சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணால்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2)

சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2)

Actor and model Malaika with film director Vijaya Padma at a press meet

 

நேரம்குறிப்பிடாதஅட்டவணை: நிகழ்ச்சி நிரலில் நேரத்தைக் குறிப்பிடாமல் இருந்ததால், போன் செய்து பேட்டபோது மாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொன்னார்கள். சனிக்கிழமை இரண்டாவது நாளாக திரைப்பட விழா தொடர்ந்தது. நேற்று இருந்த விருவிருப்பு இல்லை. நிகழ்ச்சி நிரலில் நேரத்தைக் குறிப்பிடாமல் இருந்ததால், அரங்கத்தில் வந்துக் கொண்டும், போய் கொண்டும் இருந்தனர். நேற்று போல இளைஞர்களின் கூட்டம் இருந்தது.  செக்ஸைக் கடந்த நிலை, பாலியலைத் தாண்டிய ஸ்தானம் எனும் போது, காலத்திற்குக் கட்டுப்படாத நிகழ்ச்சியாகியது போலும்!

jobtitle_quad_JOBNO

Les Chansans D’Amour (Love songs): குறும்படம் என்ற பெயரில் ஒரு பிரெஞ்சு படம் – லெஸ் சான்சன்ஸ் டி-ஆமர் நெடும் நேரம் – மூன்று பகுதிகளாக ஓடிக்கொண்டிருந்தது. நடுநடுவே அந்தகால தியாகராஜ பாகவதர் படம் போல ஏகப்பட்ட பாடல்கள் வேறு! ஆனால், “லெஸ் சான்சன்ஸ் டி-ஆமர்” என்றால் “காதல் பாட்டுகள்” என்று பொருள்! இஸ்மாயில், ஜூலி மற்றும் அலைஸ் என்ற மூன்று நபர்களுக்கிடையே உள்ள உறவைப் பற்றியது. அவ்வுறவை வெளிப்படுத்துவதில் மாறி-மாற்றி பாடும் பாடல்கள் தாம் அவை. 2007 கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்த்நெடுக்கப்பட்ட 20 படங்களில் ஒன்று. 2012 வரை உலகம் முழுவதும்  $2,966,934 = ரூ2,96,69,34,856/- அதாவது மூன்று கோடி ஈட்டியுள்ளது[1].

 


[1] As of 16 January 2012, it had grossed a total of $2,966,934 worldwide — $104,567 in the United States and Canada and $2,862,367 in other territories

 

Christophe Honore (L) s with Clotilde Hesme, Gregoire Leprince-Ringuet, Louis Garrel, Ludivine Sagnier and Chiara Mastroianni (2nd L - R)- -Les Chansons d-Amour

அட்டவணையில் உள்ளபடி, வரிசைக்கிரமத்தைப் பின்பற்றவில்லை. சில படங்கள் ஏன் காண்பிக்கப்படவில்லை என்று தெரியவில்லை.

EGBT colurs flag

“மிஸ்ஸிங் கலர்” குழுவினரின் பொறுமையினை அது சோதித்தது. “என்ன செய்வது, பிரெஞ்சு படம் என்றாலே அப்படி பெரியதாகத்தான் இருக்கும்”, என்று அவர்களுள் ஒருவர் அலுத்துக் கொண்டார். சிலரின் நிலை நடு-நடுவே வேளியே போவதும், வருவதுமாக இருந்தது.

les chansons_damour - love songs

பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை –  தவிர்க்கப் படுகிறது ஏன்?: ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண்மை, அப்பெண்மை வெளிப்படும், வெளிப்படுத்தும் தன்மைதான் அதிகமாக சித்தரிக்கப்பட்டுள்ளது, படுகிறது. ஆனால், பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை, அந்த ஆண்மை வெளிப்படும் வெளிப்படுத்தும் தன்மை தவிர்க்கப்படும் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

Chennai Rainbow Film Festival 2013 - song

ரெயின்போவின் தூதுவர்கள்: ரெயின்போவின் தூதுவர்கள் என்ற பட்டியலும் பெரிதாக இருந்தது:

  1. சரத் குமார் – நடிகர், அரசியல்வாதி
  2. விஜய பத்ம கோவிந்தராஜன் – திரைப்பட் இயக்குனர்
  3. ஞானி சங்கரன் – திரைப்பட விமர்சகர், நாடக இயக்குனர்
  4. பிரியா மேனன் – பத்திரிக்கையாசிரியர், டைம்ஸ் ஆப் இந்தியா.
  5. சனோபர் சுல்தானா – ரேடியோ ஜாக்கி, சென்னை லைவ் எப்.எம்
  6. அஸ்வின் ஶ்ரீனிவாஸ் – நடிகர்

lgbt-logo

இரண்டாவது நாளில் “அடல்ஸ் ஒன்லி” ஆன திரைப்பட விழா: இன்று சனிக்கிழமை, திரையரங்கத்தின் கதவில் “18+only” என்று யாரோ ஒட்டியிருந்தார்கள். ஆனால், மாலை சுமார் 6.40 அளவில் ஒருவர் மனைவி குழந்தைகளுடன் உள்ளே நுழைந்தார். நாற்காலிகளில் உட்கார்ந்தும் கொண்டனர். ஆணல்ல-பெண்ணல்ல, அவனல்ல, அவளால்ல, அதுவல்ல, அந்துமல்ல என்றும், ஆணுமுண்டு-பெண்ணும் உண்டு என்ற நிலை, கலப்பு, பாலியலுக்குக் கடந்த நிலை, என்றெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற நிலையில், இந்த பாகுபாடு எப்படி வந்தது என்று தெரியவில்லை.

LGBT flag, symbol, logo etc

விவாதம் / கலந்துரையாடல்: ஊடகங்களில் “எல்இபிடி”யினர் சித்தரிக்கப்படும் விதம் பற்றிய விவாதம் / கலந்துரையாடல் தள்ளிப் போய் கொண்டிருந்தது. சாரு நிவேதிதா[2], ரோஸ் வெங்கடேசன், விக்ரந்ட்த் பிரசன்னா மற்றும் பாத்திமா பாபு கலந்து கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

திருநங்கை நடிகை கல்கியை கற்பழிக்க முயற்சி! 2  மர்ம ஆசாமிகள் செய்த கொடுமை!: சனிக்கிழமை இங்கு இப்ப்டி நடக்கும் போது, புதுச்சேரியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. தமிழ் படத்தில் நடித்த திருநங்கை நடிகை கல்கியை இரண்டு மர்ம ஆசாமிகள் இருட்டான பக்குதிக்கு தூக்கிச் சென்று கற்பழிக்க முயற்சி செய்துள்ளனர்[1]. போலீசார் இது தொடர்பாக வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்று குமுறியுள்ளார் திருநங்கை நடிகை கல்கி! நர்த்தகி என்ற தமிழ் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். இவருக்கு வயது 31. இவர் சிறப்பாக நடித்ததற்காக அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் விருது பெற்றார் இவர். இவர் சகோதரி என்ற தொண்டு அமைப்பை நடத்தி திருநங்கைகளுக்கு பலவிதமனா சேவைகளைச் செய்துவருகிறார். இதனை பாராட்டி அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டு இவர் கவுரவிக்கப்பட்டார்[2]. இவர் புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இவர் புதுச்சேரி சென்றுள்ளார்.


[2] அமெரிக்காவிற்கு திருநங்கைளின் மீதுள்ள அக்கரை அலாதியாக உள்ளது.

வேதபிரகாஷ்

© 08-05-2013


[1] As of 16 January 2012, it had grossed a total of $2,966,934 worldwide — $104,567 in the United States and Canada and $2,862,367 in other territories

[2] இப்படி ஆண்கள் ஏன் பென்கள் பெயரை வைத்துக் கொண்டு கதை எழுதுகிறார்கள், எழுதினார்கள் என்று இவ்விஷயத்தில் விவாதிக்க முடியுமா? பெண்கள் பெயரில் கதை அனுப்பினால் பத்திரிக்கைகளில் போடுவார்கள் என்ற நிலை இருந்தது. அத்தகைய கவர்ச்சி இப்பொழுதும் உள்ளது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

19 பதில்கள் to “சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணால்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2)”

  1. vedaprakash Says:

    திருநங்கைகளிடம் செக்ஸ் டார்ச்சர் புகார் கிறிஸ்தவ மதபோதகர் மீது நடவடிக்கை
    பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010,03:23 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=52148&Print=1

    திருநெல்வேலி:திருநங்கைகளிடம் செக்ஸ் டார்ச்சர் செய்த மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்தவர் செல்வி. திருநங்கையான இவர் இதய நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நெல்லையை சேர்ந்த மதபோதகர் ஒருவர், திருநங்கையிடம் நீ கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் உனது நோயை குணப்படுத்தி விடலாம் என கூறி நெல்லைக்கு அழைத்து வந்துள்ளார். மேலும் அவருடன் 15 திருநங்கைகளும் வந்துள்ளனர். அதன்பிறகு அவர்களை பாளை., சமாதானபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

    செல்வியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த 11 பவுன் நகைகளை மதபோதகர் வாங்கி கொண்டுள்ளார். இரவு நேரத்தில் திருநங்கைகளிடம் செக்ஸ் டார்ச்சரும் செய்துள்ளார். இதனால் செல்வி உள்ளிட்ட திருநங்கைகள் அங்கிருந்து வெளியேறி போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து மத போதகர், புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி திருநங்கைகளை மிரட்டியுள்ளார். செல்விக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.இதைக் கண்டித்து நெல்லை மாவட்ட இந்து முன்னணி தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி, பேச்சாளர் காந்திமதிநாதன், வக்கீல் பிரிவு செயலாளர் குற்றாலநாதன், துணைத்தலைவர் வெட்டும் பெருமாள், மண்டல தலைவர் ஆறுமுகம், கணேசபாண்டி, சந்திரன் ஆகியோர் போலீஸ் கமிஷனரை சந்திந்து மனுக் கொடுத்தனர். அந்த மனுவில் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    • S. Raghuraman Says:

      பைபிளில் அத்தகைய செக்ஸ்கள் இடம் கொடுத்துள்ளதாக உள்ளது.

      அதனால், இந்த “மத”போதகர் இத்தகைய செக்ஸ்-டார்ச்சரில் இறங்கி விட்டார் போலும்.

      இவரை இங்கு கூட்டி வந்து பேட்டி கண்டிருக்கலாம்.

      அல்லது குறும்படம் எடித்திருந்தால், முதல் பரிசு கிடைத்திருக்கும்.

  2. vedaprakash Says:

    ஒருவர் இப்படி பதிவு செய்துள்ளார்:

    “எந்த ஒரு பெண்ணையும் அனாவசியமாக அழ வைத்தால்,அது கடுமையான தோஷமாக உருவெடுக்கும்;எந்த ஒரு பெண்ணையும் கட்டாயப்படுத்தி உறவு கொண்டாலும்,அதனால் ஏற்படும் பாவங்கள், பரிகாரத்தில் தீர்க்கமுடியாத பாவங்களின் பட்டியலில் இருக்கின்றன.
    அதே போலத்தான்,திருநங்கைகளை மனம் நோகடித்தாலோ,திருநங்கைகளை கதறியழுமளவுக்கு யார் செய்தாலும் (ஆண் அல்லது பெண்) அவர்கள் பரிகாரத்துக்கு உட்படாத பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளாவார்கள்.
    அதன்விளைவாக,அவர்களின் குடும்பத்தில் அதேபோன்ற குழந்தைகள் (திருநங்கைகள்) பிறப்பார்கள்;
    மேலும்,இவ்வாறு நோகடிப்பவர்களுக்கு தொழிலில் அல்லது வேலையில் கடுமையான சிக்கல்கள் உண்டாகும்.
    அந்தச் சிக்கல்களைத் தீர்க்க யாராலும் முடியாது.ஏனெனில் ,இந்த சாபம் குறைந்தது ஏழு பிறவிகளுக்கு தொடரும்.”

    http://www.aanmigakkadal.com/2012/02/blog-post_26.html

    இதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்பது தெரியவில்லை!

    • S. Raghuraman Says:

      நாகரிக போர்வையில், திருமங்கைகளை ஒப்புக்கொள்ளும் ரீதியில் செக்ஸ்-செயல்பாட்டில், செயலில், நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை விட, இத்தகைய நம்பிக்கைகள் பரவாயில்லை எனலாம்.

      இந்திய இலக்கியங்களில் வரும் அத்தகைய நபர்கள் உயர்வாகத்தான் போற்றப்பட்டிருக்கிறார்கள்.

      ஆனால், அப்பெயர்கள் தாம் தான் இப்பொழுது சிறுமைப்படுத்தப்பட்டது.

  3. vedaprakash Says:

    It’s a long road ahead for the LGBT community in Chennai
    The Hindu The Chennai Rainbow Pride will be a celebration of diversity in sexuality as well as community initiatives, said activists. Photo: V. Ganesan
    http://www.thehindu.com/news/cities/chennai/its-a-long-road-ahead-for-the-lgbt-community-in-chennai/article4772979.ece

    Over the last 10 years, during his innumerable attempts to find a stable job in the city, P. Selvam always carried a dental certificate that declares his age to be 27 years.

    This was to indicate to employers that he was not a runaway child seeking employment.

    “It has never been enough though. They ask me why I don’t have a moustache or a beard or why my voice is like a woman’s,” said the transgender (female-to-male), who has switched at least 12 jobs in the last four years after he ran away from his home in Theni to escape the stigma attached to the transgender community.

    “I quit when the questions get too much to handle. I don’t have many options at work either since I could not finish school,” he said. Now a volunteer with Nirangal, a human rights NGO, Selvam is convinced that only equal rights for all sexual minorities can guarantee them a better life.

    And, he is not alone in this quest. This month, over 600 persons from 20 organisations that work on LGBT (Lesbian Gay Bisexual Transgender) issues will come together, under the banner of Chennai Rainbow Coalition, to organise a series of activities marking the fifth edition of the Chennai Rainbow Pride.

    The events that began on June 8 will go on till July 15 and include cultural performances, film festivals, sensitisation workshops, parents meets and panel discussions on workplace diversity.

    The LGBT pride march will be held on June 30. (For more details, visit http://chennaipride.net.)

    The activists, this time, are focussing on long-pending demands. For instance, the lack of clarity in inheritance rights has been a sore point for a long time.

    “Transgenders are often thrown out of their houses and even getting an apartment on rent is very difficult. We need equal rights in education, employment and housing,” said Dinesh Kumar, a field worker and advocacy expert in transgender issues.

    Sudha, a volunteer with Tamil Nadu Aids Initiative, said that abandonment by families was also the reason why many were forced to take up begging and prostitution.

    “More consideration from families would go a long way in curbing incidents like the harassment of passengers by transgenders that was recently reported on trains,” she said.

    Most State governments, Mr. Kumar said, had not responded to the advisory issued by National Legal Services Authority asking them to grant the same rights to transgenders as all citizens.

    “Tamil Nadu has been a pioneer in initiating welfare schemes for the communities. We urge the State government to respond to the instruction and implement it, and extend the schemes to all sexual minorities,” he added.

    “Promises from the government such as a social welfare board and initiatives such as free counselling facilities and a community centre would prove vital in helping the community,” said Rupesh Reddy of Chennai Dost.

    Bhavana, a transgender working with Sahodaran, said the attitude of the police needs to change too. “The police think we are upto some crime even if we are standing at a tea shop or coming out of a movie, especially a night show.”

    It also helps to start awareness initiatives early, said activists.

    “Schools and colleges are sites of violence and abuse. Many LGBT persons in fact refrain from continuing education due to such discrimination,” said G. Suresh, a city-based professor.

    Talking about the city and the month-long celebrations, L. Ramakrishnan, one of the conveners of the event and director of Saathii, said the events in Chennai were unique as they not only celebrated diversity in sexuality but also sought to highlight serious advocacy issues.

    “And while in other cities, class segregation among the participants and organisers is common with each section organising a different event, here, everyone comes together with a fair sense of purpose,” he added.

    For Selvam, the event will also be a cry for help.

    “Male-to-female transgenders have strong community support. But people like me are far more vulnerable,” Selvam said.

    “My friends often tell me it is risky to participate in public events. But what drives me is the hope that someone will notice my struggle and help me get a surgery or at least a job,” he added.

    “I have been taking injections that will help me grow a moustache and a beard. I hate it when employers keep asking me to prove I am a man,” said Selvam, who aspires to be an office boy in an IT company.

    • S. Raghuraman Says:

      இப்படி இவர்களுக்க்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

      ஏனெனில், இப்படி இவர்கள் உயரும் போது, ஆயிரக்கணக்கில் பொது இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

      அவர்களைப் பற்றி, இவர்கள் உண்மையாகவே கவலைப் படுகிறார்களா?

  4. vedaprakash Says:

    திருநங்கை நடிகை கல்கியை கற்பழிக்க முயற்சி! 2 மர்ம ஆசாமிகள் செய்த கொடுமை!
    சனி, 8 ஜூன் 2013( 17:31 IST )
    http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1306/08/1130608032_1.htm

    புதுச்சேரியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. தமிழ் படத்தில் நடித்த திருநங்கை நடிகை கல்கியை இரண்டு மர்ம ஆசாமிகள் இருட்டான பக்குதிக்கு தூக்கிச் சென்று கற்பழிக்க முயற்சி செய்துள்ளனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்று குமுறியுள்ளார் திருநங்கை நடிகை கல்கி!

    நர்த்தகி என்ற தமிழ் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். இவருக்கு வயது 31. இவர் சிறப்பாக நடித்ததற்காக அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் விருது பெற்றார் இவர்.

    இவர் சகோதரி என்ற தொண்டு அமைப்பை நடத்தி திருநங்கைகளுக்கு பலவிதமனா சேவைகளைச் செய்துவருகிறார். இதனை பாராட்டி அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டு இவர் கவுரவிக்கப்பட்டார்.

    இவர் புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இவர் புதுச்சேரி சென்றுள்ளார்.

    • S. Raghuraman Says:

      இதில் உண்மையாகவே பல பிரச்சினைகள் இருக்கின்றன.

      இவர் தான் புகார் கொடுத்துள்ளார்.

      நாளைக்கு சட்டரீதியில் எப்பட் நிரூபிக்க முடியும் என்று தெரியவில்லை.

      சமீபத்தில் ஒரு தடகள வீராங்கனை அல்லது வீரர் விஷயத்திலும் இவ்வாறே நடந்திருக்கிறது.

  5. vedaprakash Says:

    பொருளாதார கணக்கெடுப்பில் திருநங்கைகளை “கேலி’ செய்வதாக புகார்
    பதிவு செய்த நாள் : ஜூன் 07,2013,01:59 IST
    http://www.dinamalar.com/news_detail.asp?id=729343

    சிவகங்கை:பொருளாதார கணக்கெடுப்பில், தனியார் நிறுவனங்களின்,”பான்’,”டேன்’ எண்களை குறிப்பிட வேண்டும், நிறுவன உரிமையாளர் திருநங்கை எனில், 9 என குறிப்பிட, கணக்கெடுப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில்,புதிய திட்டங்களை வகுக்கவும், பொருளாதார வளர்ச்சி குறித்து அறிய, 6 வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கண்காணிப்பாளராக ஆசிரியர்களும், கணக்கெடுப்பாளராக சத்துணவு ஊழியர், அரசு துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு, வணிக நிறுவனங்களில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும்,கணக்காளர்கள், தனியார் நிறுவனங்களை குறிப்பிடும் போது, அதற்கான இடத்தில்,நிறுவனத்தின் “பான்’, “டேன்’ எண்களை எழுத வேண்டும். நிறுவனத்தின் உரிமையாளர் ஆண், பெண்ணாக இன்றி, திருநங்கையாக இருக்கும் பட்சத்தில், பூர்த்தி செய்யும் விண்ணப்பத்தில், “9′ என குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
    திருநங்கைகள் வேதனை: பொருளாதார கணக்கெடுப்பின் போது, தனியார் நிறுவன உரிமையாளர்கள், திருநங்கைகளாக இருக்கும் பட்சத்தில், “9′ என குறிப்பிட கூறுவது, திருநங்கைகளை அரசே “கேலி’ செய்வது போல் உள்ளதென, திருநங்கைகள் தெரிவிக்கின்றனர்.

    • S. Raghuraman Says:

      தமிழ் திரைப்படங்களில் சாதாராணமாக உபயோகப்படுத்தும் போது, ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை?

      அப்பொழுது பெருமையாக இருந்ததா?

  6. vedaprakash Says:

    ஓரினம்.நெட் என்ற தளத்தில் கீழ்கண்ட விஷயம் காணப்படுகிறது. ஒரு வேலை, இது உமக்கு உபயோகமாக இருக்கக் கூடும்:
    ——————————————————————————————————–
    மிரட்டல் மற்றும் பணப்பறிப்பு

    நகர்ப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் வசிக்கும் மாற்றுப் பாலியல் கொண்ட நபர்கள் இணையதளத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறோம். மாற்றுப் பாலியல் கொண்டோருக்கான உதவிக் குழுக்களைக் கண்டறிந்து அணுகவும், காதல் உறவு மற்றும் உடலுறவுக்கென தங்களது துணைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் இணையதளம் பெரிதும் பயன்படுகிறது. ஆண்-பெண் உறவுகளிலிருந்து மாறுபடும் இந்த விழைவுகளையும் உறவுகளையும் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் பக்குவம் இன்னமும் இல்லாத இச்சமூகத்தில் நம் பாலியல் குறித்த வெளிப்படையான உரையாடல்கள் மிகக் கடினமானவை. ஆனால் இணையதளத்தைப் பயன்படுத்தும் ஒருபாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் பல நேரங்களில் ச்சுறுத்தல்களுக்கும் மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்பாடுகளுக்கும் ஆளாகின்றனர். சென்னையிலும் மற்ற நகரங்களிலும் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

    இந்த சம்பவங்களின் ஒரு மாதிரி:

    மற்றவர்களை மிரட்டிப் பணம் பறிக்க முயலும் ஒருவர் இணையதளத்தில் தன்னை ஒருபாலீர்ப்பு கொண்டவராகவோ அல்லது இருபாலீர்ப்பு கொண்டவராகவோ அறிவித்துக் கொண்டு மற்றவர்களை அணுகுகிறார். ஒருவருடன் சிறிது நேரம் உரையாடிய பின்பு, அவரை சந்திக்கத் தன் வீட்டிற்கு அழைக்கிறார். இந்தத் திட்டத்திற்கு இலக்காகிய நபர் அங்கு சென்றதும் பிரச்சனை தொடங்குகிறது. அவர் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிறார். அவரிடமிருக்கும் பணம், நகை, கைக் கடிகாரம் ஆகியவை பறிக்கப்படுகின்றன. சில நேரங்களில் திடீரென்று பல கூட்டாளிகள் சூழ்ந்து கொண்டு இந்த நபரை உடல் மற்றும் மன ரீதியான வன்முறைக்கு உட்படுத்துவதும் உண்டு. அவரை அருகில் உள்ள ATM- ற்கு அழைத்துச் சென்று அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து இவர்களிடம் ஒப்படைக்கச் செய்யக் கட்டாயப்படுத்துவதும் உண்டு. தாங்கள் கூறுவதைச் செய்யாவிட்டால் இவரது குடும்பத்திடமும், இவர் பணிபுரியும் இடத்திலும், கல்லூரியிலும் இவரது ஒருபாலீர்ப்பு அல்லது இருபாலீர்ப்பு குறித்து தெரிவித்து விடுவதாக அச்சுறுத்துவதே இத்தகையோரின் முக்கிய ஆயுதம்.

    சமூகம், குடும்பம், பணியிடம், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் மாற்றுப் பாலியல் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இல்லாமலிருப்பதையும் அத்தகைய சூழ்நிலையில் நம்முடைய பாலியல் வெளிப்பாட்டைக் குறித்த நமது பயத்தையும் இத்தகையோர் தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நமது இந்த பயமும் சமூகம் மற்றும் குடும்பங்களின் சகிப்பின்மை குறித்த வேதனையும் தேவைப்படாத ஒரு உலகத்தை நோக்கிச் செல்வதே நமது பணி. எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டிய உரிமைகளையும் பாதுகாப்புகளையும் இந்திய அரசு மாற்றுப்பாலியல் கொண்டவர்களுக்கும் வழங்கும் நிலையை விரைவில் கொண்டுவர முயல்வதே நம்முடைய முதன்மைப் பணி. எனினும், அது வரையில், நமக்கு இப்பொழுதுள்ள உரிமைகளையும் நம்வசம் தற்பொழுதுள்ள உதவிகளையும் கொண்டு நம்மைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

    பலருடைய மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கும் ஒருபாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட நபர்கள் பலர் அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். சில நேரங்களில் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கச்செய்யும் நிலையிலும் இருந்த திரு. அனிருத்தன் வாசுதேவன், அவரது அனுபவங்களின் பின்னணியில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்.

    நீங்கள் இத்தகைய சூழ்நிலையில் இருக்க நேர்ந்தால், கவனத்தில் கொள்ள வேண்டியவை:

    பரிச்சயமில்லாத நபரை முதலில் பொது இடத்தில் சந்தித்து உரையாடுங்கள். அவரைப் பற்றிய நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை குறித்து உங்கள் மனத்தில் எழும் எண்ணங்களை மதித்துக் கேளுங்கள். சிறிதளவும் சந்தேகம் இருப்பின் சந்திப்பை அந்தப் பொது இடத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது.
    பீதிக்கு உள்ளாகாதீர்கள். இணையதளம் மூலமாக வந்திருக்கும் மிரட்டல் எனின் முதலில் அதைப் பொருட்படுத்தாது இருந்து பாருங்கள். மிரட்டல்கள் தொடர்ந்தால் கீழ்கண்டவற்றை நினைவில் கொள்ளுங்கள்.
    இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 384 -ன் கீழ் மிரட்டல் பணப் றிப்பு ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்பதை உங்களை மிரட்டுவோருக்குத் தெரிவியுங்கள். காவல் துறையினரையோ சட்ட ரீதியான உதவியையோ நாட நீங்கள் தயங்கமாட்டீர்கள் என்பதையும் அவர்களிடம் கூறுங்கள்.
    இணையதளத்தில் உங்களுடைய புகைப்படங்களையோ உங்களைப் பற்றிய தகவல்களையோ உங்கள் அனுமதியின்றி வெளியிடுவதாக உங்களை அச்சுறுத்தினால் உங்களுடைய தனிமைக்கான உரிமையை மீறும் என்ற நிலையில் அது குற்றமாகும் என்பதையும் அவர்களுக்குக் கூறுங்கள். சமீபத்தில் ஹைதராபாத்தில் டி.வி 9 என்ற தொலைகாட்சி நிலையம் இணையதளத்தில் இத்தகைய உரிமை மீறலை மேற்கொண்டதற்காக செய்தி ஒலிபரப்பு அளவுகோல்கள் அமைப்பின் கண்டனத்திற்கு உள்ளானது. அதன் மீது அபராதமும் விதிக்கப்பட்டது.
    இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ஐக் கொண்டு மிரட்டுபவர்களுக்கு
    பிரிவு 388-ன் கீழ் பத்தாண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என்பதையும் மாற்றுப்பாலியல் கொண்டோரை அச்சுறுத்துபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

    இந்த மிரட்டல்கள் நேரடியாக நிகழும் சூழ்நிலைகளில் அவர்கள் கேட்பதைத் தராவிடில் வன்முறைக்கு உள்ளாவீர்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால், உங்களுடைய பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். இதற்குப் பின்னும் உங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் உங்களுக்கு வேண்டிய உதவி கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உதவிக்கு சென்னை தோஸ்த், சங்கமா – சென்னை, SWAM, சகோதரன் போன்ற அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள். இவை மற்றும் இதர குழுக்கள் குறித்த தகவல்களுக்கு: அமைப்புகள் மற்றும் தளங்கள்

    – See more at: http://webcache.googleusercontent.com/search?q=cache:MiC_HFYwpxwJ:orinam.net/ta/resources-ta/lgbt-ta/legal-resources-ta/dealing-with-extortion-ta/+&cd=4&hl=ta&ct=clnk&gl=in#sthash.9AbO03Sj.dpuf

  7. vedaprakash Says:

    புதுவையில் திருநங்கையை தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சி
    பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 08, 5:07 PM IST
    http://www.maalaimalar.com/2013/06/08170744/puduvai-thirunangai-attack-try.html

    புதுச்சேரி, ஜூன்.8, 2013-

    புதுவை சகோதரி அமைப்பின் நிறுவனர் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    நான் சகோதரி அமைப்பை ஆரோவில் பகுதியில் வைத்துள்ளேன். நர்த்தகி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன். திருநங்கை சமூகத்துக்கு நான் செய்த சேவையை பாராட்டி அமெரிக்க அரசு கடந்த 2010-ம் ஆண்டு என்னை அழைத்து கவுரவப்படுத்தியது. மேலும் டெல்லியில் கவர்னர் மாளிகையில் நடந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் பதவி ஏற்பு விழாவிலும் கலந்து கொண்டுள்ளேன். நான் எனது ஆரோவில் கோட்டகரை பகுதியில் வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவு 8.30 மணிக்கு பெரியமுதலியார் சாவடியில் இருந்து கோட்டக்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். குயிலாபாளையத்தை அடுத்த கருவடிக்குப்பம் பாலம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் என்னை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அப்போது நான் கீழே விழுந்ததில் எனக்கு இடது கை, வலது காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வெளிநாட்டுக்காரர் எனக்கு உதவி செய்தார். இதை தொடர்ந்து மர்ம ஆசாமிகள் 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து நான் ஆரோவில் பாதுகாப்பு சேவை மையத்தில் புகார் செய்தேன். இந்த சம்பவம் தொடர்பாக எனக்கு மன உளைச்சல் மற்றும் உடல் வலி காரணமாக கடந்த 4 நாட்களாக போலீசில் புகார் கூறவில்லை. நேற்று ஆரோவில் போலீசில் புகார் கூற சென்றேன்.ஆனால் போலீசார் என் புகாரை வாங்கவில்லை. கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கூற சென்ற போது அவர்களும் எனது புகாரை பதிவு செய்யவில்லை.

    இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அளித்து உள்ளேன். ஆரோவில் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து ஆரோவில் பகுதிக்கு வரும் சுற்றுலா வரும் பெண்களுக்கு பாலியியல் தொந்தரவுகள் அடிக்கடி நடந்து வருகிறது. அவர்கள் தங்கள் நாட்டுக்கு செல்ல விசா கடைக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் இதுதொடர்பாக புகார் சொல்வதில்லை. இது சமூக விரோதிகளுக்கு சாதகமாகி வருகிறது. அதுபோல் அந்த பகுதியில் உள்ள இளம் பெண்களுக்கும் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் குடும்ப கவுரவம் கருதி போலீசில் புகார் அளிப்பதில்லை.

    எனவே ஆரோவில் பகுதியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க புதுவை போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • vedaprakash Says:

      சினிமாவில் நடித்தவர்
      திருநங்கையை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள்
      தினகரன் – 02:43:12 Sunday 2013-06-09
      http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=51914

      புதுச்சேரி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் திருநங்கை கல்கி சுப்ரமணியம் (35). இந்தியாவின் முதல் திருநங்கை தொழிலதிபர். ‘சகோதரி‘ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். `நர்த்தகி‘ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவரது சேவைக்காக அமெரிக்க அரசின் விருந்தினராக 2010ல் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய ஜனாதிபதி மாளிகையிலும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். தற்போது, புதுவையை அடுத்துள்ள ஆரோவில் கோட்டக்கரை கிராமத்தில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறார். கடந்த 2ம் தேதி அன்று இரவு 8.30 மணிக்கு பெரியமுதலியார்சாவடியில் இருந்து வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். குயிலாப்பாளையம் அருகே பாலத்தில் இருட்டான பகுதியில் அவர் சென்றபோது பைக்கில் 2 பேர் பின்தொடர்ந்துள்ளனர். திடீரென, முந்திச் சென்று கல்கியை வழி மறித்து பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கல்கி போராடியதில், மொபட்டில் இருந்து கீழே தள்ளியதால் காயம் ஏற்பட்டது. உடனே, 2 வாலிபர்களும் தப்பினர். காயமடைந்த கல்கி, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து ஆரோவில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  8. vedaprakash Says:

    ஆனைமலை: பெற்ற தாயே ஏற்க மறுத்ததால் திருநங்கை தற்கொலை
    பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மே 20, 10:54 AM IST
    http://www.maalaimalar.com/2013/05/20105424/Mother-refused-transgender-sui.html

    ஆனைமலை, மே 20, 2013-

    ஆனைமலை உப்பிலி வீதியை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மனைவி மாசாணி. கண்ணப்பன் இறந்து விட்டார். இவர்களது மகன் காளிமுத்து (வயது 27). இவர் கடந்த 2-வருடமாக மும்பையில் இருந்தார். அப்போது ஆபரேஷன் செய்து கொண்டு திருநங்கையாக மாறினார். தனது பெயரை அபர்ணா எனவும் மாற்றிக் கொண்டார்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அவரது நடவடிக்கை மாசாணிக்கு பிடிக்கவில்லை. திருநங்கையாக காளி முத்துவை மாசாணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவரை கண்டித்தார். வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னார்.

    பெற்ற தாயே தன்னை ஏற்க மறுப்பதால் விரக்தி அடைந்த காளிமுத்து (எ) அபர்ணா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்த விசாரணை நடந்து வருகிறது.

  9. vedaprakash Says:

    திருநங்கையை கடத்தி சித்ரவதை அரவாணி தாதா, கும்பலுக்கு வலை – 12 ஜூன், 2013
    http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=44913

    திருப்பதி:மாமூல் கேட்டு திருநங்கையை காரில் கடத்தி சித்ரவதை செய்த 10 பேர் கும்பலை திருப்பதி தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.திருப்பதி அடுத்த திருச்சானூர் பகுதியை சேர்ந்தவர் செல்வி சாந்தி (26), திருநங்கை. இவர் மாவட்ட எய்ட்ஸ் நிவாரண துறையில் திட்ட அதிகாரியாக உள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் திருப்பதி எஸ்பிவி நகர் பகுதியில் உள்ள சாலையில் செல்வி சாந்தி மயங்கி கிடந்தார். ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து தாமினேடு பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த திருநங்கைகள் தண்ணீர் தெளித்து செல்வி சாந்தியை எழுப்பினர்.

    மிரட்டி பணம் வசூல் செய்யும் திருநங்கை மற்றும் மர்ம நபர்கள் தன்னை கடத்தி சித்ரவதை செய்ததாக கூறினார். இதுகுறித்து திருச்சானூர் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:திருப்பதியில் நடக்கவுள்ள எய்ட்ஸ் நோயாளிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தேன். அப்போது, காரில் வந்த நெல்லூரை சேர்ந்த திருநங்கை அலேக்கியா, அவரது கணவர் கிரி மற்றும் 8 பேர் என்னை பலவந்தமாக கடத்தி சென்றனர். அலேக்கியா தாதா போல செயல்படுகிறார். ஒவ்வொரு திருநங்கையும் அவருக்கு மாதாமாதம் ரூ.5 ஆயிரம் மாமூல் தரவேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தேன்.

    மேலும், சில மாதங்களுக்கு முன்பு தாமினேடு பகுதியை சேர்ந்த ஹாசினி என்ற திருநங்கை கடத்தப்பட்டார். இதுதொடர்பான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி, அவர்கள் என்னை 2 நாட்கள் தனி அறையில் அடைத்து வைத்து, அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். மயங்கிய நிலையில் என்னை இங்கு வீசிவிட்டு சென்றுள்ளனர்.இவ்வாறு புகாரில் செல்வி சாந்தி கூறினார்.எஸ்.ஐ. பிரவீன்குமார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அலேக்கியா மற்றும் கும்பலை தேடி வருகிறார். தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  10. vedaprakash Says:

    சினிமா எங்களை கேவலப்படுத்துகிறது வக்கீல் சங்க கூட்டத்தில் திருநங்கை வேதனை
    பதிவு செய்த நாள் : ஜூன் 24,2013,06:48 IST
    http://www.dinamalar.com/news_detail.asp?id=741897

    கோவை:”தமிழ் சினிமாவில் நாங்கள் கேவலப்படுத்தப்படுகிறோம்; இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என, கோவை வக்கீல்கள் சங்க கூட்டத்தில், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தார்.
    கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில் மாதம் ஒரு சிறப்பு அழைப்பாளர் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. இம்மாதத்துக்கான சிறப்பு கூட்டம் கோர்ட் கூட்டரங்கில் நடந்தது. வக்கீல்கள் சங்க தலைவர் நந்த
    குமார் தலைமை தாங்கினார். செயலாளர் லோகநாதன் வரவேற்றார்.
    கூட்டத்தில், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் பேசியதாவது:
    இளம் வயதில் ஏற்படும் மாற்றத்தால் நாங்கள், குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, குடும்ப வாழ்க்கையில் இருந்து புறக்கணிக்கப்படுகிறோம்.
    பரம்பரையான சொத்தில் பங்கு மறுக்கப்பட்டு, வீட்டை விட்டு துரத்தப்படுவதும் நடக்கிறது. மருத்துவ
    மனைகளில் இக்குறையை நீக்க முறையான சிகிச்சை இல்லை. மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை.
    பள்ளிகளில் சேர்க்க மறுப்பதால் நாங்கள் கல்வி அறிவு, வேலை வாய்ப்பு பெற முடிவதில்லை. இதனால், எங்கள் எதிர்பார்ப்பு, ஆசைகள் நிர்கதியாகி விடுகின்றன. பொதுமக்கள் ஒதுக்குவதாலும், சமுதாயத்தில் மரியாதையும் கிடைப்பதில்லை. வெறுப்பு காட்டுகின்றனர். இதனால் கிடைத்த வேலைக்கு சென்று, வாழ வேண்டியுள்ளது.
    இதையெல்லாம், ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. திருநங்கையாக இருப்பதில் பெருமைப்படுகிறோம். மற்ற பெண்களைப் போல வாழ்ந்து வருகிறோம்.
    தமிழகத்தில் 15 ஆயிரம் திருநங்கைகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அதை விட அதிகமாகத்தான் இருப்பார்கள். மதிப்பு, மரியாதையுடன் வாழ, எங்களுக்கும் சட்ட அங்கீகாரம் வேண்டும்.
    இதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விளக்கம் கேட்டு மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த மாநில
    மும் பதில் அனுப்பாதது வருத்தம் அளிக்கிறது.
    சினிமா படங்களில் நடை, உடை, நடிப்புகள் மூலம் நாங்கள் கேவலமாக சித்தரிக்கப்படுகிறோம். இது வேதனை அளிக்கிறது.
    இவ்வாறு, கல்கி பேசினார்.
    இளம் வயதில் ஏற்படும் மாற்றத்தால் நாங்கள், குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, குடும்ப வாழ்க்கையில் இருந்து
    புறக்கணிக்கப்படுகிறோம்.
    பரம்பரையான சொத்தில் பங்கு மறுக்கப்பட்டு, வீட்டை விட்டு துரத்தப்படுவதும் நடக்கிறது.

  11. அமைச்சரைப் பற்றிய ஓரினப்புணர்ச்சி புகாரும், திருநங்கையின் கொலைமுயற்சி புகாரும்! | செய்தி ஒரேம Says:

    […] [2] https://evilsofcinema.wordpress.com/2013/06/08/crff-2013-why-it-is-celebrated/ […]

  12. அமெரிக்க இறக்குமதி செக்ஸ் மின், மென் மற்றும் கனப்பொருட் விவகாரங்கள் இந்தியாவில் நன்றாகவே வேல Says:

    […] [2] https://evilsofcinema.wordpress.com/2013/06/08/crff-2013-why-it-is-celebrated/ […]

  13. அமெரிக்க இறக்குமதி செக்ஸ் மின், மென் மற்றும் கனப்பொருட் விவகாரங்கள் இந்தியாவில் நன்றாகவே வேல Says:

    […] [2] https://evilsofcinema.wordpress.com/2013/06/08/crff-2013-why-it-is-celebrated/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: