சரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்!

சரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்!

வரிசையில் நிற்கும் நிர்வாண நடிகைகள்: சரண்யாதான் முந்திவிட்டார் என்று பார்த்தால்[1], ஏற்கெனெவே வரிசையில் நிற்கிறார்கள் நடிகைகள். ஆமாம், நாங்கள் நிர்வாணமாக நடிக்கத் தயார் என்று புறப்பட்டுவிட்டனர். இனி ஆண்கள் கதி அதோ கதிதான். பிஜேபி என்று கலாட்டா செய்பவர்கள், இனி ஜொல்லு விடுவார்களோ அல்லது என்ன செய்வார்களோ தெரியவில்லை. ஆனால், மேன்மேலும், இந்திய சமூகத்தைச் சீரழிக்க இவர்கள் புறப்பட்டு விட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். பணம் கிடைக்கிறது என்ற மயக்கம், புகழ் கூட வரும் என்ற மற்றொரு போதை, கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் என்று பறந்து விடலாம் என்ற மற்றோரு கனவு. கடைசியில் என்னாவார்களோ என்பது காலம் பதில் சொல்லும், ஒருவேளை நாமே அவர்களது நிலையைப் பார்க்க/அறியக் கூடும்.

 

நிர்வாணமாக நடிக்க நடிகைகள் போட்டி: நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார்[2]. இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ச்சிபட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள். ஏதோ சேலைக் கட்டிய நடிகைகள் மூடிக்கொண்டு நடிப்பதைப் போல உள்ளது. இப்பொழுது வருகின்ற நடனபாடல்களில் நடிகைள் நிர்வாணத்தையும் மிஞ்சும் வகையில் குலுக்குகிறார்கள்; ஆட்டுகிறார்கள்; முலைகளை 90% காட்டுகிறார்கள்; பிறகென்ன, முழு நிர்வாணம்? அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

ஹாலிவுட் சான்ஸ் கொடுத்தால் அவுத்து காட்டுவேன்: நடிகை லட்சுமி ராய் சமீபத்தில் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறார். இதுபற்றி லட்சுமி ராய் அளித்துள்ள பேட்டியில், பிரியதர்ஷன் இயக்கும் “அரபியும் ஓட்டகமும் பி. மாதவன் நாயரும் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது பிரியதர்ஷன் கொடுத்த டின்னரில் ஜேம்ஸ் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது அவரை சந்தித்து பேசினேன். இந்திய சினிமா பற்றியும், அதற்கான வியாபாரங்களைப் பற்றியும் பிரியதர்ஷனிடம் பேசினார். நான் உங்களது அனைத்து படங்களுக்கும் ரசிகை என்றேன். அவதார் படத்தின் அடுத்த பாகத்தின் திரைக்கதையை எழுதி வருவதாக என்னிடம் தெரிவித்தார். உங்கள் படத்தில் நடிக்க எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். அதற்கு பதிலாக புன்னகையை தந்தார்[3]. மீண்டும் அவரை சந்தித்து பேசுவேன். ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத நேரங்களில் ஒன்று, என்று கூறியுள்ளார்.

நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் – நடிகை பத்மப்ரியா: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார்[4]. தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா, தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது, என்று கூறியுள்ளார். அம்மணி நடிப்பை சில காலத்திற்கு ஒத்திப் போட்டிருக்கிறாராம். விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகும் அவர், அங்கு மேற்படிப்பு படிக்கப் போகிறார்.

நிர்வாணத்திற்கும், கவர்ச்சிக்கும் விளக்கம் அளிக்கும் நடிகைகள்: வெள்ளத்தில் மூழ்கி விட்டப் பிறகு, ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என்பார்கள். அதுபோல, கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்றபோது, ஆடை ஜான் குறைந்தால் என்ன, முழம் குறைந்தால் என்ன? ஒரு முழத்துணியை மறைத்து தானே இப்பொழுது நடிக்கிறார்கள்? பிறகு ஜான் சைசில் உடை அணிந்து நடிக்க மாட்டார்களா என்ன? நிர்வாணமாக தீர்மானித்தப் பிறகு என்ன சைஸ் வேண்டிக்க் கிடக்கிறது? பெண்குறியைக் காட்டாமல் போஸ் கொடுப்பது, நடிப்பது என்பதுதான் நிர்வாணம் என்றுள்ளது. அதையும் காட்டத் துணியும் நடிகைகள், நீலப்படத்திலும் நடிக்க தீர்மானித்து விடுவர். நிர்வாண வெள்ளத்தில் மூழ்கி விட்டப் பிறகு, ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என்பார்கள்.

வேதபிரகாஷ்

25-03-2012


[1] வேதபிரகாஷ், தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை!, https://evilsofcinema.wordpress.com/2012/03/23/indian-actresses-go-acting-nude-women-empowerment-or-degradation/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “சரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்!”

  1. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

    […] […]

  2. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

    […] […]

  3. நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படு Says:

    […] […]

  4. Mariam Nayanathara Says:

    சினிமாக்காரர்களின் வேசித்தன்மையை விபச்சாரம் என்று சொல்ல முடியாது.

    அது அதைவிட கேவலமானது, மோசமானது.

    நடிக்க, தொடர்ந்து நடிக்க, புகழோடு இருக்க, தொடர்ந்து இருக்க………………..இரு பக்கங்களிலும் அவர்கள் செய்யும் சீரழிவு தான் இந்த முடிவுகள், அழிவுகள்.

  5. vikram Says:

    நிர்வான படம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: