தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்: குஷ்பு வேண்டுகோள்!

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்: குஷ்பு வேண்டுகோள்
செவ்வாய்க்கிழமை, 12, ஜனவரி 2010 (8:28 IST)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24591
செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்துள்ள ‘முன்தினம் பார்த்தேனே’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை போலீஸ் டி.ஜி.பி. ஜெயின் வெளியிட, டைரக்டர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.

கடந்த ஆண்டில் திரையுலகுக்கு அறிமுகமாகி வெற்றி படங்கள் கொடுத்த புதுமுக டைரக்டர்கள் பாண்டியராஜ் (பசங்க), அறிவழகன் (ஈரம்), பன்னீர்செல்வம் (ரேனிகுண்டா), ராஜேஷ் (சிவா மனசுல சக்தி), சுசீந்திரன் (வெண்ணிலா கபடி குழு) ஆகிய 5 பேர்களும் விழா மேடையில் கவுரவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு டைரக்டர் பாரதிராஜா நினைவு பரிசுகள் வழங்கினார்.

விழாவில் பேசிய நடிகை குஷ்பு, தமிழ் சினிமாவில், கதாநாயகிகள் இல்லை. எல்லோரும் மும்பை போய்விட்டார்கள்.

ஜக்குபாய்’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே திருட்டு வி.சி.டி.யாக வந்து இருக்கிறது. சரத்குமாரும், ராதிகாவும் ரூ.15 கோடி நஷ்டத்தை தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்கள் எத்தனை திடமானவர்கள் என்பது புரியும். வேறு யாராலும் இந்த நஷ்டத்தை தாங்க முடியாது.

திருட்டு வி.சி.டி. பெருகுவதற்கு, ஆடியன்ஸ்’ (பார்வையாளர்கள்)தான் முக்கிய காரணம். தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் தயாரித்து, தியேட்டருக்கு கொண்டு வருகிறார்கள். அதை திருடி விற்பது எந்தவிதத்தில் நியாயம்?

வி.சி.டி. திருடர்களிடம் இருந்து, தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள். நீங்கள் காப்பாற்றினால்தான், தொடர்ந்து படம் தயாரிக்க முடியும் என்றார்.

டைரக்டர் கே.பாக்யராஜ் பேசும்போது, சினிமாவுக்கும் சோதனை காலம். கடவுளுக்கும் சோதனை காலம். படம் திரைக்கு வருவதற்கு முன்பே திருட்டு வி.சி.டி.யாக வருகிறது. கோவில் கருவறையில், கற்பழிப்பு நடக்கிறது என்றார்.

குறிச்சொற்கள்:

ஒரு பதில் to “தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்: குஷ்பு வேண்டுகோள்!”

  1. குப்புசாமி Says:

    இந்தம்மாவிடமிருந்து, தமிழ் சினிமா மட்டுமல்ல, தமிழையும் காப்பாற்ற வேண்டியுள்ளதே?

    இந்த அழகில், “தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்”, இவள் இவ்வாறு கூக்குரலிடுவது வேடிக்கைதான்!

    முருங்கைக்காய் பாக்யராஜுக்கு இவ்வளவு கொழுப்புக் கூடாது. “சினிமாவுக்கும் சோதனை காலம். கடவுளுக்கும் சோதனை காலம்”, என்றால் என்ன அர்த்தம்?

    கருணாநிதிதான் கடவுள் என்று பிதற்றும் பொன்முடி. வாலிகளை கிண்டல் செய்கிறாரா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: