சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா!

சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா!

Chennai-Rainbow-Film-Festival-2013-Poster2சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 (Chennai Rainbow film Festival 2013) என்று அல்லயன்ஸ் பிரான்சிஸ்[1] (Alliance Francause de Madras) என்ற பிரெஞ்சு தூதரகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள  அடோர்ட் மிச்செம் அரங்கத்தில் (Adourd Michelm Auditorium) வெள்ளிக்கிழமை 07-06-2013 அன்று குறும்பட திரைவிழா நடந்தது. ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, ஓரின சேர்க்கையாலர், திருநங்கையர், திருக்காளை / திருமகன்[2] என்றெல்லாம் சொல்லப்படுகின்றவர்களுக்கான இயக்கம் [ Lesbian, Gay and Bisexual Transgender (LGBT)] என்று சென்னையில் செயல்பட்டு வரும், “சென்னை தோஸ்த்” இவ்வமைப்பு  இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதைப் பற்றி விளம்பரங்களும் செய்யப்பட்டிருந்தன[3].

The Hindu - news coverage“தி ஹிந்து” ஏப்ரல் 24ம் தேதியிலேயே “மெட்ரோ பிளஸ்”ல் செய்தி வெளியிட்டிருந்தது. இதைத் தவிர “எங்கேஜ்மென்ட்” இன்றைய நிகழ்சியில் போட்டதால், அதைப் பார்த்து வந்தவர்களும் இருந்தார்கள்!

Photo1138புகைப்படக் காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள், வந்தவர்கள்

Photo1139அல்லயன்ஸ் பிரான்சிஸ் ஆதரவுதரும் நோக்கம்: பிரான்ஸ் தேசத்தில் ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் போன்றோரின் திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறவேற்றப்படுவதால், சட்டரீதியாக அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்படும். சென்றமாதம் (18-05-2013) சனிக்கிழமை பிரெஞ்சு ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்[4]. இது சட்டமானால், ஒப்புதல் அளித்த உலகில் 13ம் நாடாக இருக்கும்.இதை ஒட்டித்தான், இந்த விழாவிற்கு தாங்கள் ஆதரவு கொடுப்பதாக, தூதரகத்தின் இணை இயக்குனர் கூறினார். பிரான்ஸில் இதைப் பற்றி பலவிதமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன[5]. இதை எதிர்ப்பவர்கள் ஆர்பாட்டம் வன்முறையில் முடிந்தது என்று செய்திகள் வந்துள்ளன[6]. வியாழக்கிழமை (06-06-2013) அன்று நடந்த வன்முறையில் ஒரு இடதுசாரி மாணவன் கொல்லப்பட்டுள்ளதால், மேலும் வன்முறை ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன[7]. ஆனால், வெள்ளிக்கிழமை, இந்தியாவில் இந்நிகழ்சி நடக்கிறது.

Anita Ratnam inagurates cutting ribbonபெருமைக்கு தப்பெண்ணம் தேவையில்லை (Pride sans prejudice): பெருமைக்கு தப்பெண்ணம் தேவையில்லை அதாவது முன்னேற்றத்திற்கு உடல் ஊனமோ, குறையோ தவறு என்ற எண்ணம் தேவையில்லை என்ற கோட்பாட்டோடு இருப்பதாக, இந்த விழாவின் அட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Chennai-Rainbow-Film-Festival-2013-partners-sponsors-1இந்நிகழ்சியை ஆதரிக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன: ஐபிஎம், சென்னை ரென்டாவெஸ், பாக்கெட் பிலிம்ஸ், கலாட்டா, சென்னை லைவ் 104.8, கேஸி, பிங்க் பேஜஸ், தோழி, பெலாக் கனடா, தாய்மரம், தோழமை, என்று நீண்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள பத்துப்பக்க “புரோச்சர்” – விழா அறிவிப்பு, அறிமுகம், நிகழ்சி நிரல், குறும்படங்களின் சுருக்கம் கொண்ட பெரிய புத்தகமே விலையுயர்ந்ததாக இருக்கிறது. பல லட்சங்கள் செலவழித்துக் கொண்டாடப் படுவதும் தெரிகிறது.

Apsara and Anita inagurate CRFF 2013துவக்கவிழாவும் மற்ற தொடர்வுகளும்: துவக்க விழாவை ஆரம்பிக்க பாலு மஹேந்திரா வருவதாக சொல்லப்பட்டது. நேரம் கடந்து கொண்டிருந்தது. வந்தவர்கள் சிலர் இரண்டாவது மாடியில் உள்ள  அரங்கத்திலும், கீழேயும் காத்துக் கிடந்தனர். அரங்கத்தில் இருக்கும் சிலர் கீழே வரவும் தயங்கி அங்கேயே உட்கார்ந்திருந்தனர். திடீரென்று, அரங்கத்தில் இருந்தவர்களை கீழே வருமாறு பணித்தனர். பாலு மஹேந்திரா வராதலால், அனிதா ரத்னம்[8] மற்றும் அப்சரா ரெட்டி[9] என்ற இரு பிரமுகர்களை வைத்து துவக்க விழா மற்றும் புகைப்படக் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. பிறகு மேலே அரங்கத்திற்குச் சென்றனர்.

Photo1143அறிமுகமும், ஆரம்பமும்: நிகழ்சியைப் பற்றி அறிமுகம் செய்த பிறகு, விக்ரந்த் பிரசன்னா, வெங்கட்ராமன்[10] அனிதா ரத்னம் மற்றும் அப்சரா ரெட்டி[11] முதலியோர் அறிமுகப்படுத்தப் பட்டனர். சிறந்த புகைப்படத்திற்கான விருது கண்ணன் என்பவருக்கு அழைக்கப்பட்டது. பொன்னி அபிநயா என்ற திருநங்கையின் நாட்டிய நிகழ்சியுடன் திரைப்பட விழா ஆரம்பித்தது.

Photo1140குறும்படங்களைப்பற்றியவிமர்சனம்: “மழையுதிர்காலம்” என்ற முதல் குறும்படம், வசனங்கள் இல்லாமல் எப்படி ஒரு ஆண், பெண்ணுணர்வுகளுடன் இருந்து,  பிறகு தீர்மானமாக பெண்ணாகி, வெளியே வருகிறாள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இது காண்பிக்கப்பட்ட உடனே அனிதா ரத்னம் மற்றும் அப்சரா ரெட்டி, மற்ற சிலர் வெளியேறி விட்டனர்.

Photo1141“வாடர் / தண்ணீர்” என்ற குறும்படம், எப்படி ஒரு வசதியுள்ள இளைஞன், திடிரென்று ஒரு கால்பந்து வீரன், அடிப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து, அவனுக்கு உதவி ஆனால், நன்றி சொல்ல வந்த அவனுடம் ஏற்படும் உணர்வுகளை பிரதிபலிக்கும் இடங்களில் குழப்பத்துடன் இருப்பது போலக் காண்பிக்கப்படுகிறது. இதைப் பார்த்தப் பிறகு சிலர் வெளியேறி விட்டனர்.

Photo1142“பிட்வீன் த டூ” – “இரண்டிற்கும் இடையில்” என்ற குறும்-நெடும் படம், ஒரு “நியூஸ் ரீல்” அல்லது “டாகுமென்ரி” பிலிம் போல உள்ளது. எப்படி ஒரு திருநங்கை வெற்றிகரமாக உயந்ர்து வாழ்கிறாள் என்பதைக் காட்டினாலும், அதற்கு இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டு, “நியூஸ் ரீல்” போல செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்தப் பிறகும் சிலர் வெளியேறி விட்டனர்.

Rainbow film festival 2013சரவ் சிதம்பரத்தின் சுயவிளக்கம் பேட்டி மாதிரி இருந்தாலும், அவருடைய மனத்தின் வெளிப்பாடு, அழகான தமிழில் நன்றாக, தெளிவாக, உறுதியாக வெளிப்பட்டது. நிச்சயமாக அவரது வெற்றி மற்றவர்களை ஊக்குவிக்கச் செய்யும், தன்னம்பிக்கையை ஊட்டும். மன-உறுதி இல்லாதவர்கள், தன்னம்பிக்கை வேண்டும் என்கின்றவர்கள் இருதடவை, ஏன் மூன்று முறையும் பார்க்கலாம்.

RFF Apsara Reddy 14-04-2012தேநீர் இடைவேளைக்குப் பிறகு நிகழ்சி தொடர்ந்தது. கம்ப்யூட்டரை இயக்கிவந்தவர் சரியாக இயக்கவில்லை. ஒர் படம் ஓடி, அடுத்தப் படம் வருவதற்கே நேரம் எடுத்துக் கொண்டார். அந்நேரத்திலேயே, இன்னொரு குறும்படத்தை ஓட்டிவிடலாம் போலிருந்தது.

வேதபிரகாஷ்

© 08-05-2013


[2] திருக்காளை, திருவாடவன், திருவாடு, திருப்புருடன், திருமகன், திருசுந்தரன், முதலியவை உபயோகத்தில் இல்லை, இருப்பினும் ஆர்வலர்களுக்காகக் கொடுக்கப்படுகின்றன.

[7] Left-wingers protested in Paris on Thursday one day after a group of far-right militants beat a leftist student to death in a busy central Paris district. Clement Meric, 19, a student at the prestigious Sciences Po university, was beaten up near St. Lazare station and taken to hospital with head injuries. He was declared dead on Thursday.

http://news.yahoo.com/protests-held-france-left-wing-student-beaten-death-190049074.html

[9] திருநங்கை மற்றும் டெக்கான் குரோனிகல்ஸ் நாலிதழின் உதவி ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

12 பதில்கள் to “சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா!”

 1. vedaprakash Says:

  திருநங்கைகள் குறித்த சர்வதேச திரைப்பட விழா
  பதிவு செய்த நாள் : மே 28,2013,02:27 IST
  http://www.dinamalar.com/news_detail.asp?id=722680

  சென்னை : திருநங்கைகள் குறித்த சர்வதேச திரைப்பட விழா, சென்னையில், அடுத்த மாதம், மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், உலகமெங்கிலும், திருநங்கைகள் குறித்து எடுக்கப்பட்ட, குறு, ஆவண, முழுநீள திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
  சென்னை தோஸ்த் மற்றும் அல்லயன்ஸ் பிரான்சஸ் ஆப் மெட்ராஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து, சென்னை வானவில் திரைப்பட விழாவை நடத்துகின்றன.
  நுங்கம்பாக்கம், அல்லயன்ஸ் பிரான்சஸ் ஆப் மெட்ராஸ் அலுவலகத்தில், அடுத்த மாதம், 7, 8, 9 ஆகிய தேதிகளில், நடக்கும் இத்திரைப்பட விழாவில், திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோர் குறித்து, உலக அளவில் எடுக்கப்பட்ட, குறும்படங்கள், ஆவணப்படங்கள், முழுநீள திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
  மேலும், புகைப்பட மற்றும் கண்காட்சியும் நடக்கிறது. குழுவிவாதமும் நடக்கிறது. திரையிடப்படும் படங்களில், தமிழ், இந்தியா, சர்வதேசம் ஆகிய பிரிவுகளின் கீழ், சிறந்த குறும்படம், ஆவணப்படம் ஆகியவற்றுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

  • S. Raghuraman Says:

   ஏதோ இவர்கள் விளம்பரம் செய்து ஆர்பாட்டம் செய்த மாதிரி, அவர்களது இனைதளங்களிலேயே ஒன் றை யும் காணோம்.

   தாங்கள் கொடுத்துள்ள விவரங்களைக் கூட அந்த தளங்கள் கொடுக்கவில்லை.

   ஒருவேளை தாங்கள் குறிப்பிட்டது போல வந்த பணத்தை செலவு செய்தது போல கணக்குக் காட்ட நேரத்தை எடுத்துக் கொள்கிறாற்கள் போலும்

 2. vedaprakash Says:

  திருநங்கைகள் தொடர்பான வானவில் திரைப்பட விழா
  செவ்வாய், 28 மே 2013 18:05
  http://www.viduthalai.in/component/content/article/42-other-news/61313-2013-05-28-12-38-50.html

  சென்னை, மே 28- சென்னை வானவில் திரைப்பட விழா ஜூன் 7 ஆம் தேதி துவங்கு வதாக தோஸ்த் அமைப்பின் நிறுவனர் விக்ராந்த் பிரசன்னா தெரிவித்தார். தோஸ்த் அமைப் பின் நிறு வனர் விக்ராந்த் பிரசன்னா, நர்த்தகி திரைப்பட இயக்குநர் விஜயபத்மா ஆகி யோர் அளித்த பேட்டி வருமாறு:

  திருநங்கைகளின் வாழ்க்கை நடை முறையை குறித்த திரைப்படம், குறும்படம் ஆகியவற்றை இயக்கிய திரைப்பட குழுவினருக்காக சென்னை வானவில் திரைப்பட விழா முதல்முறையாக நுங்கம் பாக்கத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த விழா ஜூன் 7 ஆம் தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறும். புகைப்பட மற்றும் கலை கண்காட்சியை டாக்டர் அனிதா ரத்னம் தொடங்கி வைக்கிறார்.

  தொடர்ந்து ஜூன் 8 ஆம் தேதி காஞ்சனா படத்தில் திருநங் கையாக நடித்த சரத்குமாருக்கும், நர்த்தகி படத்தை இயக்கிய விஜயபத்மாவிற்கும், நர்த்தகி படத்தில் திருநங்கையாக நடித்த அஷ்வின் உள்பட 6 பேருக்கு விருது வழங் கப்படவுள்ளது. விருதுகளை இயக்குநர் பாலுமகேந்திரா வழங்குகிறார். இதை யடுத்து ஜூன் 9 இல் சிறந்த குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

  • S. Raghuraman Says:

   மெல்லாமே முன்னர் தான் அறிவித்தார்கள்.

   பிறகு அந்த மூன்று நாட்களில் என்ன நடந்தது என்பதனை அவர்களே சொல்லவில்லை.

 3. vedaprakash Says:

  திருநங்கைகள் தயாரித்த குறும்படங்கள்
  பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011,22:54 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=257094&Print=1

  பெசன்ட் நகர் : சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருநங்கைகள் தயாரித்த எட்டு குறு ஆவணப் படங்கள் கல்லூரி மாணவ, மாணவியருக்கு திரையிடப்பட்டது. சென்னை, கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் திருநங்கை கல்கி. எம்.ஏ., இதழியல் படித்துள்ள இவர், திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக, “சகோதரிகள் பவுண்டேஷன்’ நடத்தி வருகிறார். இவரின் அமைப்பின் சார்பில், சில திருநங்கைகளை தேர்வு செய்து அவர்களுக்கு ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் உள்ளிட்டவற்றை கற்று கொடுத்துள்ளார். அதில், பயிற்சி பெற்ற திருநங்கைகளான சவுந்தரியா, சந்தியா, அபிநயா, செல்வி, ரேணுகா, மானு, காஞ்சனா மற்றும் ரேகா ஆகியோர் சமூக சிந்தனையுடனும், திருநங்கைகள்-தாய் பாசம், காதல், திருமணம் உள்ளிட்டவை குறித்தும் குறு ஆவணப் படங்கள் தயாரித்துள்ளனர்.
  பெசன்ட் நகர், எலியட்ஸ் சாலையில் உள்ள, “ஸ்பேசஸ்’ வளாகத்தில் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இது குறித்து, “சகோதரிகள் பவுண்டேஷன்’ தலைவர் திருநங்கை கல்கி கூறும்போது, “எங்களது அமைப்பின் மூலம், சில திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பத்திரிகை மற்றும் மீடியாக்களில் பணி புரியும் அளவிற்கு திறமை வளர்க்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த குறு ஆவணப் படங்கள் தயாரித்து திரையிடப்பட்டுள்ளது’ என்றார்.

  • S. Raghuraman Says:

   அப்படியென்றால், இது அவ்வப்போது நடக்கும் நிகழ்சிகளாக இருக்கும் போன்றுள்ளது.

   ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொது இடங்களில் வந்து பிச்சை எடுக்கும் அரவாணிகளை இவர்கள் கட்டுப் படுத்தியதாக தெரியவில்லையே?

   # அப்சரா ரெட்டி போல எல்லொரும் ஆக முடியுமா?
   # ஆக விடுவார்களா?
   # அதற்கு வழி என்ன?
   # கல்கியை இங்கு அழைக்காத மர்மம் என்ன?
   # இங்கு விழா நடக்கும் போது அவர் பாண்டிச்சேரிக்கு சென்றது ஏன்?
   # அங்கு அவர் கற்பழிக்க முயற்சிக்கப் பட்டார் என்ற புகார் வேறு!
   # இவர்களுக்குள்ளேயே பிரிவினைகள், கூட்டங்கள் (லாபி போன்றவை) இருக்கின்றனவா?

 4. vedaprakash Says:

  அஃறிணைகள்
  http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%E0%AE%85%E0%AE%83%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&artid=110394&SectionID=142&MainSectionID=142&SEO=&SectionName=Review

  ரயிலில் கையேந்தும் திருநங்கைகளின் தொந்தரவுகள் பற்றி பல்வேறு விதமாக நாளேடுகளில் செய்திகள் வருதுண்டு. ஆனால் ரயிலில் கையேந்தியதற்காக அவமானப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்க்கை பற்றி பலருக்குத்ம் தெரிந்திருக்காது. அப்படியே அது தெரிய வந்தாலும், திருநங்கைகளுக்கே உரிய பிரத்யேக பிரச்னைகளை எல்லோராலும் புரிந்துகொள்ளவும் முடியாது.
  திருநங்கைகளின் கோபம் இந்த சமூகத்துக்கு எதிரானதாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் சமூகம் அவர்களை இழிவு நிலையில் பார்ப்பது. வட மாநிலங்களில் திருநங்கைகளை வளத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் ஆசீர்வதித்தால் எல்லாம் நன்றாக நடக்கும் என்றும் நம்புகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அவர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள்.
  ஆனால், வளர்ச்சியடைந்த தமிழகத்தில், திருநங்கைகளின் நிலை பழங்காலத்தில் இருப்பதாகவே உணரமுடிகிறது. பெண்களையே சமமாக நடத்தாத சமூகத்தில் திருநங்கைகளுக்கு என்ன நேரும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திருநங்கைகளை தனி ஜந்துகள் போலவே நடத்துகிறார்கள். அவர்களின் உலகில் மூளை உழைப்புக்கும் இடமில்லை. உடல் உழைப்புக்கும் இடமில்லை. இப்படி சமூகத்தின் அனைத்து தளங்களில் இருந்தும் அவர்கள் புறந்தள்ளப்படுவதால், ஆண்கள் உலகம் அவர்கûளை எளிதில் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த அடக்குமுறைக்கு எதிரான கோபம்தான் திருநங்கைகள் கையேந்தும்போதும் மற்ற நேரங்களிலும் கடுமையான செயல்பாடுகளாக மாறுகின்றது. நியாயமாகப் பார்த்தால் அப்படித்தான் மாறவேண்டும்.
  சில ஆண்டுகளாக திருநங்கைகள் பேசுவதற்கும், எழுதுவதற்கும், தங்களை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இருந்தபோதும், திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் பரவலாகவில்லை. இந்தச் சூழ்நிலையில் இரண்டு திருநங்கைகளின் வாழ்க்கையை டாக்கு – டிராமா போலக் கூறுகிறது பி. இளங்கோவன் இயக்கியுள்ள “அஃறிணைகள்’ குறும்படம். (டாக்கு – டிராமா எனப்படுவது ஒருவரது நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய வாழ்க்கை சம்பவங்களை சித்தரித்து எடுக்கப்படுவதாகும்.)
  ஏற்கெனவே “என் பெயர் வித்யா’ என்ற பெயரில் “லிவிங் ஸ்மைல் வித்யா’ தனது வாழ்க்கையை எழுதியுள்ளார். அவரது வாழ்க்கை பற்றிய விவரிப்புகள் ஒருபுறம் காட்சிகளாக விரிகிறது. திருநங்கை ஆக வேண்டும் என்ற உணர்வுடன் அதற்குரிய மனக்குழப்பங்களில் இருக்கும் கிளாடியின் வாழ்க்கையும் மற்றொருபுறம் காட்சிப்படுத்தப்படுகிறது.
  இந்த கிளாடிதான் “மூன்றாம் பாலினம்’ என்ற சான்றிதழை தமிழக அரசிடம் இருந்து முதன்முறையாகப் பெற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்தவர்.
  படத்தில் இயல்பாக கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழும் மோதல்கள் அதிகம் வெளிப்படவில்லை. பாலியல் தொழில் நடைபெறும் இடத்தில், கிளாடியின் மனதில் எழும் பெண்ணாக மாறிய கற்பனை போன்ற காட்சிகள் மிக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
  காட்சிப்படுத்திய விதம், படத்தொகுப்பு இவற்றில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏற்கெனவே பதிவாகிவிட்ட விஷயங்களை, காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். அவை சலிப்பை ஏற்படுத்துகின்றன.
  திருநங்கை என்றாலே கையேந்த வேண்டும் அல்லது பாலியல் தொழில் செய்ய வேண்டும் என்று கிளாடிக்குத் தெரிய வரும்போது, அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சி அவ்வளவாக நம்மை பாதிக்காமல் கடந்து போகிறது. அதேபோல், வித்யா ரயிலில் அவமதிக்கப்படும் நிகழ்வும் எழுத்தில் உள்ள அளவுக்கு காட்சிகளில் இல்லை.
  அதேநேரம் டாக்டர் ஷாலினி கூறும், அறிவியலின் விஷயத்தைப் புரிந்துகொண்டு, அந்த அடிப்படையில் நமது பார்வை அமைய வேண்டும் என்ற உணர்வு படத்துக்கு பெரும் பலம். “திருநங்கைகளை புரிந்துகொள்ளாமல் தவறாக நடத்துவது நமக்குத்தான் அவமானம்’ என்று அவர் கூறும் போது, பெரிதாக பேசப்படும் நமது பழைய இலக்கியங்கள் திருநங்கைகளை சமமாக நடத்தாததும், சமூக ரீதியில் நமது முன்னோர்கள் செய்த தவறை இனிமேலும் தொடரக் கூடாது என்பதைப் படம் வலியுறுத்திச் செல்வது அழகு.
  சமூகத்தின் மத்தியில் திருநங்கைகளின் நிஜவாழ்க்கை எடுத்துச் செல்லப்பட வேண்டியதன் அவசியத்தை இப்படம் உணர்த்துகிறது.
  நடிகர்கள் : லிவிங் ஸ்மைல் வித்யா, கிளாடி, உளவியல் நிபுணர் ஷாலினி
  ஒளிப்பதிவு : என்.ஆர்.பழனிக்குமார்
  படத்தொகுப்பு : எஸ்.ஆனந்த்
  இசை : ஜேவி
  இயக்கம் : பி.இளங்கோவன் ஐ.ஆர்.ஏ.எஸ்
  தயாரிப்பு : கீதா இளங்கோவன்

  • S. Raghuraman Says:

   நிச்சயமாக இப்பிரச்சினை வியாபார மயமாக்கப் படுகிறது என்று தெரிகிறது.

   இதை வைத்துக் கொண்டு, இப்படி திரைப்படம் எடுத்து, விழாக்கள் நடத்தி, சிலர் பணம் சம்பாதித்து பெரிய ஆட்கள் ஆகிவிடலாம்.

   ஆனால், அவஸ்தைப் படுவோர், அவஸ்தைப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

   இவர்களுக்குள் சமநீதி, சமத்துவம் எப்பஒழுது கிடைக்கும் என்று நாளைக்கு யாராவது போராடினாலும் வியப்பில்லை.

 5. vedaprakash Says:

  மாற்றுப் பாலியல் இயக்கம் – நிகழ்வுகள் அட்டவணை
  டி.ஐ.ரவீந்திரன் செவ்வாய், 01 பெப்ரவரி 2011 12:18
  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12740&Itemid=139

  1860-ஆங்கிலேய அரசு தனது காலனிகளில் (இந்தியா உட்பட) ஓரினப்புணர்ச்சிக்கு எதிராக, குறிப்பாக ஆசனவாய் புணர்ச்சிக்கு (sodomy) எதிரான குற்றவியல் சட்டம் பிரிவு 377-ஐ அமுலுக்குக் கொண்டு வந்தது.

  1941-உருது மொழி எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் அவர்களின் “லிஹாஃப்” சிறுகதை பிரசுரமாகி மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இரு பெண்களுக்கிடையிலான பாலியல் உறவைப் பற்றி இருந்ததால் மிகுந்த கண்டனத்திற்கு ஆளானது.

  1978-கணித மேதை சகுந்தலா தேவி தன் திருமணம் மற்றும் கணவர் பற்றிய அனுபவங்களிலிருந்து “The World of Homosexuality” என்ற நூலை எழுதினார்

  1986-இந்தியாவின் முதல் எச்.ஐ.வி தொற்று கண்டுபிடிக்கப்பட்டது

  பிப்ரவரி – அசோக் ராவ் கவி தனது ஒருபாலீர்ப்பு பற்றி “சாவி” (Savvy) மாத இதழில் கூறியிருந்தார்.

  ஏப்ரல் – போபாலில் ஹிஜ்ரா சமூகத்தினருக்காக மாநாடு நடைபெற்றது

  1987 ஜனவரி-பெங்களூரில் “சிநேக சங்கம்” அமைப்பு தொடங்கப்பட்டது.

  “த்ரிகோன்” என்பது அமெரிக்காவில் உள்ள மாற்றுப் பாலியல் கொண்ட தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த மக்களின் அமைப்பாகும். இந்தியாவில் “சொசய்டி” மாத இதழ் இந்த அமைப்பு குறித்த பத்தி ஒன்றை வெளியிட்டது.

  ஜூலை – கனடாவில் டொரான்டோ நகரில் “குஷ்” அமைப்பு தொடங்கப்பட்டது

  திசம்பர் – போப்பாலைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரிகள் லீலாவும் ஊர்மிலாவும் திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

  1989-எச்.ஐ.வி தொற்று இருப்பதாகத் தெரிய வந்ததால் கோவாவைச் சேர்ந்த டாமினிக் டிசூசா என்பவர் கைது செய்யப்பட்டுத் தனி சிறையில் வைக்கப்பட்டார்

  1990-தில்லியில் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்காக “ரெட் ரோஸஸ்” குழுமத்தின் சந்திப்புகள் தொடங்கின.

  ஏப்ரல் – லீலா சாவ்டா என்ற பெண்ணின் தந்தை அவரது துணைவரான தாருலதா என்பவருக்கு எதிராக ஐபிசி பிரிவு 377ன் கீழ் வழக்குப் பதிவு செய்தார்

  ஜூன் – “பாம்பே தோஸ்த்” இதழ் வெளிவந்தது

  செப்டம்பர் – குல்பர்காவில் “ஃப்ன்£டம்” செய்தியிதழ் வெளிவந்தது

  திசம்பர் – கொல்கத்தாவில் மாற்றுப் பாலியல் கொண்டோரின் சந்திப்புகளுக்காக “ஃபன் கிளப்” தொடங்கப்பட்டது

  ஃபிர்தௌஸ் காங்கா என்பவர் தனது இருபாலீர்ப்பு மற்றும் மாற்று உடல் திறன் குறித்த “Trying to Grow” என்ற நூலை வெளியிட்டார். இது பின்னர் திரைப்படமாக்கப்பட்டது.

  1991-திசம்பர் – கொல்கத்தாவில் “பிரவர்தக்” இதழ் வெளியிடப் பட்டது

  ஜூலை – தில்லியில் “சகி” பெண்கள் அமைப்பு தொடங்கப் பட்டது

  நவம்பர் – இந்தியாவில் ஒருபாலீர்ப்பு குறித்த முதல் குடிமக்கள் அறிக்கையான “Less than Gay” “எய்ட்ஸ் பேத்பாவ் விரோதி ஆந்தோலன்” (எய்ட்ஸ் பாகுபாட்டை எதிர்க்கும் இயக்கம்) என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது

  1992-ஜனவரி – இலங்கையில் “Companions on a Journey” அமைப்பு தொடங்கப்பட்டது

  சமூக ஆர்வலர் சித்தார்த்தா கௌதம் புது தில்லியில் மரணமடைந்தார்

  பிப்ரவரி – “ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள்” மத்தியில் எச்.ஐ.வி தடுப்புப் பணிக்காக “உடான்” அமைப்பு பம்பாயில் தொடங்கப்பட்டது

  மே – எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படவர்களின் உரிமைக்காகப் பணி செய்த டாமினிக் டிசூசா மரணமடைந்தார்

  அரவிந்த் கால என்பவர் எழுதிய “The Unknown World of the Indian Homosexual” என்ற நூல் வெளிவந்தது

  1993-ஜனவரி – “சித்தார்த கௌதமின் நண்பர்கள்” குழு அவரது நினைவில் தில்லியில் மாற்றுப் பாலியல் குறித்த திரையிடல் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. சுமார் 400 பேர் பங்குகொண்டனர்.

  ஆகஸ்ட் – கொல்கத்தாவில் “Counsel Club” தொடங்கப்பட்டது

  செப்டம்பர் – புது தில்லில் “ஆரம்ப்” இதழ் வெளியிடப்பட்டது

  திசம்பர் – “நாஸ்” மற்றும் “சகி” அமைப்புகள் இணைந்து புது தில்லியில் மாற்றுப் பாலியல் குறித்த கருத்தரங்கை ஒழுங்கு செய்தன.

  எய்ட்ஸ் தடுப்புப் பணிக்கென பெங்களூரில் “சம்ரக்ஷ£” அமைப்பு தொடங்கப்பட்டது

  1994-பிப்ரவரி – பெங்களூரில் Good As You (G.A.Y.) குழுவின் சந்திப்புகள் தொடங்கின

  ஏப்ரல் – இந்தியாவில் ஹம்சஃபர் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது

  ஜூன் – தில்லி திஹார் சிறைச்சாலையில் ஆணுறை விநியோகிக்க அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ABVA அமைப்பு ஐ.பி.சி. பிரிவு 377ஐ எதிர்த்து வழக்குப் பதிவு செய்தது.

  திசம்பர் – நாஸ் மற்றும் ஹம்சஃபர் அமைப்புகள் இணைந்து பம்பாயில் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்கான கருத்தரங்கு ஒன்றை ஒழுங்கு செய்தன

  1996-நாஸ் இந்தியா அறக்கட்டளை தனது தொலைபேசி உதவி சேவையைத் தொடங்கியது: பெண்களுக்கென “சங்கினி” சேவையும் ஆண்களுக்கென “ஹம்ராஸ்” சேவையும் இதில் அடங்கும்.

  ஏப்ரல் – பீஹாரைச் சேர்ந்த காளி என்பவர் தேர்தலில் போட்டியிட்ட (Judicial Reforms Party) முதல் ஹிஜ்ரா ஆனார்.

  ஜூன் – மும்பையில் “ஸ்த்னா சங்கம்” அமைப்பு பெண்களை நேசிக்கும் பெண்களுக்கான முதல் தேசிய அளவிலான ஒன்றுகூடலினை ஒழுங்கு செய்தது

  அக்டோபர் – லக்னோ நகரில் தான் இந்தியாவிலேயே அதிகமான ஓரினச்சேர்க்கை நடப்பதாக ளிutறீஷீஷீளீ இதழ் செய்திக் கட்டுரை வெளியிட்டது

  ராஜ் ராவ் அவர்களின் கவிதைகளைத் தழுவிய “பாம்கே” என்ற திரைப்படத்தை ரியாத் வாடியா என்பவர் வெளியிட்டார்

  கீதி தடானி அவர்களின் “சகியானி: பண்டைய மற்றும் நவீன இந்தியாவில் லெஸ்பியன் விழைவு” என்ற நூல் வெளியானது

  தீபா மெஹ்தாவின் மிகுந்த சர்ச்சைக்குள்ளான திரைப்படமான திவீக்ஷீமீ வெளிவந்தது.

  1997-ஃ தர்பன் என்னும் இதழ் தில்லியில் வெளயிடப்பட்டது.

  கல்கத்தாவின் மஹிலா சமன்வாய் சமிதி ஆண் பாலியல் தொழிலாளிகளைத் தமது இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளும் முடிவெடுத்தது.

  ஆகச்த்: த்ரிகொன் பத்திரிக்கைகள் இந்தியச் சுங்க அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்டன.

  செப்டம்பர்: பெங்களூரில் சப்ரங் என்னும் குழு தொடங்கப் பட்டது.

  செப்டம்பர்: பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் ஒர்பாலினச் சேர்க்கை பற்றியக் கருத்தரங்கம் நடத்தப் பட்டது.

  டிசம்பர்: ரான்சியில் நடந்த தேசியப் பெண்கள் மாநாட்டில் பெண்களை விரும்பும் பெண்களுக்கான தனி அரங்கு அமைக்கப்பட்டது.

  திரைப்படங்கள்:

  தமன்னா- பரெஷ் ராவல்.

  தர்மியா- கல்பனா லாஜ்மி

  புத்தகங்கள்:

  Sex, Longing and Not Belonging- A Gay Muslim’s Quest for Love and Meaning – பத்ருதீன் கான்.

  1998-நவம்பர்: ‘ஃபயர்’ திரைப்படம் வெளிவந்து அது ஒடிய திரையரங்குகள் சேதப்படுத்தப்பட்டன.

  பிப்ரவரி: சங்க மித்ரா என்னும் இதழ் பெங்கலூரில் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் வெளிவந்தது.

  ஏப்ரல்: ஸாரனி என்னும் குழு ‘ சங்கீதத்துடன் வெளியே வரல்’ என்னும் நிகழ்ச்சியை நடத்திப் பாலியல்பு பற்றிய விஷயங்களை வெளிக்கொணர்ந்தது.

  சென்னையில் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்கான பாலியல் சுகாதார சேவைக்காகச் “சகோதரன்” அமைப்பு தொடங்கப்பட்டது.

  திரைப்படங்கள்:

  பாம்பே பாய்ஸ்: கைசாத் குச்தாத்.

  புத்தகங்கள்:

  ‘on a muggy night in mumbai’ – மஹெஷ் தத்தானீ.

  Neither man nor woman: the hijras of india: செரீனா நந்தா.

  1999-இலங்கையில் ‘விமென்ச் சப்பொர்ட் க்ருப்’ என்னும் குழு உருவாக்கப்பட்டது.

  ஜனவரி: ‘கெம்பையின் ஃபொர் லெஸ்பியன் ரைட்ஸ்’ (கலெரி) என்னும் குழு ஃபயர் திரைப்படத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்க்க உருவானது.

  பிப்ரவரி: ஒர் பாலினச் சேர்க்கை ஆண்கள், பெண்கள் மற்றும் இருபால் சேர்க்கையினரின் உரிமை பற்றிய விவரப்படிவத்தின் முதல் பதிப்பு ஹம்ஜின்சி அமைப்பினால் வெளியிடப்பட்டது.

  பிப்ரவரி: தேசிய பாலியல்பு பற்றிய மாநாடு- ஹைதெராபாத்.

  ஜுன்: கல்கத்தாவில் ஓர்பாலினச் சேர்க்கைப் பெண்களுக்கான சாஃபொ அமைப்பு தொடங்கப்பட்டது.

  ஆகஸ்ட்: ‘காமொஷ், எமெர்ஜென்சி ஜாரி ஹை’ என்னும் புத்தகம் கலெரியால் வெளியிடப்பட்டது.

  திரைப்படங்கள்:

  சட்னி அண்ட் பாப்கார்ன்: நிஷா கனாத்ரா.

  சம்மர் இன் மை வேஇன்ஸ்: நிஷித் சரன்.

  புத்தகங்கள்:

  ‘facing the mirror’ – அஷ்வினி சுக்தான்கர்.

  ‘yaarana’- ஹொஷாங் மெர்ச்சண்ட்.

  2000-மார்ச்சு: ஷப்னம் மௌசி என்னும் அரவானி மத்தியப் பிரதேசத்தில் தேர்தலில் வெற்றி பெறுகிறார்.

  ஜனவரி: தில்லியில் முதல் முறையாக வெளிப்படையாக ஒர்பாலினச் சேர்க்கையர் பற்றியத் திரைப்படவிழா நடத்தப் படுகிறது.

  பிப்ரவரி: சாதி அமைப்பு சென்னையில் துவங்கப்பட்டு எச்.ஐ.வி பற்றிய பணியில் ஈடுபடுகிறது.

  மார்ச்சு: 172ஆவது சட்ட மசோதா இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 பிரிவை அகற்றுமாறு பரிந்துரை அளிக்கிறது.

  ஜுன்: இலங்கையின் பத்திரிக்கையாளர்கள் குழு ஒர் பாலினச்சேர்க்கைப் பெண்களுடன் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது சரி என்று எழுதிய ஒரு பத்திரிக்கையின் செயலைப் பாராட்டியது.

  நவம்பர்: இந்திய மனித உரிமை ஆணைக்குழுவும் பிரிவு 377ஐ மாற்றியமைக்குமாறு பரிந்துரைத்தது.

  புத்தகங்கள்:

  Same sex love in India- ரூத் வனிதா, சலீம் கித்வாய்.

  2001-நேப்பாலில் ப்லூ டைமண்ட் சொசைட்டி என்னும் அமைப்பு துவங்கப்படுகிறது.

  குஜராத்தியில் முதல் முறையாகப் பாலியல்பு பற்றிய ‘லக்ஷ்யா’ என்னும் இதழ் வெளிவந்தது.

  ஜூலை: லக்னௌ நகரில் நாச் அமைப்பில் பணிபுரிபவர் பிரிவு 377இன் கீழ் கைது செய்யப்பட்டு, நாச் மற்றும் பரொசா ட்ர்ஸ்ட் அமைப்புகளின் அலுவலகங்கள் திடீர் சோதனை செய்யப்படுகின்றன.

  டிசம்பர்: நாச் அமைப்பு பிரிவு 377ஐ மாற்றியமைக்க தில்லி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்கிறது.

  புத்தகங்கள்:

  ‘Queering India’- ரூத் வனிதா.

  2002-ஆகஸ்ட்: ஹிஜ்ரா ஹப்பா விழா பெங்கலூரில் நடைபெருகிறது.

  மார்ச்: பெங்கலூரில் உள்ள சங்கமா அமைப்பின் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.

  செப்டம்பர்: கீதலக்ஷ்மி மற்றும் சுமதி என்னும் காதலர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டனர்.

  அக்டோபர்: கேரளத்தில் ஒர்பாலினச் சேர்க்கைப் பெண்களுக்கான சஹயாத்ரிகா அமைப்பு தொடங்கப்படுகிறது.

  டிசம்பர்: ஃபாஷன் டிசைனர் வெண்டெல் ரொட்ரிகுயெஸ் தமது காதலர் ஜெரொமை கொஆவில் மணம் புரிகிறார்.

  திரைப்படங்கள்:

  ‘Flying with one wing’- அசோகா ஹந்தகம, இலங்கை.

  ‘Mango Souffle’- மஹேஷ் தத்தானீ.

  ‘Gulabi Aaina’- ஷ்ரிதர் ரங்காயன்

  புத்தகங்கள்:

  ‘ The man who was a woman and other tales from Hindu lore ‘- தேவ்தத் பட்னாயக்.

  2003-ஆகஸ்ட்: நேபாலில் ‘ப்லூ டைமண்ட் சொஸைட்டி’ முதல் முறையாக ப்ரைட் அணிவகுப்பு தொடங்கினர்.

  அக்டோபர்: பம்பாயில் முதல் சர்வதேச பாலியல்பு பற்றிய திரை விழா நடந்தது.

  ஜுன்: கல்கத்தாவில் ‘வானவில் அணிவகுப்பு’ என்று அழைக்கப்பட்ட ப்ரைட் அணிவகுப்பு நடைபெற்றது.

  திசம்பர்: சென்னையில் மாற்றுப் பாலியல் கொண்ட மக்களின் குழுவான விறி தொடங்கப்பட்டது.

  புத்தகங்கள்:

  The trouble with islam’- இர்ஷாத் மான்ஜி.

  ‘the boyfriend’ – ராஜா ராவ்

  2004-ஜுன்: ‘ஈக்குவல் க்ரௌண்ட்’ என்னும் அமைப்பு இலங்கையில் தொடங்கப்படுகிறது.

  ஜூலை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு ரிட் மனு விஷயத்தில் பதிலளித்த நீதிபதிகள் அரவானிகளுக்குக் குடும்ப அட்டைகளும் மற்ற அடையாள அட்டைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்தனர்.

  ஆகஸ்ட்: ‘கிர்ல்ஃப்ரெண்ட்’ என்னும் ஒர் பாலினச் சேர்க்கைப் பெண்கள் பற்றிய திரைப்படத்தைக் காட்டிய திரைஅரங்குகள் மீது தாக்குதல்.

  செப்டம்பர்: தில்லி உயர் நீதி மன்றம் நாஸ் வழக்கை ரத்து செய்கிறது. அதே ஆண்டு உச்ச நீதி மன்றத்தின் அழுத்தத்தால் மீண்டும் உயர் நீதி மன்றத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. ‘வாய்சஸ் அகென்ஸ்ட் 377’ என்னும் பல அமைப்புகள் கூடிய குழுவும் இவ்வழக்கில் பங்கெடுக்கத் தொடங்கியது.

  திரைப்படங்கள்:

  சன்சாரம்: லிஜி புல்லப்பல்லி, மலையாளம்.

  ‘a touch of pink’ – இயன் இக்பால் ரஷித்.

  ‘yours emotionally’- ஷ்ரிதர் ரங்காயன்.

  ‘happy hookers’ – ஆஷிஷ் சௌனி.

  புத்தகங்கள்:

  ‘Madras on rainy days’ – சமீனா அலி.

  ‘Swimming in the monsoon sea’- ஷ்யாம் செல்வதுரை

  ‘Babyji’ – ஆபா தாரெஷ்வர்.

  2005-ஜனவரி: ப்லூ டைமண்ட் சொசைடி வார இதழ் வெளியிட தொடங்கியது.

  மார்ச்: ஓரினச்சேர்க்கை ஆளான ஒரு நீச்சல்ஆட்டக்காரர் மற்றும் எய்ட்ஸ் உள்ளவர் பற்றிய ஒரு கதை ‘மை ப்ரதர் நிகில்’ என்கிற படமாக எடுத்து வெளியிடப்பட்டது.

  ஜூலை: இலங்கையில் முதல் ப்ரைட் ஊர்வலம் நடைபெற்றது.

  திரைப்படங்கள்:

  ‘மை ப்ரதர் நிகில்’- ஒனிர் சென்.

  ‘ ஷப்னம் மௌசி’- யகெஷ் பரத்வாஜ்.

  புத்தகங்கள்:

  ‘Because I have a voice’ – அர்விந்த் நராயன் மற்றும் கௌதம் பான்.

  ‘Impossible desires: queer diasporas and south asian public cultures’- காயத்ரி கொபினாத்.

  ‘Love is rite: same sex marriage in India and the west’ – ரூத் வனிதா.

  2006-சென்னையில் மிகப்பெரிய அணிவகுப்பு ஒன்றை அரவானிகள் மேற்கொண்டனர். இதன் பின் தங்களது கோரிக்கைகளை அரசிடம் சமர்ப்பித்தனர்.

  எழுத்தாளர் விக்ரம் செத் எழுதி பல முக்கிய நபர்களால் கையெழுத்திடப்பட்ட கடிதம் இந்திய அரசிற்கு அனுப்பப்பட்டது.

  ஜனவரி: நான்கு ஓரினச்சேர்க்கை ஆண்கள் லக்னௌ நகரில் கைது செய்யப்படுகின்றனர்.

  மார்ச்: ஓர்பாலினச் சேர்க்கை ஆண்கள் சமூக வளர்ச்சி மையம் சென்னையில் தொடங்கப்படுகிறது.

  ஏப்ரல்: மாற்றுப்பாலின சமூகத்தார் மீதான வன்முறை பற்றித் தலாய் லாமா வருத்தம் தெரிவித்தார்.

  தமிழ் நாட்டில் சமூக நலத்துறையின்கீழ் அரவானி நலவாரியம் செயல்படத் தொடங்கியது.

  2007-2008-பல நகரங்களில் ப்ரைட் ஊர்வலங்கள் நிகழத் தொடங்கின.

  ஆவணப்படங்களும் பிரபல சினிமாப் படங்களும் ஓர்பாலினச் சேர்க்கையினரைக் கொண்டு எடுக்கப்பட்டன.

  பெங்கலூரு, மும்பை, தில்லி, கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் திரைப்பட விழாக்களும் கருத்தரங்குகளும் நிகழ்த்தப்பட்டன.

  பல வகை ஊடகங்களில் பாலியல்பு பற்றிய சர்ச்சைகள் சிறந்த முறையில் வெளிப்படத் தொடங்கின.

  சென்னையில் ஜூன் மாதம் சக்தி மையம் தொடங்கப்பட்டது.

  மே 2008இல் சென்னையில் ஓர்பாலினச் சேர்க்கை பெண்கள் இருவர் தற்கொலை செய்துகொண்டனர். பல ஆண்டுகளாக நடந்து வரும் இக்கொடூரம் குறித்து மாற்றுப் பாலியலாளர்கள் மற்றும் பெண்ணியலாளர்கள் இது குறித்துப் பொதுவெளியில் பேசினர்.

  2009-மார்ச் மாதம் தமிழக அரசு அரவானிகளுக்குப் பால் மாற்று அறுவை சிகிச்சை இலவசமாகச் செய்யப்படும் என்று அறிவித்தது.

  ஜூலை 2: தில்லி உயர் நீதி மன்றம் 18 வயதிற்கு மேற்பட்டோர் தனிப்பட்ட இடங்களில் ஓர்பாலின உடலுறவு வைத்துக்கொள்ளல் சட்டப்படி குற்றமன்று என்றும், இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகன்/குடிமகளுக்கும் ஒரே உரிமைகள் உண்டு என்றும் தீர்ப்பளித்தது.

  இன்றும் இவ்வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்து வருகிறது.

  “பொதுவான ஒழுக்க நெறி விதிகள் என்பது. அரசியலமைப்புச் சட்ட ஒழுக்க நெறிகளினின்றும் வேறுபட்டது. இந்த நெறிகள் சூழ்நிலைகள் சார்ந்து மாறக்கூடியவை. நாட்டின் நலன் என்பது பற்றி முடிவு செய்ய ஆய்வுக்குள்ளாகும் ஒழுக்க நெறியானது அரசியலமைப்புச் சட்டத்தினுடையதாக இருக்க வேண்டுமே தவிர பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒருக்கா நெறி விதைகளாக இருக்க முடியாது.” (பத்தி 79)

  “ஒழுக்க நெறி சார்ந்த மனக் கொதிப்புகள் எவ்வளவு பரவலாக இருந்தாலும் தனிப்பட்ட நபர்களின் அடிப்படை உரிமைகளான சுயகௌரவம் மற்றும் தனிச் செயல்பாடுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ அவை போதுமான அடிப்படைக் காரணமாக இருக்க முடியாது. எனவே பொது ஒழுக்க விதிகள், பெரும்பான்மை சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட தாக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த ஒழுக்க நெறி விதிகள் தாம் கூடுதலாக மதிக்கபப்ட வேண்டும்.” (பத்தி 86)

  “தனிப்பட்ட குடிமகன் யாராக இருந்தாலும் அவரை மட்டுமே சார்ந்த தனிமைச் செயல்பாடுகளை பொது ஒழுக்க நெறிகளின் அடிப்படையில் சரிப்படுத்துவதற்காக அவரது வாழ்க்கையில் தலையிடுவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் அரசாங்கத்திற்கு வசங்கவில்லை. 18 வயதிற்கு மேலான இரு தனி நபர்கள் பரஸ்பர ஒப்புதலோடு தனிப்பட்ட முறையில் ஈடுபடும் பாலுறவுகளில் கடுமையான தீங்கு ஏற்படுவதற்கான சரியான ஆதாரம் ஏதும் இல்லாத சமயத்தில் அரசாங்கம் தலையிட முடியாது. இவாறு செய்வது தன்னிச்சையானதும் காரண காரியங்களை மீறியதும் ஆகும். (பத்தி 92).

  நாஸ் பவுண்டேஷனுக்கும் இந்திய யூனியனுக்கும் இடையிலான வழக்கில் ஜூலை 2, 2009 அன்று வெளியான தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து: தமிழாக்கம்: டி. ஐ. ரவீந்திரன்

  • S. Raghuraman Says:

   பாவம், அந்த வக்கீலோ, நீதிபதியோ ஒரு பெரிய ஆராய்ச்சி செய்து இத்தனை விவரங்களைக் கொடுத்துள்ளார்.

   இங்குக் குறிப்பாக கவனிக்க வேண்டியது, ஆரம்பத்தில் இத்தனை ஆர்பாட்டம், விளம்பரம், பிரச்சாரம் நடக்கவில்லை என்பதுதான்.

 6. அமைச்சரைப் பற்றிய ஓரினப்புணர்ச்சி புகாரும், திருநங்கையின் கொலைமுயற்சி புகாரும்! | செய்தி ஒரேம Says:

  […] [1] https://evilsofcinema.wordpress.com/2013/06/08/chennai-rainbow-film-festival-2013/ […]

 7. அமெரிக்க இறக்குமதி செக்ஸ் மின், மென் மற்றும் கனப்பொருட் விவகாரங்கள் இந்தியாவில் நன்றாகவே வேல Says:

  […] [1] https://evilsofcinema.wordpress.com/2013/06/08/chennai-rainbow-film-festival-2013/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: