நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள்!

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள்!

 

இந்துவின் நமீதா மோகமா, பத்திடரிகா தர்மத்தை உதறும் நிலைமையா?

இந்துவின் நமீதா மோகமா, பத்திடரிகா தர்மத்தை உதறும் நிலைமையா?

நமீதாவை  வைத்துக்  கொண்டு  கவர்ச்சி  அரசியல்  –  செய்தி  தயாரித்த  விதம்: திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நமீதா, அங்கு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாக தெரிவித்தார் என்று “தமிழ் இந்துவே” செய்தியை நமிதாவின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது[1]. அப்போது சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என்று நமீதா கேட்டதாக செய்திகள் வெளியானது என்றும் அது கூறுகிறது. இதற்கு நமீதா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் என்றும் நீட்டுகிறது. சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா? என்று  சரத்குமாரின் கட்சியை கிண்டலடித்ததாக மீடியாவில் வந்த செய்திக்கு மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளார் நமீதா[2]. இதுபற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் என்று அளக்கிறது இன்னொரு ஊடகம்[3]. முன்னர் அவர் அரசியலில் சேருவார் என்று செய்திகளை வெளியிட்டன[4]. “அரசியலில் கலமிரங்கவிருக்கும் நமீதா” என்று வீரகேசரி தலைப்பிட்டுள்ளது[5]. விகடன் தனக்கேயுரிய பாணியில் “அரசியலில் குதிக்கிறார் நமீதா”என்கிறது[6]. தினத்தந்தி, தினகரன்[7], தினமலர் என்று யாரும் நமிதாவை விட்டு வைக்கவில்லை.

நமீதா  பேசும்  விதமும்,   செய்தியாளர்களின்  செய்தி  உருவாக்கும்   திறமையும்: “ஆம் ஆத்மி கட்சி” போல, திடீரென்று புகழ் பெற்றுவிடலாம், முதல்வராகி விடலாம் என்று எல்லோருக்கும்ம் ஆசை வந்துள்ளது தெரிகிறது. ஆனானப் பட்ட ராகுல் காந்தியே ரூ.400 கோடிகள் செலவழித்து தன்னை மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் வந்துள்ளன. பொதுவாக, நமீதாவைப் பொறுத்த வரையில் தமிழில் அவரால் சரியாகப் பேச முடியாது. எல்லா வார்த்தைகளையும் தமிழில் சொல்ல முடியாததால், ஆங்கிலத்தை உபயோகிப்பார். நமது தமிழ் ஊடகர்கள் அதனை அரைகுறையாகப் புரிந்து கொண்டு செய்திகளை வலிய உருவாக்கி, வெளியிட்டு கதை செய்துள்ளன என்று தான் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நமீதா கவர்ச்சியைக் காட்டினால் காசு கிடைக்கிறது என்பது போல, இவர்கள் இப்படி செய்திகளைக் காட்டினாலும் காசு கிடைக்கும் என்றுதான் அலைகிறார்கள்.

நமீதாவின்  தன்னிலை  விளக்கம்: நமீதாவின் விளக்கத்தில், “நான் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது பத்திரிகை நண்பர்கள் –

 • நீங்கள் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வருகின்றனவே என்று கேட்டார்கள். ’ஆமாம்.. ஆர்வமுள்ளது’ என்று பதிலளித்தேன்.
 • எந்த கட்சியில் இணையப்போகிறீர்கள் என்று கேட்டார்கள். ’இப்போதைக்கு சொல்லமுடியாது. இந்த மாதம் இறுதிவரை பொறுத்திருங்கள்.. சொல்கிறேன்’ என்று பதிலளித்தேன்.
 • ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதே? என்றார்கள்.. ’ஆம் ஆத்மி என்றால் சாதாரண மனிதர்கள் என்று அர்த்தம். சாதாரண மனிதர்களும் அரசியலுக்கு வரலாம் என்பதை நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.’ என்று பதிலளித்தேன். ஆனால் எங்கும் நான் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போகிறேன் என்றோ அதற்கு தமிழகத்தில் தலைமை தாங்குவேன் என்றோ பதிலளிக்கவில்லை..
 • பின் நரேந்திர மோடி பற்றி கேட்டார்கள்.. ’குஜராத் மாநிலத்தை சிறப்பாக ஆக்கியவர். திறமையாக ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது’ என பதிலளித்தேன்.

நான்  தமிழில்,   தமிழ்நாட்டு  அரசியலில்  புலமை  பெற்றவள்  கிடையாது.   ஒப்புக்  கொள்கிறேன்: பின் கேள்விகள் சினிமா பற்றி திரும்பியது.. நான் என்ன படங்கள் செய்கிறேன் என்று பேசிக்கொண்டிருந்தோம்.. அப்போது ஒரு நிருபர் –

 • சரத்துடன் கூட்டணி சேர்வீர்களா என்று கேட்டார். ’அதற்கென்ன.. எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாச்சே சேரலாம்’ என்று பதிலளித்தேன்.
 • அப்போது அவர் ’மேடம்.. நான் அவரது கட்சிக்கூட்டணி பற்றி கேட்டேன்’ என்றார். ’அப்படியா.. நான் சினிமா பற்றி கேட்டீர்கள் என்று நினைத்து பதில் சொன்னேன். அரசியல் பற்றி கேட்டீர்களா.. இப்போது பதில் சொல்லமுடியாது.. ஒரு மாதம் பொறுத்திருங்கள்’ என்று பதிலளித்தேன்.
 • ஆனால் அதை சரத் கட்சி வைத்துள்ளாரா என்று கேட்டதாக மாற்றி தவறாக எழுதி விட்டார்கள். அந்த அவசர பரபரப்பில் நான் சொன்ன பதிலை மாற்றி எழுதி விட்டார்கள்.
 • உண்மைதான்.. நான் தமிழில், தமிழ் நாட்டு அரசியலில் புலமை பெற்றவள் கிடையாது. ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நான் திரையுலகில் இருக்கிறேன். சரத் சார் நடிகர் சங்கத் தலைவராக இருக்கிறார். அவர் நடிகர் சங்கத்தையே ஒற்றுமையுடன் குடும்பம் போல கொண்டு செல்பவர். அவரது குடும்ப நண்பராக இருக்கிறேன். அவர் கட்சி நடத்துவது கூட தெரியாமலா இருக்கப்போகிறேன்…? எனவே சரத்சார் பற்றி நான் சொன்ன கருத்தை மாற்றி பதிவு செய்துகொண்டால் சந்தோசப்படுவேன்… உங்கள் ஆதரவு என்றும் தேவை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ” இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.

சரத்  கட்சி   வைத்துள்ளாரா  என்று   கேட்டதாக  மாற்றி  தவறாக   எழுதி  விட்டார்கள்: இப்படி நமீதாவே சொல்லியிருக்கிறர் என்றால், இவர்களது நிலையென்ன என்பதை அறிந்து கொள்ளலம். “உண்மைதான்.. நான் தமிழில், தமிழ் நாட்டு அரசியலில் புலமை பெற்றவள் கிடையாது. ஒப்புக்கொள்கிறேன்”, என்கிறார் நமீதா, ஆனால், இவர்களுக்கு அந்த பண்பு கூட இல்லையே. வெயில்-மழையில் நின்று கொண்டிருந்தோம் ஆனால், ஸ்னேஹா வரவில்லை என்றுதானே ஏங்கிக் கொண்டிருந்தார்கள். ராதா-பைசூல் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நல்லவை நடக்கின்றன அவைப் பற்றியும் செய்திகள் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இல்லையே?

வேதபிரகாஷ்

© 08-01-2014

 


4 பதில்கள் to “நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள்!”

 1. குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா Says:

  […] [5] https://evilsofcinema.wordpress.com/2014/01/08/news-manufacture-with-the-clamorous-actress-namita-ne… […]

 2. குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா Says:

  […] [5] https://evilsofcinema.wordpress.com/2014/01/08/news-manufacture-with-the-clamorous-actress-namita-ne… […]

 3. நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் -செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)! | சினிமா Says:

  […] [1] https://evilsofcinema.wordpress.com/2014/01/08/news-manufacture-with-the-clamorous-actress-namita-ne… […]

 4. நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் -செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)! | சினிமா Says:

  […] [1] https://evilsofcinema.wordpress.com/2014/01/08/news-manufacture-with-the-clamorous-actress-namita-ne… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: