நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (2)?

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (2)?

குறிப்பு: தனிப்பட்ட நபர்கள் முதலியோரை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, ஆனால், இவர்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், பல நேரங்களில் அறிவுரைக் கூறுவது, பல்கலைக்கழக்ச்ங்களில், ஏதோ பெரிய விஞ்ஞானி, அறிவாளி, மாமேதைகள் போல “டாக்டர்” பட்டங்கள் பெறுவது, கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருவதால், அவர்களது உண்மைத் தன்மையை மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய நிலையுள்ளது. மேலும் அவர்கள் தமக்குத் தேவையில்லாத விஷயத்தில் கூட மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைகள் விடுவார்கள். அரசியில் என்று வந்துவிடும் போது, எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி……………..என்று பதவிகளுக்கு ஆசைப்படும்போது, மக்களின் வரிப்பணத்தில் வாழும்போது, அனுபவிக்கும்போது, அவர்களைப் பற்றி அம்மக்கள் அறிந்தே ஆகவேண்டும். ஆக, பகுதி-2 தொடர்கிறது[1].

கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள முயன்ற காஜா மைதீன்: 2004-2005களில் இந்த காஜா மைதீனைப் பற்றி பலவிதமான செய்திகள்: “கிடுகிடுத்துப் போயிருக்கிறது கோடம்பாக்கம், இப்படி சொல்கிறது, ஒரு செய்தி –  முன்னணி தயாரிப்பாளர் ஒருவரே கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயல, நம் கதி என்னாகுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள் சிறு தயாரிப்பாளர்கள்.  தமிழ் சினிமாவில் பிரபமான பெயர் ரோஜா கம்பைன்ஸ் காஜாமைதீன். ‘பொற்காலம்’, ‘வாஞ்சிநாதன்’ திரைக்கு வரவிருக்கும் ‘பேரரசு’ போன்ற பல படங்களை தயாரித்தவர். கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை தயாரிப்பவரும் இவரே (15 July 2005). ஆனால் பைனான்ஸ் பிரச்சனையால் ‘வேட்டையாடு விளையாடு’ இன்னும் துவங்கப்படாமலே உள்ளது. இந்நிலையில் பைனான்சியர் ஒருவரிடம் 20 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார் காஜாமைதீன். இதற்காக காஜாமைதீன் பெயரிலிருந்த நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பைனான்சியர் தனது மனைவி பெயரில் எழுதி வாங்கியிருக்கிறார் இந்த மோசடியால் மனமுடைந்தவர் நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்பே அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். டோஸ் சற்று அதிகம் என்பதால் இன்னும் மயக்கம் தெளியவில்லை காஜாமைதீனுக்கு. படம் எடுப்பவர்களை பயப்படவைத்திருக்கிறது இவரது தற்கொலை முயற்சி”! செய்தி தொடர்கிறது……………

தற்கொலை தூண்டுதலுக்கு கமலஹாசன் காரணமா? “கடந்த சில தினங்களுக்கு முன் (ஜூலை 2005) தயாரிப்பாளர் காஜாமைதீன் தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ய, யார் செய்த புண்ணியத்தாலோ உயிருக்கு ஆபத்தின்றி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனாலும் இந்த விவகாரம் பல்வேறு வடிவங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. கந்துவட்டி கும்பல்தான் இதற்கு காரணம், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் ஒத்துழைக்காததே காரணம் என செய்திகள் கசிய, தயாரிப்பாளர்கள் மத்தியில் இது கடும் புயலை கிளப்பியது. இது குறித்து விவாதிக்க தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் நேற்று (18 July 2005) நடந்த நிலையில் காஜாமைதீனும் கமலும் சேர்ந்து இன்று அளித்த பேட்டியில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் பனிரெண்டு மணிக்கு இரு தரப்பினரிடமிருந்தும் பத்திரிகைகளுக்கு அவசர அழைப்பு வர ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்தில் ஆஜராகினார்கள் நிருபர்கள். கமல், காஜாமைதீன் தவிர தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தியாகராஜன், இயக்குனர் கௌதம் ஆகியோரும் அங்கு இருக்க பத்திரிகையாளர்களுக்கு செம ஷாக்”.

தற்கொலை முயற்சி பற்றி காஜா மொய்தீன் விளக்கம்: “இருக்கையிலிருந்து கொஞ்சம் முன் வந்தபடி பேசிய காஜாமைதீன், “சில பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேனே தவிர இதற்கு வேறு யாரும் காரணமல்ல. இனி இது போன்ற தவறான முடிவுகளை எடுக்கமாட்டேன்” என்றார். நடுநாயகமாக அமர்ந்திருந்த கமலிடம் ‘நீங்கள்தான் காரணமென்று செய்திகள் வந்ததே’ என்று நிருபர்கள் கேட்க, பதில் சொல்ல தயாரானார். “யாரும் காரணமல்ல என்று காஜாமைதீனே சொல்லிவிட்டபோது இந்த விவகாரத்தில் என் பெயரை சேர்ப்பது சரியாகாது[2]. அதேபோல் இயக்குனர் கௌதமிற்கும் எனக்கும் எவ்வித பிச்சனையும் இல்லை. அடுத்தவாரம் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் படபிடிப்பு தொடங்கும். இனி பிரச்சனைக்கே வேலை இல்லை. எல்லாம் சுமூகமாக நடக்கும்”, என்று முடிக்க தயாரிப்பாளர்கள் சார்பாக தியாகராஜன் முகத்தில் திருப்தியின் உச்சம். “செவன்த் செனல்” மாணிக்கம் நாராயணன் (முதலில் பட்ஜெட்டிற்காகத் தயங்கினாலும்) மூலம் பிறகு படம் முடிக்கப்பட்டது“[3].

சினிமா குடும்பம்! பிரபல தயாரிப்பாளர் “ரோஜா கம்பைன்ஸ்’ எம். காஜாமைதீனின் அண்ணன் மகன் கஜினி. ஆம்னி (born 16 November 1973) என்கின்ற மீனாட்சி, முன்பு பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். மீனாட்சி ஆமனியாகி தெலுங்கு படங்களில் நடித்து, பிறகு தமிழ் படவுலகில் நுழைந்தார். விஜயகாந்த்துடன் ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். காஜாமைதீனும், அவரும் காதலித்துத் திருமணம் செய்து 1997ல் கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் முஸ்லீம் மதத்திற்கு மாறிய ஆம்னி / ஆமனி, தனது பெயரையும் ஆயிஷா என்று மாற்றிக் கொண்டார்[4]. இதைத் தவிர மற்ற நடிகர்களும் உறவினர்களாக உள்ளனர்.

ஸ்ரீவித்யா பட்டபாடு: இங்கு கூட, ஸ்ரீவித்யா நிலை ஆமனிக்கு ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில், அவருக்கும் கமலஹாசனுடன் தொடர்பு இருந்தது. கமலஹாசன் அவரை ஏமாற்றினார். ஒரு கிருத்துவ இயக்குனரை திருமணம் செய்து கொண்டு படாத பாடு பட்டார். தனது வீடு, சொத்து முதலியவற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வெல்லவேண்டிய நிலை வந்தது. ஒருநிலையில் பணம் இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்ட நிலையும் இருந்தது. இன்று “சேர்ந்து வாழ்கிறோம்” என்று பெருமையாக, சிம்ரன், கௌதமி………………என்று நடிகைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தியவருக்கு அன்று அப்படி “சேர்ந்து வாழ” மனமில்லை போலும்!

குறுகிய காலத்தில் பல்வேறு வெற்றிப் படங்களைக் எடுத்தவர் காஜா மைதீன்: பொற்காலம், பெண்ணின் மனதைத் தொட்டு, ஜனா, பாட்டாளி, வாஞ்சிநாதன், தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் காஜா மைதீன். தனது ரோஜா கம்பைன்ஸ் பட நிறுவனம் மூலம் திரைப்படங்களைத்தயாரித்து வந்தார் காஜா மைதீன். குறுகிய காலத்தில் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் காஜா மைதீன். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கம்சார்பில், நடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

துபாயில் நிகழ்ச்சிகள், தொடர்பு, மர்மங்கள்: இவரது துபாய் தொடர்பு மர்மமாக உள்ளது. கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார் என்ற நிலையில், அந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக துபாயில் இவர் சில சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது என்பதும் புதிராக உள்ளது. இதனால் துபாயிலிருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் மாட்டினார். ஆனால் நடிகர் சங்கத்தின் சார்பில் இவரை துபாயிலிருந்து வரவழைக்க பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று அப்போது செய்திகள் கிளம்பின. தனிப்பட்ட முயற்சியின் காரணமாக அவராகவே துபாயிலிருந்து மீண்டு வந்தார்.

வேதபிரகாஷ்

04-10-2010


[1] வேதபிரகாஷ், நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (1)?,  https://evilsofcinema.wordpress.com/2010/10/03/நடிகைகளைக்-கட்டிப்-பிடிப/

 

[2] http://www.hindu.com/2005/10/31/stories/2005103107080200.htm

Kamal Haasan said that he was in no way a cause for Kaja Moideen’s suicide attempt. After hectic parleys and discussion Kaja Moideen has decided to hand over the project to a person who will finish the project without a hitch. Now everything has fallen in place.

[3] `Seventh Channel’ Manicam Narayanan, a popular name in the film and television circles had taken over the project. According to Manicam Narayanan he is happy to do a film featuring Kamal Haasan. “When Kaja Moideen approached me I was a little bit hesitant as it involves big money. I am a friend of Kamal Haasan for nearly 20 years. But I did not have the opportunity to work with him. Goutham Menon is a very talented director and I am sure he will deliver the goods.”

[4] சினிமா உலகில் மதம் மாறுவது சகஜமாக இருக்கலாம், ஆனால், அவர்களின் குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சினைகள் முதலியவற்றை, சமூக ஆராய்ச்சியாளர்கள், மனோதத்துவ ஆய்வாளர்கள் முதலியோர் சரியாக ஆராய்ச்சி செய்வதில்லை.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (2)?”

  1. hmm...? Says:

    thanks

  2. S. Ramananathan. Says:

    The Dubai conection has to be probed throughly, as Karunanidhi too has interest there.

    Kanimozhi goes there very often!

    The Sheikhs could arrange such night functions and enjoy also, as they have enough money.

    But, with such convenience, if the terrorists and economic offenders act against India or these actors or politicians connive with such people, Indians have to watch them as another 26/11 or economic crisis could be avoided!

  3. M. Nachiappan Says:

    விழாவினையே ஏற்பாடு செய்தவருக்கு, துபாயிலிருந்து திரும்ப வர பணம் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    $ இதனால் துபாயிலிருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் மாட்டினார் – அப்படியென்ன சிக்கல்களோ தேரியவில்லையே?

    $ ஆனால் நடிகர் சங்கத்தின் சார்பில் இவரை துபாயிலிருந்து வரவழைக்க பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று அப்போது செய்திகள் கிளம்பின – நடிகர் சங்கம் இதற்கெல்லாம் உதவுகிறதா? அப்படியென்றால், புவனேஸ்வரி விஷயத்தில் மட்டும் ஏன் வேறுவிதமாக நடந்து கொண்டது?

    $ தனிப்பட்ட முயற்சியின் காரணமாக அவராகவே துபாயிலிருந்து மீண்டு வந்தார் – அப்படியோவ், ஏதோ தண்ணீயில்லா காட்டிலிருந்து வந்தது போல மீண்டு வந்தார் என்று சொல்வதே வேடிக்கையாக உள்ளது!

    இவ்வளவு கருணாநிதிக்கு, கனிமொழிக்கு மிகவும் வேண்டியவராக இருந்து, வெளிநாடுகளில் பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியவருக்கு பணம் இல்லை என்றால் ஆச்சரியம் தான்!

  4. கமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம் | சினிமாவின் சீரழவுக Says:

    […] [6] https://evilsofcinema.wordpress.com/2010/10/04/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: