தமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி!

நடிகை சோனியா அகர்வால் செல்வராகவன் விவாகரத்து
மார்ச் 13,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5394

Court news detail

சென்னை : நடிகை சோனியா அகர்வால் – இயக்குனர் செல்வராகவன், குடும்ப நல கோர்ட் மூலம் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். இவர்களது திருமணத்தை, குடும்ப நல கோர்ட் ரத்து செய்தது. இயக்குனர் செல்வராகவன் இயக்க, அவரது சகோதரர் தனுஷ் நடித்த, “காதல் கொண்டேன்’ படத்தில் கதாநாயகியாக சோனியா அகர்வால் அறிமுகமானார். “7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, மதுர, திருட்டுப் பயலே’ படங்களில் சோனியா நடித்துள்ளார்.  நாணல் சீரியலிலும் நடித்துள்ளார்.
“காதல் கொண்டேன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கிய, “7ஜி ரெயின்போ காலனி, புதுப் பேட்டை’ படங்களிலும் சோனியா தொடர்ந்து நடித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, கடந்த  2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தனர்.
பின், பரஸ்பர விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நலக் கோர்ட்டில், இருவரும் மனு தாக்கல் செய்தனர். இருவரிடமும்  நீதிபதி ராமலிங்கம் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நேற்று நீதிபதி ராமலிங்கம் தீர்ப்பளித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இருவரும் கோரியது ஏற்கப்படுகிறது. இருவருக்கும் இடையே 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த திருமணம், பரஸ்பர ஒப்புதல் மூலம் ரத்து செய்யப்படுகிறது’ என கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: