உடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா!

உடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா!

இதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்

இதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்

ரம்யாவின் ரம்யமான புகைப் படங்கள்: பாராளுமன்ற எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்சென்று மொட்டையாக செய்திகள் தமிழில் வந்துள்ளன. ரம்யா தமிழில் ‘குத்து’, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். அப்பொழுது ஊடகங்கள் கவர்ச்சி நடிகை ரம்யா எம்.பியாக தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று குறிப்பிட்ட அவரது கவர்ச்சியான படங்களை வெளியிட்டன[1]. இந்தியா-டிவி-செனல் செய்திதளமோ ஏகபட்ட புகைப்படங்களை வெளியிட்டது[2]. “குத்து ரம்யா” தேர்தலில் வென்றார் என்றே இன்னொரு இணைதள செய்தி குறிப்பிட்டது[3]. இப்புகைப்படங்கள் எல்லாமே காமத்தைத் தூண்டும் வகையில்தான் உள்ளன. அவ்வாறு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுதான் அவர் அவ்வாறு உடம்பைக் காட்டியுள்ளார். இதைப் பார்ப்பவர்கள் ரம்யாவைப் பற்றி காமத்துடன் தான் பார்ப்பார்களே தவிர, எந்த மரியாதையுடன் பார்க்க மாட்டார்கள். உண்மையிலேயே, மக்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்திருந்தால், அப்படங்கள் அனைத்தையும் போடக்கூடாது என்று சொல்லிருக்க வேண்டும். ஆனால், முடியாது.

இதைப் பார்க்கும் மக்கள், தொடத்தானே துடிப்பார்கள், மரியாதை எங்கு வரும்?

இதைப் பார்க்கும் மக்கள், தொடத்தானே துடிப்பார்கள், மரியாதை எங்கு வரும்?

தேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன்: இவ்வாறு சொன்னது கூட பணம் வரும் அதனால், தாராளமாக அவ்வாறு இருந்து விடலாம் என்று நினைத்திருக்கலாம். இருப்பினும், சினிமாத் தொழில், குறிப்பாக கவர்ச்சி நடிகை என்பதால் தான், மக்கள் ஓட்டளித்துள்ளனர். தேர்தலில் அதன்படியே வென்றதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றால், சம்பந்தப் பட்டவர்கள், தொட்டுப் பார்த்தவர்கள் அவ்வாறு நினைக்க மாட்டார்களே. முன்னமே தான் தேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்[4]. அவர் கடைசியாக நடித்த ‘நீர்டோஸ்’, ஆர்யன், தில் கி ராஜா போன்ற கன்னட மற்றும் இதர மொழி படங்கள் பாதியில் நிற்கின்றன.

இதைப் பார்க்கும் மக்கள், தொடவா நினைப்பார்கள், அதற்கும் மேலாகத்தானே நினைப்பார்கள்!

இதைப் பார்க்கும் மக்கள், தொடவா நினைப்பார்கள், அதற்கும் மேலாகத்தானே நினைப்பார்கள்!

படங்கள் பாதியில் நிற்பதனால் நஷ்டமாம்: தொழில் என்றாலே லாபம் – நஷ்டம் பார்ப்பது வழக்கமாகி விட்டது. சஞ்சய் தத் கூட இதே பாட்டுதான் பாடுகிறார். இதனால் சுமார் ரூ.18 முதல் 20 கோடி இழப்பு ஏற்படுமாம்[5]. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. “அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ.4 கோடியை திருப்பி தர வேண்டும்”, என்றார் தயாரிப்பாளர். இவரும் நடிகர் என்பதால், “பாம்பின் கால் பாம்பறியும்” என்று சொல்லியிருப்பார். இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார்.

இப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போட்டார்களா?

இப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போட்டார்களா?

மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்: அவர் கூறியதாவது: “மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா? என்னால் அப்படி செய்ய முடியாது”, என்றாராம்[6]. உண்மையில் கவர்ச்சியாக, செக்ஸியாக நடித்ததால் தான் பிரபலம் ஆகியுள்ளார், அதனால், தேர்தலில் வெல்லவும் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சிற்கு இப்பொழுது, இத்தகைய கவர்ச்சி நடிகைகள் தேவவைப்படுகிறார்கள். அதனா, இவருக்கு “மௌசு” அதிகமாகவே இருக்கும். ஜெயசுதா, தீபா போன்ற கவர்ச்சி நடிகைகள் காங்கிரஸில் ஐக்கியம் ஆகி மறைந்து விட்டதை கவனிக்க வேண்டும்.

அடாடா, பாவம் ஜனங்கள், இப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போடாமலா இருப்பார்கள்?

அடாடா, பாவம் ஜனங்கள், இப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போடாமலா இருப்பார்கள்?

சினிமாவும், அரசியலும், ஒழுக்கமும்: இன்றைய நிலையில் சினிமாக்காரர்கள் பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும் மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். சினிமாக்காரர்கள் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருவதால், அந்த தொடர்பு, இணைப்பு, சேர்ப்பு, சம்பந்தங்கள் நெருக்கமாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு தேசிய கட்சியும், நடிகைகளை சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாகத்தான் இருக்கின்றன. நடிகைகள் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும், ஏனெனில், மக்கள் அவர்களை அவர்கள் முன்னர் எப்படி திரையில் தோன்றினார்கள், மகிழ்வித்தார்கள் என்று நினைத்துதான், பார்க்க வருவார்களே தவிர, இப்பொழுது, அடக்கமாகி விட்டார்கள், உடலைக் காண்பிக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைப்பதில்லை. இக்கதைதான், ரம்யா விசயத்தில் நடக்கிறது. முன்னர், ஆஸம்கான் ஜெயபிரதா விசயத்தில் அளவிற்கு அதிகமாக, வரம்புகளை மீறியதை கவனிக்கலாம். அமர்சிங் இல்லையென்றால், அவர் கதி அதோகதியாகி இருந்திருக்கும்.

Ramya Cong MP1சினிமா செக்யூலரிஸம் என்று யாதாவது சித்தாந்தத்தை உருவாகுவார்களா?: அரசியலில் மதத்தைச் சேர்க்கக் கூடாது, மதத்தில் அரசியலை சேர்க்க கூடாது என்றெல்லாம் போதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் போலித்தனம் தான் வெளிப்பட்டுள்ளது. இங்கு, யாரும் அரசியலோடு சினிமா சேர்க்கக் கூடாது, சினிமாவுடன் அரசியல் சம்பந்தப் படக்கூடாது என்று யாரும் அறிவுரை வழங்குவதில்லை. மேலும், சினிமா என்பது கோடிகளை அள்ளும் வியாபாரமாக இருப்பதால், அரசியல்வாதிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சினிமாத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தாசரி நாராயண ராவ் என்ற சோனியாவிக்கு நெருக்கமானவர்[7], சமீபத்தைய நிலக்கரி ஊழலில் சம்பந்தப் பட்டுள்ளார்[8]. நவீன் ஜின்டால் கம்பெனிகள் இவருக்கு ரூ 2.5 கோடிகள் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்துள்ளது[9]. ஆனால், சோனியாவுக்கு வேண்டியவர் என்பதால் அமுக்கி வாசிக்கப் படுகிறது.

© வேதபிரகாஷ்

31-10-2013


[5] According to sources in the film industry, Rs.18 crore to Rs. 20 crore has been invested in four films: Neer Dose, Aryan, Dil Ka Raja and another yet-to-be-named bilingual film, starring Ms. Ramya.

http://www.thehindu.com/news/national/karnataka/ramyas-political-innings-leaves-film-producers-high-and-dry/article5282515.ece

[7] Said to be a confidante of Congress President Sonia Gandhi, Dasari became active in politics after the Congress came back to power in 2004.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “உடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா!”

  1. “ஸ்டுபிட்” என்று பொறியியல் வல்லுனரை திட்டிய எம்.பியான கவர்ச்சி நடிகை – அதிகாரம் திமிரை ஏற்றுக Says:

    […] [3] https://evilsofcinema.wordpress.com/2013/10/31/glamorous-sexy-actresses-cannot-expect-decency-in-poli… […]

  2. பெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏ Says:

    […] [9] https://evilsofcinema.wordpress.com/2013/10/31/glamorous-sexy-actresses-cannot-expect-decency-in-poli… […]

  3. பெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏ Says:

    […] [9] https://evilsofcinema.wordpress.com/2013/10/31/glamorous-sexy-actresses-cannot-expect-decency-in-poli… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: