நாகர்கோவில்: காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சிதறாலை சேர்ந்தவர் மேள்சி தாஸ். இவரது மனைவி கனகம். இவர்களது மூத்த மகள் ஷர்மிலி. இவரது ஒரு தங்கையும், தம்பியும் சிறுவயதில் குளத்தில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இந்த அதிர்ச்சியில் மேள்சிதாஸ் இறந்து போனார். தாயின் பராமரிப்பில் வளர்ந்த ஷர்மிலி எம்.இ., படித்து முடித்தார். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
பெண் அதிகம் படித்துள்ளாள் என்ற குற்றா உணர்வு மற்றும் ஏமாற்றவேண்டும் என்ற மனப்பாங்கு: ஷர்மிலியை அதே பகுதியை சேர்ந்த ஷாஜன் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஒரு கட்டத்தில் ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த சான்றிதழை ஷர்மிலி கேட்டுள்ளார். இதனால், பயந்து போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், ஷாஜனை உதறிய ஷர்மிலி தாயிடம் தனக்கு வேறு வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார்.
வன்முறை காதல், தீவிரவாத பெண்-கேட்பு, கொடூரமான செயல்: இதனால் “தாக்குதல் போக்கில்” தானே பெண் கேட்டு மிரட்டல் வேலையிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதறால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமாக்காரர்களுக்கு எச்சரிக்கை: குறிப்பாக சில நடிகர்கள் – விஜய், தனுஷ், சிம்பு, அஜித்……………………முதலியோர்க்கு இத்தகைய “ஃபர்முலா”வை விட்டால், வேறு விஷயமே கிடைக்காது. இப்படி அதே மாவைத் திரும்ப-திரும்ப மாறி-மாற்றி திரைப்படங்கள் எடுத்துவருகின்றனர். காதலைக் கொச்சைப்படுத்தி, விரசப்படுத்தி, கேவலப்படுத்தி, ஆபாசப்படுத்தி, அசிங்கப்படுத்தி, …………………இன்னும் எனென்ன வார்த்தைகள் உண்டோ அனைத்தையும் செர்த்துக் கொள்ளலாம். காமத்தைக் காதலாக்கி, விபச்சாரத்தை நட்பாக்கி, அபாசத்தை சினிமாவாக்கும் இவர்கள் மிகப்பெரிய சமூகத் தீவிரவாதிகளே.
ஒரு பெண்ணை பலர் காதலிப்பது, ஒருவன் பல பெண்களைக் காதலிப்பது, ஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது, “முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும்” சபலங்களை நியாயப்படுத்துவது, இப்படி ஆண்மைத்தனமற்ற பேடித்தனத்தை “ஹீரோயிஸமாக்கி” உண்மயான, மென்மையான காதலை விபச்சாரமயமாக்கப் பட்டுவிட்டதால், அதனையே நிஜ வாழ்க்கையில் பின்பற்ற முயல்கிறார்கள்.
குறிச்சொற்கள்: ஆட்டோ காதல், ஐஸ்கிரீம் காதல், காதல், காதல் தீவிரவதம், சினிமா காதல்
மறுமொழியொன்றை இடுங்கள்