குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – சரியான யோசனைதான்!

குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – சரியான யோசனைதான்!

குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்  –  இளம் நடிகைகளுக்கு கேயார் அறிவுரை[1]: இன்றைய இளம் நடிகைகள் எல்லோரும் குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசினார். விஷால் நடித்து, தயாரித்துள்ள பாண்டியநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய கேயார், “இப்போது இருக்கும் இளம் நடிகைகள் யாரும் தங்களது பட புரொமஷன்களுக்கு கூட வருவதில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதோ இங்கு இருக்கும் குஷ்புவை பற்றி நான் சொல்லியாக வேண்டும். நான் அவரை ஹீரோயினாக வைத்து 6 படங்கள் தயாரித்துள்ளேன். அவர் ஒரு படத்தின் புரொமஷன்களுக்கு கூட வராமல் இருந்தது கிடையாது. அதேமாதிரி அவர் நடிக்கிற படமாக இருந்தாலும் சரி, இல்லாத படமாக இருந்தாலும் சரி, விழா என்று அழைத்தால் உடனே வந்துவிடுவார். அதான் குஷ்பு. இன்றைய புதுநடிகைகள் எல்லாம் அவரைப்பார்த்து அந்த ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்”,  என்றார்[2].

இப்போது இருக்கும் இளம் நடிகைகள் யாரும் தங்களது படபுரொமஷன்களுக்கு கூட வருவதில்லை.  இது மிகவும் கண்டிக்கத் தக்கது: “புரோமஷன்” வேண்டும் என்றால், புரோமஷனுக்கு வரவேண்டும், அதாவது உயர வேண்டுமானால், தூக்க வேண்டும், தூக்கிவிட வேண்டும், என்கிறார். இளம் நடிகைகள் கேட்பார்களா என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.  சினிமாக்காரர்கள் எதனை ஊக்குவித்து, ஆதரித்து, உயர்ந்த, முன்னேற்றமடைய ஆவலுடன் இருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டு, இன்றைய நிலையில், சமூகத்தைக் கெடுப்பதில் தான் முன்னேறியிருக்கிறார்கள். அந்த ரீதியில், இவர்கள் “புரோமஷன்” என்று இறங்கி விட்டால், தலிபான், அல்-குவைதா, அல்-உம்மா, அல்-முஜாஹித்தீன் முதலிய இயக்கங்களே தேவையில்லை, இவர்களே இந்தியாவை அழித்து விடுவார்கள். ஆமாம், தொப்புளைக் கூட காட்ட மாட்டேன் என்ற நஸ்ரியா நசிமைப் பார்த்து ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஏன் கூறவில்லை?

விழா என்று‌ அழைத்தால் உடனே வந்து விடுவார் அதான் குஷ்பு: ஆஹா, கொண்டாட்டம் தான். ஒருவேளை, அந்த மாதிரி விழா என்று இவர் சொல்லவில்லையோ என்னமோ? ஒருவேளை, குஷ்பு வருகிறார் என்று பயந்து விட்டார்களோ என்னமோ? கேயார் அதையெல்லாம் விளக்கமாக சொல்லவில்லையே? “அழைத்தால் உடனே வந்துவிடுவார். அதான் குஷ்பு”, என்றால், இக்கால இளம் நடிகைகளுக்குப் புரியவேண்டுமே? குஷ்புவை வைத்து, ஒரு காலேஜை ஆரம்பித்து விடலாம், அதில் குஷ்பு எப்படி இளம் நடிகைகள் : “புரோமஷன்” வேண்டும் என்றால், புரோமஷனுக்கு வரவேண்டும், “அழைத்தால் உடனே வந்துவிடுவார்”, “ அதான் குஷ்பு”, முதலியவற்றின் மகத்துவத்தை விளக்குவார். அவர்களும் சந்தோஷமாகக் கேட்டுக் கொண்டு நடந்து கொள்வார்கள். இவர் எதிர்பார்க்கும் முறையில் நடந்து கொள்வார்கள். ஒருவேளை, ஒழுக்கத்தில் குஷ்புவைய்யும் மிஞ்சி விடுவார்கள்.

குச்புவிற்காக அலையும் தமிழர்களும்,  குஷ்புவிற்காக ஏங்கும் திராவிடர்களும்! தமிழ்செல்வன் என்ற நண்பர் தனது பதிலில், “ஏனய்யா, அந்தகுச்புவை, குஷ்புவை மறந்து விட்டீர்களே?’, என்று கேட்டிருக்கிறார். சுருக்கமாக சொல்வதானால், “குச்புவிற்காக அலையும் தமிழர்களும், குஷ்புவிற்காக ஏங்கும் திராவிடர்களும்” என்று முடித்துவிடலாம்! போதாகுறைக்கு குஸ்புவை, குஸ்பூவை, குஷ்புவை, குஷ்பூவை, குச்புவை, குச்பூவை, குசுபுவை, குசுபூவை………..திமுக தாங்குமா என்று கருணாநிதியைக் கேட்டுவிட்டார்களாம்! இவ்வாறு, குச்புவிற்காக தமிழர்கள் எப்படி அலைகிறார்கள் என்பது சுருக்கமாக விளக்கப்பட்டது[3]. அப்பொழுது, நமிதா போட்டி வேறு தாங்கமுடியவில்லை[4]. கற்பு பற்றி தீர்ப்பு வந்ததும், இனிமேல் இன் இஷ்டப்படி பேசமுடியும் என்று வேறு ஆர்பரித்தார்[5]. “செக்ஸ் டார்ச்சர்” என்று ஒரு தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்தபோது, கண்டித்தார்[6]. திமுகவில் சேர்ந்தவுடன் குஷ்புவின் அவதாரங்களும் அதிகமாகின[7]. சமீபத்தில் கூட, இவர் பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றி கருத்தைக் கூறியிருக்கிறார்.

செக்ஸ் – எக்ஸ்பர்ட் குஷ்பு சொன்னது[8]: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்டு! பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.

 • திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.
 • இப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.
 • அது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[9].
 • வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.
 • ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.
 • அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[10].

இதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா

© வேதபிரகாஷ்

15-10-2013


[1] தினமலர், சினிமா செய்திகள்

குறிச்சொற்கள்: , , , , , , , ,

4 பதில்கள் to “குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – சரியான யோசனைதான்!”

 1. vedaprakash Says:

  தி.மு.க மகளிரணி கூட்டம் – குஷ்பு புறக்கணிப்பு?
  அச்சிடுக மின்-அஞ்சல் விவரங்கள் வெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 03 அக்டோபர் 2013 10:55
  தி.மு.க மகளிரணி கூட்டம் – குஷ்பு புறக்கணிப்பு?

  சென்னை: திமுக மகளிர் அணி கூட்டத்தில் குஷ்பு கலந்துகொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

  தி.மு.க மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் மு.க.ஸ்டாலின், கனிமொழி பங்கேற்கிறார்கள். மாநில மகளிர் அணி தலைவர் நூர்ஜகான் பேகம் தலைமை தாங்குகிறார்.

  இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே திமுக தலைமையிடத்தில் இருந்து சற்று ஒதுங்கியே இருக்கும் குஷ்பு இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. எனவே குஷ்பு இக்கூட்டத்தில் கலந்து கொள்வாரா? என்ற பரபரப்பு கட்சியில் நிலவுகிறது.

 2. பெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏ Says:

  […] [10] https://evilsofcinema.wordpress.com/2013/10/15/association-head-advises-to-emulate-from-khushboo-fact… […]

 3. பெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏ Says:

  […] [10] https://evilsofcinema.wordpress.com/2013/10/15/association-head-advises-to-emulate-from-khushboo-fact… […]

 4. நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (2)! | சினிமா Says:

  […] [13] https://evilsofcinema.wordpress.com/2013/10/15/association-head-advises-to-emulate-from-khushboo-fact… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: