.முருகதாஸ், சேரன், பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, டி.ஜி.தியாகராஜன், கேயார், பிரேம் மேனன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்த நிலையில், சரத்குமாரின் இந்தப் படம் இணையதளங்களில் முழுமையாக வெளியாகி விட்டது. பின்னணி இசை சேர்ப்புக்கு முந்தைய நிலையில் படம் இருந்தபோது யாரோ இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். இதனால் வெறும் வசனங்கள் மற்றும் காட்சிகள் மட்டுமே இணையத்தில் பார்க்க முடிகிறது. அதாவது குறைப் பிரவசத்தில் பிறந்த குழந்தை போல ஜக்குபாய் நெட்டில் உலா வந்து கொண்டுள்ளது.

இதைவிட கொடுமை, இந்தப் படத்துக்கு பார்வையாளர்கள் மிக மிகக் குறைவாக இருந்ததுதானாம். இணையத்தில் இலவசமாக வெளியாகியும் பார்க்க ஆளில்லை என்றால் மனசு கஷ்டமாகத்தானே இருக்கும்! இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளார் சரத்.

சென்னையில் ரெய்டு…ஜக்குபாய் படத்தை லேப்பில் இருந்து திருடி மர்ம கும்பல் ஒன்று சி.டி.யாக பதிவு செய்து பர்மா பஜார் வியாபாரிகளிடம் விற்று விட்டதாகவும் அதை வைத்து பஜாரில் உள்ளவர்கள் ஆயிரக்கணக்கில் சி.டி. யாக தயாரித்து, விற்பனைக்கு விட தயாராக வைத்திருப்பதாகவும் நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

உடனடியாக இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் சரத்குமார் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து திருட்டு சி.டி. கும்பலை சுற்றி வளைக்கும்படி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நேற்று இரவோடு இரவாக திருட்டு சி.டி. தயாரிப்பின் புகலிடமாக விளங்க கூடிய வட சென்னையில் முக்கிய பகுதிகளை 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்தனர்.

குடிசை தொழில் போல் திருட்டு சி.டி. பதிவு செய்யும் முக்கிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் சென்று சோதனை செய்தனர். இதில் ஜக்குபாய் படத்தின் 50 ஆயிரம் சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பர்மா பஜாரில் உள்ள ஏராளமான கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கும் சமீபத்தில் வெளியான பது படங்களின் சி.டி.க்கள் சிக்கியது. இது தொடர்பாக 5 பேரை முதற்கட்டமாக போலீசார் கைது செய்துள்ளனர்.

தீவிரவாதத்துக்கு பயன்படும் திருட்டு விசிடி பணம்!- கமல்

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/01/05-kamal-s-speech-anti-piracy-discussion.html

திருட்டு விசிடியைத் தடுக்கமுடியாது: திருட்டு விசிடி விற்ற பணம் நல்ல காரியத்துக்கு போகாது. தீவிரவாதம் போன்ற தேச விரோத காரியங்களுக்குதான் பயன்படும் என்றார் கமல்ஹாஸன். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்துள்ள ‘ஜக்குபாய்’ திரைப்படம் திரைக்கு வராத நிலையில் இன்டர்நெட்டில் வெளியாகி அதன் மூலம் திருட்டு சிடியாக வெளி வந்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து இன்று நடந்த திரையுலகினர் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பிரஸ் மீட்டில் பங்கேற்ற கமல்ஹாஸன் பேசியதாவது: படம் வெளிவராத நிலையில் ஜக்குபாய் சிடி வெளியானது குறித்து எல்லோரும் துக்கம் விசாரிப்பதால் இழவு வீடு போல இருப்பதாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வேதனையோடு குறிப்பிட்டார். இது இழவு வீடு அல்ல, அப்படி அவர் நினைக்க வேண்டாம். திருட்டு விசிடி தயாரிப்பு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. நான் உட்பட இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.  திருட்டு வி.சி.டி. வந்துவிட்ட இந்த நிலையில் ஜக்குபாய் படத்தை விரைவில் தியேட்டருக்கு கொண்டு வருவதுதான் அவசர காரியம். எனது விக்ரம் படம் வந்தபோது ஒருவரைப் பிடித்தனர். அவர் மறுநாளே வெளியே வந்துவிட்டார். இது போன்றவர்களை எப்படி திருத்த முடியும்?.  என்னுடைய ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் எப்படி விற்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.  சாராய கடைகள் திறந்தும் கள்ளச்சாராயச் சாவுகள் நடக்கின்றன. குறைந்த விலையில் வி.சி.டி. விற்றால் மக்களும் வாங்க தயாராக உள்ளனர்.  திருட்டு விசிடியை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று எல்லோரும் பேசினர். இந்த தொழிலில் ஈடுபடுபவர்களும், இதை பார்ப்பவர்களும் மனம் வருந்த செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் திருட்டு விசிடிக்கு எதிராக உண்மையிலேயே நெஞ்சை சுடும் வகையில் ஒன்றை சொல்ல முடியும்.

திருட்டு விசிடியும், ஜிஹாதி தீவிரவாதமும்: திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணமெல்லாம் மும்பை நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதை மக்களிடம் சொல்ல வேண்டும். உங்கள் பணத்தில் குண்டுகள் தயாரிக்கப்படுகிறது. அது உங்கள் தலையிலேயே விழும் என்று எச்சரிக்க வேண்டும். திருட்டு விசிடி தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் அதற்கான பணத்தை காசோலையாக கொடுப்பதில்லை. இது முழுவதும் கருப்பு பணம். இதில் ஒரு பகுதி தீவிரவாதிகளுக்கு சென்றடைகிறது. எங்காவது குண்டு வெடிக்கும்போது அதில் திருட்டு விசிடி மூலம் கிடைத்த பணமும் இருக்கிறது என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். தேச துரோக காரியங்களுக்கு இந்த பணம் போவதை உணர்த்த வேண்டும். இதை இப்படியே விடக் கூடாது. சட்ட திட்டங்களை அழுத்தமாக உருவாக்க வேண்டும். தவறு நடைபெறும் வழிகளை தடுக்க வேண்டும். அடுத்து வருகிற படங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.  ஜக்குபாய் படத்திற்கு இதை ஒரு விளம்பரமாகவே எடுத்து கொள்ள வேண்டும். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார் கமல்.

கே.எஸ்.ரவிக்குமார் கண் கலங்கினார்: ஆஹா, காய்கறிகள் விலைக்காக மக்கள் அழுவது தெரியவில்லையா? கோடிகளில் புரளும் இவரளுக்கு அழுகை வருகிறது! கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் கறுப்பு உடை அணிந்திருந்தார்கள். டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது, ஷஷஎன்னை பார்ப்பவர்கள் எல்லாம் ஷஜக்குபாய்’ படத்துக்கு இப்படி ஆகிவிட்டதாமே என்று துக்கம் விசாரிப்பது போல் கேட்கிறார்கள். சாவு வீட்டில் இருந்து வருவது போல் ஆகிவிட்டது. ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்தை திருடிவிட்டார்கள் என்பதை விட, ஏறக்குறைய எங்களை கொலை செய்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. எங்களின் ஒரு வருட உழைப்பு வீணாகிவிட்டது” என்று அழுதுகொண்டே கூறினார்.

சரத்குமார்-ராதிகா கண்ணீர்: முன்னதாக, ராதிகா சரத்குமார் பேச ஆரம்பித்தபோது, பேச முடியாமல் அழுதார். அவரைப்பார்த்து சரத்குமாரும் கண்கலங்கினார். “இதைவிட, எங்கள் குடும்பத்தை நடுரோட்டில் வைத்து சுட்டு கொன்றிருக்கலாம்” என்று ராதிகா அழுதுகொண்டே கூறினார். ‘ஜக்குபாய்’ திருட்டு வி.சி.டி.க்காக உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் கூறினார்கள்.

இப்படியான சினிமாகார்களின் கூத்து வேடிக்கையாக இருக்கிறது: கருணாநிதி ஏன் அப்படி பாய்ந்து-பாய்ந்து ஆணையிடுகிறார், உடனே சைபர் கிரைம் போலீஸார் அப்படி வேலை செய்து கண்டு பிடிக்கிறார்களே? இதே வில் ஹியூம் விஷயத்தில் இன்டர்போல் சொல்லித்தானே தெரிகிறது?

கலப்படக்காரர்ளை, அநியாயமாக அதிகவிலைக்கு விற்க்கும் வியாபாரிகளை போலீஸ் பிடிக்கிறதா? இங்கு போலீஸாரைக் குறைச் சொல்லவில்லை. அரசன் சொல்லுவதைத்தான் வீரர்கள் கேட்பார்ள். அரிசி கடத்தல், சகஜமாகி விட்டது. சென்ற வருடத்தைவிட, இந்த பொங்கல் கசக்கும்! இந்நிலையில் ஏன் விலைவாசிகள் கட்டுப்படுத்துவதைப் பற்றி பேச்சைக் காணோம்?

200 கோடிகள் மாநாடு நடுத்துகிறேன் என்று வேண்டியவர்கள் கொள்ளையடிக்க வகை செய்யப்பட்டுள்ளது. செலவழிக்கப்பட்டது என்றுதானே கணக்கு எழுதப் போகிறார்கள், கணக்குக் காட்டப் போகிறார்கள்?

ஆலோசனைக்கூட்டம் சென்று தாஜ் ஹோட்டலில் 200 அங்கத்தினர் மற்றும், கட்சிக்காரர்கள் சாப்பிட்டுள்ளனர். இதற்கே பல லட்சங்கள் செலவாகிவிட்டன!

இதெல்லாம் நல்ல காரியங்களா?

இப்படி சினிமாக்காரர்களும் இக்காரியங்களில் சம்பந்தம் பட்டு, மக்களை-சமூதாயத்தைக் கெடுத்து சீரழித்துள்ளதால்தான் அவர்கள் இவ்விதமாக அனுபவிக்கிறார்கள்.

விசிடி விஷயத்தில் அழத்தெரிந்த, விபச்சாரம் விஷயத்தில் கொதித்தெழுந்த இவர்களுக்கு , தாங்கள் எத்தனைப் பெண்களின் வாழ்க்கையை கெடுத்தோம், சிறுவர்களின் மனங்களை பாதித்தோம், குடும்பங்களை சீரழித்தோம் என்ற எண்ணமும் இருக்கவேண்டும்.

நியூட்டனின் மூன்றாம் விதியென்றால் பேசத்தெரிந்தவர்கள், இந்நிலையிலும் அதன் அர்த்தத்தை அறியவேண்டும்!

2 பதில்கள் to “திருட்டு விசிடி, சினிமாகாரர்கள், தீவிரவாதம், கருணாநிதி!”

  1. vedaprakash Says:

    ‡£y| «.p.z. Y£YR¼h S•U BºjLRÖÁ LÖWQ•. ˜oN‹‡›¥ J£ ÙTÖ£Û[ ÛY†‰«y|, ˜R¥Y¡P• L֐TÖ¼\ ÙNÖÁ]Ö¥, GTz?

    «ÂÚVÖLÍRŸ A¥X‰ ‡ÚVyP¡¥ C£‹‰ ‡£y| «.p.z.eh TP• ÚTÖf\‰ GÁ\Ö¥, A‹R «ÂÚVÖLÍR£eh•, ‡ÚVyP£eh• TP• ÙLÖ|eLÖˆŸL·. A‹R «ÂÚVÖLÍRÛW•, ‡ÚVyPÛW• RÛP ÙNšVXÖ•.

  2. குப்புசாமி Says:

    அதுதான் நன்றாகவே தெரிகிறதே?

    அதில் எல்லோருக்கும் கூட்டு என்பது தெரிகிறது.

    பிறகு என்ன இந்த வேடம் எல்லாம்?

    கூத்தாடி பசங்களுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுக்கக் கூடாது!

    அந்த “ஜக்குபாயோ” அல்லது “மருத நாயகமோ” எனக்கு சரியாக ஞாபகம் இல்லை, ராயப்பேட்டை பெனிவிட் ஃப்ண்டில் கடன் வாங்கி கமல்ஹாஸன் எம்மாற்றியதால், எத்தனை வயறுகள் எரிந்திருக்கும்?

    அந்த பாவம், இந்த கூத்தாடிகளை விட்டுவிடுமா?

    அதனால்தான் அவஸ்தைப் படுகிறர்கள்.

    தெய்வம் நின்று கொல்லும் என்பது இதுதான் போலும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: