லீனா மரியா பால் – பல் டாக்டர், மாடல், நடிகை: பேராசையால் மோசடி, கைது, சிறை!

லீனா மரியா பால் – பல் டாக்டர், மாடல், நடிகை: பேராசையால் மோசடி, கைது, சிறை!

Leena Maria Paul

படித்தும் சமூக சீரழிவுகளில் சிக்கும் நாகரிகமான பெண்கள்: கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா மரியா பால் [Leena Maria Paul] பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார்[1]. இரண்டு வருடங்கள் மாடலிங் தொழிலும் செய்தார்[2]. ஆனால், படித்த இவர் இப்படி சீரழியவேண்டுமா என்றால், கதை வேறுவிதமாகப் போகிறாது. சென்னையில் 2 வங்கிகளில் போலியான ஆவணங்களை கொடுத்து கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில்  பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகனை போலீசார் தேடி வந்தனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இவர், முதல்-அமைச்சரின் பேரன் என்று கூறி தனது மோசடி லீலைகளை அரங்கேற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது[3]. இதே போல பெங்களூரிலும் சுகாஷ் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்து மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தகைய மோசடி ஆளுடன், இவர் தொடர்பு வைத்திருக்கிறார்.

Leena Maria Paul and Chandrasekar
பாலாஜி, சுகாஷ், சந்திரரேகர் – மோசடிகளுக்கு பல பெயர்கள்: சுகாஷ் சந்திரசேகர், தொழிலதிபர் பாலசுப்பிரமணியத்திடம், கர்நாடக அரசிடம் இருந்து ரூ.140 கோடி மதிப்பிலான ஆணுறை தயாரிக்கும் ஒப்பந்ததை வாங்கித் தருவதாக சொல்லி இருக்கிறார். அதற்கு கமிஷனாக வங்கியில் முறைகேடு செய்து வாங்கிய ரூ.19 கோடி பணம், சுகாஷ் சந்திரசேகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஜவுளி நிறுவன உரிமையாளர்: இதேபோல தாம்பரம் சேலையூர் புதிய பூபதிநகரைச் சேர்ந்த ஜவுளி நிறுவன (Sky Lark Textiles and outfitters) உரிமையாளர் சக்கரவர்த்தியிடம் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் பேசிய லீனா, கர்நாடக அரசின் மருத்துவத்துறை, போக்குவரத்துறை ஊழியர்களுக்கு சீருடைக்குரிய துணிகளை வாங்குவதற்கு உரிய ஆணை தனக்கு கிடைத்திருப்பதாகவும், அதை தங்களுக்கு வழங்க வேண்டுமானால் முன் பணமாக ரூ. 68 லட்சத்தை வங்கியில் செலுத்த வேண்டும் எனவும் கூறினாராம். மேலும் அவரிடம், கர்நாடக அரசின் ஊரக வளர்ச்சித் திட்டத்துறை செயலர் ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ்., என சந்திரசேகர் பேசி, பணத்தை வங்கியில் செலுத்தும்படி கூறினாராம். அவர்களது பேச்சை நம்பிய சக்கரவர்த்தி, ரூ.68 லட்சத்தை வங்கியில் செலுத்தினார். ஆனால் அவர்கள் கூறியபடி, சீருடை துணி வழங்குவதற்கான எந்த ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சக்கரவர்த்தி, சென்னைப் பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார்[4]. இந்த இரு புகார்களின் கீழும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லீனா மரியம் பாலையும், சந்திரசேகரையும் தேடி வந்தனர்.

INT-Leena-Maria-Paul-boyfriend-100-crore-scam

ஏற்கெனவே கைது செய்யப் பட்டவர் – பழக்கமான குற்றவாளி: இந்நிலையில்தான் கடந்த 2010-ம் ஆண்டு சுகாஷ், அழகு நிலையம் ஒன்றில் மோசடி செய்த வழக்கில் சென்னையில் சேத்துப்பட்டு போலீசில் சிக்கினார். பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வங்கிகளில் கைவரிசை காட்டியுள்ளார். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு லீனாவுடன் சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கி கிளை ஒன்றுக்கு சென்று இருக்கிறார். பெரிய திட்டம் ஒன்றை தொடங்குவதாக கூறி, அதற்காக அவர்கள் அந்த வங்கி கிளையில் கடன் கேட்டுள்ளனர். ரூ.19 கோடி கடன் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரா வங்கியின் மண்டல மேலாளர் நல்லசிவம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், சுகாஷ் என்பவர் ரூ.19 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகாஷைத் தேடி வந்தனர். விதிமுறைகளை மீறி கடன் கொடுத்ததாக வங்கியின் மேலாளர் ஜெகதீஸ் என்பவர் இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்டார். இதே போல சேலையூரில் உள்ள ஒரு வங்கியிலும் ரூ.72 லட்சம் கடன் வாங்கி சுகாஷ் மோசடி செய்துள்ளார். இந்த 2 வழக்குகளில்தான் போலீசார் இவரை தேடி வந்தனர். கடந்த பல மாதங்களாக போலீசுக்கு தண்ணி காட்ட வரும் சுகாஷை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.

Leena-Maria-Paul brought to Chennai

தலைமறைவானவர்கள் தில்லியில் சொகுசு வாழ்க்கை: அதன்பிறகு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக அந்த வங்கி கிளையின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் சுகாஷ் சந்திரசேகர், லீனா ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்), 120 பி (கிரிமினல் சதி), 406 (நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்[5]. அப்போது தான் அவருடன் அவரது காதலியான நடிகை லீனா மரியம்பாலும் சேர்ந்து மோசடி செய்திருப்பது அம்பலமானது. இதையடுத்து 2 பேரையும் பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இருவரும் டெல்லியில் அசோகா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தரா தேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கடந்த 28-ந் தேதி டெல்லியில் ஆடம்பர பண்ணை பங்களாவில் ஒன்றில் பதுங்கி இருந்த நடிகை லீனாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி விளைத்து கைது செய்தனர். வாடகை மாதம் ரூ.4 லட்சம் செல்லுத்தி வந்தனர். மே 10 லிருந்து இங்கு வாழ்ந்து வருகின்றனர். பின்னர் அங்கு அதிரடி சோதனை நடத்தி 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதில் 2 கார்களில் போலியான நம்பர் பிளேட்டுகள் பொறுத்தப்பட்டிருந்தன. கார்களை திருடி விற்பது தனது தொழிலாக கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது[6].

 Chandrasekars past duping  Apparently-the-actress-is-accused-for-the-illegal-possession-of-arms-and-being-involved-in-conspiracy

 

போலீஸாரால்  கைது: ஜான் ஆப்ரகமின் மத்ரா கபே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த தென்னிந்திய நடிகை லீனா மரியா பால், தனது ஆண் நண்பருடன் தெற்கு தில்லியில் உள்ள பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்டார். சென்னையில் பதிவான மோசடி வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த லீனா மரியா பால், தனது ஆண் நண்பருடன் பதுங்கியிருந்தபோது பிடிபட்டாராம். தில்லி மற்றும் சென்னை போலீஸார் இணைந்து மேற்கொண்ட இந்தத் தேடுதலின்போது, பதேர்புர்பெரி அருகே கேரி பகுதி பண்ணை வீட்டில் அவருடன் மூன்று முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட ஆறு பாதுகாப்பு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்[7]. 25 வயதாகும் லீனா மரியா பால், மோகன்லாலுடன் ரெட் சில்லிஸ் படத்தில் நடித்துள்ளார். அவரது நண்பர் பாலாஜி மற்றும் லீனா மீது மோசடிசெய்தல், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு சென்னையில் பதிவானது.அவர்கள் இருவரிடம்  இருந்தும் ஆயுதங்கள், 9 விலையுயர்ந்த கார்கள்[8], 80 கைக்கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன[9]. அவை ஹரியானா, ஜம்மு ஆகிய இடங்களில் இருந்து லைசன்ஸ் பெறப்பட்டவையாம். தில்லியில் இருந்து உரிமம் பெறப்படாதது என்பதால், அவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது ஆயுதச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10].

 

 Mollywood-actress-Leena-Maria-Paul-booked-by-Delhi-police-for-conspiracy-fraud-and-other-criminal-charges-pressed-against-her  Leena-is-set-to-make-her-Bollywood-debut-with-Soorjit-Sircars-Madras-Cafe-starring-John-Abraham

குற்றங்களை ஒப்புக்கொண்ட லீனா மரியா பால்: லீனாவுடன் தங்கியிருந்த அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். கைதான லீனாவை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக டெல்லியில் இருந்து போலீசார் இன்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். 30-05-2013 காலை 7.15 மணி அளவில் தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது[11]. சுடிதார் அணிந்திருந்த அவர், ரெயிலில் இருந்து இறங்கும் போது போலீசாருடன் சாதாரண பயணி போலவே இறங்கினார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான போட்டோ கிராபர்களும், டி.வி. கேமரா மேன்களும் முண்டியடித்துக் கொண்டு அவரை படம் பிடித்தனர். உடனடியாக அவர் துப்பட்டாவால் தனது முகத்தை மூடிக் கொண்டார். பின்னர் போலீசார் பத்திரமாக அவரை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்பொழுது ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டார்[12].

The fleet of cars recovered from south Indian actress Leena Maria Paul's farmhouse

கர்ப்பம் என்று கடைசியாக ஆடிய நாடகம்: டெல்லியில் லீனாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.  அப்போது மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் லீனா கதறி அழுதார். நான், சுகாஷுடன் மனைவி போலவே வாழ்ந்தேன். அதன் விளைவாக நான் கர்ப்பமாக உள்ளேன். என்னை ஜெயிலுக்கு அனுப்பாதீர்கள், விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்.இதையடுத்து இன்று அரசு ஆஸ்பத்திரிக்கு லீனாவை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் இந்தப் பரிசோனை நடந்தது. இதில் லீனா கர்ப்பம் இல்லை என்பதும், ஏற்கனவே கர்ப்பமாகி அந்தக் கருவை கலைத்திருப்பதும் தெரியவந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். லீனா கடந்த 2010-ல் தான் சந்திரசேகரை சந்தித்துள்ளார். அப்போது சந்திரசேகர் தான் திரைப்பட தயாரிப்பாளர் எனக் கூறி, லீனாவிடம் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்தனராம். சந்திரசேகரும், லீனாவும் கர்நாடகத்தில் பல்வேறு மோசடிகள் செய்து பணம் சம்பாதித்துள்ளனர். அங்கு அவர்கள் மீது சுமார் 70 புகார்கள் இருப்பதும், 3 வழக்குகள் பதியப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது[13]. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்திரசேகரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இப்பொழுது புழல் சொறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


[2] The actress is a Bachelor of Dental Science graduate who completed her education from Dubai. Her family is settled in Dubai and her father is an engineer. Maria Paul has been modelling for the last two years. Read more at:http://indiatoday.intoday.in/story/malayalam-actress-leena-maria-paul-arrested-in-cheating-case/1/273543.html

குறிச்சொற்கள்: , , , , , ,

4 பதில்கள் to “லீனா மரியா பால் – பல் டாக்டர், மாடல், நடிகை: பேராசையால் மோசடி, கைது, சிறை!”

 1. vedaprakash Says:

  நடிகை லீனா மரியா ஜாமீன் மனு தள்ளுபடி
  By S.MOHAMED, திருவள்ளூர்
  First Published : 26 June 2013 06:17 PM IST
  http://dinamani.com/latest_news/2013/06/26/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4/article1654079.ece

  வங்கியில் ரூ.18.5 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியாவின் ஜாமீன் மனுவை திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

  சென்னையைச் சேர்ந்தவர் சுதேஷ் சந்திரபோஸ். இவரது உதவியாளரான நடிகை லீனா மரியா, பாலசுப்பிரமணியம், அவரது மனைவி சித்ரா ஆகியோர் வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.18.5 கோடி பணத்தை மோசடி செய்தனர்.

  இது குறித்து கனரா வங்கி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், நடிகை லீனா மரியா, பாலசுப்பிரமணியம், சித்ரா ஆகிய 3 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

  தலைமறைவாகியுள்ள சுதேஷ் சந்திரபோஸை தேடி வருகின்றனர்.

  இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடிகை லீனா மரியா மனு தாக்கல் செய்திருந்தார்.

  இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்குரைஞர் வி.ஆர்.ராம்குமார் ஆஜராயினார். லீனா மரியா தரப்பில் வழக்குரைஞர் ஜான் சத்யா ஆஜராயினார்.

  வழக்கை விசாரித்த நீதிபதி முகம்மது ஜபருல்லாகான், நடிகை லீனா மரியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 2. vedaprakash Says:

  ரூ.1000 கோடியை சுருட்டிய மோசடி மன்னன் சுகாஷ், நடிகை லீனாவுடன் தலைமறைவு
  பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 14, 1:35 PM IST
  http://www.maalaimalar.com/2014/02/14133555/1000-crores-cheating-king-suha.html
  ரூ.1000 கோடியை சுருட்டிய மோசடி மன்னன் சுகாஷ், நடிகை லீனாவுடன் தலைமறைவு
  சென்னை, பிப். 14–

  பெங்களூரை சேர்ந்த வாலிபர் சுகாஷ் சந்திரசேகர், கர்நாடக அரசுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தது அம்பலமானது. இது தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து ஏராளமான தொழில் அதிபர்களை சுகாஷ் தனது மோசடி வலையில் விழவைத்தார்.

  இவரது காதலியும், நடிகையுமான லீனாவும் உடந்தையாக இருந்தார். கர்நாடக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை மொத்தமாக சப்ளை செய்வதற்கு ஆட்கள் தேவை என்று கூறியே பெரிய தொழில் நிறுவனங்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பல கோடிகளை சுகாஷ் சுருட்டியிருக்கிறார்.

  குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பிரபல பேரீச்சம் பழ நிறுவன அதிபரிடமும் சுகாஷ் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இதுபோன்று டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இவர் மோசடி வித்தைகளை அரங்கேற்றியிருந்தார்.

  இது தொடர்பாக தொழில் அதிபர்கள் பலரிடம் கர்நாடக மாநிலத்தின் அரசு அதிகாரி போல சுகாஷ் பேசியிருக்கிறார். அப்போது, காதலி லீனா, தன்னை அவரது தனிச்செயலாளர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

  இதற்கான போலி ஆவணங்களை இ–மெயில் மூலமாகவே சுகாசும், லீனாவும் அனுப்பி வைத்துள்ளனர். இதனை உண்மை என்று நம்பி ஏராளமான தொழில் அதிபர்கள் சுகாசின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாயை டெபாசிட் செய்துள்ளனர்.

  இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார்கள் குவிந்தன. இதையடுத்து சுகாஷ், லீனா இருவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

  கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த லீனாவையும், சுகாசையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது சுகாஷ் மயிரிழையில் தப்பினார். லீனா மட்டும் கைது செய்யப்பட்டார்.

  பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் பிரபல நடிகையாகும் ஆசையில் நானும், சுகாசிடம் ஏமாந்து விட்டேன் என்று கூறினார்.

  இதன் பிறகு கடந்த ஜூலையில் கொல்கத்தாவில் பதுங்கியிருந்த சுகாசை டெல்லி போலீசார் பிடித்தனர். இதன் பிறகு சென்னை போலீசார் சுகாசை காவலில் எடுத்து விசாரித்தனர். இங்குள்ள மோசடி வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்கள்.

  நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு வந்த சுகாஷ், லீனா இருவரும் தற்போது தலைமறைவாகி விட்டனர். 2 பேரும் கொல்கத்தாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

  2 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளன.

 3. vedaprakash Says:

  கோடிக் கணக்கில் மோசடி செய்த சுகாஷ் – நடிகை லீனா தலைமறைவு
  By dn, சென்னை
  First Published : 14 February 2014 01:20 PM IST
  http://www.dinamani.com/latest_news/2014/02/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-/article2056512.ece

  பல்வேறு தொழில் நிறுவனங்களையும், தொழில் அதிபர்களையும் ஏமாற்றி, அரசு திட்டப் பணிகளை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர் சந்திரசேகர், அவரது காதலி நடிகை லீனா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

  கடந்த ஆண்டு மே மாதம் தில்லி பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த நடிகை லீனாவும், ஜூலை மாதம் கொல்கத்தாவில் பதுங்கியிருந்த சுகாசும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

  இந்த நிலையில், ஜாமீனில் விடுதலையாகி தினமும் கையெழுத்து போட்டு வந்த இருவரும், தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்கள் கொல்கத்தாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 4. vedaprakash Says:

  ரூ.1000 கோடி மோசடி வழக்கு: நடிகை லீனா, காதலன் சுகாஷ் மீண்டும் தலைமறைவு

  Posted by: Mayura Akilan Published: Friday, February 14, 2014, 15:05 [IST]
  http://tamil.oneindia.in/news/india/money-cheating-case-actress-leena-abscond-with-her-lover-193533.html

  பெங்களூர்: ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கு கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலையான நடிகை லீனா மரியாபால், அவரது காதலர் சுகாஷ் ஆகியோர் மீண்டும் தலைமறைவாகிவிட்டனர்.

  பெங்களூரை சேர்ந்த வாலிபர் சுகாஷ் சந்திரசேகர், கர்நாடக அரசுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தது அம்பலமானது. இது தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து ஏராளமான தொழில் அதிபர்களை சுகாஷ் தனது மோசடி வலையில் விழ வைத்தார். இவரது காதலியும், நடிகையுமான லீனாவும் உடந்தையாக இருந்தார்.

  கர்நாடக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை மொத்தமாக சப்ளை செய்வதற்கு ஆட்கள் தேவை என்று கூறி பெரிய தொழில் நிறுவனங்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பல கோடிகளை சுகாஷ் சுருட்டியிருக்கிறார். இது தொடர்பாக தொழில் அதிபர்கள் பலரிடம் கர்நாடக மாநிலத்தின் அரசு அதிகாரி போல சுகாஷ் பேசியிருக்கிறார். அப்போது, காதலி லீனா, தன்னை அவரது தனிச் செயலாளர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கான போலி ஆவணங்களை இ-மெயில் மூலமாகவே சுகாசும், லீனாவும் அனுப்பி வைத்துள்ளனர். இதனை உண்மை என்று நம்பி ஏராளமான தொழில் அதிபர்கள் சுகாசின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாயை டெபாசிட் செய்துள்ளனர்.

  குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பிரபல பேரீச்சம் பழ நிறுவன அதிபரிடமும் சுகாஷ் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இது போன்று டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இவர் மோசடி வித்தைகளை அரங்கேற்றியிருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார்கள் குவிந்தன.

  இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த லீனாவையும், சுகாசையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது சுகாஷ் தப்பி விடவே லீனா மட்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர் பிரபல நடிகையாகும் ஆசையில் நானும், சுகாசிடம் ஏமாந்து விட்டேன் என்று கூறினார்.

  இதன் பிறகு கடந்த ஜூலையில் கொல்கத்தாவில் பதுங்கியிருந்த சுகாசை டெல்லி போலீசார் பிடித்தனர். இதன் பிறகு சென்னை போலீசார் சுகாசை காவலில் எடுத்து விசாரித்தனர். இங்குள்ள மோசடி வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்கள். நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு வந்த சுகாஷ், லீனா இருவரும் தற்போது தலை மறைவாகி விட்டனர். 2 பேரும் கொல்கத்தாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இதையடுத்து இருவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

  Read more at: http://tamil.oneindia.in/news/india/money-cheating-case-actress-leena-abscond-with-her-lover-193533.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: