எனது மனதுக்குப் பட்டதை இனி சுதந்திரமாகப் பேச முடியும்- குஷ்பு!

எனது மனதுக்குப் பட்டதை இனி சுதந்திரமாகப் பேச முடியும்- குஷ்பு

புதன்கிழமை, மார்ச் 31, 2010, 11:55[IST]

Kushboo

குஷ்புவின் கருத்து – தனது மகள்களுக்காகப் பாராடுகிறாராம்!: இதுகுறித்து குஷ்பு கூறுகையில், இப்போது எனது மனதுக்குப் பட்டதை நான் சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சுச் சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்குப் போராட காரணமே, எனது மகள்களுக்கு, நான் மன உறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் என்றார் குஷ்பு.இந் நிலையில் மீண்டும் இந்தியில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் குஷ்பு. கடைசியாக அவர் இந்தியில் நடித்த படம் தீவானா முஜ்ஸா நஹின். இதில் ஆமிர்கான், மாதுரி தீட்சித்துடன் இணைந்து நடித்திருந்தார் குஷ்பு.

குஷ்புவைப் பற்றி தமிழ் மக்கள் பெருமைப் படவேண்டுமாம்! திருமாவளவன், பாமக மற்றும் இந்து மக்கள் கட்சி இவைகள் எல்லாம் அப்பீல் செய்யுமா அல்லது குஷ்புவின் மயக்கத்தில் ஆழ்ந்துவிடுமா? சரி, தமிழ் மக்கள் ன்ன செய்ய போகிறார்கள்? குஷ்பு சொல்லியபடி பெருமைப் படப் போகிறார்களா?

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “எனது மனதுக்குப் பட்டதை இனி சுதந்திரமாகப் பேச முடியும்- குஷ்பு!”

  1. vedaprakash Says:

    கற்பு: சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கருத்தை வாபஸ் பெற ராமகோபாலன் வலியுறுத்தல்!
    வெள்ளிக்கிழமை, மார்ச் 26, 2010, 10:51[IST]
    http://thatstamil.oneindia.in/news/2010/03/26/sc-should-getback-remarks-on-pre-marital.html

    சென்னை: திருமணம் முன்பு செக்ஸ் உறவு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்து வேதனையளிக்கிறது. நீதிபதிகள் தங்கள் கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம ​கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.

    பெண்கள் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதில் தவறு இல்லை என்று நடிகை குஷ்பு கடந்த 2005ம் ஆண்டு பத்திரிகை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.

    குஷ்புவின் இந்த கருத்து தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அவருக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் 22 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, குஷ்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே உச்சநீதிமன்றத்தில் குஷ்பு முறையிட்டார்.

    குஷ்புவின் மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா, நீதிபதி பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணையின் போது திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு தவறில்லை என்ற ரீதியில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் இதுபற்றி குறிப்பிடுகையில்,

    ‘திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும்,​​ பெண்ணும் இணைந்து வசிப்பதோ எவ்விதத்திலும் தவறல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.​ பாலகிருஷ்ணன்,​​ நீதிபதிகள் தீபக் வர்மா,​​ சௌகான் ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

    பண்பாடு இல்லையெனில் பாரதம் இல்லை.​ சமுதாயத்தின் நம்பிக்கை,​​ அதன் சிறப்பு போன்றவற்றை கவனத்தில் கொண்டு இவர்கள் கருத்து தெரிவித்திருக்க வேண்டும்.

    திருக்குறள் காட்டும் கற்புநெறி,​​ கற்புக்கரசி கண்ணகி போன்ற தமிழகத்தோடு இணைந்துள்ள விஷயங்களை தூக்கி எறியலாமா?

    நீதிபதிகளின் கருத்து தேவையற்றது.​ வேதனையளிக்கிறது.​ இக்கருத்தை அவர்கள் திரும்ப பெற வேண்டும்’ என்று ராமகோபாலன்

  2. vedaprakash Says:

    குஷ்பு மீதான ‘கற்பு’ வழக்குகளுக்கு சுப்ரீம்கோர்ட் தடை
    வெள்ளிக்கிழமை, மே 16, 2008, 12:49[IST]
    http://thatstamil.oneindia.in/movies/specials/2008/05/16-sc-stays-all-cases-on-kushboo.html

    டெல்லி: ‘கற்பு’ கருத்து தொடர்பாக நடிகை குஷ்புவுக்கு எதிரான 23 அவதூறு வழக்குகளை சென்னை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    தமிழ் பெண்களின் கற்பு குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து பேட்டி அளித்ததாக நடிகை குஷ்புவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நடிகை குஷ்பு உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவதூறு வழக்குகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் பல நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த எல்லா வழக்குகளையும் சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து நடிகை குஷ்பு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பேச்சுரிமையை பறிக்கும் வகையில் எனக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனவே அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார்.
    இந்த மனு, தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பெஞ்ச் குஷ்புவுக்கு எதிரான 23 வழக்குகளை சென்னைக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழ் அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

  3. vedaprakash Says:

    கற்பை ஏலம் விட்ட பெண்!
    புதன்கிழமை, மார்ச் 25, 2009, 12:50[IST]
    http://thatstamil.oneindia.in/lifestyle/kamasutra/2009/0325-student-auctions-virginity.html

    கலி காலம் என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்பார்கள் இதைப் படிப்போர். மேட்டர் நமக்கு ரொம்ப ஹாட் ஆக தெரிந்தாலும், மேற்கத்திய நாடுகளுக்கு இது சர்வ சாதாரணமான சமாச்சாராம்தான்.

    கடைகளை ஏலம் விடுவார்கள், வீட்டை ஏலம் விடுவார்கள், ஏன் காந்தி போட்டிருந்த செருப்பைக் கூட சமீபத்தில் ஏலம் விட்டனர். ஆனால் கற்பை ஏலம் விடுவார்களா.. விட்டிருக்கிறார் ருமேனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்.

    அந்த கலிகால கன்னியின் பெயர் அலினா பெர்சியா. 18 வயதாகும் இவர், ருமேனியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓல்டேனியாவில் உள்ள கரகல் என்ற நகரைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

    தனது படிப்புச் செலவுக்காக இன்டர்நெட் மூலம் தனது கற்பை ஏலம் விட்டிருக்கிறார் இந்த இளம் பெண். எவ்வளவுக்குத் தெரியுமா.. 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு.

    இணையதளத்தில் தன்னைப் பற்றிய சிறு குறிப்பை வரைந்து, என்னை ஏலத்தில் எடுப்போருடன் ஒரு வார இறுதியை முழுமையாக செலவிட தயாராக இருக்கிறாராம் அலினா. தங்கும் செலவு, சுற்றிப் பார்க்க ஆகும் செலவு உள்ளிட்ட இத்யாதி செலவுகள் தனியாம் (அந்த ஊரில் வாட் வரி உண்டான்னு தெரியல..)

    ஜெர்மனி மொழியில் அலினா வெளியிட்டுள்ள ஏல விளம்பரம் இப்படிப் போகிறது ..

    நான் ஓல்ட் கவுன்டியைச் சேர்ந்த கரகல் நகரைச் சேர்ந்தவள். 18 வயதாகிறது. எடை 108 எல்பிஎஸ். 5.67 அடி உயரம், பிரவுன் கண்கள். ருமேனியாவைச் சேர்ந்த அழகுப் பெண்.

    தம் அடிக்க மாட்டேன். நல்ல மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம், நான் கன்னிப் பெண்தான் என்பதற்கான சான்றிதழ் வாங்கி வைத்துள்ளேன்.

    எனது முதல் உறவும், இரவும் இனிமையானதாக, சிக்கல் இல்லாத, சிறப்பான உறவாக அமைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

    எனக்கு மரியாதை கொடுக்கக் கூடிய, தாராள மனப்பான்மை உடைய, ஜென்டில்மேனை சந்திக்க விரும்புகிறேன். பின்னாளில் அவர் எனது கணவராகக் கூடிய தகுதியுடன் இருந்தால் சந்தோஷம்.

    எந்தவித கட்டுப்பாடும் இல்லாத செக்ஸுக்கு நான் தயார். ஆனால் எனது கற்பை ஏலத்தில் எடுப்பவர், நோயற்றவராக, ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும்.

    அப்படி தகுதி உடையவர் கிடைத்தால் ஒரு வார இறுதியை அவருடன் முழுமையாக செலவிட நான் தயார். ஆனால் ஹோட்டல் செலவு, பயணச் செலவு உள்ளிட்டவற்றை அவர்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் ..

    இப்படிப் போகிறது அலினாவின் விளம்பரம். 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு ஏலம் கூறியிருந்தாலும், இதுவரை 5000 ஸ்டெர்லிங் அளவுக்குத்தான் ஏலம் கேட்டுள்ளனராம். இந்த ஏலம் முடிய இன்னும் 3 நாட்கள் மீதமிருக்கிறதாம்.

    என்னத்தச் சொல்ல…

  4. vinayak Says:

    100% பெண்களிடம் கற்பை எதிர்பார்பது தப்பு அப்படியெல்லாம் 100% எதிர்பார்க்காதீர்கள். இது தான் இன்றைய உண்மை நிலை . இதையேதான் குஷ்பு என்ன மற்ற நடிகைகள் என்ன, மருத்துவர்கள் என்ன , பள்ளிகளில் பெண்களைப்பற்றிய கணெக்கெடுப்பு நடத்துவோர் என்ன , எல்லாரும் செல்வது . இதை குஷ்பு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    இது சரி என்று வாதிடவரவில்லை…இது தான் நிலமை

    ஆனால், திருமணத்துக்கு முன் ஒரு ஆணுடனோ அல்லது பலருடனோ உடலுறவு அனுபவித்து விட்டு ஒரு பெண், திடீரென்று ஐயோ என்னை இவன் கற்பழித்து விட்டான் என்று குற்றம் சாட்டினால் அந்த ஆணுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை . ஸ்டேஷன் கோர்டு என்ற நடக்க வேண்டியது தான். இதையும் ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும். பெண்களை காக்கிறேன் பேர்வழி என்று ஆண்களை கழுவிலேற்றும் காலமாகிவிட்டது

    அதே போல திருமணத்துக்கு முன் ஒருவருடனோ அல்லது பலருடனோ பாலுறவு வைத்துக்கொண்டு , இவனை (கணாவனை) விட அவன் (கள்ளக்காதலன்) மேல் என்ற உணார்வுகள் வந்து, திருமணம் ஆனபின் தாலி கட்டிய கணவனால் திருப்தி அடையாத பூவையர் உண்டு…. இது குடும்பத்துக்கு கேடாகிறது. இப்படி பல திருமணங்கள் விவாகரத்தில் போய் முடிகின்றன. சிலர் இந்த தகாத உறவை தொடர்வதும் உண்டும். இப்படிப்பட்ட கேஸ்கள் சில கொலையில் போய் முடிகின்றன.

    மேலும் :
    http://manakkan.blogspot.com/2010/04/blog-post_03.html

    அன்புடன்

    • vedaprakash Says:

      உங்களது வெளிப்படையான கருத்தை வரவேற்கிறேன்.

      தங்களுடைய சமூக பிரக்னையையும் பாராட்டுகிறேன்.

      இந்திய சமூகம் நன்றாக இருக்கவேண்டும் என்று தங்களது மனம் விரும்புகிறதை உணர்கிறேன்.

      பெண்கள் எப்பொழுது நெறிதவறுகிறார்களோ அப்பொழுது, சமுதாயத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன; பிரிவுகள் ஏற்படுகின்றன; தாங்கள் சொல்லியபடியே சமூகக் குற்றங்கள் பெறுகுகின்றன; அவையே பெருங்குற்றங்களாகவும் முடிகின்றன.

      ஆகையால்தான், பெண்கள் நெறிதவரக்கூடாது, என்று முன்னோர்கள் விரும்பினர், இன்றும் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

      அப்பொழுதுதான், சமுதாயத்தில் குழப்பங்கள் ஏற்படாலும் இருக்கும்; பிரிவுகள் ஏற்படாமல் இருக்கும்; தாங்கள் சொல்லியபடியான சமூகக் குற்றங்கள் பெறுகாமல் இருக்கும்; அவையே பெருங்குற்றங்களாக மாறாமல் இருக்கும்.

      அத்தகைய, நல்ல அமைதியான சமூகத்தைத் திரும்பப் பெற முயல்வோமாக!

  5. S. M. Pakkiri Raja. Says:

    நல்லவேளை, குச்புவோ, குச்புவை ஆதரித்த நடிகைகளோ, எதையும் ஏலத்த்ற்கு விடவில்லை.

    பற்பில்லாததால், நிச்சயமாக அதை ஏலத்திற்கு விடமுடியாது.

    பார்ப்போம், அந்த பெண்ணை, யார் வெல்வார் என்று?

  6. நடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்? | சின Says:

    […] [5] https://evilsofcinema.wordpress.com/2010/04/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A… […]

  7. குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – Says:

    […] [5] https://evilsofcinema.wordpress.com/2010/04/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A… […]

  8. குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – Says:

    […] [5] https://evilsofcinema.wordpress.com/2010/04/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A… […]