நடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை!

நடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை!

கோலிவுட்டில் அமைதி உடன்படிக்கை!
இனி “அஜித்” சமாசாரம் கிடப்பில் போடப்படும் என்பதால், நடிகர்களும், சங்கக்களும் இந்த பிரச்சினைப் பற்றி ஊடகத்தாரிடம் எதையும் பேசவேண்டாம் என்றும், பிரச்சினையை பெரிதாக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது!
Temporary truce in Kollywood!
By Moviebuzz | Sunday, 21 February , 2010, 12:48

A temporary truce has been brought out after a meeting of various unions of Tamil film industry met on Saturday (Feb 20) to sort out the aftermath of Ajith’s controversial speech at a function organised to felicitate Chief Minister M Karunanidhi.

The meeting chaired by Tamil Film Producers Council president Rama Narayanan, FEFSI president V C Guhanathan, Nadigar Sangam general secretary Radha Ravi, R K Selvamani from Tamil Film Directors Association and representatives of film distributors association, exhibitors and theatre owners association demanded an unconditional apology from Ajith. They also condemned Rajinikanth’s statements on the issue.

Meanwhile Ajith and Rajinikanth kept their cool and refused to make any apology. In an interview to an English newspaper, Ajith struck to what he had said in his speech.

Expanding on the comments made at a function, the actor made it clear: “Let stars choose what causes they want to endorse without making it an issue of loyalty to the state or country,”

The Saturday film industry meeting has temporarily put the “Ajith issue” on the backburner. They requested artistes and associations not to talk to media over the issue and vitiate the matter further.

ajith-rajini-fefsi-20-02-10-2

ajith-rajini-fefsi-20-02-10-2

திருமாவளவன் பேசும் வசனங்கள்: ரஜினிகாந்த், அஜீத் குமார் ஆகியோரின் செயல்பாடுகள் தமிழ் இன விரோத செயலாக உள்ளது என திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்[1]. திருமாவளவனுக்கே நடிக்கவேண்டும் என்ற ஆசையில் நான்கைந்து படங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அன்புதோழி, மின்சாரம்……என பட்டியல் நீண்டது! ஆனால் அவை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இவரும் மற்றவர்களைப் போல “மக்கள்-டிவியில்” அடிக்கடி பேட்டி என்ற ரீதியில் நடித்து வந்தார். ஒன்றும் எடுபடவில்லை. ஆகவே நடிகர்கள்மீது, அவருக்கு இருக்கும் கோபம் நியாயமானதே!

ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல்: இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: “கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது[2]. அண்மையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது”.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல்: “கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.தமிழகத்தில் காவிரிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட தமிழின பிரச்சனைகளுக்காக திரைப்படத் துறையினர் தன்னியல்பாக வெகுண்டெழுந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான போராட்டங்களின்போது ஒரு சில நடிகர்களும் நடிகைகளும் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதும் புறக்கணிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் தம்மை வாழ வைக்கும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறபோது அத்தகைய போக்குள்ளவர்களை கண்டிப்பதும் சுட்டிக் காட்டுவதும் இயல்பானதுதான். அதனை மிரட்டுவதாகச் சொல்லி திசை திருப்புவது மேலும் உணர்வை இழிவுபடுத்துவதாகும்.

விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது.  விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள்[3]. விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? இதை ஊதிப் பெருக்கிப் பிரச்சனையாக்கியது மட்டுமல்லாமல், ஜாக்குவார் தங்கம் வீட்டையும் தாக்கி அவரது மனைவியைக் காயப்படுத்துவதற்கு உடந்தையாய் இருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழ் இனஉணர்வுக்கு[4] பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது: இத்தகைய சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நடிகர் ரஜினி, அஜீத் ஆகியோர் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதுதான் நாகரிக அணுகுமுறையாகும். ஆனால் அவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து அவர்களது உள்நோக்கம் புரிகிறது. தமிழகத்தில் தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது”, என்று தெரிவித்துள்ளார்[5].

தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி: இவ்வாறு பேசுவதில் என்ன அர்த்தம் என்று தமிழ் மக்கள் அறிவார்களா? எல்லொருமே நடிகர்கள், அரசியல்வாதிகள் என்றால், பிறகு எப்படி இந்த தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி முதலியவையெல்லாம் வரும்? இனமானத்தலைவர்கள், இனமான நடிகர்கள் இப்படி நாளுக்கு-நாள் தமிழகத்தில் பெருகிவருவது வியப்பாகவே உள்ளது. இனி செம்மொழிக்கும் இவர்களெல்லாம் ஏதாவது செய்தாலும் செய்வார்கள் போலயிருக்கிறது! கருணாநிதிக்கு விழா என்றால் எல்லா நடிகர்கள்-நடிகைகள் வரவேண்டும் இல்லையென்றால் அது தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி என்றாகிவிடும் என்று மிரட்டுவது வேடிக்கைதான்.

முன்பு பத்திரிக்கையாளர்கள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்த்தோம். இனி அரசியல்வாதிகள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்ப்போம்!


[1] தட் ஈஸ் தமிள், ரஜினிஅஜீத்துக்கு திருமாவளவன் கண்டனம்!, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21, 2010

http://thatstamil.oneindia.in/movies/news/2010/02/thirumavalavan-condemns-ajith-rajin.html

[2] இவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் சென்று கலாட்டசெய்தது, அடித்தது முதலியவற்றை மறந்துவிட்டார் போலயிருக்கிறது. ராஜிவ்காந்தி சிலை உடைத்ததிலும் அவர்கள் பங்குள்ளது.

[3] இத்தகைய வேலைகள் இவருக்கு அத்துப்படி. பாண்டிச்சேரி, காரைக்கால் முதலிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறித்துள்ளது அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். வி.சி கூட்டங்கள் நடத்துவதற்கெல்லாம் பணம் கேட்டிருக்கிறார்கள்.

[4] இப்படி இனம் என்று பேசியே அரசியல் நடத்தும் கூட்டங்கள்தாம் தமிழர்களை உண்மையில் ஏமாற்றி வருவதை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

[5] நக்கீரன், ரஜினி,அஜீத்தின் உள்நோக்கம் புரிந்துவிட்டது: திருமாவளவன் ஆவேசம் , ஞாயிற்றுக்கிழமை, 21, பிப்ரவரி 2010 (8:41 IST); http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27325

குறிச்சொற்கள்: , , , , , ,

5 பதில்கள் to “நடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை!”

 1. vedaprakash Says:

  Pressure mounts but Ajith sticks to his position
  Bhama Devi Ravi, TNN, Feb 21, 2010, 03.43am IST
  http://timesofindia.indiatimes.com/city/chennai/Pressure-mounts-but-Ajith-sticks-to-his-position/articleshow/5598198.cms

  CHENNAI: Even as the film fraternity continues to roil over his comment that celebrities were being forced to lend their support to all kinds of political and social causes, actor Ajith Kumar told The Times Of India in an exclusive interview that he had made the statement in the presence of the Tamil Nadu chief minister due to a deep conviction about his stand.

  “I have stuck my neck out, but it is my strong belief that it is not politicians or those in the business of governance who are creating trouble. They have more serious issues to handle and have no time to indulge in petty matters. But there is a group that wants a star to participate (in all such events) and if he does not comply and prefers that the government handle it, then the star’s nativity and loyalty are questioned,” the actor told TOI.

  Ajith, whose father was born in Thanjavur but whose ancestors are from Kerala and whose mother is a Sindhi, said, “I grew up a Tamilian” and considered himself “a native “. He said, “Cinema is a great binding force for a nation” and bringing divisive tendencies to the arts is appalling.

  “When a fan buys a ticket for a cricket match or a movie, he is not worried about the colour, creed or religion of the person sitting next to him. If you look at any actor’s fan base in India, you will find that they are from different regions,” said Ajith. “Let stars choose what causes they want to endorse without making it an issue of loyalty to the state or country,” he added.

  Expanding on the comments made at a function on February 6, he said, “When there is a sensitive political issue brewing, we owe it to the government to let it sort it out, but stars are being forced to show solidarity.” This put them in a difficult situation.

  At the felicitation ceremony for chief minister M Karunanidhi, Ajith had appealed that he put an end to the practice of film stars being forced to show support for social and political issues. Actor Rajnikanth gave Ajith a standing ovation when he made the statement.

  The incident has since snowballed into a controversy with some groups demanding that Ajith express regret. Although the CM backed him at the function, one group threatened to protest in front of Ajith’s residence, prompting the police to provide him with security.

 2. vedaprakash Says:

  Police protection for actor Ajith by Petlee Peter
  http://www.hindu.com/2010/02/20/stories/2010022060270100.htm

  CHENNAI: Armed police personnel were deployed outside the residence of actor Ajith Kumar in Valmiki Nagar, Thiruvanmiyur, here on Friday morning following an apprehension that his house would be attacked. Police personnel were deployed also outside a marriage hall belonging to Rajinikanth situated in Kodambakkam.

  The move came after some persons, claiming to be fans of Ajith, damaged a vehicle owned by film stunt director Jaaguvaar Thangam. The rear windscreen of the sports utility vehicle, parked outside Mr. Thangam’s residence in MGR Nagar, was damaged in the early hours of Thursday.

  Mr. Thangam was at a film shooting in Madurai at the time of the attack. Subsequently he met the Commissioner of Police and lodged a complaint. The MGR Nagar police registered a case.

  The stunt director had in an interview to a Tamil magazine criticised a remark Ajith had made at a function, in which Chief Minister M. Karunanidhi participated, that actors were being forced to participate in political and social events. Rajinikanth had supported Ajith for speaking his mind.

  Mr. Thangam, who is also the State youth wing leader of the Nadar Peravai, alleged that the Ajith was behind the attack.

  On Friday evening, two unidentified men who came on a motorcycle barged into Mr. Thangam’s residence, threw stones at his wife Shanti and fled. She suffered injuries on her head and hand and was taken to a private hospital.

 3. vedaprakash Says:

  Temporary truce in Kollywood!
  By Moviebuzz | Sunday, 21 February , 2010, 12:48
  http://sify.com/movies/fullstory.php?id=14932371

  A temporary truce has been brought out after a meeting of various unions of Tamil film industry met on Saturday (Feb 20) to sort out the aftermath of Ajith’s controversial speech at a function organised to felicitate Chief Minister M Karunanidhi.

  The meeting chaired by Tamil Film Producers Council president Rama Narayanan, FEFSI president V C Guhanathan, Nadigar Sangam general secretary Radha Ravi, R K Selvamani from Tamil Film Directors Association and representatives of film distributors association, exhibitors and theatre owners association demanded an unconditional apology from Ajith. They also condemned Rajinikanth’s statements on the issue.

  Meanwhile Ajith and Rajinikanth kept their cool and refused to make any apology. In an interview to an English newspaper, Ajith struck to what he had said in his speech.

  Expanding on the comments made at a function, the actor made it clear: “Let stars choose what causes they want to endorse without making it an issue of loyalty to the state or country,”

  The Saturday film industry meeting has temporarily put the “Ajith issue” on the backburner. They requested artistes and associations not to talk to media over the issue and vitiate the matter further.

 4. vedaprakash Says:

  எது எப்படியாகிலும் கடைசியில் பணம் என்று வந்துவிடும்போது, கொள்ளைக்காரர்கள் ஒன்றாகிவிடுகின்றனர் என்பது போல, ஏதோ இவர்கள் பிரச்சினைதான் தமிழகப் பிரச்சினை என்பதுபோல ஆக்கி, இப்பொழுது சமரசமாம்!

  வாழ்க தமிழ்!

  வாழ்க தமிழகம்!!

  வாழ்க தமிழ் ராஜாக்கள்-ராணிகள்-அந்தப்புர அழகிகளையும் சேர்த்துதான்!!!!

 5. vedaprakash Says:

  அஜீத், ரஜினி கருத்துகளுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு

  First Published : 22 Feb 2010 03:20:11 AM IST

  http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=201190&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

  இந்நிலையில் அஜீத், ரஜினி கருத்துகளுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

  நடிகர் ரஜினிகாந்தும், அஜீத்தும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

  ஒருவர் சுதந்திரத்திற்கு யாரும் இடையூறாக இருக்கக் கூடாது. அவர்களுடைய கருத்துகளில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

  இதற்காக அவர்களை மிரட்டுவதோ, கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிடுவதோ சரியல்ல. தமிழகத்தில் நடமாட முடியாது என்று பயமுறுத்துவதும், தமிழர்களுக்கு எதிரானவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதும் கூடாது.

  கருத்து சுதந்திரத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது, தமிழ் கலாசாரத்திற்கு ஏற்புடையதல்ல.

  வன்முறையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

vedaprakash க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: