ஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11!

ஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11!

1-11-11 இல்லை 11-11-11? இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது[1] பிறந்த நாள்! அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ஹேஷ்யமும் உள்ளது. இப்படி 1-1-1 என்று வரும் நாட்கள் ஐஷின் வாழ்வில் முக்கியமாக இருக்கும் போல இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், மக்களுக்கு ஐஸ் / ஐஷ் என்றாலே குளிர்ந்து விடுகிறது. நல்ல வேளை, மற்ற விஷயங்களில் எதிர்மறை விளைவுகளும் ஏற்படலாம். ஆனால், ஜனங்கள் இவ்விஷயத்தில் படு உஷாராக இருக்கிறார்கள்.  எண்களின் சேர்க்கையில் விசேஷம் இருக்கிறதோ இல்லையோ, “பெட்” வைப்பவர்களுக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. இன்றே குழந்தை பிறந்து விடும் என்று வேறு பெட்! நல்லவேளை, இன்னும் 10 நாட்கள் பொறுக்க வேண்டும் போல இருக்கிறது.

மூன்றாவது தடவை வெற்றிகரமாக கருவுற்று கர்ப்பமான ஐஷ்வர்ய பச்சன்: இரண்டு முறை அபார்ஷன் ஆகி, மிகவும் வருத்தத்துடன் இருந்த பச்சன் குடும்பத்தினர் மூன்றாவது தடவையாக கருவுற்ற போது, மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்தனர். முதலில் மற்றும் இரண்டாவது தடவை அபார்ஷன் ஆனபோது, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டபோது, அபிதாப் பச்சன் கொதித்தே போய் விட்டார்[2]. அதுமட்டுமல்லது, சில பத்திரிக்கைகள் அவருக்கு, ஏதோ ரகசிய வியாதி இருக்கிறது என்று கூட செய்திகள் வெளியிட்டபோது[3],  எப்படி எங்களது மறுமகளைப் பற்றி அப்படி செய்திகளை போடுவீர்கள் என்று கோபத்துடன் நிருபர்களைக் சாடினார்[4]. ஆனால், ஜாதகம் சரியாக இல்லை என்று பல கோவில்களுக்குச் சென்று தம்பதியர் பரிகார பூஜைகளை செய்தனர். இப்பொழுதும், மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்து வருகின்றனர். இருப்பினும் ஊடகங்கள் விடுவதாக இல்லை, பின் தொடர்ந்து எப்படியாவது புகைப்படம் எடுத்து விடுவது என்று இருந்தன. கோவில்களுக்கு சுற்றி வரும்போது, பச்சன் தம்பதியரைப் பிடித்தே விட்டனர்., வேறு வழியில்லாமல், கர்ப்பத்துடன் வயறுடன் இருந்த ஐஸ் போஸ் கொடுத்தார், படத்தை எடுத்து விட்டனர்[5]. வயறு உருண்டு திரண்டு இருந்தது என்றெல்லாம் எழுதத்தான் செய்தனர்.

நடிகையின் சீமந்தம்:  பாலிவுட் முன்னணி நடிகை ஐஸ்வர்யாவின் சீமந்தம் (கோத் பரை / ‘godh bharai’ என்று இந்தியில் சொல்கிறார்கள்) கோலாகலமாக நடைபெற்றது. இத்தனை பிரபலங்களை இதற்கு முன்னர் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு பாலிவுட் பெண் நட்சத்திரங்கள் பலரும் திரண்டு வந்து ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்[6]. உலக அழகியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் அபிஷேக்பச்சனை திருமணம் 20-04-2007 அன்று செய்து கொண்டார். ஐஸ்வர்யா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று மும்பையில் அவருக்கு சீமந்த விழா கோலாகலமாக நடைபெற்றது.   அவரது மாமியார் ஜெயா பச்சன் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். சீமந்த விழாவை முன்னிட்டு பச்சன் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிற்பகல் விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது.  ஐஸ்வர்யா ராய் இந்திய பாரம்பரிய முறைப்படி ஆரஞ்சு நிற சேலை அணிந்திருந்தார். அந்த சேலையில் தாய்மையில் மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு அவர் காணப்பட்டதாக விருந்தினர்கள் தெரிவித்தனர்.  

நடிக-நடிகையர்களின் கூட்டம்[7]: இத்தனை பிரபலமான நட்சத்திரங்களை இதற்கு முன்னர் ஒரே இடத்தில் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நட்சத்திர விருந்தாளிகள் விழாவுக்கு பெருந்திரளாக வந்திருந்தனர்.  பழம்பெரும் நடிகை சய்ராபானு ஐஸ்வர்யா தம்பதிக்கு தங்ககாசு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.  பிரபல நடன இயக்குனர் சரோஜ்கான், நடிகைகள் ஊர்மிளா, டிவிங்கிள் கன்னா, சோனாலி பிந்த்ரே, நீத்துகபுர், நீலம் கோத்தாரி, பூனம் சின்ஹா மற்றும் கரன் ஜோகர் உள்ளிட்ட பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.  இந்த விழாவின் போது ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் முகத்தில் பூரிப்பு காணப்பட்டதாக விருந்தினர்கள் தெரிவித்தனர். விழா முடிந்தவுடன், தம்பந்தியர் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டனர்[8]. ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்[9]. ஐஸ்வர்யாவுக்கு நவம்பர் முதல் வாரம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11-11-11 அன்று குழந்தை பிறக்குமா? நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை வைத்து பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பமாகியுள்ளது. ஏராளமான புக்கிகள் இந்த பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என டாக்டர்கள் தேதி குறித்துள்ளனர். நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அவருக்கு டெலிவரி நடக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இருந்தாலும் குழந்தையின் பிரசவத் தேதி யார் கையிலும் இல்லை அல்லவா? அமிதாப்பச்சனின் மொத்த குடும்பமும் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என சில ஜோசியர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் பிரசவம் 11-ம் தேதிதான் நடக்கும் என இந்த ஜோசியர்களும் கூறியுள்ளனர்.

பல கோடி பெட்டிங் ஆரம்பம்[10]… முன்பு அபிதாப் பச்சன் திவாலா ஆகும் நிலையில், பெங்களூரில் உலக அழகி போட்டி நடத்த அனுமதி கொடுத்து, அவரைக் காப்பாற்றியது காங்கிரஸ் அரசு. ஐஷை மறுமகளாக்கிக் கொண்டதே பணம் பண்ணுவதற்குத் தான் என்றும் பேசிக்கொண்டார்கள். இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11ல் பிரசவம் நடக்குமா நடக்காதா என்று பெரிய பெட்டிங்கே ஆரம்பித்துள்ளது மும்பையில். இதில் ஏராளமான புக்கிகள் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த பெட்டிங்கில் பல கோடி ரூபாய் பணத்தையும் கட்டி வருகின்றனர் மக்கள். ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11 தேதியிலேயே பிரசவம் நடக்க வேண்டும் என்றும் இவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்களாம். காரணம், “எங்களுக்கு பெட்டிங்கில் பணம் வரும் என்பது மட்டுமல்ல, ஐஸ்வர்யா ராய் என்ற உலக அழகிக்குப் பிறக்கும் குழந்தை ஒரு சிறப்பான நாளில் பிறந்தால் நல்லதுதானே,” என்றார் இந்த பெட்டிங்கில் பணம் கட்டியுள்ள ஒரு நபர். நடிகை ஒருவரின் பிரசவத்துக்காக பெட்டிங் நடப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை.

வேதபிரகாஷ்

01-11-2011


[5] Aishwarya, who is in the third trimester of her pregnancy, has been clicked in a snap that, though blurry, shows the full roundedness of her soon-to-arrive bundle of joy.
The actress has lately been visiting temples and pooja pandals in Mumbai but has been hiding her baby bump beneath layers of clothing and dupattas.

http://www.apunkachoice.com/content/article/sid100006898-revealed_aishwarya_rais_baby_bump/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

13 பதில்கள் to “ஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11!”

 1. S. Ezhilan Says:

  தமிழர்களுக்கு முக்கியமான செய்தி இதுதான்:நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு 38-வது பிறந்த நாள் குடும்பத்துடன் …
  தினத் தந்தி – ‎௧ நவ., ௨௦௧௧‎
  இந்தி நடிகையும், விரைவில் தாயாக போகிறவருமான ஐஸ்வர்யா ராய்க்கு நேற்று 38-வது வயது பிறந்தது. அவர் தன்னுடைய பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். அவருக்கு நெருக்கமான …
  ஐஸ்வர்யாவுக்கு வயது 38
  தினமணி – ‎௧ நவ., ௨௦௧௧‎
  மும்பை, நவ. 1: விரைவில் தாயாகப்போகும் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் செவ்வாய்க்கிழமை தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களை …
  நடிகை ஐஸ்வர்யராய்க்கு இன்று 38வது பிறந்தநாள்
  விடுப்பு – ‎௧ நவ., ௨௦௧௧‎
  நடிகை ஐஸ்வர்யராய் இன்று தனது 38வது பிறந்தநாளை அவரது வீட்டில் பிரமாண்டமான விருந்து ஏற்பாடுகளுடன் கொண்டாடுகிறார். முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய் இன்று தனது …
  ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38:
  யாழ் – ‎௧ நவ., ௨௦௧௧‎
  Interests:songs, kavithai, small stories. Like new friends. கொண்டாடுகிறார். இன்று மாலை அவரது வீட்டில் பிரமாண்டமான பார்ட்டிக்கு ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் தாய்மையடைந்துள்ள …
  ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: பார்ட்டியுடன் கொண்டாட்டம்
  Oneindia Tamil – ‎௧ நவ., ௨௦௧௧‎
  தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று மாலை அவரது வீட்டில் பிரமாண்டமான பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். …
  ஐஸ்வர்யா ராயின் 38 வது பிறந்தநாள்
  nakkheeran publications – ‎௧ நவ., ௨௦௧௧‎
  நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று 38வது பிறந்தநாளாகும். இதையடுத்து அவருக்கு பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராய் கர்நாடகவில் உள்ள …

  • P.S. Prameelaa Says:

   தமிழர்களுக்கு இது முக்கியனமான செய்தி என்பது தமிழர்களையே இழிவு படுத்துவது போலாகும்.

   தமிழர்கள் என்ன அப்படி சினிமா நடிகைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டு காலம் கடத்தி வருகிறார்களா?

   அவர்களுக்கென்று குடும்பம் என்று எல்லாம் இருக்கிறது.

 2. S. Devadoss Says:

  ஐஸ்வர்யாராய் நாளை அம்மாவாகிறார்
  http://tamil.cinesouth.com/masala/hotnews/new/10112011_01.shtml

  ஐஸ்வர்யா ராய்க்கு நாளை பிரசவம் நடக்கவுள்ளது. ஐஸ்வர்யா ராய் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த ஆண்டின் விசேஷ தினமாக கருதப்படும் நாளை (11-11-11) அவருக்கு பிரசவம் நடக்கிறது. இதற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் கணவர் அபிஷேக், அமிதாப் பச்சன், மாமியார் ஜெயாபச்சனும் தங்கியுள்ளனர்.

  இவர்களுக்காக மருத்துவமனையின் 5வது மாடியில் விசேஷ அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமிதாப் குடும்பத்தினர் இங்கு தங்கியிருக்கும் வரை மருத்துவமனைக்கு பாதுகாப்பை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  மருத்துவமனை பாதுகாவலர்கள் 6 மணி நேரத்துக்கு பதிலாக 12 மணி நேரம் பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. தவிர, தனியார் பாதுகாப்பு நிறுவன செக்யூரிட்டிகளும், போலீசாரும் மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர். ஐஸ்வர்யா ராய், அவருடைய குடும்பத்தினரையோ யாரும் படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

  • P.S. Prameelaa Says:

   பெண்ணுக்குத்தான் தெரியும் அவளது பிரச்சினை.

   இதில் ஊடகங்கள் விழுந்து விழுந்து இவ்வாறு செய்திகளை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.

   சினிமா நடிகைன் என்பதனால் மட்டும், அவளது பிரசவம், குழந்தை பெற்றெடுத்தல், முதலியவை மற்ரவர்களுக்கு வேடிக்கையான விஷயங்கள் ஆகிவிடாது.

 3. S. Devadoss Says:

  ஐஸ்வர்யா ராய்க்கு என்ன குழந்தை பிறக்கும்: ரூ.150 கோடிக்கு சூதாட்டம்
  [ Thursday, 10 November 2011, 11:12.37 AM GMT +05:30 ]
  http://www.viduppu.com/view.php?2cvnB2c2BH242P5U40d3Oc0d3AhZ220aH2ebbLBeb3BJJ2

  நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு என்ன குழந்தை பிறக்கும் என்பது தொடர்பாக ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது.
  இதில் மும்பை தாதாக்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கட் வீரர்கள் மீதுதான் இதுவரை கோடிக்கணக்கில் சூதாட்டம் நடந்தது.

  இம்முறை சற்று வித்தியாசமாக சூதாட்டம் நடக்கிறது. கிரிக்கட் வீரர்களுக்கு பதிலாக இதில் சிக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராய். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு 11.11.11 தேதியில்(நாளை) தான் குழந்தை பிறக்கும் என்று பலர் கூறி உள்ளனர். ஆனால் சிலர் இதில் மாறுபடுகின்றனர்.

  குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் திகதி தான் குழந்தை பிறக்கும் என்று கூறி வருகின்றனர். எந்த நாளில் குழந்தை பிறக்கும் என்பதை வைத்து மும்பை தாதாக்கள் சூதாட்டம் நடத்துகின்றனர்.

  இதுதவிர ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்ற பந்தயமும் சூடுபிடித்துள்ளது. இதை மையமாக வைத்து ரூ.150 கோடிக்கு உலகம் முழுவதும் சூதாட்டம் நடக்கிறதாம். மும்பை தாதாக்கள்தான் இதில் அதிகம் ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் ஒரு சிலர் ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் தொடர்பு கொண்டு, ஐஸ்வர்யாவுக்கு எப்போது, என்ன குழந்தை பிறக்கும் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

  அவர்களிடம் பேசுவதை மருத்துவர்கள் தவிர்த்து வருகின்றனர். ஐஸ்வர்யாவை மையமாக வைத்து கோடிக்கணக்கில் சூதாட்டம் நடப்பது பற்றி தகவல் வந்துள்ளது. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறோம் என்று மும்பை பொலிசார் கூறி உள்ளனர்.

  • P.S. Prameelaa Says:

   மேற்குறிப்பிட்டபடி, மற்றவர்கள் மூக்கை ஏன் நுழைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

   மற்ற நடிகைகள் அல்லது பிரபல பெண்மணிகள் விஷயத்தில் இவ்வாறு ஒன்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடவில்லையே?

   சோனியாவிற்கு குழந்தைகள் பிறந்தன; கனிமொழிக்கு பிறந்தது; …….அப்பொழுது இது மாதிரி செய்திகள் வெளியிட்டார்களா, பெட் கட்டினார்களா?

   இப்பொழுது மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?

 4. S. Devadoss Says:

  ஐயோ சாமி, தே தி தள்ளீக் கொண்டே போகுதே, என்ன செய்ய?

  பெட் வைத்தவர்களின் நிலை என்ன?

  தேதியை மாற்றிக் கொண்டார்களா அல்லது அதற்கேற்றபடி, டாக்டர்கள் தேதியை தள்ளி வைத்து விட்டார்களா?

  இல்லை, இப்படி ஐஸை வைத்து வியாபாரம் பண்ணுகிறார்களா?

  • P.S. Prameelaa Says:

   உமக்கு என்னய்யா கவலை?

   உமது பெண்ணின் பிரசவத்தைப் பற்றி இப்படி விவாதித்தால், பிரபலப்படுத்தினால், நீங்கள் சும்மாயிருப்பார்களா?

 5. P.S. Prameelaa Says:

  நடிகைக்கு குழந்தை பிறந்தால் என்ன, பிறக்காவிட்டல் என்ன?

  எதற்காக இப்படி மற்றவர்கள் அதைப் பற்றி கவலை படவேண்டும்?

  பெண் என்று பார்க்கும் பொழுது, அது அவளது தனிப்பட்ட விஷயம், அதில் மற்றவர்கள் ஏன் அநாவசியமாக தலையிட வேண்டும்?

 6. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

  […] [4] https://evilsofcinema.wordpress.com/2011/11/01/378-aishwarya-pregnant-child-bearing/ […]

 7. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

  […] [4] https://evilsofcinema.wordpress.com/2011/11/01/378-aishwarya-pregnant-child-bearing/ […]

 8. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

  […] [4] https://evilsofcinema.wordpress.com/2011/11/01/378-aishwarya-pregnant-child-bearing/ […]

 9. Mariam Nayanathara Says:

  ஆமாம், அப்பொழுது ஏதோ முக்கியமான செய்தி போல போட்டார்கள்.

  இப்பொழுது பொத்திக் கொண்டு இருக்கிறார்களே

  நமது தமிழக ஊடகக்காரர்கள் “பிள்ளைத் தமிழ்” பாடலாமே?

  மறந்து விட்டார்களோ என்னமோ?

  இல்லை, அவர்களையும் தான் கற்பழித்து விடுகிறாற்களே என்று, வீட்டிலேயே பொத்தி வளர்ட்க்கிறார்கள் போலிருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: