அந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்?

அந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்?

இந்தியாவை பாதித்து வருகின்ற அந்நியநாட்டுப் பெண்கள்: சரித்திரத்தில் மற்றும் இக்கால நிகழ்வுகளில் எப்படி அயல்நாட்டுப் பெண்கள் இந்தியாவை பாதித்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மையே. அரசியலில் பெண்களை நுழைத்து ஆட்சிகளைக் கவிழ்ப்பது அமெரிக்காவின் வேலையாக இருந்து வந்துள்ளது. இவை இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் இந்தியாவிலேயே காணலாம். பூடான், நேபாள், சிக்கிம்[1] போன்ற நாடுகளில் பெண்களை வைத்து ஆட்சி மாற்றம் மற்றும் அரச வம்சமே பூண்டோடு ஒழிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியவிரோத சக்திகள் ஆட்சிக்கு வர வகைசெய்துள்ளது. நேபாளத்தைப் பொறுத்த வரையில், “உலகத்திலேயே ஒரே ஒரு இந்து நாடு” என்ற அங்கீகாரத்தை மாற்றி, அங்கு மாவோயிஸ்ட்டுகள் ஆட்சி ஏற்பட வழிசெய்துள்ளது[2]. இதனால், சீனா ஆதிக்கம் அடைந்து, இந்தி எல்லைகளில் அத்துமீறல்களை செய்து வருகின்றது. அதுமட்டுமல்லாது, ஜிஹாதிகள், போதை மருந்துக்காரர்கள், போலி ரூபாய் நோட்டுகள் விநியோகம், விபச்சாரம் முதலிய வியாபாரங்களை செய்து வருபவர்கள் நேபாளத்தில் சுகமாக இருந்து கொண்டு, பீஹார் மூலம் நுழைந்து இந்தியாவைப் பாதித்து வருகின்றனர். இந்நிலையில் தான், பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோனை தமிழகத்தார் வரவேற்று நிர்வாணத்தை ருசிப்பதற்கு தயார்படுத்தி வரும் வேலைகளை, தமிழர்களே செய்து வருவது வெளியாகியுள்ளது.

இந்து  மக்கள்  கட்சி  எதிர்ப்பு: இந்தச் செய்தி இந்து மக்கள் கட்சி அலுவலகத்தையும் எட்டிய நிலையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் அந்தக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். “சன்னி லியோன் போன்றவர்கள் இங்கே நடிக்க வந்தால், சென்னையில் நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக நடமாடும் இடமாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் பண்பாட்டுக்கும் தவறான முன்மாதிரியாக ஆகிவிடும். எனவே சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே செல்போன் சிப்பிகளிலும், இணையதளங்கள் வழியாகவும் வெளியாகும் நீலப்படம் எனும் நஞ்சை தடுக்க வக்கற்றவர்களாக இருந்து வருகிறோம். காரணம், படுக்கையறை என்பது தமிழ்ப்பண்பாட்டில் மட்டுமல்ல, எல்லாக் கலாச்சாரங்களிலும் அந்தரங்கமானது. அது அந்தரங்கமாக இருக்கும் வரைதான் தமிழ்ப்பண்பாட்டை பேணிக்காக்க முடியும். இதனால் நீலப்படம் பார்ப்பதும், அதை எதிர்ப்பதும் நமது பண்பாட்டைக் காப்பதில் முக்கியமான செயல்திட்டம் ஆகும். எனவே நீதிமன்றம் சென்றாவது சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பதைத் தடுப்போம்” என்று கூறுகிறார். இது தமிழ் சினிமாவில் தவறான முன்மாதிரியை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனால் சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இந்துமக்கள் கட்சியின் ஆர்பாட்டம் உண்மையோ அல்லது பிரபலம் தேடும் காரியமோ தெரியவில்லை, ஆனால், நீலப்பட நடிகை சன்னி லியோனை, தமிழகத்தில் அனுமதிப்பது ஆபத்தான விசயம் தான்.

புளூ பிளிம் புகழ் சன்னி  லியோன்  யார்?: கனடா நாட்டைச் சேர்ந்த 32 வயது விளம்பர மாடல் சன்னி லியோன். இவர் ட்ரிபிள் எக்ஸ் எனப்படும் பல நீலப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ‘ஜிஸ்ஷும் 2’ என்ற இந்திப்படத்தில் அறிமுகமானதன் மூலம், அதீதக் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தி வெகுஜனச் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நட்சத்திரம் ஆகிவிட்டாலும், நீலப்படங்களில் நடப்பதையும் சன்னி லியோன் நிறுத்தவில்லை என்று தெரியவருகிறது. கடந்த ஆண்டும் இவர் நடித்த நீலப்படங்கள், அமெரிக்க மற்றும் கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தயாநிதி அழகிரி இவரை தமிழகத்திற்கு இறக்குமதி செய்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

கோடம்பாக்கத்தில்  நுழைந்தார்   சன்னி  லியோன்[3]…….. வடகறி  படத்தில்   குத்தாட்டம்,   வடகறியில்  சன்னிலியோன்   இப்படி  வர்ணிக்கும் தமிழ் ஊடகங்கள்: ராஜா ராணி படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்த இளம் நாயகன் ஜெய் நடிப்பில் தயாராகி வரும் ‘வடகறி’ படத்தில்தான் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்ட நடனமாட இருக்கிறார். அதாவது ஜெய்யுடன் ஒரு கனவு காட்சியில் நடனக் காட்சியில் ஆடுகிறாராம். சரவண ராஜன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பிரபலத் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தநிலையில் ஒரு பாடலுக்குச் சன்னி லியோனை நடனமாட ஒப்பந்தம் செய்திருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் தளத்தில் அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்[4]. சன்னியும் தமில் சினிமாவில் நடிக்க சந்தோஷம் என்று டுவிட்டரில் சொல்லியிருக்கிறார்[5]. அவருடைய ரோலைப் பற்றி கேட்டதும் ஒப்புக்கொண்டு திருப்தியைத் தெரிவித்துள்ளாராம்[6]. சரவண ராஜன் சொல்கிறார்[7], அந்நடனக் காட்சி வண்ணமயமாக இருக்கும், ஆபாசமாக இருக்காது! படம் வந்த பிறகுதான் தெரியும்.

 

போர்னோகிராபி  புதிதல்ல  [8]: மூடர் கூடம் என்ற படத்தின் மூலம், தரமான இயக்குனராக விமர்சகர்களால் கொண்டாடப்படும் நவீன், இதில் எதிர்க்க ஒன்றுமில்லை என்கிறார். ஆமாம், நடிகர்களுக்குக் கொண்டாட்டம் தான், புதியதாக இப்படி தாராளமான நடிகைகளுடன் கொண்டாட்டம் போடுவார்கள். “போர்னோகிராபி என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. இங்கே வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க தகுந்த படம் என்ற ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படங்கள் வெளிவந்துகொண்டுதானே இருக்கிறது. அதை நாம் எதிர்க்கவில்லையே? சில்க் ஸ்மீதாவை நாம் ஒரு கலைஞராக கொண்டாடுகிறோம். அவரும் ‘பி’ கிரேட் நீலப்படங்களில் நடித்தவர்தான். சன்னி லியோன் நமது நாட்டில் வந்து முழுநீள நீலப்படங்களில் நடிக்காதவரை அவரை எதிர்க்கத் தேவையில்லை.” என்று கூறும் நவீன் “தமிழ் சினிமாவுக்கு கவர்ச்சி ஒரு வலிமையான கச்சாப்பொருளாக இருப்பதை நாம் மறந்துவிட்டுப் பேசக் கூடாது” என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல பேசுகிறார். தமிழர்களுக்கு ஏ, பி. சி கிரேட் எல்லாம் தெரியும் போலிருக்கிறது. அவ்வாறே நிர்வாணத்தை பகுத்திருக்கிறார்கள் பொலும், ‘பி’ கிரேட் நீலப்படங்களில் நடித்தவர் சில்க் ஸ்மீதா என்றால், மற்ற நடிகைகள் எந்த கிரேடில் நடித்தார்கள் என்று விள்ளக்கப் படுமா?

© வேதபிரகாஷ்

26-11-2013


[1] ஹோப் குக் என்ற அமெரிக்க பெண்மணி 1963ல் 12வது ராஜாவைக் கல்யாணம் செய்து கொண்டாள். 1973ல் இந்தியாவுடன் சிக்கிம் ஒப்பந்தம் செய்து கொண்டது. விவாகரத்து செய்து கொண்டு தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்று விட்டாள்.

[2]ஜூன் 1, 2001ல் இளவரசன் தீபேந்திரா ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டான். இது சி.ஐ.ஏ.வின் திட்டம் என்றும் கூறப்பட்டது.

http://articles.timesofindia.indiatimes.com/2011-06-01/south-asia/29607602_1_royal-massacre-birendra-and-nine-tribhuvan-sadan

குறிச்சொற்கள்: , , , , , , ,

ஒரு பதில் to “அந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்?”

  1. ஜாகிர் உஸைன் கைதும், சினிமா வல்லுனர்களும், பாலியல் தொந்தரவுகளில் உருவாகும் பரிமாணங்களும்! | சி Says:

    […] [9] https://evilsofcinema.wordpress.com/2013/11/26/why-porn-nude-actress-should-be-allowed-to-act-in-tami… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: