நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)?

நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)?

நடிகைகளின் தற்கொலை பட்டியல் நீள்கிறது: தமிழகத் திரைப்பட சரித்திரத்தில், நடிகைகள் தற்கொலை செய்வது கொள்வது என்பது தொடர்ந்த பட்டியலாக உள்ளது – அந்தக்கால விஜயஸ்ரீ முதல் இக்கால படாபட் ஜெயலட்சுமி, சிலுக்கு சுமிதா வரை ………………….. இதில் பெரும்பாலான முடிவுகள் ஒருதலை காதல், பலரைக் காதலித்தல், காதல் தோல்வி, காதலித்து ஏமாறுவது-ஏமாற்றுவது, திருமணம் செய்து கொள்ளாமல் வைப்பாட்டியாக / கீப்பாக வைத்துக் கொள்வது, என்ற ரீதியில் தான் இருந்து வருகிறது. சில நடிகைகள் திருமணமே செய்து கொள்ளாமல், சாகும் வரை அப்படியே இருந்துள்ளனர். பெயரைக் குறிப்பிட முடியாத அளவிற்கு, சில மிகப்பெரிய நடிகைகள் கூட தற்கொலை முயற்ச்சிற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலாக தூக்கமருந்து மற்றும் தூக்கு போன்ற முறைதான் கையாளப்பட்டிருக்கிறது. அந்நிய நாடுகளைப் போல இன்னும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வதிலை. அதாவது, காதல்-செக்ஸ் போன்ற விஷயத்தில் – கலைகளில், மேனாட்டு கலாச்சாரங்களையும் விஞ்சும் அளவிற்கு இருந்தாலும், உயிர் போக்கும் / உயிரைப் போக்கிக் கொள்ளும் கலையில் இந்தியர்களாகவே அல்லது புராதனமாகவே இருக்கிறார்கள் போலும்! திரைப்பட வரலாற்றிற்கு முன்னர், நாடக காலத்திலும், அத்தகைய தற்கொலை-கொலை முயற்சிகள் இருந்திருகக் கூடும்.

நடிகை தற்கொலை, தற்கொலை முயற்சி, கொலை செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம்: தற்கொலை, கொலை என்ற செய்திகள் பொதுவாக பொதுவாக மக்களின் எண்ணங்களில் இரக்கத்தை ஏற்படுத்தும். “ஐயோ பாவம், இந்த வயதில் இப்படி சாக வேண்டுமா?”, என்றுதான் இரக்கப்படுவர். ஆனால், சினிமா நடிகை எனும்போது, மனப்பாங்கு வேறுவிதமாக இருக்கிறது. சினிமா நடிகை என்றாலே, பொது மக்களுக்கு, குறிப்பாக ஆண்களுக்கு, நிச்சயமாக ஒரு பொழுது போக்கு பொருளாகத்தான் நினைக்கிறார்கள். “ஏதோ இருக்கும் வரை மற்றவர்களை மகிழ்வித்தார்கள், இப்பொழுது போய் விட்டார்கள்”, என்று கூட சாதாரணமாக நினைக்கலாம். இறப்பிலும் ரசிக்கும் உள்ளங்களும் இளசுகள் படங்களைப் பார்த்து சும்மா இருந்துவிடலாம். உண்டு. அதாவது, பொய்யான உலகத்தில் வாழும் அவர்கள் இறந்தாலும், அந்த அளவிற்கு மக்கள் உணர்ச்சிகளை பாதிப்பதில்லை எனலாம். இறந்தவர்களின் படங்களைப் பார்க்கும்போது, அவர்களது குரல், பாடல்களைக் கேட்கும்போது, ஒருவேளை இறவாமல் இருக்கிறார்கள் என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தலாம். இறந்த பின்னரும் அவர்களை திரையில் பார்த்து ரசிக்கலாம்.

பார்ப்பதை தொடத்தூண்டும் எண்ணம் உருவாதல் எப்படி? 1970கள் வரையில், நடிகைகளுக்கு ஒருவேலை மரியாதை இருந்திருக்கலாம். அம்மனாக நடித்த நடிகைகள் மதிக்கப் பட்டிருக்கலாம். ஆண் நடிகர்களில் என்.டி.ஆர் ஒரு பெரிய விதிவிலக்கு. பலர் அவரை விஷ்ணு, ராமர், கிருஷ்ணர் என்றுதான் நினைத்துள்ளனர். சென்னை, தி.நகரில் அவர் வீட்டிற்கு வந்து அவரை வணங்கிச் செல்வது சாதாரணமாக இருந்தது. ஆனால், நடிகைகள் அத்தகைய நிலையை அடைய முடியவில்லை. அதுவும், இக்காலத்தில் தொட்டுவிடவும் துடிக்கிறார்கள், சில நேரங்களில் தொட்டும் விடுகிறார்கள். ஏனெனில், அவர்கள் நடந்து கொள்ளும் விதம், அவர்களை மக்கள் ஒரு விபச்சாரியாகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். திரையில் எத்தனை ஆண்களுடன், என்னமாய் தொட்டு, கட்டிப் பிடித்து, உருண்டு, முத்தம் கொடுத்து, எப்படி-எப்படியோ நடிக்கின்றார்களே, அப்படியிருக்கும் போது, நாம் தொட்டால் என்னவாம், என்ற எண்ணம் சாதாரணமாகத் தோண்டுவது இயல்புதான். சங்க இலக்கியத்தில் “பொது மகளிர்” என்ற சொற்றொடரே உள்ளது. மேலும், இப்பொழுதெல்லாம், நடிகைகள் பல பொது நிகழ்சிகள், அரசியல் விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வந்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், கும்மாளம் போடுகிறார்கள். அப்பொழுதும் மக்களுக்கு நிஜம்-திரை என்ற உண்மைகள் தெரிய வருகின்றன. ஒருவேளை சூட்டிங் பார்த்தவர்கள், இன்னும் அதிகமாகவே தெரிந்து கொண்டிருப்பார்கள். சக-நடிகர்கள் தொட்டுப் பேசுவது, சில நேரங்களில் தூக்கி விடுவது, பிடித்துக் கொள்வது முதலியவற்றை பார்க்கும் போது, அந்நேரங்களில் நடிகைகளின் முகங்களில் எந்த சலனமு இல்லாதிருக்கும் போது, பார்க்கும் மக்களுக்கு அத்தகைய எண்ணம் வருவது சகஜமானதே.

பட்டியலில் சில நடிகைகள் (கொலை / தற்கொலை உட்பட)[1]: சினிமா மோகத்தில் நடிக்க வரும் பெண்கள், பெரும்பாலாக, குறிப்பிட்ட ஆண்களின் கைப்பாவையாக, படுக்கையை அலங்கரிக்க வேண்டியுள்ளது. இல்லை வேறு வகையில் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. நடிகையாகி விட்டப் பிறகு, காதல் வந்தால் அல்லது நடிகர் / தயாரிப்பாளர் / டைரக்ரை கல்யாணம் செய்து கொண்டால், நடிப்பை முழுக்குப் போட்ட நடிகைகள் அமைதியாக வாழ்ந்துள்ளனர் எனலாம். ஆனால், மற்றவர்கள் எல்லாம், இத்தகைய மன உலைச்சர்களுக்காகி தற்கொலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு கீழ்கண்டவை கொடுக்கப் படுகின்றன. நடிகை என்றாலே திரைப்பட உலகத்தில் உள்ள எந்த ஆணுக்குமே, சந்தேகம் பலமுறை வருவது சகஜமான விஷயம்தான். அந்நிலையில், ஏதாவது பேச்சுவார்த்தைகளில், விவாதத்தில் முடிந்து சண்டையாகி, பிரச்சினையாகி விடுகிறது.

1974: தமிழ் சினிமா உலகில் முதல் தற்கொலையாக கருதபடுவது 1974ம் ஆண்டு நடந்த நடிகை விஜயஸ்ரீ இன் தற்கொலை ஆகும்..கொலை என கருதப்பட்ட இவரின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது[2].

1979: தர்மயுத்தம் படத்தில் ரஜனிகாந்துக்கு தங்கையாக நடித்தவர் நடிகை லக்ஷ்மிஸ்ரீ.. 1979 ம் ஆண்டு காதலர் உறக்கத்தில் இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் லக்ஷ்மிஸ்ரீ..முதலில் சந்தேகங்கள் எழுந்தாலும் இறுதியில் தற்கொலை என்றே தீர்பளிக்கபட்டது[3].

1980: நடிகை ஷோபா 1980களில் புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகை..நிழல் நிஜமாகிறது, பசி, ஏணிப்படிகள்,மூடுபனி, அழியாத கோலங்கள் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது….பசி படத்தில் நடிததற்காக இவருக்கு ஊர்வசி விருது கிடைத்தது..ஆனால் இவருடைய புகழ் சிறிது காலமே நிலைத்தது…துரதிஷ்டவசமாக 1980ம் ஆண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் ஷோபா[4].

1993: திவ்யா பாரதி தன்னுடைய 19வது வயதில் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

2001: பிரதிக்ஷா பெற்றோரின் காதல் எதிர்பாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 2005:ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சி – காதல் கைகூடாததால் விபரீத முடிவு

2006: டி.வி. நடிகைகள் ஷாலினி, வைஷ்ணவி (ஏப்ரல்) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மனதை விட்டு அகலுவதற்குள் ஷர்தா (வயது-21) என்ற இன்னொரு டி.வி. நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 2006: டி.வி.நடிகை விஜயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பிப்ரவரி 2008: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.

2008: பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மே 2008:, தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு, ஜோதிகாவிற்கு திருமணம் ஆனதால், நக்மா தற்கொலை எண்ணங்களுக்குத் தள்ளப்பட்டர். ஆனால், மனம் மாற்றிக்கொண்டு, கிருத்துவரானார்.

ஆகஸ்ட் 2008:  நடிகை ரம்பா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.

டிசம்பர் 2008: ஹைதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகை பார்கவி தனது காதலரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். காதலியைக் கொன்ற பின்னர் காதலரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ஜூன் 2010: சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரை சேர்ந்த சீனிவாசரெட்டியின் மகள் சசிரேகா (வயது 20).

ஜூன் 2010: ஸ்வேதா பாசு தற்கொலை முயற்சி

அக்டோபர் 2010: மீரா ரித்திகா (20), ஏராளமான படங்களில் குரூப் டான்ஸராக வந்துள்ளார். குழந்தையை கவனித்தால் போதும் சினிமாவில் நடனமாடக் கூடாது என்றாராம் கணவர் அஸ்வின். குடித்து விட்டு, ஆண் நண்பர்களுடன் வந்ததைக் கணவன் கண்டித்ததால் துணை நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்[5].

வேதபிரகாஷ்

16-03-2011


[1] தமிழ், தெலுங்கு நடிகைகள் மட்டுமல்லாது, மற்ற மொழி நடிகைகள் சிலரும் சேர்க்கப் பட்டுள்ளன.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)?”

  1. கமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம் | சினிமாவின் சீரழவுக Says:

    […] https://evilsofcinema.wordpress.com/2011/03/16/why-actresses-commit-suicide/ […]

  2. நபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3) | சினிமாவின் சீ Says:

    […] [11] https://evilsofcinema.wordpress.com/2011/03/16/why-actresses-commit-suicide/ […]

  3. நபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3) | சினிமாவின் சீ Says:

    […] [11] https://evilsofcinema.wordpress.com/2011/03/16/why-actresses-commit-suicide/ […]

பின்னூட்டமொன்றை இடுக