புவனேஸ்வரியும், கமல் ஹஸனும் – சினிமாவின் உற்பத்திப்பொருட்கள், சமூகசீரழிப்பாளிகள், ஆனால் ஊடகங்களுக்கு லாபங்கள்.
புவனேஸ்வரியும், கமல் ஹஸனும் – சினிமாவின் உற்பத்திப்பொருட்கள்: புவனேஸ்வரியும், கமல் ஹஸனும் தமிழ் ஊடகங்களில் மிகவும் பிரசித்தினனவர்கள். ஒருவேளை யார் பிரபலம் என்று ஒரு இணைதள போட்டி வைத்தால், அதில் பங்கு கொள்ளும் அறிவிஜீவிகள் அதிகமாகவே இருப்பார்கள். இருவருமே பெண்ணியத்தை, பெண்களை, சமூகத்தை நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகமாகவே பாதித்துள்ளார்கள் எனலாம், சினிமா ஒரு தொழில் என்றாகி விட்டப்படியால், சினிமாவின் உற்பத்திப்பொருட்கள் சமூகத்தில் விற்கப்படுகின்றன, நுகர்வோர்கள் காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதெல்லாம், ஒரு படம் வெளிவந்தாலே எந்த்தனை கோடிகள் கிடைக்கும் என்று கணக்குப் பார்க்கிறார்கள். பிறகு, கோடிகளைக் கொட்டி சினிமா தொழிலை செய்பவர்களிடம், நாணய, நேர்மை, தர்மம், நியாயம் போன்ற சுத்தமான சமாசாரங்களை எதிர்பார்க்க முடியாது. ஒரு பெண் நடிகையாகி, எப்படி நூற்றுக்கணக்கான சினிமா முதலாளிகளால் தொடப்படுகிறாளோ, அப்பொழுதே அவளது ஐங்குணங்களும் போய் விடுகின்றனவோ, அதே போல, ஒரு ஆணும் நடிகனாகி விட்ட பிறகு, தனது பிரமச்சரியத்தைக் காப்பதில்லை. அவனால் நூற்றுக்கணக்கான சினிமா பெண் தொழிலாளிகள் பாதிக்கப்படுகிறார்கள், சீரழிக்கப்படுகிறார்கள். பணம், புகழ் கிடைக்கும் வரையில், தொழில் நன்றாகவே நயந்து கொண்டிருக்கும். பிறகு, யாரும் அவர்களை சீண்ட மாட்டார்கள். அந்நிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும் அவர்கள் எல்லாவிதங்களிலும் தயாராகவே இருப்பார்கள்.
சட்டமீறல்களில் புவனேஸ்வரியும், கமல் ஹஸனும்: சினிமாவில் நடிப்பு மற்றும் உற்பத்தி என்ற தொழிகளில் இறங்கியுள்ள இருவருக்கும் அவரவர் நிலையில் ஏகப்பட்ட கொடுக்கல்-வாங்கல் இருக்கவே செய்துள்ளன. ஆர்.பி.எப். நிறுவனத்தை திவாலாகியதற்கு காரணம் கமல் ஹஸன் என்றும் சொல்லப்பட்டது. பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, திருமணம் ஆகாமலேயே குழந்தைகளைப் பேற்றுக் கொண்டது, இப்பொழுதும் கல்யாணம் இல்லாமலேயே இன்னொரு மணமான பெண்ணை அல்லது விவாக ரத்து பெற்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது என்ற பல சட்டமீறல்களையும் செய்துள்ளார் கமல் ஹஸன். ஆனால், சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அல்லது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்யவில்லை என்ற காரணங்களினால் தப்பித்து நியாயவானாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கமல் ஹஸன்[1]. ஆனால், புவனேஸ்வரி 2002லேயே மாட்டிக் கொண்டார். அப்பொழுது அவர் உண்மையை வெளியிட்டபோது, ரஜினி காந்த போன்ற ஆன்மீக நடிகர்களே மிகக்கொடுமையாக புவனேஸ்வரியைத் தூஷித்தனர். சினிமா தொழில், தொழிற்சாலைகள், தொழிற்சங்கம் என்பன எல்லா சினிமா தொழிலாளர்களுக்கும் என்றிருந்தபோதும், அவை புவனேஸ்வரிக்கு எதிராக செயல் பட்டன. ஆனால், கமல் ஹஸன் விசயத்தில் கண்டு கொள்ளவில்லை அல்லது சமரசம் செய்து கொண்டன. ஒருவேளை, புவனேஸ்வரி உற்பத்தி ரீதியில் கோடிகளை உற்பத்தி செய்திருந்தால், அவர்களும் இவரோடு சேர்ந்திருப்பர். ஆனால், வேறுவிதமாக இருந்ததால், 2002லிருந்து 2014 வரை புவனேஸ்வரி புராணம் ஒரே மாதிரியாக உள்ளது. ஆகவே தான் சமூகசீரழிப்பாளிகள் எனும் நிலையிலும் பாகுபடுத்தி ஊடகக்காரர்கள் மதித்து வருகிறார்கள்.
விபச்சார வழக்கு (2002): புவனேஸ்வரி விடுதலை[2](2004): ஊடகக்காரர்கள் புவனேஸ்வரி என்றாலே, செய்திகளை அள்ளிக் கொடியுள்ளார்கள். 2002ம் ஆண்டு விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட டி.வி. நடிகை புவனேஸ்வரி நிரபராதி என அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள், சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் புவனேஸ்வரி. கடந்த 2002ம்ஆண்டு சென்னை வட பழனியில் அவர் விபசாரத்திற்கு முயன்றதாக கூறி போலீஸார் புவனேஸ்வரி உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். இதில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்தில் அபராதம் கட்டி விட்டு சென்றனர். ஆனால் புவனேஸ்வரி அபராதம்கட்டாமல் வழக்கை எதிர்கொண்டார். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 4-வது குற்றவியல் நடுவர் தீனதயாளன் முன்பு நடந்து வந்தது. இந்த வழக்கில், புவனேஸ்வரி மீதான குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. எனவேஅவரை நிரபராதி என்று அறிவித்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து புன்னகை பூத்த முகத்துடன் புவனேஸ்வரி வெளியே வந்தார். விசாரணைகளின்போது முகத்தை மூடியபடி வந்த புவனேஸ்வரி தீர்ப்பின்போது பட்டுச் சேலையில் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் வந்திருந்தார்[3]. தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனிப்பட்ட முறையில் என் மீது விரோதம் கொண்ட சில அரசு உயர் அதிகாரிகள்தான் இந்த பொய் வழக்குக்குக் காரணம். கடவுள் என்னைக் கைவிடவில்லை .உண்மைதான் ஜெயிக்கும் என்று கூறினார் அவர்
பெண்களைவைத்துவிபசாரம்நடத்தியதாக புவனேஸ்வரி சென்னைவிபசாரதடுப்புபிரிவுபோலீசாரால்கைது (2009): இது இப்பொழுதைய செய்தி. பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மும்பையை சேர்ந்த பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கடந்த 2.10.2009 அன்று சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மும்பை பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கடந்த 2.10.2009 அன்று சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் புவனேஸ்வரியை கைது செய்தனர்[4]. இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4-வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு சரவணன் முன் நடந்தது. இதில் 6 பேர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் 03.02.2014 திங்கள்கிழமை மாஜிஸ்திரேட்டு சரவணன் தீர்ப்பு அளித்தார். அதில், நடிகை புவனேஸ்வரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளது[5]. இதையடுத்து குற்றம் புரிந்த புவனேஸ்வரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்[6]. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி ஆஜராகி வாதிட்டார்[7].
தியேட்டரில் கலாட்டா, கைது (2011): 2011ல் குமார் என்பவர் தா கொடுத்த கடனான ரூ.10 லட்சம் கொடுக்கவில்லை என்று வழக்கு தொடுத்தார். கோர்ட்டில் ஆஜராகததால், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது[8]. முன்பு ஒரு தடவை தியேட்டரில் சினிமா பார்க்கச் சென்றபோது, சண்டை போட்டதால், பூகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்[9]. சென்னை தியேட்டர் ஒன்றில், தகராறில் ஈடுபட்ட, சினிமா நடிகை புவனேஸ்வரியை, ஆம்பூர் அருகே போலீசார் கைது செய்தனர். சென்னை சினிமா தியேட்டர் ஒன்றில், கார் நிறுத்தும் போது, குமார் என்ற டிரைவருக்கும்; நடிகை புவனேஸ்வரி மற்றும் அவருடன் வந்த வக்கீல்கள் இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. இதில், கார் டிரைவர் குமார், அவர் குடும்பத்தினர், தியேட்டர் காவலாளி மற்றும் விசாரணை நடத்திய போலீசார், சரமாரியாக தாக்கப்பட்டனர்.
போலீசார் தனிப்படைஅமைத்து, தலைமறைவானநடிகைபுவனேஸ்வரிமற்றும்அவருடன்இருந்தவக்கீல்களைதேடினராம்: சென்னை, நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து, தலைமறைவான நடிகை புவனேஸ்வரி மற்றும் அவருடன் இருந்த வக்கீல்களை தேடினர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே, போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த, “இனோவா காரை, காலை, 10:00 மணிக்கு, பச்சகுப்பத்தில் மடக்கிப் பிடித்து, சோதனை செய்தனர்; காருக்குள் நடிகை புவனேஸ்வரி இருப்பது தெரிந்தது. சந்தேகப்பட்ட போலீசார், கார் டிரைவரிடம், “காரில் இருப்பவர், புவனேஸ்வரி தானே? என, கேட்டனர். அதற்கு, “நான் புவனேஸ்வரி இல்லை; பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் என, புவனேஸ்வரி பதிலளித்தார். ரோந்து போலீசார், காரை, ஆம்பூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது, காருக்குள் இருப்பது, நடிகை புவனேஸ்வரி என்பது தெரிந்தது. இதையடுத்து புவனேஸ்வரியை, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, சென்னை நீலாங்கரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தகவல் கொடுத்தனர். நீலாங்கரை போலீசார், வந்து அழைத்து செல்வதாக கூறினர். இதனால் புவனேஸ்வரியை, வேலூர் அடுத்த சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு, அழைத்து வந்தனர். அங்கு புவனேஸ்வரி, 30 நிமிடம் அமர்ந்திருந்தார். பகல், 12:30 மணிக்கு நீலாங்கரை போலீசாரிடம் புவனேஸ்வரி ஒப்படைக்கப்பட்டார். பின், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள மற்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஆம்பூர் பிரியாணிகேட்டபுவனேஸ்வரிக்கு வேலூர் பிரியாணி கொடுக்கப்பட்டதாம்[10]: ஆம்பூர் போலீசார், புவனேஸ்வரியை கைது செய்த போது, “நான் சாப்பிடவில்லை என, அவர் கூறினார். இட்லி, தோசை வாங்கி தந்த போது, “எனக்கு, ஆம்பூர் பிரியாணி வேண்டும் என கேட்டார். “இந்த நேரத்தில், பிரியாணி ரெடியாகாது எனக் கூறிய போலீசார், இட்லி, தோசை கொடுத்துள்ளனர். புவனேஸ்வரி தோசை மட்டும் சாப்பிட்டார். நீலாங்கரை போலீசார் வரும் வரை, சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் புவனேஸ்வரி காத்திருந்தார். அந்த நேரத்தில், பிரியாணி குறித்து, மீண்டும் பேச்சு எழுந்தது. சில போலீசார், ஆர்வமாக, “ஆம்பூர் பிரியாணிக்கு பதில், வேலூர் பிரியாணி நன்றாக இருக்கும் என்று கூறி, வாங்கி கொடுத்துள்ளனர். அதை புவனேஸ்வரி, ருசித்து சாப்பிட்டார் என்று கூறப்பட்டது. நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு, அங்குள்ள போட்டோகிராபர்கள், நிருபர்கள் சென்றனர். படம் எடுக்க விடாமல், பல காரணங்களை கூறி, போலீசார் தடுத்து விட்டனர். பிறகு, சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, ரகசியமாக, நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
புவனேஸ்வரி மீதும் மேலும் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன: தினகரன் இப்படி ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளது[11]. புவனேஸ்வரி மீதும் மேலும் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவையெல்லாமே சினிமா சம்பந்தப்பட்டவையாகும். தொலைக்காட்சி தொடர் எடுக்கிறேன் என்று பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக வழக்குகள் உள்ளன. பொதுவாக புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும் போது, தனக்கு சில போலீஸ் அதிகாரிகளைத் தெரியும் என்று கூறி தப்பித்து வந்தார்.
தனுசுடன்ரொமான்ஸ்செய்யும்சுருதிஹாசனின்தங்கை[12]: நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே நடிக்க வந்துவிட்டார்[13]. “டி டே”ஏன்ற படத்தில் படுக்கையறை காட்சியில் தத்ரூபமாக நடித்து, ஹாலிவுட் நடிகைகளையும் மிஞ்சிவிட்டார் என்ற நிலையில் ஊடகங்கள் விமர்சித்தன, காட்சிகளையும் வெளியிட்டன. ஆனால் அவரது இளைய மகள் அக்ஷராவுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் பாலிவுட்டில் சில இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். இந்நிலையில் அவரை நடிக்க வைக்க பலர் முயற்சித்தனர், ஆனால், யார் அந்த “பலர்” என்று தெரியவில்லை. இறுதியில் இயக்குனர் ஆசைக்கு முழுக்கு போட்டு நடிக்க தொடங்கினார் அக்ஷரா. தனுஷ்-அக்ஷரா நடிக்கும் பட ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. தனுஷுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியில் அக்ஷரா நடித்தார்[14] என்று செய்திகள் வந்துள்ளன. தனுஷ் ராஞ்சனாவிற்கு பிறகு நடிக்கும் பாலிவுட் படத்தில் அக்ஷரா நடித்தார்[15]. இந்த படத்தை பால்கி இயக்குகிறார். இப்படியாக கமல் ஹஸனின் இரண்டு பெண்களும் சினிமாத்தொழிலில் தீவிரமாக இறங்கி விட்டனர்.
வேதபிரகாஷ்
© 07-02-2014
[1] இவரைப் பார்த்து பலர் முஸ்லிம்களே பொறாமைப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். ப நேரங்களில் எப்படி இவர் தப்பித்துக் கொண்டு வந்துள்ளார் என்று கேள்விகளையும் எழுப்பி வந்துள்ளனர்.
[2] தமிள்-ஒன்-இந்தியா, விபச்சாரவழக்கு: புவனேஸ்வரிவிடுதலை, Published: Thursday, June 24, 2004, 5:30 [IST]
[6] http://tamil.oneindia.in/movies/news/chennai-court-slaps-fine-buvaneshwari-brothel-case-192780.html
[7] நக்கீரன், விபசாரவழக்கில்பிரபலதமிழ்நடிகைக்குஅபராதம்! சைதாப்பேட்டைகோர்ட்தீர்ப்பு!, பிப்ரவரி.4, 2014
[8] http://www.tamilstar.com/news-id-bhuvaneshwari-arrest-warrant-against-actress-in-cheque-fraud-case-20-12-111234.htm
[9] http://cutmirchi.com/viewdetails.php?linkid=3582&title=Actress-Bhuvaneswari-arrested#.UvCUyfQW0sI
[10] http://cinema.dinamalar.com/tamil-news/9631/cinema/Kollywood/Actress-Bhuvaneshwari-arrested.htm
[12] தினமணி, தனுசுடன்ரொமான்ஸ்செய்யும்சுருதிஹாசனின்தங்கை, By Web Dinamani, First Published : 06 February 2014 04:14 PM IST
[13] http://tamil.thehindu.com/cinema/bollywood/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article5659730.ece
குறிச்சொற்கள்: அட்சயா, உடலுறவு, உடல், ஐஸ்கிரீம் காதல், கமல், கற்பு, சரிகா, சினிமா, சினிமா காதல், சுருதி, தமிழச்சி, வாணி, ஹஸன்
9:08 முப இல் செப்ரெம்பர் 30, 2014 |
[…] [11] https://evilsofcinema.wordpress.com/2014/02/07/bhuvaneswari-and-kamal-hassan-the-products-of-cinema-i… […]