பெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏன் நடிக்கிறார்கள்?

பெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏன் நடிக்கிறார்கள்?

சினிமாக்காரர்களைப் பற்றிய செய்திகளை அள்ளிவீசும் ஊடகங்கள்: நடிகைகள் இப்பொழுதெல்லாம் எல்லா பிரச்சினைகளைப் பற்றியும் தங்களது கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அல்லது ஊடகங்கள் ஓடிப்போய் அவ்வாறன செய்திகளை வெளியிடுகிறார்கள் எனலாம்.  அஞ்சலி பற்றி தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தொப்புள் நடிகையின் காலில் ரத்தம் சொட்டியது[1], ஆர்யாவுக்குப் பிடித்த ஜோடி நயனதாராதான்[2], டைரக்டர் வீட்டில் திருட்டு[3], குள்ளமணிக்கு உடம்பு சரியாக இல்லை, மருத்துவமனையில் அனுமதி, தொடர்ந்து கவலைக்கிடம்[4] என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இவற்றையெல்லாம் தமிழர்கள் கேட்டார்களா அல்லது முகவும் முக்கியமான விசயங்களா என்று திராவிடர்கள் அல்லது தமிழர்கள் தாம் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.

வரம்புகளை மீறும் சினிமாக்காரர்கள்: சினிமாக் காட்சிகளில் வரம்புகளை மீறுவதில் அவர்களுக்கு லாபம் இருக்கலாம். ஆனால், தங்களது சினிமாக் கவர்ச்சீயை அரசியலோடு இணைத்து, அதிகாரத்தைப் பெற்று அதனால்,. சாதாரணமான மக்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று போலக் காட்டிக் கொளும் போக்கு இப்பொழுது அதிகமாகியுள்ளது. இதனால் சூட்டிங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்பது[5], எம்.பியான கவர்ச்சி நடிகைஸ்டுபிட்என்று பொறியியல் வல்லுனரை திட்டுவது[6], எம்.பி என்னைத் தொட்டுவிட்டார் என்பது, புகார் கொடுப்பது[7], வாபஸ் வாங்குவது[8],உடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்பது[9], குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்  –  இளம் நடிகைகளுக்கு  அறிவுரை கூறுவது[10], என்று பலவிதமாகத்தான் நடந்து வருகிறார்கள்.

சின்னத்திரை – பெரியத்திரை மோதல்கள்: தொலைக்காட்சி தொடர்களை மிஷ்கின் விமர்சித்த பிறகு சின்னத்திரையில் இயங்கும் நடிகைகளுக்கு கோபம் பொங்கிவிட்டது. இப்பொழுது வருகின்ற படங்களெல்லாம் பார்க்கின்ற மாதிரியா இருக்கின்றது என்று கிடைக்கிற கேப்பில் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்[11]. பெரியதிரை-சின்னதிரை எதுவானாலும், சினிமாக்காரர்களின் கலாச்சாரம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்று தேவயானி தெரிவித்துள்ளார்[12]. அவர் நடித்த படங்களிலேயே அவ்வாறு இருந்ததா, இல்லையா என்று அவர் மறந்து விட்டார் போலும்!

பெரும்பாலான  படங்களில் காமெடி என்ற  பெயரில்  பெண்களை  கேலி,   கிண்டல்  செய்கிறார்கள்!: பட்டாளம்,’ ‘காதல் சொல்ல வந்தேன்’ ஆகிய படங்களில் நடித்த பாலாஜி நாயகனாக நடிக்கும் படம் ‘மெய்யழகி’. நாயகியாக ஜெய்குவேதனி நடித்துள்ளார். ஆர்.டி.ஜெயவேல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதனிடையே மெய்யழகி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதன் டிரைலரை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி வெளியிட, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார். விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை தேவயானி, ‘‘இப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வருவது குறைந்து விட்டது. ‘மெய்யழகிநல்ல கதையம்சம் கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்! மச்சி, மச்சான் என்று வசனம் பேசுகிறார்கள்! குடிக்காரர்கள் ஆட்டம் போடும்டாஸ்மாக்காட்சிகளும் நிறைய இடம் பெறுகின்றன. இது சமூகத்துக்கு நல்ல விஷயமாக தோணவில்லை”, என்றார்[13]. இப்போது வரும் காமெடிகளில் கெட்ட விஷயங்களை நிறைய காட்டுகிறார்கள், அதில் காமெடியே இல்லை, காமெடிகளை மனைவி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்று வடிவேலு எடுத்துக் காட்டியுள்ளார்[14].

சினிமாவில்  டாஸ்மாக்  காட்சிகள்: நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம்[15]: சினிமாவில் டாஸ்மாக் காட்சிகளும், பெண்களை கேலி செய்யும் காட்சிகளும் அதிகரித்துவிட்டதற்கு நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம் தெரிவித்துள்ளனர்[16]. தொடர்ந்து பேசிய நடிகை சோனாவும், படத்தில் இடம்பெறும் ‘டாஸ்மாக்’ காட்சிகள் குறித்து பேசினார். ‘‘சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் இடம் பெறுகிறது. அது மாதிரிடாஸ்மாக்காட்சிகள் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு’’ நிறைய படங்களில் டாஸ்மாக் காட்சிகளை வைக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம் இல்லை’’, என்றார்!

மச்சி, மச்சான்  என்று  வசனம்  பேசுகிறார்கள்! தமிழக சினிமா பண்டிதர்கள் தமிழர்களுக்கு பல புதிய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சின்னவீடு, பெரியவீடு என்ற சொற்களுக்கு விகற்பமான பொருள் சேர்த்தவர்களே அவர்கள் தாம். தமிழைக் கெடுத்தவர்கள், சீரழித்தவர்களும் அவர்கள் தாம். அவர்களது வசனம், பாடல்கள் எல்லாமே கேவலமாகத்தான் இருக்கின்றன. இந்த அழகில் சிறந்த வசனக்கர்த்தா, காமெடி என்றெல்லாம் பட்டங்கள், விருத்துகள் வேறு கொடுக்கிறார்கள். கலைமாமணி பட்டங்களை வாங்கிய நடிக-நடிகைகளை மற்ற துறையினரோடு நிற்கவைத்துப் பார்த்தாலே, அவர்களுக்கு அளிக்கப்படும்ம் அந்த யோக்கியதை நியாயமா என்று தெரிந்து விடும். சமுதாயத்தை நல்வழிபடுத்தும் எத்தனையோ கோடானுகோடி மக்களை பாராட்ட மறந்து விடுகிறார்கள். ஆனால், இத்தகைய ஆட்களுக்கு பட்டமபதவிகள் எல்லாம் கொடுக்க்ப் பாடுகின்றன. பிறகு அவர்களே தங்களது நிலையைப் பற்றிப் பேசிப் புலம்புவதேன்?

© வேதபிரகாஷ்

15-11-2013


[12] தினமணி, இப்போது வரும் பெரும்பாலான படங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்: நடிகைகள் ஆவேசம், First Published : 14 November 2013 02:10 PM IST

குறிச்சொற்கள்: , , , , ,

ஒரு பதில் to “பெண்களை / நடிகைகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்றால் அத்தகைய காட்சிகளில் பெண்கள் / நடிகைகள் ஏன் நடிக்கிறார்கள்?”

  1. ஜாகிர் உஸைன் கைதும், சினிமா வல்லுனர்களும், பாலியல் தொந்தரவுகளில் உருவாகும் பரிமாணங்களும்! | சி Says:

    […] [5] https://evilsofcinema.wordpress.com/2013/11/15/if-women-are-degraded-in-characterization-in-cine-fiel… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: