தொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை காட்டி விட்டார்கள் – நடிகை நஸ்ரியா நசீம் புகார்!

தொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை காட்டி விட்டார்கள் – நடிகை நஸ்ரியா நசீம் புகார்!

இளம் பெண்கள் நடிக்க வருவது ஏன்?: சினிமாவில் நடிப்பிற்காக நடிகைகள் வருகிறார்கள், பெண்களாக இளம் வயதில் வருகிறார்கள் எனும்போது, அக்கால பருவத்தை, அப்பருவத்தின் உருவத்தை, உருவத்தின் அமைப்பை, அமைப்பின் தன்மையைப் பயன் படுத்திக் கொண்டுதான் நடித்து பணம், புகழ் சம்பாதிக்க வருகிறார்கள். இல்லையென்றால் படிக்கும் வயதில், படித்துக் கொண்டிருக்கும் போதே, படிப்பை விட்டு நடிக்க எந்த இளம் பெண்ணும் வரமாட்டாள். ஆண் நடிகர்கள் சண்டை காட்சிகளில், அபாயகரமான காட்சிகளில் மறுக்கும் போது, பயப்படும் போது, “டூப்” போட்டு நடிக்க வைப்பது காட்சிகளை விறுவிறுப்பாகக் காட்டுவது என்பது நூறாண்டுகளாக நடந்து வருகின்றது. பெண்களும் அவ்வாறே செய்து வந்தனர். முன்பெல்லாம் கற்பழிப்பு, நடனம் போன்ற காட்சிகளில் “டூப்” போடுவார்கள். இதற்காக ஒரு நடிக-நடிகைப் பட்டாளமே இருந்து வருகிறது.

டூப்போடக் கூடாது, “டப்பிங் வாய்ஸ்”, பின்னணி பாடகர்கள் தேவையில்லை என்று சொல்வார்களா?: சொந்த குரலில் பேச முடியாத நடிகைகள் அதிகம். பல மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பேச முடியாத நிலை. எனவே “வாய்ஸ் டப்பிங்” என்பது சாதாரணமாகி விட்டது. இல்லை, “டூப்” போடக் கூடாது, “டப்பிங் வாய்ஸ்” தேவையில்லை, நானே வசனம் பேசுகிறேன் என்று அந்நடிகைகள் ரோஷத்துடன் முன்வருவதில்லை. “எடிட்டிங்”கிலேயே, அம்முறை பல காரணங்களால் கையாளப்படுகிறது. பாடுவதைப் பற்றி கெட்கவே வேண்டாம். அக்காலத்தில் தான், பாடுபவர்களுக்குத் தான் நடிக்க சந்தர்ப்பம் என்று இருந்தது. இன்றோ, நடிகைகளுக்கு காட்டத் தெரிந்தால் தான், நடிக்க சந்தர்ப்பம் என்றுள்ளது. காட்ட முடியாது என்றால், இக்காலத்தில், எந்த தயாரிப்பாளர், இயக்குனர், ஏன் நடிகரே ஒப்புக் கொள்ளமாட்டார். இவ்விசயத்தில் “நான் – வெஜ்” கேடகரிகள் தாம் அதிகம்!

தொப்புளைகாட்டுவதுபோன்றகவர்ச்சிகாட்சியைகாட்டிவிட்டார்கள்– (படிப்பாநடிப்பா): நான் நடிப்பது போல, வேறு நடிகையை பயன்படுத்தி, தொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை பதிவு செய்து, “நய்யாண்டி’ பட விளம்பர, “டிரெய்லர்’ வெளியிட்டு விட்டனர்,” என, நடிகர் சங்கத்தில், நடிகை நஸ்ரியா நசீம் புகார் கொடுத்துள்ளார்[1] என்ற செய்தி வேடிக்கையாக இருக்கிறது. எதையதையோ காட்டி நடிக்கும் போது, ஒரு நடிகை இப்படி புகார் செய்கிறாரா என்று வினோதமாக இருந்தது. இவரும் படிப்பை விட்டுவிட்டுத்தான் நடிக்க வந்துள்ளார். அந்த ஆசை இல்லையென்றால், பி.காம் முடித்திருப்பாரே? படிப்புத் தேவையில்லை என்பதால் தானே, “காமாக” நடிக்க வந்திருக்கிறார்!

தமிழகத்திற்குமலையாளநடிகைகள்இறக்குமதி: மலையாள நடிகை நஸ்ரியா நசீம், “நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  கேரளத்தைச் சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை. தமிழுக்காக உயிர் விடும் கூட்டங்கள், வந்தேறிகள் என்று ஓலமிடும் சித்தாந்திகள், இதனை ஏன் கண்டுகொள்வதில்லை என்று தெரியவில்லை. தமிழகத்தில் இத்தகைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே செய்தியாக உள்ளது. முன்பெல்லாம் (30-50 வருடங்களுக்கு முன்னால் கூட) ஒரு குறிப்பிட்ட நடிகையின் நடனம் உள்ளது என்பதற்காகவே, தமிழக ரசிகர்கள் சினிமா பார்ப்பதுண்டு. வீடியோ, கம்ப்யூட்டர் எல்லாம் இல்லாததால், தியேட்டருக்குச் சென்றே பலமுறை பார்ப்பார்கள்.

ராஜாராணிக்குப்பிறகு, “நய்யாண்டி: ரசிகர்களிடம் வரவேற்பு இருந்ததால், “ராஜா ராணி, நய்யாண்டி’ படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் இத்தகைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே செய்தியாக உள்ளது. இதில், “ராஜா ராணி’ படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. “நய்யாண்டி’ படம் வரும், 11ம் தேதி திரையிடப்பட உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தை ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்துள்ளார்.

கவர்ச்சியாக, தொப்புள்தெரிவதுபோலநடித்தகாட்சி: தமிழக சினிமா வல்லுனர்களின் ரசனையே அலாதியானது. முன்பு ஒரு நடிகையின் தொப்புளைச் சுற்றி பொம்மரம் விட்டு காட்டியதாக படம் வெளியானது. அதையெல்லாம், தமிழனங்கள் சுயமரியாதையோடு பார்த்து ரசித்துள்ளன. இப்பொழுது, “நய்யாண்டி’ படத்திற்காக, “யூ டியூபில்’ வெளியிடப்பட்டுள்ள விளம்பர, “டிரெய்லரில்’ நடிகை நஸ்ரியா நசீம், கவர்ச்சியாக, தொப்புள் தெரிவது போல நடித்த காட்சியும் சேர்க்கப்பட்டிருந்தது. இக்காட்சியில், நஸ்ரியா நடிக்கவில்லை; வேறு நடிகை ஒருவரை, இயக்குனர் நடிக்க வைத்து, “டிரெய்லர்’ வெளியிட்டு, மோசடி செய்து விட்டதாக, நடிகை நஸ்ரியா புலம்புவதாக, தகவல் வெளியானது[2]. நடிகையின் சுயமரியாதை பெரியதா, தமிழக ரசிகர்களின் உரிமை பெரியதா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய தருணம், தமிழர்களுக்கு வந்து விட்டது!

என்அனுமதிபெறாமல்இப்படியொருகாட்சியில்என்னைக்காட்டியிருப்பதுஎன்னைஇழிவுப்படுத்தும்செயலாகும்: இதுகுறித்து, நஸ்ரியாவிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது: “பாடல் காட்சியில், கிளாமராக நடிக்க கேட்டனர். நான் முடியாது என, தெரிவித்து விட்டேன். ஆனால், நான் கிளாமராக நடிப்பது போன்ற காட்சியை, “யூ டியூபில்விளம்பர டிரெய்லர் வெளியிட்டு உள்ளனர். இது ஒப்பந்தத்தை மீறிய செயல்
இதுகுறித்து, இயக்குனர் சற்குணத்திடம் கேட்டதற்கு, “ஒப்பந்தப்படி நீங்கள் நடிக்க முடியாது என, கூறியதால், வேறு நடிகையை வைத்து படமாக்கினோம்என, தெரிவித்தார். இந்த மோசடி குறித்து, நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன்”, இவ்வாறு, நஸ்ரியா தெரிவித்தார். சினிமாவில் இப்படியெல்லாம் ஒப்பந்தம் போட்டிருந்தால், தமிழகம் உருப்பட்டிருக்குமே? எத்தனையோ இளைஞர்கள் தப்பித்திருப்பார்களே? எத்தனையோ இளைஞிகளின் கற்பு காப்பாற்றப் பட்டிருக்குமே?

நடிகர்சங்கத்தில்நீதிகிடைக்காதபட்சத்தில்நீதிமன்றத்தில்வழக்குதொடரவும்முடிவுசெய்துள்ளேன்: “என் அனுமதி பெறாமல் இப்படியொரு காட்சியில் என்னைக் காட்டியிருப்பது என்னை இழிவுப்படுத்தும் செயலாகும். திரைத்துறையில் எனக்கென ஒரு நற்பெயர் உள்ளது. அதை களங்கப்படுத்தும் விதமாக இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த காட்சிகளை நீக்க உத்தரவிடும் படி கேட்டுக் கொள்கிறேன். என் அனுமதியுடன் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே அதில் இடம் பெறும் என எதிர்பார்க்கிறேன். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். அங்கு இதற்கான நீதி கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குதொடரவும் முடிவு செய்துள்ளேன்”, என்றார்[3]. பேஸ்புக்கிலும் இவ்வாறே உள்ளது[4]. நஸ்ரியா தரப்பிலிருந்து வாய் மொழி புகார் மட்டுமே வந்துள்ளதாகவும், மனுவாக புகார் பெறப்பட்டவுடன் இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[5]. இதுகுறித்து, இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, இருவரின் மொபைல் போன்களும் “சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தன.

நஸ்ரியாநசீம்  மற்றும் தஸ்லிமா நஸ்.ரீன் பிரச்சினைகள்: இந்தியாவில் இம்மாதிரியான பெயர்கள் கொண்ட பெண்களால் அடிக்கடி பிரச்சினைகள் வருகின்றன. தஸ்லிமா நஸ்.ரீன் பெயரை, நஸ்லிமா தஸ்.ரீன் என்றெல்லாம் போட்டு குழப்பினார்கள். நல்லவேளை, இங்கு நச்ரிமா நஸிம் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால், அதற்கும் ஒரு புகார் எழுந்திருக்கும். இருவரும் முஸ்லிம்கள் என்று தெரிய வருகிறது. ஒருவேளை, கூடிய சிக்கிரத்தில், முஸ்லிம் பெண்கள் நடிக்கலாமா, கூடாதா என்று கூட விவாதம் வரலாம். சானியா மிர்ஸாவை, குட்டைப் பாவாடைப் போட்டுக் கொண்டு விளையாடக் கூடாது என்றெல்லாம் மிரட்டப் பட்டார். இனி முஸ்லிம் நடிகைகள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம். தஸ்லிமா நஸ்.ரீனின் புடவை, தலைமுடி பிடித்து இழுக்கப்பட்டபோது, தாக்கப் பட்டபோது, யாரும் கண்டுகொள்ளவில்லை. எட்ந்த தமிழனும் வாயைத் திறக்கவில்லை. இனி தொப்புள் பிரச்சினை என்னவாகும் என்று பார்ப்போம்!

© வேதபிரகாஷ்

08-10-2013


[4] On her Facebook page, the actress has posted likewise – I have complained against the producer/director of Naiyaandi to Nadigar Sangham for cheating. They have used a body double to shoot the below scene without my permission. This is against contractual agreements. We will take legal action.

https://www.facebook.com/Nazriya4u

குறிச்சொற்கள்: , , , , , , ,

2 பதில்கள் to “தொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை காட்டி விட்டார்கள் – நடிகை நஸ்ரியா நசீம் புகார்!”

  1. செக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாக Says:

    […] [2] https://evilsofcinema.wordpress.com/2013/10/08/navel-shown-was-not-mine-compalining-actress/ […]

  2. நஸ்ரியா-நசீம்-சற்குணம் சமரசம், நசீமீன் சென்சார்ஷிப், உறிஞ்சப்படும் ரசிகர்களின் பணம் இவ்வாறு ம Says:

    […] [14] https://evilsofcinema.wordpress.com/2013/10/08/navel-shown-was-not-mine-compalining-actress/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: