வருடா வருடம் சினேகாவின் இடுப்பை யாராவது கிள்ளிக்கொண்டே இருப்பார்களா?

வருடா வருடம் சினேகாவின் இடுப்பை யாராவது கிள்ளிக்கொண்டே இருப்பார்களா?

நடிகைகள் அலைவது ஏன்? அதாவது, விளம்பரம் வேண்டும் என்றுதானே நடிகைகள் இப்படி கடைத்திறப்பு, சின்ன டிவி, விளம்பர நடிப்பு என்று கிளம்பி விடுகிறார்கள். நடிகைகள் என்றால் சங்க இலக்கிய “பொது மகளிர்” என்ற எண்ணம், நமது தமிழர்களுக்கு உண்டு போலும். ஆகையால், நடிகைகளை நேரில் பார்க்கும் போது, தொட்டுவிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கைதான். சினிமாவில், கேமராவுக்கு முன்னால், பின்னால், யார் யாரோ தொடும் பொழுது, நாம் ஏன் தொடக்கூடாது என்ற எண்ணம் வரத்தான் செய்யும்.

கசாப் சொன்னது இவர்களுக்கும் பொறுந்தும்: அப்படி நடிகைகள் தாங்கள் நாகரிகமாக நடத்தப் படவேண்டும் என்றால், அவர்களும் அவ்வாறு நடந்து கொள்ளவேண்டும். மேலும் அவர்கள் ஒன்றும், இக்கால இளைஞர்களை நல்வழிப்படுத்துவதாக நினைத்துக் கொள்ளவேண்டாம், மாறாக, அவர்களது முக்கால் நிர்வாண ஆட்டங்கள், குலுக்கல்களினால், அவர்களது மனங்களைக் கெடுக்கத்தான் செய்கிறார்கள். ஆகவே, கசாப் சொன்னது இவர்களுக்கும் பொறுந்தும்.

இடுப்பை கிள்ளிய வாலிபரை திட்டித் தீர்த்தார் நடிகை சினேகா[1] (25-11-2010): பெருந்துறையில் இடுப்பை கிள்ளிய வாலிபரை நடிகை சினேகா திட்டி, எச்சரித்து அனுப்பினார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நேற்று நடந்த ஓட்டல் திறப்பு விழாவுக்கு நடிகை சினேகா வந்திருந்தார். நீல வண்ண சேலை அணிந்திருந்தார். கழுத்தில் டாலர் செயின் மட்டும் அணிந்திருந்தார். ஓட்டலை திறந்து வைத்த அவர், ஓட்டல் உரிமையாளருக்கு சொந்தமான ஈமு கோழிப் பண்ணையை பார்வையிடச் சென்றார். அவரைப் பார்க்கவும், மொபைல் போன் கேமராவில் படம் எடுக்கவும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பண்ணைக்கு சென்ற அவரை, உள்ளூர் பெண்கள் சிலர் மொபைல் போன் மூலம் படம் எடுக்க அனுமதி கேட்டனர். அவரும் சிரித்தபடி, “போஸ்’ கொடுத்தார். அப்போது, அவருக்கு பின்புறமாக நின்றிருந்த ஒருவர், அவரது இடுப்பை கிள்ளினார். டென்ஷனான சினேகா, “”அப்போதிருந்தே இடித்துக் கொண்டே இருக்கறீங்கண்ணே, நல்லா இல்லே. இன்னொரு முறை இப்படி செய்யாதீங்க,” என்று கடிந்து கொண்டார். உடனிருந்தவர்களும் அந்த வாலிபரை திட்டி, எச்சரித்து அனுப்பினர். சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

சினேகாவின் இடுப்பை கிள்ளிய தொழிலதிபருக்குதர்ம அடி (25-09-2009): திருச்சி, செப்.25, 2009-  திருச்சியில் நடைபெற்ற நகைக்கடை விழாவில், நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளிய தொழிலதிபருக்கு “தர்ம அடி’ விழுந்தது. திருச்சி சின்னக்கடைவீதியில், “ஜோஸ் ஆலுக்காஸ் அண்டு சன்ஸ்’ ஜுவல்லரி இரண்டாமாண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில், நடிகை சினேகா பங்கேற்றார். விழா முடிந்ததும், கடை மேடையிலிருந்து, நடிகை சினேகா கீழே இறங்கினார். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென சினேகாவின் இடுப்பை கிள்ளினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சினேகா, கடை உரிமையாளரிடம், இடுப்பை கிள்ளிய நபரை அடையாளம் காட்டி, கிளம்பிச் சென்றார். அங்கிருந்து ஓட்டமெடுத்த வாலிபரை, “தர்ம அடி’ கொடுத்த பாதுகாப்புப் பணியாளர்கள், அவரை, கடைக்கு இழுத்து வந்தனர். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், “வாலிபரை எதற்கு அடிக்கிறீர்கள்?’ எனக் கேட்டனர்

புளூ கலர் சட்டை போட்டவர், என் இடுப்பைக் கிள்ளினார்: அதற்கு அவர்கள் பதிலளிக்காமல், போலீசாரை ஒருமையில் திட்டி, வாலிபரை இழுத்துச் சென்றனர். போலீசார், வாலிபரிடம் விசாரித்தனர். அவர், திருச்சி மேலசிந்தாமணியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்பதும், சினேகாவின் இடுப்பை கிள்ளிய விவரமும் தெரிந்தது. சுரேஷ்குமாரை, போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். தங்களை ஒருமையில் திட்டியதால், பாதுகாப்புப் பணியாளர்களையும், போலீஸ் ஸ்டேஷன் வருமாறு அழைத்தனர். கடை உரிமையாளர் சமாதானப்படுத்தியதால், அவர்களை விட்டுவிட்டனர். சினேகாவின் இடுப்பைத் தன் கணவர் கிள்ளவே இல்லை என சுரேஷ் குமார் மனைவி ஷர்மிளா கூறினார். ஷர்மிளா கூறியதாவது: நானும், என் கணவர் சுரேஷ்குமாரும் நேற்று காலை தீபாவளி பர்ச்சேசுக்காக சின்னக்கடைவீதி சென்றோம். அப்போது, நடிகை சினேகா பங்கேற்ற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென, “புளூ கலர் சட்டை போட்டவர், என் இடுப்பைக் கிள்ளினார்’ என, சினேகா கூறியதாகத் தெரிகிறது. விழா நடந்த இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் என்னுடன் நின்றிருந்த என் கணவர் சுரேஷ்குமாரை, கடை ஊழியர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர்.

சினேகா செல்லுமிடங்களில் எல்லாம் பப்ளிசிட்டிக்காக இதுபோன்று நடந்து கொள்கிறார்: இதில், என் கணவர் சட்டை கிழந்தது. “தவறு ஏதும் செய்யாத என் கணவரை அடிக்காதீர்கள்’ என நான் அழுதும், கடை ஊழியர்கள் தொடர்ந்து தாக்கினர். “இதைப் பார்த்து ஏன் அடிக்கிறீர்கள்?’ என கேட்ட போலீசையும், கடை ஊழியர்கள் தள்ளி விட்டனர். என் கணவர் மீது பொய்யான புகார் கூறிய நடிகை சினேகா, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளேன். நடிகை சினேகா செல்லுமிடங்களில் எல்லாம் பப்ளிசிட்டிக்காக இதுபோன்று நடந்து கொள்கிறார். என் கணவரைத் தாக்கிய கடை ஊழியர்கள் மீது கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளதன் பேரில், மூவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இவ்வாறு ஷர்மிளா கூறினார்.

வேதபிரகாஷ்

© 26-11-2010


[1] தினமலர், இடுப்பை கிள்ளிய வாலிபரை திட்டித் தீர்த்தார் நடிகை சினேகா, நவம்பர் 25, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=133687

குறிச்சொற்கள்: , , , , ,

5 பதில்கள் to “வருடா வருடம் சினேகாவின் இடுப்பை யாராவது கிள்ளிக்கொண்டே இருப்பார்களா?”

 1. M. Nachiappan Says:

  1. காட்டினால் பிடிக்க எண்ணி, தொட்டு, பிறகு செல்லமாகக் கிள்ளி விடுகின்றனரோ?

  2. நெருக்கத்தில் கிரக்கம் ஏற்படும். அப்பொழுது சபலத்தால் தொட எண்ணும்

  3. அப்படி கண்படக்கூடாது, தொடாமல் இருக்க வேண்டும் என்றால், வெளியே வரக்கூடாது.

  4. இப்பொழுது கற்பைப் பற்றிய மரியாதையும், மதிப்பும் இல்லாமல் இருக்கிறது.

  5. குஷ்பு போன்ற நடிகைகளே அத்தகைய கருத்தை வெளியிட்டிருக்கும் போது, சபலம் ஏற்படத்தான் செய்யும்.

  6. நடிகர்களும் இதற்கு காரணம் ஆகின்றனர். ஏனெனில், அவ்ர்கள் பல நடிகைகளை அனுபவிப்பதாக நினைப்பர், அவர்கள் திரையில் கட்டிப்பிடித்து அனுபவிப்பர், திரை மறைவிஒல் அல்லது நிஜ வாழ்க்கையில் எப்படி வேண்டு,ஆஆலு இருப்பர்.

  7. வியாபார மயமாக்கப் பட்ட நிலையில், அவர்களை பண்டங்களாக நினைத்துக் கொள்வதிலும் வியப்பில்லை.

  8. எல்லோரும் அனுபவிக்கும் போது, நான் ஏன் ஆசைப்படக்கூடாது. என்ற எண்ணமும் ஏற்படும்.

  9. மேலும், இன்றைய சூழ்நிலையில், அரசன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியில் நடப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

  10. அனைவற்றிற்கும் மேலாக, நல்ல எண்ணங்கள், நற்பண்புகள், நற்குணங்கள் முதலியவற்றைப் பற்றி யாரும் இன்று எடுத்துச் சொல்வதிலை.

 2. ரிஸ்வான் அஹமத் Says:

  When something is shown publicly, it would be pinched!

 3. vedaprakash Says:

  ஈரோட்டில் யாரும் என் இடுப்பைக் கிள்ளவில்லை-சினேகா
  செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 14, 2010, 20:05[IST]
  http://thatstamil.oneindia.in/movies/interview/2010/12/14-sneha-wants-politicians-be-good.html

  ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் எனது இடுப்பை யாரும் கிள்ளவில்லை. என்னுடன் சேர்ந்து போட்டோ எடுக்க முண்டியவரைத்தான் நான் நிறுத்தி அறிவுரை கூறினேன் என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை சினேகா.

  சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியது:

  ஈரோட்டில் என் இடுப்பை யாரும் கிள்ளவில்லை. என்னுடன் போட்டோ எடுக்க பலர் ஆர்வப்பட்டனர். அந்த ரசிகரும் முண்டியடித்தார். அப்போது அவசரப்படாதீர்கள் என்று அறிவுரை சொன்னேன்.

  என் இடுப்பை கிள்ளியதாகவும், நான் ஆவேசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இடுப்பை கிள்ளி இருந்தால் அந்த ரசிகர் ஓடியிருப்பார். நானும் அறிவுரை சொல்லி இருக்கமாட்டேன். அடித்திருப்பேன்.

  நான் அரசியலில் குதிப்பதாகவும், பிரச்சாரத்துக்குப் போகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனக்கு அரசியல் பற்றி தெரியாது. எனவே அரசியலுக்கு வரமாட்டேன். தேர்தலில் ஏதேனும் கட்சி பிரசாரத்துக்கு அழைத்தாலும் போகமாட்டேன்.

  ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் நல்ல அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.

  இப்போது ஆக்ஷன் படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்காக நிஜமாகவே சண்டை போட்டேன். நிஜத்தில் நான் அடிக்க வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் பெயர்களை சொல்ல முடியாது.

  அடுத்து நான் நடித்து வரும் ஒரு படத்தில் இப்படி ஒரு பஞ்ச் டயலாக் உள்ளது: ஆம்பளையா இருந்தாலும், பொம்பளையா இருந்தாலும் போலீஸ் போலீஸ் தாண்டா… பஞ்ச் டயலாக் பேச ஹீரோவாகத்தான் இருக்கணுமா… ஹீரோயின் பேசக்கூடாதா?, என்றார்.

  பேசலாமே, நல்லாப் பேசலாமே…!

  • vedaprakash Says:

   இடுப்பை கிள்ளினா சும்மா இருப்பேனா?” – சூடான சினேகா

   அவர் என் இடுப்பையெல்லாம் கில்லவில்லை. அப்படி யாராவது செய்திருந்தால் அந்த இடத்தில் நான் பவானியாக மாறியிருப்பேன். அட்வைஸ் செய்ய மாட்டேன்” என்று கொஞ்சம் சூடாகவே பதில் அளித்தார்.
   http://chennaionline.com/tamil/cinema/news/newsitem.aspx?NEWSID=8155e96a-166d-4e24-90a6-fd052c16643f&CATEGORYNAME=TFILM

   புன்னகை அரசி சினேகாவை அதிரடி அரசியாக காட்டியிருக்கும் படம் ‘பவானி’. இன்னும் சில வாரங்களில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படப்பிடிப்புக் குழுவினர்.

   இந்த படம் முடியும்போது எனக்கே கொஞ்சம் கஷ்ட்டமாகத்தான் இருந்தது. காக்கி சட்டையை கழற்றப்போறமேன்னுதான். பவானி படத்திற்காக டூப் கூட போடம சண்டை போட்டு இருக்கேன். இந்த படம் வெளியாகி மக்களிடம் எப்படி வரவேற்பு பெருகிறது என்பதை பார்த்து அடுத்ததாக இதே போன்று ஒரு படத்தை கிச்சாவுடன் இணைந்து பண்ணுவேன் என்ற சினேகா, இந்த படத்தில் ஏகப்பட்ட பேரை அடித்திருக்கிறாராம்.

   படத்தில் சரி, நிஜத்தில் யாராயாவது அடிக்க வேண்டும் என்ற என்னம் இருக்கிறதா? என்ற கேள்வி கேட்க, முன்னாடியே கேட்டு இருந்தீங்கன்ன, வீட்ல இருந்து லிஸ்ட் போட்டு எடுத்து வந்திருப்பேன். அந்த அளவிற்கு பெரிய லிஸ்ட் இருக்கு. என்றவரிடம் உங்க இடுப்பை கிள்ளிய ரசிகரை கண்டிக்காமல் ஏன் அட்வைஸ் பண்ணீங்க? என்று கேட்க கொஞ்சம் சூடான சினேகா, அவர் என்னிடம் புகைப்படம் எடுத்துகொள்ள நினைத்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் அவசரப்பட்டார். பொருமையாக இருங்க அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்வேன் என்று கூறினேன். அவர் என் இடுப்பையெல்லாம் கில்லவில்லை. அப்படி யாராவது செய்திருந்தால் அந்த இடத்தில் நான் பவானியாக மாறியிருப்பேன். அட்வைஸ் செய்ய மாட்டேன்” என்று கொஞ்சம் சூடாகவே பதில் அளித்தார்.

 4. சினேகாவை அடுத்து, குஷ்புவின் இடுப்பு கிள்ளப்படுகிறதாம்! « பகுத்தறிவு தீவிரவாதம் Says:

  […] [4] https://evilsofcinema.wordpress.com/2010/11/26/would-anybody-tickles-hip-of-sneha-every-year/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: