வார்த்தையில் நீலப்படம் எடுத்து, மனத்தில் கலவிக்கொண்டு, உருப்புகளை வதைத்து, உடலைவாட்டும் உத்தமர்கள்!
கமலின் நிஜவாழ்க்கைக் கலவி அனுபவங்கள் கொக்கோகமாகவே வெளிப்படுகின்றன: பாட்டெழுதுவது கமலுக்குப் புதிதில்லை… ஏற்கெனவே கவிதைகள் புனைந்திருப்பவர் அவர்[1]. ஹேராம் போன்ற படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். சற்று இடைவெளிக்குப் பிறகு மன்மதன் அம்பு படத்துக்காக நான்கு பாடல்களை எழுதியுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்த படத்தில், கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் கதைப்படி, அவர் நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகை. விரக்தியில், அவர் கவிதை எழுதுகிறார். அந்த கவிதையை (பாடலை) நிஜமாக எழுதியவர், கமல்ஹாசன்.
கமலின் அந்தப் பாடல்[2]: | நடிகை / சக்காளத்தி | விளக்கம் |
கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால் களங்கம் உள்ளவள் எச்சரிக்கை உடனே கையுடன் கைகோர்த்தாளா? ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை |
ஸ்ரீவித்யா | இந்த பாடலை உன்னிப்பாகப் படிக்கும்போது, காமரசம் மேலோங்கி இருந்தாலும், அதன் பின்னணியில், கமல் தன்னுடைய வாழ்க்கையில் அனம்-உடல் போராட்டங்களுடன் சந்தித்த, எதிர்கொண்ட பெண்களைக் குறித்து எழுதியுள்ளது போலத்தெரிகிறது. அதுமட்டுமல்லாது, அந்த பாடல் வரிகளில், கிரமத்தில், அவர்களது குணாதிசயங்களையும் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது எனலாம். |
ஆடை களைகையில் கூடுதல் பேசினால் அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை கலவி முடிந்தபின் கிடந்து பேசினால் காதலாய் மாறலாம் எச்சரிக்கை |
ஸ்ரீபிரியா | |
கவிதை இலக்கியம் பேசினளாயின் காசை மதியாள் எச்சரிக்கை உன்னுடன் இருப்பது சுகமென்றாளா உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை |
ஸ்ரீதேவி | |
அறுவடை கொள்முதல் என்றே காமம் அமைவது பொதுவே நலமாகக்கோள் கூட்டல் ஒன்றே குறியென்றானபின் கழிப்பது காமம் மட்டும் எனக்கொள் |
சரிகா | |
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்? யோசிக்காமல் வருவதை எதிர்கொள் முன்னும் பின்னும் ஆட்டும் சகடை ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள் |
வாணி கணபதி | |
காமமெனப்படும் பண்டைச் செயலில் காதல் கலவாது காத்துக்கொள் இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள். |
சிலுக்கு ஸ்மிதா / சிம்ரன் |
கவிஞர் வாலி பாராட்டு: கமல்ஹாசன் எழுதிய இந்த கவிதை (பாடல்) பற்றி கவிஞர் வாலி கூறுகையில், “மன்மதன் அம்பு படத்துக்காக, கமல்ஹாசன் எழுதிய உரைநடை கவிதை இது. தமிழில் நானும், கண்ணதாசனும் இதேபோன்ற உரைநடை பாடலை எழுதியிருக்கிறோம். நான் எழுதிய “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே,” இதுபோன்ற பாடல்தான். கண்ணதாசன் எழுதிய “தெய்வமே தெய்வமே”யும் இதுபோன்ற பாடல்தான். கமலுக்கு தமிழிலும் நல்ல அறிவு உண்டு. இசையிலும் நல்ல அறிவு உண்டு. அவர், டி.கே.எஸ்.சண்முகம் அண்ணாச்சியின் நாடகத்தில் இருந்து வந்தவர். தமிழை நன்றாக உச்சரிக்க முடியாதவர்கள், சண்முகம் அண்ணாச்சி நாடகங்களில் நடிக்க முடியாது. ஆக, பால்ய பருவத்திலேயே கமலிடம் தமிழ் அறிவு இருந்தது. ஒரு கவிதையே கவிதை எழுதியிருக்கிறது. கமல்ஹாசன், தன் மெய் வருத்தி நடித்து, தமிழ் சினிமாவை மேலே கொண்டு போகிறார். சினிமாவை தாண்டி எழுத்திலும் அவர் சாதித்து வருகிறார்…”, என்றார்.
பார்த்திபன் பாராட்டியது: இந்தப் பாடல் குறித்து நடிகர் பார்த்திபன் கூறுகையில், “கமல் சாருக்கு சிவாஜி எப்படியோ, அதுபோல் எனக்கு கமல் சார். ‘மன்மதன் அம்பு’ படத்துக்காக அவர் எழுதிய பாடலை எனக்கு போட்டு காண்பித்தார். இந்த பாடல் வெளியாவதற்கு முன், அதன் வரிகள் பிரபலமானால் நன்றாக இருக்கும் என்று நான் அவரிடம் கூறினேன்[3]. தங்கத்தை உரசிப்பார்க்க தங்கம் அவசியம் இல்லை. பிரத்யேகமாக ஒரு கல் இருக்கிறது. அந்த கல்லாக நான் இருந்தால், மகிழ்ச்சி. நான் கல்லாக முற்படுவதற்கு காரணம், கமலின் கவிதை தங்கம் என்பதே. இந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டேன். அது, வரிக்குதிரை மாதிரி அமைந்தது. குறிப்பாக இரண்டு வரிகள். “கலவி முடிந்தபின் கிடந்து பேசினால் காதலாய் மாறலாம் எச்சரிக்கை” என்ற வரிகளை ரசித்தேன்..,” என்றார்[4]. படத்தின் நாயகியான நடிகை நிஷா (திரிஷா) பாடும் பாடலாக இது அமைந்துள்ளது.
இப்பாடல் வேண்டுமென்றே ஆத்திகர்களை, நம்பிக்கையாளர்களை சீண்டிவிடுவது போல இருக்கிறது: இதற்கு பதில் தரும் வகையில் நாயகன் மேஜர் ஆர். மன்னார் (கமல்ஹாசன்) பாடும் பாடல் இது…
கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்[5]
காமக் கழிவுகள் கழுவும் வேளையும் கூட
நின்றவன் உதவிட வேண்டும்[6]
சமயலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திடத் திண்தோள் வேண்டும்
மோதிக் கோபம் தீர்க்க வசதியாய்
பாறைப் பதத்தில் நெஞ்சும் வேண்டும்[7]
அதற்குப் பின்னால் துடிப்புள்ள இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தயும்
மூளை மடிப்புக்கள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்
வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கெனச் சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்
இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப் போனேன்
பொடி நடைபோட்டே இடை மெலியவெனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள்[8] திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்போனேன்[9]
வரவரப் புருஷ லட்சணம் உள்ளவர்
திருமணச் சந்தயில் மிகமிகக் குறைவு
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ
அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்துதே[10].
கமல ஹாசன் யோசித்துப் பார்க்க வேண்டியது: தனிமனித ஒழுக்கம் தேவையில்லை, கற்பு தேவையில்லை, பெண்கள் வெறும் காம-இச்சைக்கு உபயோகப்படும் சதைப் பிண்டங்கள், காசு கொடுத்தால், படுக்க வரவேண்டும், ……………………வேண்டும்………………ஆணைத் திருப்தி படுத்த வேண்டும்………இத்தகைய எண்ணங்கள் தாம் இந்த பாட்டில் வெளிப்படுகின்றன. இதற்கு நாத்திகம் தேவையில்லை. அம்மாளுக்குப் பிறந்து, அம்மாளை மறந்து அல்லது துறந்து, மகள்களை அந்நிலைக்கு போகும்போது, மனைவியை நடத்திய நிலை, மகள்களுக்கு வந்தால், அப்பொழுதும், நாத்திகத்தில் பிதற்றலாம், இல்லை, அவர்களையும் “சேர்ந்து வாழும்” நிலைக்குப் பரிந்துரைக்கலாம். அப்பொழுது அக்காள் மூதேவி கூட வரமாட்டாள், அந்நிலையில் சக்காளத்தி வந்தால், அரோகராதான். ஒன்பது நாள் இல்லை, நாற்பது நாள் உண்ணா நோன்பு இருந்து கஞ்சி குடித்தால் கூட, பருப்பு வேகாது.
வேதபிரகாஷ்
© 19-11-2010
[1] மன்மதன் அம்பு: கமல் பாட்டும்…..வாலியின் பாராட்டும்!, வெள்ளிக்கிழமை, நவம்பர் 19, 2010, http://thatstamil.oneindia.in/movies/specials/2010/11/19-vaali-appreciate-kamal-manmathan-ambu-lyrics.html
[2] ‘கவிதையே கவிதை எழுதுகிறது” கமலை பாராட்டிய வாலி
[4] இவருக்கும் ஒருவகையில் அனுபவம் பேசுகிறது போலும், அல்லது பழைய நினைவுகளைக் கிண்டி விடுகிறது போலும்.
[5] எந்த அளவிற்கு பல பெண்களுக்கு உதட்டோடு உதடாக முத்தமிட்டு, ………ஒழிய இத்தகைய அனுபவம் கிடைக்காது.
[6] பாத்ரூமில் அலம்பிக்கொண்ட அனுபம் சொல்கிறது போலும்.
[7] புதியதாக, இளமையாக வேண்டும் என்ற பேராசைதான், இந்த வயதிலும்.
[8] வாணி கணபதி மற்றும் நாத்திகம் என்ற போர்வையில், இருவரையும் சீண்டியுள்ளது தெரிகிறது.
[9] ஆனால் இங்கு சீண்டியுள்ளது இந்துமத உணர்வுகளைத்தான்.
[10] இங்கு மேரிக்கும், பாத்திமாக்கும் அ-இ-உ சொல்ல தைரியமில்லை. அங்கு மட்டும் என்ன பிரபந்தங்கள் படிக்கப்படாமலா உள்ளன?
குறிச்சொற்கள்: அரங்கநாதன், அல்குல், அவதூறு, இழிவு, உரைநடை கவிதை, கஞ்சி, கமலின் நிர்வாணம், கலவி, கழிவு, கவிதை, காமக்கழிவு, காமம், சக்காளத்தி, சரிகா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சிம்ரன், தமிழச்சி, தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தொந்தி கணபதி, நடிகை, நடிகைகளை சீண்டுதல், நமோஸ்துதே, நிர்வாணம், நீலப்படம், பாடல், புணர்ச்சி, புளூ பிலிம், முத்தம், முலை, மூத்த அக்காள், ரங்கநாதன், வரலக்ஷமி, வாணி கணபதி, ஸ்ரீ வரலக்ஷமி, ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ஸ்ரீவித்யா
11:41 முப இல் திசெம்பர் 3, 2010 |
Since his daughter has started acting, one has to wait and see how she experiences, as he enjoyed his life with many women.
Whether, her first touching, embracing, etc., stop with one man or slowly conditions to accept many, ultimately beating his father.
Then, she may start writing poem like this!
As she is going to write, i.e, a woman, it would be exihilarating
2:14 பிப இல் திசெம்பர் 6, 2010 |
This man is horribly lecherous, terribly licentious and vigorously womanizer.
Without drinks and women, he cannot leave a day now.
So from such a lousy fellow, we can get only this type of third rated, vulgar things only.
If the other guys appreciate this as poem, then, the real poets would die immediately.
11:36 முப இல் திசெம்பர் 7, 2010 |
மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்- மறுபக்கம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010,20:48 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 07,2010,10:12 IST
– ஆர்.ரங்கராஜ் பாண்டே –
எச்சரிக்கை: குழந்தைகளும், பெண்களும் இந்தக் கட்டுரையை படிக்க வேண்டாம்.
விளம்பர வியூகங்கள் பல வகைப்பட்டவை. அதே தொழிலாகக் கொண்ட, “மார்க்கெட்டிங்’ பிரிவினர், புதுப்புது யோசனைகளை செயல்படுத்துவர். ஆனால், கலைத்தாயின் தாகத்தைத் தணிக்க வந்த தலைமகனான கமல்ஹாசனைப் போல வித்தியாசமாக சிந்திப்பவர்கள், இதுவரை தமிழகத்தில் பிறக்கவில்லை; இனி பிறக்க வேண்டியதும் இல்லை.
தான் நடித்த, “மன்மதன் அம்பு’ என்ற படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார் கமல். அதில் இடம்பெறும் ஒரு பாடலை, சதாவதானியான அவரே இயற்றியும் உள்ளார். பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்தக் கவிதையை அமைத்துள்ளார் கமல். அதை, புரட்சி நடிகை த்ரிஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அழுத்தம் திருத்தமாக, நடை, உடை, பாவனைகளோடு சொல்லிக்காட்டினார்.அந்தக், “கவிதை’ இப்படி போகிறது:
…………………………………இதுதான் அந்தக், “கவிதை.’தமிழ் சினிமாவின் தரத்தை, “சர்வதேச லெவலுக்கு’ உயர்த்தியே தீருவேன் என்பதில் கமல் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான், தான் நடிக்கும் படங்களில், பாத்ரூமில் உச்சா போகும் காட்சிகளையும், கதாநாயகியின் நாக்கைச் சுவைக்கும் காட்சியையும் தவறாமல் வைத்துவிடுவார். ஹாலிவுட் படங்களை வேறு எப்படி தான் அவரால் அசிங்கப்படுத்த முடியும்?இப்போது, “சர்வதேச லெவலையும்’ தாண்டி, அடுத்த லெவலுக்கு கொண்டு போக எண்ணி, இந்தக் கவிதையைப் படைத்துள்ளார். காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் கமல்.
“எய்ட்ஸ்’ பிரசாரத்துக்கு இவரை விட சிறந்த ஆள், வேறெங்கு கிடைப்பார்?தன் காம வேட்கையைக் காட்டிக்கொண்ட மாதிரியும் ஆயிற்று; இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய மாதிரியும் ஆயிற்று என, ஒரே கவிதையில் இரண்டு இலக்குகளை எட்டியுள்ளார் கமல்.இந்தக் கவிதையைப் படித்ததும் எண்ணற்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. கொஞ்சம் கோபமும் எட்டிப் பார்க்கிறது. நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.
11:38 முப இல் திசெம்பர் 7, 2010 |
நடிகர் கமலுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2010,21:17 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 07,2010,13:22 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=140497
சென்னை : மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தாள் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது. நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளையும் புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு ஊறு நிகழா வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்த வரிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. படத்திற்காக, நடிப்புக்காக, சும்மா கதைக்காக, பாடலின் வீரியத்திற்காக யாரும் விளக்கம் கோரலாம். யாரும் எந்த மதஉணர்வையும், சிறுமைபடுத்தியும், இந்திய மக்கள் சட்டங்களுக்கு முரணாக இருக்கக்கூடாது. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டத்தின் வாயிலாகவும், நீதிமன்றத்தின் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
இது குறித்த மறு பக்கம்…
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=140496
11:50 முப இல் திசெம்பர் 7, 2010 |
தாங்கள் 19-11-2010 அன்று இதைப் பற்றி எடுத்துக் காட்டியப் பிறகு, இப்பொழுது தான், சிலருக்கு சுரணை வந்திருக்கிறது,
சிலர் செய்திகளாக வெளியிட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இனி அந்த பரிபாஷையை அறிந்து கொண்டு அந்த விஷயத்தைம் விளாவாரியாக வெளியிட ஆரம்பித்தால், ஒருவேளை அந்த ஆளுக்கு ரோஷம் வந்து, இத்தகைய ஒழுங்கீனத்தை, நாய் காமத்தை பின் பற்றாமல் இருப்பான் போல. பார்ப்போம்.
அம்மாவின் பெயரை ராஜலட்சுமி என்று வைத்திருக்கிறார்கள்.
இனி அவருக்கும் “ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்து” என்றால் என்னாகும்?.
12:00 பிப இல் திசெம்பர் 7, 2010 |
அம்மாவின் பெயரை ராஜலட்சுமி என்று வைத்திருக்கிறார்கள்.
இனி அவருக்கும் “ஸ்ரீ வரலக்ஷமி நமோஸ்து” என்றால் என்னாகும்?.
இதைப் படித்தும் மனது மிகவும் வருத்தமாகி விட்டது.
இரண்டு பெண்களுக்குத் தகப்பனாக இருந்தும், இத்தகைய அசுத்த எண்ணங்கள் இருப்பது, கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல், கவிதை என்ற பெயரில், ஆபாசத்தைப் பரப்ப யத்தனிதிருபது, இக்கால இளைஞர்களைக் கெடுக்கக் கங்கணம் கட்டியிருப்பது போல தெரிகிறது.
கடவுள் நம்பிக்கை இல்லை என்ற போவையில், இத்தகைய அநாகரிகங்களை எப்பட் சமூகம் ஏற்றுக் கொள்கிறது என்பது தெரிய வில்லை. அவர்கள் குடுமத்தில் உள்ள பெண்கள் இதை ஆதரிக்கிறர்களா? இல்லை தினம்-தினம் லட்சும் படத்தை பார்க்கும் போது, இத்தகைய எண்ணத்துட பார்ப்பார்களா?
என்னால் நிச்சயமாக பொறுக்க முடியவில்லை.
சண்டாளன் நாசமாக போக என்று நினைத்ததை சொல்லிவிட வேண்டும் என்ற அளவிற்கு கோபம் வந்ததால், சொல்லிவிட்டேன்.
S. R. வரலக்ஷமி
12:13 பிப இல் திசெம்பர் 7, 2010 |
இந்த பெண்மணி எழுதியுள்ளதைப் பார்க்கும் போதே, எந்த அளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளார் என்று தெரிகிறது.
நிச்சயமாக, அடுத்தவர்களின் மனம் புண்படும், பாதிக்கும் என்று அறிந்தே, இத்தகைய ஈனமான செயலை, இத்தகைய பிரபலங்கள் செய்திருப்பது மிகவும் கேவலமானது.
பொருளாதார ரீதியில் ஸ்பெக்ட்ரம் என்றால், சமூகரீதியில் இது அந்த ஊழலைவிட, மிகவும் கொடுமையானது.
இப்படி பெண்களின் மன உணவுகளைக் கூட அறிந்து கொள்ள முடியாது இருக்கும் இந்த மனிதர்கள் இந்த இந்தியாவில் இருப்பதே பெரிய அவமானம் தான்.
என்னத்தான் பணத்தை சம்பாதித்தாலும், என்ன பிரயோஜனம்?
ஒருவேளை, அந்த நடிகனின் தாயார், வாலியின் தாயார்…….முதலியோர், இன்று உயிரோடு இருந்தால், அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்?
12:10 பிப இல் திசெம்பர் 7, 2010 |
Perhaps, he has to be given some punishment.
11:13 முப இல் திசெம்பர் 8, 2010 |
அரங்கநாதரையும் வரலட்சுமியையும் இப்படியா அவமானப்படுத்துவது? – கமலுக்கு கண்டனம்
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 7, 2010, 10:58[IST] A A A Follow us on
http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/12/07hindu-makkal-katchi-condemns-kamal-manmthan-ambu.html
சென்னை: சினிமா பாடலில் அரங்கநாத சுவாமியையும், வரலட்சுமி தேவியையும் கேவலப்படுத்தி எழுதியுள்ளார் கமல் என கண்டனக் குரல் எழுந்துள்ளது.
மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் மிகவும் அறுவறுக்கத்தக்கதாகவும் ஆபாசமாகவும் உள்ளதாகவும், இதில் அரங்கநாதர் மற்றும் வரலட்சும் ஆகிய தெய்வங்களை தேவையின்றி இழிவுபடுத்துவதாகவம் கூறி, இந்து மக்கள் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி, இயக்குனர் ரவிக்குமார், ஹீரோ கமல்ஹாஸன், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்குஇந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணன்.
அந்த நோட்டீஸில் இப்படிக் குறிப்பிட்டுள்ளனர்:
மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் என்ற பாடல், இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையச் செய்துள்ளது.
நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளையும் புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு ஊறு நிகழா வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்த வரிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டப்போரைச் சந்திக்க வேண்டி வரும்”, என்று கூறியுள்ளார்.
1:53 முப இல் மார்ச் 23, 2012 |
[…] [2] https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/ […]
1:53 முப இல் மார்ச் 23, 2012 |
[…] [2] https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/ […]
2:15 முப இல் மார்ச் 23, 2012 |
[…] [2] https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/ […]
2:15 முப இல் மார்ச் 23, 2012 |
[…] [2] https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/ […]
12:43 பிப இல் மார்ச் 24, 2012 |
[…] [2] https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/ […]
6:12 முப இல் மார்ச் 29, 2012 |
[…] [2] https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/ […]
6:12 முப இல் மார்ச் 29, 2012 |
[…] [2] https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/ […]
6:21 முப இல் மார்ச் 29, 2012 |
[…] [2] https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/ […]
5:06 பிப இல் ஏப்ரல் 30, 2013 |
[…] [1] https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/ […]
2:57 முப இல் பிப்ரவரி 1, 2014 |
[…] [12] https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/ […]
1:51 முப இல் மார்ச் 4, 2014 |
[…] [13] https://evilsofcinema.wordpress.com/2010/11/19/309-kamalahasan-lust-life-atheism/ […]