சில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்!

சில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்!

ஆபாச நடிகைகள், ஆபாச படங்கள், தொழில்: சினிமாத்தொழிலைப் பொறுத்த வரைக்கும் எந்த நியாயம், தர்மம், முதலியவையெல்லாம் பார்ப்பதில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் எதற்கும் துணிந்து விடுகிறார்கள். நடிகைகளை பணத்தால் எதையும் செய்யத் தூண்டுகிறார்கள். பணம், புகழ், வசதியான வாழ்கை முதலியன கிடைக்கும் எனும் போது, நடிகைகளும் எல்லாவற்றிற்கும் துணிந்து விடுகிறார்கள். இன்றைய இந்திய சினிமா உலகில் நடிகைகள் எல்லாவற்றையும் சாதித்து விட்டனர் எனலாம். சிமி கேர்வால் என்ற நடிகை, 1972ல் “சித்தார்த்” என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்தார். ஹெலன் என்ற நடிகை காபரே நடனம் ஆடி புகழ் பெற்றார். கேரளா அத்தகைய படங்களை எடுத்து சுற்றுக்கு விடுவதில் கில்லாடியானது[1]. அதற்கேற்றபடி நடிகைகளும் அங்குள்ளனர்[2]. இப்பொழுது கூட, இக்கட்டுரை எழுதும் நேரத்தில் திருநெல்வேலி கோர்ட்டில் ஷகிலா என்ற நடிகை ஆபாசமான படத்தில் நடித்ததற்காக வந்தார் என்ற செய்தி வந்துள்ளது[3]. இந்நிலையில் தான் “சில்க்ஸ்மிதா” வேடத்தில் நடிக்கும் ஆபாச நடிகை வித்யா பாலன் கூறியுள்ளது பற்றி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இவரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்க்ஸ்மிதாவைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்: பாலக்காடு ஐயருக்குப் பிறந்த இந்த அம்மையார் கூறுவதாவது[4], “சில்க் ஸ்மிதாவைப் பற்றி பலரும் தவறாகவே பார்த்து வருகின்றனர், சித்தரித்து வருகின்றனர். உண்மையில் பய உணர்வு சற்றும் இல்லாதவர் சில்க். தைரியமானவர், எதைச் செய்தாலும் உறுதியாக செய்யக் கூடியவர், துணிச்சல் மிக்கவர். குழந்தைத்தனமான மனது கொண்டவராக

ஜாதியைக் குறிப்பிடும் நோக்கில் குறிப்பிடவில்லை, ஆனால், பணம்-புகழ் என்றால் எவ்வாறு மனிதர்கள் துணிந்து விடுகிறார்கள் என்பதற்காகத்தான் குறிப்பிடப்படுகிறது. ஆபாசம் எல்லாவற்றையும் கடக்கிறது போலும்.

இருந்தாலும் தான் செய்வது சரி என்று அவருக்குத் தோன்றினால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் செய்யக் கூடியவர் என்று சில்க் வேடத்தில் தற்போது தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து வரும் வித்யா பாலன் கூறியுள்ளார்[5]. இந்தியில் உருவாகி வரும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க் ஸ்மிதாவின் கதையை தழுவி உருவாக்கப்படுகிறது. இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். இவரது கவர்ச்சிகரமான ஸ்டில்கள் படம் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சில்க்ஸ்மிதா படத்திற்கு அவரது சகோதரர் எதிர்ப்பு: சில்க் ஸ்மிதா படத்தை வெளியிட அவரது சகோதரர் நாகவரபிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்[6]. இதுபற்றி அவர் கூறுகையில், “சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுப்பதாக பத்திரிகை, டெலிவிஷன்களில் செய்தி பார்த்து அறிந்து கொண்டோம். சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினராகிய எங்களிடம் படம் எடுப்பது பற்றி பேசவில்லை. அனுமதியும்

“சில்க்ஸ்மிதா பற்றி படம் எடுப்பவர்களிடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை. அந்த படம் மூலம் குடும்பத்தினர் மனம் புண்படக் கூடாது என்றே கருதுகிறோம்,” என்ற பிறகு, யார் என்ன கவலைப் படப்போகிறார்கள்?. படம் வெளிவந்த பிறகு சகோதரர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.

 பெறவில்லை. எனவே இந்த படத்தை எடுக்க கூடாது என்று இயக்குனர் மிலன், தயாரிப்பாளர் ஏக்தாகபூர் ஆகியோருக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அவர்களிடம் இருந்து பதில் இல்லை.  எனவே இரண்டாவது வக்கீல் நோட்டீஸ் ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விரைவில் அனுப்பப்படும். சில்க்ஸ்மிதா படத்தை நாங்கள் பார்க்க வேண்டும். அதில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும். சில்க் ஸ்மிதா சாவின் பின்னணியில் உள்ள நிலவரம் இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. நிதி நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். அது உண்மையல்ல. சில்க்ஸ்மிதா பற்றி படம் எடுப்பவர்களிடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை. அந்த படம் மூலம் குடும்பத்தினர் மனம் புண்படக் கூடாது என்றே கருதுகிறோம்,” என்றார்.

படம் ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ இருக்காது: ஆபாச நடிகை அத்தகைய வேடத்தில் நடிப்பதால், பலான காட்சிகள் இருக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கேட்டபோது, “படம் ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ இருக்காது”, என்று

“இது அசிங்கமான காட்சிகளை மட்டுமே கொண்ட படமாக நிச்சயம் இருக்காது[7]. ஆபாசங்கள் நிறைந்த படமாகவும் இருக்காது.  நான் ஒரு நடிகையின் வேடத்தில் நடிக்கிறேன். இதை வைத்து என்னை ஆபாசப் பட நடிகையாக முத்திரை குத்துவது சரியாக இருக்காது. அதாவது நாங்கள் காட்டத்தான் செய்வோம், நீங்கள் பார்த்தால் பார்த்துக் கொள்ளுங்கள் இல்லை கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்கிறார் போலும்!

வித்யா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது அசிங்கமான காட்சிகளை மட்டுமே கொண்ட படமாக நிச்சயம் இருக்காது[8]. ஆபாசங்கள் நிறைந்த படமாகவும் இருக்காது.  நான் ஒரு நடிகையின் வேடத்தில் நடிக்கிறேன். இதை வைத்து என்னை ஆபாசப் பட நடிகையாக முத்திரை குத்துவது சரியாக இருக்காது. சில்க் ஸ்மிதா ஒரு கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, மிக அழகான நடிகையும் கூட. அழகும், கவர்ச்சியும் எப்போதுமே பெரிதாக பேசப்படும். அந்த வகையில் இந்தப் படத்திலும் நான் சில்க் ஸ்மிதாவை பிரதிபலித்து நடித்துள்ளேன். எனவே அழகும், கவர்ச்சியும் இருக்கத்தான் செய்யும். அதேசமயம், சில்க் ஸ்மிதா ஒரு ஆபாசப் பட நடிகை அல்ல, அதேபோலத்தான் நானும் ஆபாசப் பட நடிகை அல்ல என்றார் வித்யா.

செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார் சில்க் ஸ்மிதா: அவரை தவறாக பயன்படுத்தினர்: வித்யாபாலன் வருத்தம்:

ஆபாசம் எது என்று இத்தகைய நடிகளிடமிருந்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நிலை ஒன்றுமில்லை. 40-50 வருடங்களுக்கு முன்பு “சரோஜாதேவி” புத்தகங்கள் ரகசியமாகக் கொடுத்து வந்ததை, இன்றைய தமிழ் திரைப்படங்கள் வெளிப்படையாகக் கொடுத்து வருகின்றன. புளூ பிலிம் பார்க்க வேண்டிய கஷ்டத்தையும், தமிழ் செனல்களே தீர்த்து வைக்கின்றன.

சில்க்கின் குழந்தை பருவம், சினிமா பிரவேசம், காதல், தற்கொலை என அனைத்தும் இதில் காட்சிபடுத்தப்படுகிறது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். இதற்காக சில்க் நடித்த படங்களை பார்த்தும், அவருக்கு நெருக்கமானவர்களிடம் பழகியும் நிறைய பயிற்சி எடுத்தார். வித்யாபாலன் அளித்த பேட்டி வருமாறு:  அவர் வாழ்க்கை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர் சிந்தித்தது இல்லை. அதனை பொருட்படுத்தவும் இல்லை. சில்க் உடுத்திய ஆடைகளை பார்த்து அவர் துணிச்சலானவர் என்று மக்கள் கருதினர். அது ஒன்று மட்டும் காரணம் அல்ல. செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார். ஆனால் அவரை சிலர் தவறாக புரிந்து கொண்டனர். சில்க் ஸ்மிதாவை தவறாகவும் அவர்கள் பயன்படுத்தினர்.

சில்க் புராணம் வித்யா சொன்னது: இந்தநிலையில் சில்க் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் வித்யா பாலன். இதுகுறித்து அவர் கூறுகையில், நிஜ வாழ்க்கையில் அவரது காலத்து நடிகைகளை விட அதிக உயரத்தில் இருந்தவர் சில்க். அவரை ஆபாச கோலத்தில் பார்த்துப் பார்த்தே மக்கள் தவறான முறையில் சில்க் ஸ்மிதாவை சித்தரித்து விட்டனர். ஆனால் உண்மையில் சில்க் ஸ்மிதா குழந்தை மனம் கொண்டவர். அதேசமயம் மிகுந்த தைரியசாலி, துணிச்சல்மிக்கவர், எதற்கும் அஞ்சாதவர். தான் செய்வது சரி என்று நினைத்தால் அதை துணிச்சலாக செய்வார். யார் என்ன நினைத்தாலும், பேசினாலும் அது பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.

நடிகை அவ்வாறு நடிக்க ஒப்புக் கொள்ளாமல், யாரும் அவ்வாறு படம் எடுக்க முடியாது. சூடு-சொரணை, வெட்கம்-மானம் முதலியவற்றை, ஐங்குணங்கள் எனப்படுபற்றையும் மறந்து தான் அப்படி உடலைக் காட்ட முடியும். அப்படி காட்டி படம் எடுக்கப் படுகிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

தான் செய்யும் செயலுக்காக அவர் வெட்கமோ, கூச்சமோ படமாட்டார். மிகுந்த வெளிப்படையானவர் சில்க் ஸ்மிதா. தன்னைத் தேடி வந்த எந்த வாய்ப்பையும் விடாமல் பற்றிக் கொண்டு முன்னேறும் பக்குவம் உடையவராக இருந்தார். ஒவ்வொரு நிமிடத்தையும் முழுமையாகவும், திருப்திகரமாகவும் வாழ வேண்டும் என்று எண்ணியவர். சில்க் அரை குறை உடைகளுடன், ஆபாச கோலத்தில் நடித்ததை வைத்து அவரை மிகுந்த தைரியசாலி என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் அவரது துணிச்சலின் ஒரு பகுதிதான் அவர் அப்படி நடித்தது என்று நான் கருதுகிறேன். அவரது அடிப்படை பலமே இந்த துணிச்சல்தான். தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க்கின் கதை அல்ல. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் படமும் அல்ல. மாறாக ஒரு கவர்ச்சி நடன நடிகையின் வாழ்க்கைக் கதை. அந்தக் கால கட்டத்தில் சில்க்தான் முன்னணியாக இருந்தார். எனவே அவரது திரையுலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையின் நிழல்களை நாங்கள் முன்னோடியாக எடுத்துள்ளோம் என்றார் வித்யா பாலன்.

சில்க் புராணம்: வித்யா சொல்லாதது: விஜயலட்சுமி என்ற ஏழைக்குடும்பத்தில் பிறந்த பெண்தான் சில்க்ஸ்மிதா ஆனார். டிசம்பர் 2, 1960ல் ஏலூரு என்ற இடத்தில் பிறந்த இவர் பணக்கஷ்டத்தினால் நான்காவது வரையில் தான் படிக்க முடிந்தது. உருண்டு திரண்ட உருவத்தைக் கொண்டிருந்ததால், சிறுவயதிலேயே ஆண்கள்

ஜீனத் அமன் கூட அவ்வாறு தான் தனது கணவனால் துன்புறுத்த / கொடுமைப் படுத்தப் பட்டார். அவரும் அப்படி கவர்ச்சியாகவே நடித்து புகழ் பெற்றார். அரை-நிர்வாணம் என்பது இவரைப்போல, அவருக்கு சர்வ-சகஜமான விஷயமாக இருந்தது.

அவருக்குத் தொந்தரவு கொடுத்து வந்தார்களாம். இதனால், தாயார் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டார். ஆனால், கணவனோ அந்த அழகை ரசிக்காமல் அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தானாம். இதனால் விஜயலட்சுமி சென்னைக்கு ஓடிவந்து விட்டார். முதலில் “மேக்கப்” செய்ய உதவி செய்யும் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்த இவருக்கு துணை நடிகை சந்தர்ப்பம் கிடைத்தது. 1979ல் வினுசக்கரவர்த்தி இவருக்கு சில்க் என்ற பெயரை வைத்து ஆங்கிலம், நடனம் முதலியவற்றைக் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தாராம். கவர்ச்சிகரமான உடல்வாகு, செக்ஸியாக தோன்றும் தன்மை, அதற்கேறபடி நடிப்பு முதலிய குணாதசியங்களால், நடன காட்சிகளில் தோன்ற ஆரம்பித்தார். குறைந்த உடைகளில், அறைகுறையாகவும், பாதி நிர்வாணமாகவும் நடிக்க ஆரம்பித்தபோது, பெரிய “ஹிட்”டாகி விட்டாராம்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று 450ற்கும் மேலான படங்களில் நடித்துள்ளாராம். 1996ல் அவர் மர்மமாக இறந்து கிடந்ததைப் பற்றி பல கருத்துகள் நிலவி வருகின்றன[9]. கொலையா-தற்கொலையா என்ற விவாதம் எழுந்தது. செப்டம்பர் 23ம் தேதி, சாலிகிராமத்தில் தனது படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில்

நல்லவேளை, அப்பொழுது “பட்டிமன்றங்கள்” எல்லாம் இல்லை போலிருக்கிறது. அதாவது இத்தகைய தலைப்புகள் பேசப்படவில்லை போலும். இருந்திருந்தால் “நானா, நீயா?” என்று வெளுத்து வாங்கியிருப்பார்கள்! நீளம் வெண்மையாக்கப் பட்டிருக்கும்.

தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாராம். தெலுங்கில்  எழுதப்பட்ட ஒரு தற்கொலை கடிதம் கிடந்ததாம். அதில் சில தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாம்[10]. ஆனால், போலீஸார் தற்கொலை என்று வழக்கை முடித்து விட்டனராம். 1980-களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் முன்னணியில் இருந்தார்.  1996-ல் சில்க்ஸ்மிதா சென்னையில் மர்மமாக இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், கொல்லப்பட்டார் என்றும் இருவிதமாக பேசப்பட்டது. ஆனால் போலீசார், தற்கொலை என்று வழக்கை முடித்துவிட்டனர்[11].


[1] ஆபாச படங்கள் எடுப்பது, சிடி/விசிடி தயாரிப்பது, வியாபாரத்திற்கு சுற்றுக்கு விடுவது முதலியவற்றைப்பற்றி அதிக அளவில் செய்திகள் வந்துள்ளன.

[2] Top soft porn actresses include Abhilasha, Pratibha, Shakeela, Maria and Reshma. Other famous stars are Devika, Sindhu, Kumtaz. There are many nude models like Sandy Adams, Amita Shah, Katy Mirza & Shabana De who have appeared in adult magazines like Debonair (magazine) and videos.

[3] பாளையங்கோட்டையிலுள்ள ஒரு திரையரங்கில் 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி இரவு காட்சியில் ஆபாச படம் திரையிடப்பட்டது. இது தொடர்பாக திரையரங்கு குத்தகைதாரரான மதுரையை சேர்ந்த வசீகரன், மேலாளர் பாஸ்கரன், பேட்டையை சேர்ந்த ஆபரேட்டர் பரமசிவன் பட விநியோகஸ்தர்கள் சுப்பிரமணி, நெல்லை டவுன் சிவசுப்பிரமணி, ஊழியர்கள் பாளை முருகன், மாரிமுத்து, தாமஸ் படத்தில் ஆபாசமாக நடித்த ஷகிலா, நடிகர் தினேஷ் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கு நெல்லை முதலாவது கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. இதில் நடிகை ஷகிலா, பட வினியோகஸ்தர் சிவசுப்பிரமணியன், தியேட்டர் ஊழியர்கள் முருகன், மாரிமுத்து, தாமஸ் ஆகிய 5 பேர் நேற்று முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். விசாரணையை நீதிபதி 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார். விசாரணைக்கு நடிகை ஷகிலா நேரில் வந்ததால், அவரைக் காண ஏக கூட்டம் கூடிவிட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் தலையிட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

http://tamil.oneindia.in/movies/news/2011/11/05-actress-shakila-appears-nellai-court-aid0136.html

[4] Vidya Balan, the Tamil Brahmin girl from Palakkad ………………….. http://www.hindu.com/thehindu/fr/2005/09/16/stories/2005091600670100.htm

Vidya Balan was born in OttapalamPalakkad DistrictKerala, to P. R. Balan (Vice President of ETC Channel) and a housewife mother in a Tamil speaking Palakkad Iyer family.

[9] According to the Police, Silk Smitha had committed suicide on 1996 due to some personal reasons. They closed the file of Smitha’s death after few weeks of the actress’s death. It may be recalled that many social organisations and women forums urged the police and Govt. to find out the mystery of the death of the actress at that time.

[10] On the morning of September 23 Smitha, uncrowned queen of glamour on the South Indian screen, was found dead in her home in Saligramam, Madras’s tinseltown, hanging by a rope from the ceiling fan in her bedroom. A suicide note, handwritten in Telugu, intimated that she was frustrated with repeated failures in life and hence was taking the extreme step.

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

8 பதில்கள் to “சில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்!”

  1. தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை! « சினிமாவி Says:

    […] [5] https://evilsofcinema.wordpress.com/2011/11/06/sexy-vidhya-balan-sings-song-of-silk-smitha/ […]

  2. தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை! « சினிமாவி Says:

    […] [5] https://evilsofcinema.wordpress.com/2011/11/06/sexy-vidhya-balan-sings-song-of-silk-smitha/ […]

  3. தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை! « சினிமாவி Says:

    […] [5] https://evilsofcinema.wordpress.com/2011/11/06/sexy-vidhya-balan-sings-song-of-silk-smitha/ […]

  4. தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை! « சினிமாவி Says:

    […] [5] https://evilsofcinema.wordpress.com/2011/11/06/sexy-vidhya-balan-sings-song-of-silk-smitha/ […]

  5. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

    […] [8] https://evilsofcinema.wordpress.com/2011/11/06/sexy-vidhya-balan-sings-song-of-silk-smitha/ […]

  6. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

    […] [8] https://evilsofcinema.wordpress.com/2011/11/06/sexy-vidhya-balan-sings-song-of-silk-smitha/ […]

  7. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

    […] [8] https://evilsofcinema.wordpress.com/2011/11/06/sexy-vidhya-balan-sings-song-of-silk-smitha/ […]

  8. Mariam Nayanathara Says:

    அதுதான் இந்தியாவின் சிறந்த நடிகை பட்டம் கொடுத்து விட்டாட்ர்களே!

    இனி அவளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

    முக்கால் மார்பகத்தைக் காட்டியவள், முழுசாகவும் காட்டுவாள்.

    பிறகென்ன, ஹாலிவுட்டுதான்.

    மேனாட்டு பரிசுகள் தாம்!!

    இந்திய பெண்மையின் சின்னமே அவள் தான் என்ற புகழ ஆரம்பொத்து விடுவர்!!!!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: