சினிமா: நடிகைகள், விபச்சாரம், குடி, போதை மருந்து, இத்யாதி !

சினிமா: நடிகைகள், விபச்சாரம், குடி, போதை மருந்து, இத்யாதி

சினிமா, நடிகைகள், விபச்சாரம், குடி, போதை மருந்து, இவற்றிற்குள்ள தொடர்பு இப்பொழுது வெளிப்பட்டவுடன், ஏதோ நடிகைகள் எல்லாம் குதிக்கிறார்கள். ஆனால், அத்தகைய அசிங்கங்களுக்கு, ஆபாசங்களுக்கு, சீரழிவுகளுக்குத் தாங்கள்தாம் காரணம், பொறுப்பு என்பதனை ஏன் அவர்கள் உணர்வதில்லை? இப்பொழுது ஆந்திராவில் பிடிப்பட்டுள்ள நடிக-நடிகையர் எல்லாம், ஏதோ நமக்கு சமந்தம் இல்லை என்று நினைக்க வேண்டாம், ஏனெனில், இதில் இந்திய சினிமாத்துறையினர் அனைவருமே சம்ந்தப்பட்டுள்ளனர். முன்பு, புவனேஸ்வரி விஷயத்தில் எகிறி குதித்தவர்கள், மௌனமாக இருக்கிறார்கள். தென்னிந்திய சினிமா சங்கம் என்றதெல்லாம் “ஆள்-அட்ரஸ்” காணாமல் இருக்கின்றன. ஊடகங்கள் இப்பொழுதுகூட சினிமா, நடிகைகள், விபச்சாரம், குடி, போதை மருந்து, இவற்றிற்குள்ள தொடர்பு பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளன[1].

தெலுங்கு நடிகர்கள் நைஜீரிய வாலிபனிடம் போதை மருந்து வாங்கும் போது கைது[2]: தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் ரவிதேஜா. இவரும் ஸ்ரேயாவும் ஜோடியாக நடித்த “டான் சீனு” படம் தற்போது ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது[3]. ரவிதேஜாவுக்கு ரகுபாபு, பரத்ராஜ் என இரு தம்பிகள் உள்ளனர். ரகுபாபு “மேகம்” என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். “பரத்ராஜ் பெத்த பாபு” என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் ஐதராபாத் அருகில் உள்ள “துர்சம் செரு” என்ற இடத்தில் வசிக்கின்றனர். நேற்று இரவு 9.30 மணிக்கு (19-08-2010) ரகுபாபு, பரத்ராஜ் இருவரையும் போதை பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் திடீரென்று கைது செய்தனர். நைஜீரிய வாலிபர் விக்டர் என்பவரிடம் 4 கிராம் கொக்கைன் போதை பொருளை வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார்கள். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு போதை பொருளை விற்ற விக்டரிடம் இருந்து 48 கிராம் “கோகைன்” போதை பொருள் கைப்பற்றப்பட்டன.

போதை மருந்து வாங்கி நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை: பிடிபட்ட மூவரிடமும் போலீசார் துருவி துருவி விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. நைஜீரிய வாலிபரிடம் இருந்து ரவிதேஜா தம்பிகள் இருவரும் போதை பொருட்களை வாங்கி தெலுங்கு நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீஸ்காரர்கள் வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ், ஜுப்ளி, ஹில்ஸ், பஞ்சகுட்டா போன்ற பகுதகிளில் இவற்றை விற்றுள்ளனர். மதுரா நகரில் இருவரும் கடை வைத்துள்ளனர். அவர்கள் என்ன வியாபாரம் செய்கிறார்கள் என்பது மர்மமாக இருந்தது. போதை பொருள் கடத்தி விற்கும் தொழில் செய்து வந்தது இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

விக்டரின் லேப்டாப்பில் போதை மருந்து வாங்கும் வாடிக்கையாளர்களின் லிஸ்ட் சிக்கியது: பிடிபட்ட நைஜீரிய வாலிபரிடம் இருந்து லேப் டாப்பை போலீசார் கைப்பற்றினார்கள். அதில் 300 வாடிக்கையாளர்கள் பெயர் விவரங்களை பதிவு செய்துள்ளார். அவர்களில் பெரும்பாலோர் தெலுங்கு நடிகர், நடிகைகள் மற்றும் ஆந்திராவில் பெரிய பொறுப்புகளில் உள்ள வி.ஐ.பி.க்களின் மகன்கள் ஆவார்கள். நேற்று மட்டும் 8 பிரபலங்களுக்கு போதை பொருளை சப்ளை செய்துவிட்டு 9-வதாக ரவிதேஜாவின் தம்பிகளுக்கு கொடுத்த போது சிக்கினார். இவர் 2006-ல் இந்தியா வந்தார். ஆந்திராவில் உள்ள திருமலை கிரி[4] என்ற இடத்தில் நிரந்தரமாக தங்கி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

போதை மருந்துக்குப் பிறகு பாலியல் புகார்.. விபச்சாரம்: பிரபல நடிகைகள் கைது[5]! : இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததாக நடிகை சாய்ரா பானு உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். போதை மருந்து கடத்தல், விபச்சாரம், உயர் அதிகாரிகளுக்கு பெண்களை சப்ளை செய்த விவகாரம் என தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து புயல் வீச ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பாதுகாப்பு நிறைந்த பல அடுக்கு குடியிருப்புகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் நடிகைகள் சாய்ரா பானு, ஜோதி லட்சுமி மற்றும் வெளிநாட்டு இளம்பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்[6]. பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சாய்ரா பானு, பல தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். மற்றொரு நடிகை ஜோதி, ஏராளமான தெலுங்கு படங்களில் துணை வேடங்களில் நடத்துள்ளார். இதேபோல் கடந்த ஆண்டு தெலுங்கு நடிகை சீமா இதே விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. போதை பொருள் வாங்கியதாக, நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

60ற்கும் மேற்பட்ட தென்னிந்திய நடிக-நடிகையர் லிஸ்டில் உள்ளனர்: தக்குபதி ரானா, கான்மா ஜெத்மனனி, பூனம் கௌர், நானி முதலிய நடிகைகள், ரசாயன பரிசோதனைக்குத் தயார் என்று சொல்கின்றனர்[7]. நைஜீரிய போதை மருந்து விற்றவனின் செல்போனின் 60ற்கும் மேற்பட்ட நடிக-நடிகைகளில் நெம்பர்கள் இருப்பதனால், போலீஸ் அவகளையெல்லாம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ராஜா, நானி, திரிஷா, ஹர்ஷகுமார், ஹனிஷ்கா, விமலா ராமன் (ரம்யா கிருஷ்ணனின் சகோதரி), லகடபதி என்ற எம்.பியின் மகன்கள்[8]., மதுஷாலினி, சைரா பானு, உப்பலபதி ரவி சீனிவாஸ், பபி என்கின்ற நந்தூரி உதய்[9] என்று அந்த பட்டியல் நீளுகிறது இந்நிலையில் தமது தூய்மைய நிரூபிக்க இந்த நடிகைகள் இப்படி சவால் விட்டுள்ளனர். நைஜீரிய இளைஞர்களுடன் திரிஷா இருக்கின்ற மாதிரி, பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன[10].

விக்டரின் லிஸ்டில் திரிஷா, மற்ற நடிகைகள் கலக்கம்: ஆந்திராவில் போதை பொருள் கடத்தலில் நைஜீரிய நாட்டை சேர்ந்த வாலிபர் விக்டர் என்கிற பிரட்லர் சிமாகிளமென்ட் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போதை பொருள் வாங்கிய பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் தம்பிகள் ரகுபாபு, பரத்ராஜ் ஆகியோரும் பிடிபட்டனர்.
நைஜீரிய வாலிபரின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான நடிகர்- நடிகைகள் செல்போன் நம்பர்கள் இருந்தன. தமிழ் நடிகை திரிஷாவின் செல்போன் நம்பரும் இருந்ததாக ஆந்திர டி.வி. சேனல்கள் பரபரப்பான செய்தி வெளியிட்டன. பொலீஸார் இவர்களிடம் விச்சாரணை நடத்துவர் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது[11].

போதை பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல நடிகர், நடிகைகளிடம் போலீசார் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்[12]. ஐதராபாத்தில் நேற்று முன்தினம் போதை பொருள் வைத்திருந்த தெலுங்கு பட நடிகர் ரவிதேஜாவின் தம்பிகள் ரகுராஜ், பரத்ராஜை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர்[13]. அவர்களின் செல்போன்களில் பதிவாகி இருந்த 500 எண்களை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர். அதில் இருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள், பிரபல நடிகர், நடிகைகள் என 60 பேரின் பட்டியலை தயாரித்து அவர்களிடம் விசாரிக்கின்றனர். இந்த பட்டியலில் நடிகைகள் த்ரிஷா, சார்மி, காம்லத் ஜெத்மலானி, காஜல், அவருடைய தங்கை ஆர்த்தி அகர்வால், ஹன்சிகா, வேதா மற்றும் நடிகர்கள் உதய்கிரண், ஆகாஷ் ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக தெரிகிறது. இது குறித்து த்ரிஷாவிடம் கேட்ட போது, ‘இந்த விவகாரத்தில் எனக்கு சம்பந்தமும் இல்லை. எனது வளர்ச்சியை பொறுக்காத சிலர், இந்த புரளியை கிளப்பி உள்ளனர்“ என்று தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த போதை பொருள் விவகாரத்தால் தமிழ், தெலுங்கு நடிகர், நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நைஜீரியா வாலிபரிடம் செல்போன் நம்பர்: போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு பரப்புவதா? நடிகை திரிஷா ஆவேசம்[14]: இதனால் திரிஷா அதிர்ச்சியானார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “போதை பொருள் கடத்தலில் கைதான நைஜீரிய வாலிபரிடம் எனது செல்போன் நம்பர் இருந்ததாக வெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன். அவருக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது என்று தெரியாது. ஐதராபாத்தில் தங்கி இருந்த தோழி என்னிடம் தொடர்பு கொண்டு என்னைப்பற்றி அவதூறாக வெளியான செய்திகள் பற்றி சொன்னார். நைஜீரிய வாலிபர் போன் புக்கில் எனது பெயர் இல்லை என்றும், எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். போதை பொருள் விவாகரத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர்[15].

மானநஷ்ட வழக்கு தொடுப்பேன் என்று எச்சரிக்கை: “நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனது பெயரை வேண்டும் என்றே இதில் இழுத்து விட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்பு படுத்துவது தவறு. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும். சில பிரச்சினைகள் மனதை உறுதிபடுத்தும். அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்து வது வருத்தம் அளிக்கிறது. எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன். எனது மேலாளர் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறார். வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன். இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன்”,
இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்[16].

திரிஷா பிரச்சினை: சினிமாதுறைக்கு சவால்: இப்பொழுது ஆந்திராவில் பிடிப்பட்டுள்ள நடிக-நடிகையர் எல்லாம், ஏதோ நமக்கு சமந்தம் இல்லை என்று மற்ற இந்திய நடிக-நடிகையர் நினைக்க வேண்டாம், ஏனெனில், இதில் இந்திய சினிமாத்துறையினர் அனைவருமே சம்ந்தப்பட்டுள்ளனர். தென்னிந்திய சினிமா சங்கம், தென்னிந்திய நடிகர்-நடிகை, இயக்குனர்…………..என்றெல்லாம் கொடிபிடிக்கும் குழுக்கள், கோடீஸ்வர்கள், “ஆள்-அட்ரஸ்” காணாமல் இருக்கின்றன, வயடைத்து இருக்கின்றனர். புவனேஸ்வரி சொன்னது மாதிரி, மாட்டிக்கொண்ட நடிகையர் எல்லாம் விபச்சாரிகள் என்றால், மாட்டா நடிகைகள்……………..இல்லை, என்பது இங்கும் பொருந்தும். முன்பு, புவனேஸ்வரி விஷயத்தில் எகிறி குதித்தவர்கள், இப்பொழுது மௌனமாக இருப்பதினால், தப்பித்துக் கொள்ளாமுடியாது. க்ற்புத் தேவையில்லை என்று சொல்லிவிட்டப் பிறகு, விபச்சாரத்தில் சிக்கும் பொழுது, பத்தினிப் பெண்டிர் வேடம் போடவேண்டிய அவசியம் இல்லை.

வேதபிரகாஷ்

26-08-2010


[1] TS Sudhir, Hyderabad: Sex, drugs and celebrity , NDTV Tuesday, August 24, 2010, Read more at: http://movies.ndtv.com/movie_story.aspx?Section=Movies&ID=ENTEN20100150829&subcatg=MOVIESINDIA&keyword=regional&nid=46772&cp

 

[2] மாலைச்சுடர், போதை பொருள் கடத்திய நடிகர் ரவிதேஜாவின் 2 தம்பிகள் கைது: நடிகர்நடிகைகளுக்குசப்ளைசெய்தது அம்பலம், வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2010, http://www.maalaimalar.com/2010/08/20115557/drug-abduct-actor-ravideja-bro.html

[3] ஆனால், இப்பொழுது (25-08-2010) திரிஷா சொல்வதாவது, “நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனது பெயரை வேண்டும் என்றே இதில் இழுத்து விட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை.”!

[4] இந்த ஏரியா, பெசன்ட் நகர், அண்ணநகர், ஈஸ்ட்கோஸ்ட் ரோடு போன்று, ஹைதராபாதில் உள்ள ஷோக்கான “போஷ்” ஏரியா.

[5] தட் ஈஸ் தமிள், பாலியல் புகார்.. விபச்சாரம்: பிரபல நடிகைகள் கைது! திங்கள்கிழமை, ஆகஸ்ட் 23, 2010, http://thatstamil.oneindia.in/movies/news/2010/08/23-telugu-actresses-prostitution-arrest.html

[6] http://www.infocuts.com/story/article-006200

[7]DC Correspondent ,  Actors agree to undergo blood tests to prove their innocence, August 23rd, 2010;  http://www.deccanchronicle.com/hyderabad/actors-agree-undergo-blood-tests-prove-their-innocence-624

[8] http://andhracafe.com/index.php?m=show&id=41725

[9] http://www.dailylatestnews.com/2010/08/23/trisha-photographed-nigerians-028128

[10] Read more: http://www.dailylatestnews.com/2010/08/23/trisha-photographed-nigerians-028128#ixzz0xdDQbP00

[11] http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6248

[12] http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6151

[13] http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6129

[14] மாலைச்சுடர், நைஜீரியா வாலிபரிடம் செல்போன் நம்பர்: போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு பரப்புவதா? நடிகை திரிஷா ஆவேசம், ஆகஸ்ட் 23, 2010, http://www.maalaimalar.com/2010/08/23154857/actorss-trisha-statement.html

[15] http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6257

[16] சன் டிவிக்காரர்கள், திரிஷா அம்மா சொன்னதை 25-08-2010 மாலை செய்திகளில் விடாமல் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும், நித்யானந்தா மாதிரி, மற்ற நடிகைகளின் விவகாரங்களைப் பற்றி ஒலி/ஒளிபரப்பவில்லை.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “சினிமா: நடிகைகள், விபச்சாரம், குடி, போதை மருந்து, இத்யாதி !”

  1. S. M. Pakkiri Raja. Says:

    சினிமாக்காரர்களில் யார் உத்தமமானவர்கள், ஒழுக்கசீலர்கள், மஹாத்மாக்கள் என்று ஆராய்ச்சி செய்யலாம் போலிருக்கிறது.

    உடலுறவு கொள்வதை அப்படியே படம் பிடுத்து காட்டாதது ஒன்றுதான் பாக்கி. அதையும் நிறைவேற்றிவிடுவார்கள் போலும்,. அதற்குத்தான் இத்தகைய மிருகத்தனமான அனுபவங்கள், ஒத்திகைகள், நடவடிக்கைகள், உச்சக்கட்ட நிலைகள்.

  2. Rajan Gurukkal Says:

    Oh,India is doomed!

  3. S. Ramananathan. Says:

    OK, what about Tamil film field?

    Do they work without such habits?

    Bollyhood, Kollyhood, Tollyhood,………………all would follow the same formula only!

    When Dawood Ibrahim collects ransom from Mumbai field, do you think that he does not collect from others?

    Do you think that non-Hindi film are not seen in othe parts of the world?

    Why then Rajinikanth releases his films in other countries?

    Who is getting money?

  4. fero Says:

    very nice

  5. தொடரும் திரிஷா கதைகள் – தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்து Says:

    […] https://evilsofcinema.wordpress.com/2010/08/26/cine-actresses-prostitution-drinking-drugs-etc/ […]

  6. தொடரும் திரிஷா கதைகள் – தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்து Says:

    […] https://evilsofcinema.wordpress.com/2010/08/26/cine-actresses-prostitution-drinking-drugs-etc/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: