காமன்வெல்த் ஊழலுக்குத் துணைப் போகும் அல்லா ராகா ரஹ்மான்!
17-08-2010 அன்று இது எழுதப்பட்டது. ரூ. 70,000 கோடிகளுக்கு மேல் ஊழல் நடந்ததள்ளது என்று இன்று 16-10-2010 அன்று சொல்கிறார்கள். காமன்வெல்த் கேம்ஸ், ஏசியாட், ஒலிம்பிக்ஸ் என பல நாடுகளில் போட்டிகள் நடத்துவதுண்டு. இதில் பணக்கார நாடுகள் எப்படியோ தப்பித்துக் கொள்ளும். ஆனால், வளரும் நாடுகளில் பொருளாதார பாதிப்பினால், நிலைமை சீர்கெடும். இதனால், மக்கள் தான் பாதிக்க நேரிடம். கிரீஸ் போன்ற நாடுகளே இதற்கு விதிவிலக்கல்ல.
இன்று 16-10-2010, என். டி. டிவிக்கு கொடுத்த பேட்டியில்[1], காமன்வெல்த் போட்டிக்காக தான் போட்டுக் கொடுத்த தீம் பாடலின் ட்யூன் பிரபலமாகமால் போனதற்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார் |
காமன்வெல்த் குறித்து எதிர்மறையான செய்தியைத் தவிர்க்க வேண்டும்-ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை[1]: காமன்வெல்த் போட்டிகள் குறித்து எதிர்மறையான செய்திகளை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும. உண்மை அல்ல என்று தெரியும் செய்திகளைப் போடுவதை தவிர்க்க வேண்டும் என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார். காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு ரஹ்மான் பேசுகையில், “காமன்வெல்த் போட்டிகள் குறித்து எதிர்மறையான, மோசமான செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன. ஆனால் அவை அனைத்தும் உண்மை அல்ல என்று நான் நம்புகிறேன். நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் காமன்வெல்த் போட்டி. எனவே அதுகுறித்து தவறான, அவதூறான செய்தியை வெளியிட்டால் அது நாட்டுக்குத்தான் அவப்பெயரைத் தேடித் தரும்.
ஊழலில் என்ன பாசிட்டிவ் சிந்தனை என்பது ரஹ்மான் தான் சொல்லவேண்டும்: எனவே மீடியாக்கள் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் புகழை சீர்குலைக்கும் வகையில் காமன்வெல்த் போட்டிகள் குறித்து மீடியாக்களில் செய்தி வருவது எனக்கு வேதனை தருகிறது. நான் லண்டனில் இருந்தபோது காமன்வெல்த் போட்டிகள் குறித்து மோசமான செய்திகள் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்[2]. பாசிட்டிவான சிந்தனையுடன் இதை நாம் அணுக வேண்டும். எனவே டெல்லி காமன்வெல்த் போட்டிகள் குறித்த நல்ல விஷயங்களை செய்திளாக மீடியாக்கள் வெளியிட வேண்டும் என்றார் ரஹ்மான்[3].
அல்லா ராகா அஹ்மான் இப்படி ஊழல் பெருச்சாளிகளுக்கு வக்காலத்து வாங்குவது ஏன்? “வாடகை சோபா இருபது ரூபா, விலைக்கு வாங்கினால் முப்பதே ரூபா” என்பதும் ஒரு தமிழ் சினிமா பாடல் தான். அதைவிட கேவலமாக, மோசமாக லட்சங்களில், கோடிகளில் ஊழல் புரிந்துள்ளனர் காங்கிரஸ்காரர்கள். இதில் ஒட்டுமொத்தமாக ஊழல் புரிந்து கோடிகளை அள்ளியுள்ளதால், அந்த ஊழலுக்கு வெள்ளையடிக்க இப்படி சினிமா பாணியில் பிரச்சாரத்தை முடிக்கிவிட்டிருப்பது தெரிகிறது. ர்ஹ்மானிற்கு ஆஸ்கார் பரிசு பரிந்துறைப்பதில் இருந்த “லாபி நபர்களும்” இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், ரஹ்மானை வைத்தே அந்த வேலையைத் துவங்கியுள்ளனர். இனி ஐஸ்வர்யா ராய், ஷருக் கான், சல்மான் கான் முதலியோரும் சேர்ந்துகொள்வர்.
இந்திய இசை அரங்கின் மொசார்ட்: காமன்வெல்த் போட்டிக்கு ரஹ்மான் இசையமைத்து கொடுத்த பாட்டுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது[4]. இதனையடுத்து ஸ்வாகதம் என்ற அந்த பாடலை இசையமைப்பாளர் ரஹ்மான் இன்று டில்லியில் அறிமுகப்படுத்தினார். இந்த விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ரஹ்மானை இந்திய இசை அரங்கின் மொசார்ட் என கல்மாடி புகழ்ந்தார். இவ்வாறு புகழ்வது, ஆங்கிலேயர் காலத்து அடிமை மனப்பாங்குதான் வெளிப்படுகிறது.
ரஹ்மானால் அந்த பாடலை பாடமுடியவில்லை: பாடல் ரெடி, ரஹ்மான் பாடப்போகிறார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டாலும், விளம்பரம் செய்தாலும், ரஹ்மானால், பாடலை முழுவதுமாக பாடமுடியவில்லை. ஏதோ இரண்டு வரிகளை பாடிவிட்டு, பத்து நாட்களில் பாடல் ரெடியாகி விடும்[5] என்று சொன்னது, பலருக்கு வியப்பாக இருந்தது. ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ஆக மொத்தம், ஒன்று அரசு ரஹ்மானை அவ்வாறு பணித்திருக்க வேண்டும் அல்லது ஆஸ்கார் பரிசு பரிந்துறைப்பதில் இருந்த “லாபி நபர்களும்” இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்களைக் காப்பாற்ற ரஹ்மான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும்.
பாடலைப்பற்றிக் கேட்டபோது மழுப்பிய ரஹ்மான்[6]: ஊடகக்காரர்கள் பாடலைக் கோணோம் என்றதும் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், ரஹ்மானோ தப்பித்துக் கொள்ளும் விதத்தில் பதில் சொன்னது வேடிக்கையாக இருந்தது. “நான் இந்த பாடலுக்காக கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வருகிறேன். மிகவும் சக்தி வாய்ந்த பாடலாகும், அனைவரையும் கவரக்கூடியது……………..நாங்கள் இன்னும் பாடல் வரிகளை மாற்றி-மாற்றி வருகிறோம்”, என்றெல்லாம் சொன்னதும் வியப்பாக இருந்தது. அதாவது பாடலே இன்னும் எழுதப்படவில்லை. மேலும் விவரங்களைக் கேட்டதற்கு, “அப்பாடல் மிகவும் எளிமையாக இருக்கும், ஆனால் ஏழ்மையாக இருக்காது. வெற்றிக்காக இருக்கும் தோல்விக்காக இருக்காது. அதிகமாக இந்தி வார்த்தைகள் இருக்கும், சில ஆங்கில வார்த்தைகளும் இருக்கும்””, என்று சொன்னபோது தான் தெரிய வந்தது பாடலே தயாராகவில்லை, பாவம் வார்த்தைகளையெல்லாம் தேடிவருகிறர்கள்[7], என்ற உண்மை! பிறகு “நான் இந்த பாடலுக்காக கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வருகிறேன்…..”, என்று ஏன் பொய் சொல்லவேண்டும்? அந்த அளவிற்கு, அவருடைய பங்கு, ஆசை, பாசம் அந்த ஊழல் மிகுந்த வேலையில் உள்ளது என்று அப்பட்டமாகத் தெரிகிறது.
பாடலுக்காக ரூ. 5,55,00,000/- வாங்கும் ரஹ்மான்[8]: ஏதோ நாட்டுக்காக, மஹாத்மா காந்திக்காக இலவசமாக செய்கிறார் என்று நினைக்கவேண்டாம். இப்படலுக்காக ரூ. 5.55 கோடி ரூபாய் / 1.1 million அமெரிக்க டாலர்கள் (Rahman is being paid 55.5 million rupees ($1.1 million) for composing the song and for his appearance, inclusive of service tax.) கொடுக்கிறார்களாம்! மன்மோஹன் சிங்கின் அறிவுறையின்படி[9], கல்மாடி என்ற ஊழல் பேர்வழி, இத்தகைய “நல்ல பேரை வாங்க” வேஷங்களைப் போட்டு மக்களை ஏமாற்ற இறங்கிவிட்டார்கள் எனத்தெரிகிறது.
[1] காமன்வெல்த் குறித்து எதிர்மறையான செய்தியைத் தவிர்க்க வேண்டும்-ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை, திங்கள்கிழமை, ஆகஸ்ட் 16, 2010, 15:53[IST], http://thatstamil.oneindia.in/news/2010/08/16/commonwealth-games-media-news-rahman.html
[2] http://www.hindustantimes.com/India-s-image-taking-a-beating/Article1-587805.aspx
[3] http://timesofindia.indiatimes.com/sports/events-tournaments/commonwealth-games/top-stories/Rahman-asks-media-to-portray-positive-image-of-Delhi-CWG/articleshow/6319095.cms
[4]தினமலர், காமன்வெல்த் போட்டி மையநோக்க பாடல் : டில்லியில் அறிமுக விழா , ஆகஸ்ட் 16,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=63432
[5] http://www.hindu.com/2010/08/17/stories/2010081755412200.htm
[6] http://www.hindustantimes.com/Waiting-for-the-anthem/Article1-587576.aspx
[7] http://www.hindustantimes.com/Rahman-asked-to-tweak-CWG-theme-song/p-Article1-587443.aspx
[8] http://blogs.wsj.com/indiarealtime/2010/08/16/ar-rahman-to-welcome-commonwealth-athletes/
[9] http://blogs.wsj.com/indiarealtime/2010/08/16/ar-rahman-to-welcome-commonwealth-athletes/
குறிச்சொற்கள்: ஊழலுக்கு வெள்ளையடிக்க, ஊழலுக்கு வெள்ளையடிக்கும் முயற்சி, ஊழல், ஊழல் பாட்டு, ஊழல் மெட்டு, ஊழல் ராகம், எதிர்மறையான செய்திகள், கல்மாடி, காமன்வெல்த் போட்டிகள், கோடிகள் ஊழல், பாசிட்டிவ் சிந்தனை, மோசமான செய்திகள், CWG ஊழல்
6:49 முப இல் ஓகஸ்ட் 26, 2010 |
பணம் கிடைத்தால் சரிதான்.
இதில் நடிகையென்ன, நடிகன் என்ன?
ஊழலுக்கு காங்கிரஸ் பெயர் போனது. இப்பொழுது, இத்தாலி வகை ஊழல் இந்தியாவில் நடக்கிறது. அதாவது எல்லாமே “பாஃபியா” வகைத்தான்.
கேட்கவேண்டுமா, ரஹ்மான் வெளுத்துக்கட்டுகிறார். இனிமேல், ஹாலிவுட்டுததான்.
கல்மாடியைப்போல இருபது, முப்பது வருடங்களாக, இந்திய ஒலிம்பிக் அஸோஷியேஷன் என்று மற்றும் பல, பழம்பெருச்சாளிகள் நிறையவே உள்ளன.
அவர்களையெல்லாம், யார் கவனிப்பது?
9:13 முப இல் செப்ரெம்பர் 9, 2010 |
Yes, he has been brought to whitewash the corruption and he would do properly, as he has been nowadays very much matured to co-operate with the rulers.
12:57 பிப இல் ஒக்ரோபர் 16, 2010 |
[…] […]
8:25 முப இல் ஒக்ரோபர் 29, 2010 |
Rahman was paid 55.5 million rupees ($1.1 million) for composing the song and for his appearance, inclusive of service tax.)
How many crores of rupees?
5.56?
Is it OK for CVC?
2:17 முப இல் நவம்பர் 2, 2010 |
[…] […]
2:19 முப இல் நவம்பர் 2, 2010 |
[…] […]