அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா: ஐகோர்ட் நீதிபதி வேதனை!

‘அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா’ : ஐகோர்ட் நீதிபதி வேதனை
ஜனவரி 23,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6370

Front page news and headlines todayமதுரை : “”அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா,” என, மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி வி.தனபாலன் வேதனை தெரிவித்தார்.

மது  குடிக்கும் பத்தாவது மாணவன்: முசிறியை சேர்ந்தவர் ராஜ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். தீபாவளியன்று பள்ளி வளாகத்தில் நண்பருடன் மது அருந்தியதாக, ராஜை வகுப்பில் அனுமதிக்க தலைமையாசிரியர் மறுத்து விட்டார். இதை எதிர்த்து ராஜின் தந்தை ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்தார். மனுவில், “”மாணவனை பள்ளியில் அனுமதித்து செய்முறை தேர்வில் பங்கேற்க உத்தரவிட வேண்டும்,” என கோரினார். இம்மனு நேற்று, நீதிபதி வி.தனபாலன் முன் விசாரணைக்கு வந்தது. மாணவன், அவரது தந்தை ஆஜராயினர். தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி,””மாணவர் செய்த தவறை இன்னும் உணர்ந்ததாக இல்லை. அவருடைய எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் இன்னும் அவரை பள்ளியை விட்டு நீக்கவில்லை,” என்றார்.

மாணவன் மன்னிப்புக் கேட்டது: இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது, தன் தவறுக்காக வருந்துவதாகவும், இனிமேல் இதுபோன்று தவறு செய்ய மாட்டேன் என்றும், தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் மாணவ‌ன் கேட்டுக்கொண்டா‌‌ன். ”என்ன நடந்தது என்பதை எங்களால் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு 17 வயது தான் ஆகிறது. விரைவில் தேர்வு நடக்க உள்ளது. பள்ளியில் அவனை அனுமதிக்காவிட்டால் எதிர்காலம் பாதிக்கும்” எ‌ன்று மாணவ‌னி‌ன் பெ‌ற்றோ‌ர் கூ‌றின‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து பே‌சிய நீதிபதி, மாணவரைப் பொருத்த அளவில் கடந்த ஆண்டு படிக்கும் போது வருகைப் பதிவு சிறப்பாக இருந்துள்ளது. பருவ வயது காரணமாக அவர் தவறு செய்து இருக்கலாம். மாணவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட திரைப்படங்கள் தான் காரணம். இது எனது தனிப்பட்ட கருத்து.

படிக்கும் மாணவர்களைக் கெடுப்பது சினிமாதான்!: அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.தனபாலன் கூறியதாவது: மாணவன் பிளஸ் 1 வரை நல்ல முறையில் படித்துள்ளார். வருகை பதிவேடு நன்றாக உள்ளது. தற்போது இத்தகைய குற்றங்களுக்கு காரணம் அவருடைய வயது. இதற்கு முழு காரணம் சினிமா தான். சில நல்ல சினிமாக்களும் வருகின்றன. சில சினிமாக்களில், கதாநாயகர்கள் செயல்படுவது போல இளைஞர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா ஒழிந்தால் இத்தகைய பிரச்னைகள் ஒழிந்து விடும். சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா. இது என் தனிப்பட்ட கருத்து. பழைய சினிமா பாடல்களை குழந்தைகள் அமைதியாக கேட்டு ரசிக்கின்றனர். இன்றைய சில சினிமா பாடல்களை கேட்டு அலறி அடித்து ஓடுகின்றனர். இதை என் வீட்டிலேயே பார்க்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளாக சினிமாவில் இந்த நிலை நிலவுகிறது.

நல்ல படங்களும் உள்ளன!: சில மாதங்களுக்கு முன், தலைமை நீதிபதி, “தாரே ஜமீன்’ என்ற இந்தி சினிமாவை பார்க்கும்படி கேட்டு கொண்டார். அனைத்து நீதிபதிகளும் அந்த சினிமா பார்த்தோம். அத்தகைய நல்ல சினிமாக்களும் வருகின்றன. குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கினால் நாட்டை உருவாக்க முடியும். இதற்கு யாரையும் குற்றம் சாட்ட முடியாது. மொபைல் போன் நல்ல தொழில்நுட்ப கண்டுபிடிப்பு. அதை ஆபாசத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதை சட்டத்தை அமல்படுத்துவோரும், பெற்றோர்களும் அனுமதிக்க மாட்டார்கள். இருப்பினும் சுற்றுப்புற சூழல் காரணங்கள் இதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. மாணவருக்கு தண்டனை வழங்குவது நோக்கம் கிடையாது. தண்டனை வழங்கினால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும். பிற்காலத்தில் அவர் முக்கியமானவராக வரலாம். பதினேழு வயதில் பருவ கோளாறுகள் ஏற்படும். மாணவரது முந்தைய நடத்தைகள் நன்றாக உள்ளது. எனவே பள்ளி கல்வி துறை மற்றும் மாவட்ட கல்விஅதிகாரிகளுடன் அரசு வக்கீல் ஆலோசித்து, முடிவை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார். விசாரணையை ஜன., 27க்கு தள்ளிவைத்தார்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1001/23/1100123002_1.htm

எது எப்படியாகிலும் தமிழ் சினிமாக்காரர்கள் சமூகக் குற்றங்களுக்கு பொறுப்பேற்கவேண்டும்: தமிழ் சினிமாகாரர்கள் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் அவர்கள்தாம் தமிழ் சமுதாயம் கெட காரணம். இன்றைக்கு தமிழ் சினிமா கூத்தாடிகள் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு வருவதால் அவர்களை பொறுப்பாக்கவேண்டும்.

சினிமா விளம்பரத்திற்கு நோட்டீஸ் கொடுக்கும் அரசு, ஏன் ஆபாச நடிகைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கக்கூடாது? பல தமிழ் சினிமா நடிகைகள் கேவலமாக குத்தாட்டம் (இப்படியொரு வார்த்தை பரவலாக உபயோகிக்க்ப் படுகிறது), குதியாட்டம் (குதிக்கின்ற ஆட்டம்) என்று உள்ள சிறு ஆடைகளையும் அவிழ்த்துப் போட்டு ஆடத் துடிக்கிறர்கள்! அவர்களது ஆபாசம் கருணாநிதியின் முன்பே அரங்கேறியுள்ளது. ஆனால், அதைப்பற்றி யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. சினிமாதான் காரணம் என்றல் அத்தகைய கேவலமான, சமுகத்தைக் கெடுக்கும் சினிமாக்களை எடுப்பவர்கள், விநியோகிப்பவர்கள், அதில் அவ்வாறு கேவலமாக நடிப்பவர்கள், நடிக்க வைப்பவர்கள், ஆட்டுகிறவர்கள்………………எல்லொருமே காரணம்தான்!

இன்றைய கருணாநிதி அரசில் / ஆட்சியில் இதற்கெல்லாம் குறையில்லை! கருணாநிதியின் சினிமா புலமை, துறைத்திறன், பாண்டித்யம், வல்லுமை, தந்திரம் முதலியன யாருக்கும் வராது……சினிமாவிற்கே சினிமா கற்றுக்கொடுக்கும் அவருக்கு நிகர் அவர்தாம்! அவர்வழித்தான் அவரது மகன்கள், பேரன்கள்…………..முதலியோர் செய்துவருகின்றனர். பல சினிமா கம்பெனிகள், சம்பந்தப்பட்டுள்ள விநியோகம் முதலிய தொழில்களில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான நிலையில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அவற்றில், அவரது குடும்ப அங்கத்தினர்கள் மூன்று தலைமுரைகளாக உள்ளனர். அத்தகைய சினிமாவை 24 x 7 கணக்கில் ஒலி-ஒளி பரப்புகளில் ஈடுபட்டுள்ளதும் அவரது மற்றும் அவர் உறவினர்களின் டிவி செனல்களே! அவர்-அவர்களது உதவி இல்லாமல் சினிமாத்துறையில் எவரும் ஒன்றும் செய்துவிட முடியாது!

அப்படியிக்கும்பட்சத்தில் எப்படி அவர்-அவர்கள் தப்பித்துக் கொள்ளமுடியும்? தார்மீகரீதியிலேயே அனைவரும் மாட்டிக்கொண்டுள்ளார்களே?

குறிச்சொற்கள்: , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: