செக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது

செக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது!

தாயார் புகார் - மகளை வைத்து ஆபாசப்படம் 2014

தாயார் புகார் – மகளை வைத்து ஆபாசப்படம் 2014

தாயார்-மகள் கொடுத்த புகார்:  தனது மகளை படத்தில் நடிக்க வைப்பதாக அழைத்துச்சென்று பிறகு மகளை வைத்து ஆபாச காட்சிகள் எடுக்க முயன்றதாக பட அதிபர் மற்றும் இயக்குனர் மீது நடிகையின் தாயார் வளசரவாக்கம் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார்[1]. ஆங்கில ஊடகங்களின் படி, மகளே ராயலா நகரில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் “செக்ஸ் தூண்டும் மாத்திரைகளை [a brand of libido enhancing pills] கைகளில் வைத்திருப்பது போல காட்சிகளை எடுக்க முயன்றனர்”, என்று புகார் அளித்துள்ளதாக இருக்கிறது[2]. மகளுக்குப் பதிலாக, மகளின் பெயரில் தாயார் கொடுத்தார் என்றும் உள்ளது[3]. எது எப்படியாகிலும் பெண்மையை ஆபாசப்படுத்தும் அளவில் திரைவுலகம் இறங்கிவிட்டது என்று தெரிகிறது.

Mother complains to police for using daughter for shady scenes

Mother complains to police for using daughter for shady scenes

தசரதனின் 300 மனைவிகள்”[4] முதல் குறும்படம் வரை: சென்னை விருகம்பாக்கத்தை அடுத்த சாலிகிராமம், காவேரி தெருவை சேர்ந்தவர் நிர்மலா. இவருடைய மகள் பாக்கியலட்சுமி என்ற பாக்யஸ்ரீ (18). இவர், சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார்[5]. பாக்யஸ்ரீயின் தாயார் நிர்மலா, தனது மகளை படத்தில் நடிக்க வைப்பதாக அழைத்துச்சென்று ஆபாசமான காட்சிகளை எடுக்க முயன்றதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது நேற்று வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எனது மகள், ‘உயிருக்கு உயிராக’, ‘நாடோடி பறவை’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக உள்ளது. மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கே .சி. ரவி தேவன்  [film director K C Ravi Devan] என்பவர் சில நாட்களுக்கு முன் என்னை சந்தித்தார். நாங்கள் எடுக்கும் குறும்படத்தில் உங்கள் மகள் பாக்யஸ்ரீயை நடிக்க வைக்கிறோம் என்று ஒப்பந்தம் செய்தார். “தசரதனின் 300 மனைவிகள்” என்ற படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கொடுக்கிறேன், ஆனால், அதற்கு முன்னால், சோதனைக்காக ஒரு குறும்படத்தில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். குறும்பட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமாபுரம் பகுதியில் கொத்தாரி நகரில் நடந்து வந்தது[6]. கடந்த ஒரு வாரமாக இப்படத்தின் படப்பிடிப்பி வளசரவாக்கம், கோத்தாரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  இயக்குனர் ராமநாதன் படம் பிடித்தார்.

லிபிடோ-செக்ஸ்-தூண்டும் மாத்திரை விளம்பரம்

லிபிடோ-செக்ஸ்-தூண்டும் மாத்திரை விளம்பரம்

பெண்  பார்க்கும் மற்றும் படுக்கையறைக்  காட்சிகள்: நேற்று இரவு [12-03-2014] எனது மகள் சம்பந்தமான காட்சிகள் படம் எடுக்க வேண்டி இருப்பதாக தெரிவித்தனர். நாங்களும் ஷூட்டிங் நடக்கும் வீட்டுக்கு சென்றோம். முதலில் எனது மகளை பெண் பார்க்க வருவது போன்ற காட்சியை படமாக்கினர். பின்னர் படுக்கை அறை காட்சி எடுக்க இருப்பதாக கூறி, தாம்பத்ய உறவு சம்பந்தமான மாத்திரைகள் அடங்கிய கவர்ச்சி படம் பொறித்த அட்டை பெட்டியை எனது மகள் பாக்யஸ்ரீயின் கையில் கொடுத்து படுக்கை அறைக்குள் செல்வது போலவும், புடவையில் மறைத்து வைத்திருப்பது போலவும், தெரியாத ஆணுடன் படுக்கையறையில் இருப்பது போலவும் இரண்டு காட்சிகள் எடுக்கப் பட்டன[7]. பிறகு அந்த மறைத்துவைக்கப் பட்ட மாத்திரை டப்பாவுடன் படமாக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த நான், இந்த படத்திற்கு இந்த காட்சி ஏன்? என்று கேட்டேன். அதற்கு இது காமெடி காட்சிதான். அதனால் ஒரு பிரச்சினையும் வராது என்று படக்குழுவினர் கூறினர்.

குறும்படம் - குற்றங்கள் - பேராசைகள்

குறும்படம் – குற்றங்கள் – பேராசைகள்

விவரம் அறிந்த தாயார் தடுத்தார்: மாத்திரை டப்பாவைப் பார்த்ததும் உண்மையினை அறிந்து கொண்டிருப்பார், அதனால் தடுக்க முயன்றார். “ஆனால் அந்த காட்சியை எடுக்கக்கூடாது என்று நான் கூறினேன். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நான், ‘‘இந்த படத்தில் எனது மகள் நடிக்க மாட்டாள். இதுவரை படமாக்கப்பட்ட எனது மகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை என்னிடம் கொடுத்து விடுங்கள்’’ என்று கேட்டேன். ஆனால் அதனை கொடுக்கவில்லை[8]. எனவே இது சம்பந்தமாக படத்தயாரிப்பாளர், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்து உள்ளேன்[9]. இதுபற்றி நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்க உள்ளேன்”, இவ்வாறு நிர்மலா தெரிவித்தார்[10]. தேவனை சந்திக்க “டைம்ஸ் ஆப் இந்தியா” நிருபர்கள் முயன்றனர், ஆனால், அவரது மொபைல் “ஸ்விட்ச் ஆப்” செய்ய்யப்பட்டிருந்ததாம்[11].

கள்ளத்துப்பாக்கி

கள்ளத்துப்பாக்கி

துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி, வன்மம், வன்முறை முதலியவற்றை வியாபாரமாக்கும் ரவி தேவன்: கே. சி. ரவி தேவன் முன்னர் “துப்பாக்கி” படத்தின் பெயர் உபயோகம் பற்றி வழக்குத் தொடர்ந்தார். 2009லேயே “கள்ளாத்துப்பாக்கி” என்ற படம் எடுப்பதாக பதிவு செய்திருப்பதால், அப்பெயரை உபயோகப்படுத்தக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்தார்[12]. அப்படம் வன்முறைக் காட்சிகள் அதிகமாகக் கொண்டுள்ளதுடன், மாணவர்கள் அத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதுபோலச் சித்தரிக்கப் பட்டது[13]. “டிரைலர்” என்பதிலேயே அந்த அளவிற்கு வன்மம் இருக்கும்போது, முழுப்படத்தில் எப்படி இருக்கும் என்பது, படம் பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும். அதனால் தான் அதற்கு “ஏ” கொடுத்தார்களாம். ஆக “ஏ” இங்கு வேறுவிதமாக செயல்பட்டுள்ளது. வியாபாரத்தை ஆபாசத்திலும் பெருக்கலாம், பணத்தை அள்ளலாம். அதில் நடிக்க வருபவர்களைப் பற்றி டைரக்டருக்கு என்ன கவலை?

குறும்பட மோகமும், இளைஞர்கள் ஆபாசத்தில் வலையில் விழுதலும்: இன்று குறும்படம் என்ற மோகம் இளைஞர்களை ஆட்டிப் படைக்கிறது. அதற்கேற்றவாறு பல என்.ஜி.ஓக்கள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் “ஸ்பான்சர்” செய்து அனைத்துலக குறும்பட விழாக்கள் நடத்த ஆரம்பித்து விட்டனர். குறுகிய காலத்தில் பெரிய ஆளாகி விடலாம், அனைத்துலக ரீதியில் பெயர் பெற்று விடலாம் என்ற கனவுகள் இளைஞர்களுக்கு அதிகமாகி விட்டன. மேலும் கேமரா முதலிய சாதனங்கள் “டிஜிடைஸ்” செய்யப் பட்டுவிட்டதால், தொழிற்நுட்பம் எளிதாகி விட்டது. “லேப்டாப்” வைத்துக் கொண்டே படத்தை எடுத்துவிடலாம் என்ற அளவிற்கு வந்து விட்டது. இதனால், கல்லூரி மாணவ-மாணவிகளும் இதில் இறங்கி விட்டார்கள். விசுவல் கம்யூனிகேஷன், கிராபிக்க்ஸ் முதலிய படிப்புகள் படிக்கும் அவர்களுக்கு இது மிகவும் கவர்ச்சிகரமாகவும், ஜாலியாகவும் உள்ளது. ஆனால், சுற்றியுள்ளவர்களில் பலர் அவர்களது திறமைகளை, உனங்களை ஏன் உடல்களைக் கூட வியாபார ரீதியில் பயன்படுத்துக் கொள்ளவேண்டும் என்று திட்டமுடன் இருக்கிறார்கள்.

தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் – முதலியவற்றின் விளைவுகள் இப்படியும் வெளியாகின்றன: என்.ஜி.ஓக்கள், தனிமனிதர்கள் முதலியோர் போதை மருந்து, செக்ஸ், விபச்சாரம் முதலியவற்றை பெருக்க திட்டமிட்டே வந்து கலந்து கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பப் கலாச்சாரத்தை ஆதரித்து காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சௌத்ரி பேசியதை நினைவு கொள்ளலாம். பெண்கள் பப்புகளுக்குச் செல்லலாம், குடிக்கலாம், யாருடன் வேண்டுமானாலும் ஆடலாம் என்றெல்லாம் நியாயப் படுத்தப்பட்டு பஏசப் பட்டது. எதுர்த்தவர்களை தலிபான் என்று முத்திரைக் குத்தி அடக்கப் பார்த்தனர். இதனால், மாணவ-மாணவியர் நட்பு ஆபாசமாகிறது, அது அத்தகைய வக்கிரங்களுக்கு பயனாகிறது. அறிந்தும்-அறியாமலும் அவர்கள் அவ்வலைகளில் சிக்கிக் கொள்கின்றனர். ஆரம்பத்திலேயே அறிந்து கொள்பவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர், மற்றவர்கள் விழுகின்றனர். செக்ஸ்-ஊக்குவிக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் மாத்திரிகைகளை உற்பத்தி செய்ய மருந்து கம்பனிகள் ஆரம்பித்து விட்டன. இதில் கூட பெண்களுக்கு தனி என்று விளம்பரங்கள் செய்கின்றன. போதாகுறைக்கு எப்படி ஒரு பெண் நூற்றுக் கணக்கான ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனைப் படைத்துள்ளாள் என்று செய்திகள் வேறு! போலந்து நாட்டின், அனிய லைசேஸ்கா என்ற [Ania Lisewska] 21-வயது பெண் 1,00,000 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனைப் படைப்பேன் என்று அறிவித்துள்ளாள்[14].

© வேதபிரகாஷ்

13-03-2014


[1] தினமணி, மகளைவைத்துஆபாசகாட்சிகள்எடுக்கமுயன்றதாகநடிகையின்தாயார்புகார், By dn, சென்னை, First Published : 14 March 2014 07:28 PM IST

[2] An 18-year-old actor has filed a complaint with the Royala Nagar police alleging that a film director had tricked her into doing some intimate scenes with a brand of libido enhancing pills in her hand.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Actor-Was-forced-to-do-shady-scenes/articleshow/32031589.cms

[3] In the complaint filed on behalf of actor Bhagyashree, her mother Nirmala feared that the movie might show the young woman in a bad light and that the footage may be used as an advertisement for the pills.

[4] இத்தலைப்பில் உள்ள விசமத்தனத்தையும் செக்யூலரிஸ ரீதியில் தெரிந்து கொள்ளலாம், ஏனெனில், இன்னொரு மதத்தின் பெயரை வைத்து, இப்படி திரைப்படத்திற்கு தலைப்பு வைத்தால் என்னாகும் என்று தெரிந்துகொள்ளலாம்.

[5] தினத்தந்தி, மகளைவைத்துஆபாசகாட்சிகள்எடுக்கமுயன்றதாகபடஅதிபர், இயக்குனர்மீதுநடிகையின்தாயார்பரபரப்புபுகார், சென்னை, 15-03-2014.

[7] “They arranged for the test shoot claiming that a leading actor would do the movie and that they wanted to see my daughter’s performance. But she was made to shoot some intimate scenes with a stranger,” said Nirmala. Since it was a test shoot, Nirmala said she accepted the deal.

[9] தினகரன், மகளைவைத்துஆபாசகாட்சி : குறும்படதயாரிப்பாளர்மீதுநடிகையின்தாய்பரபரப்புபுகார், சென்னை, 15-03-2014.

[12]  ………….the title Thupakki itself subjected to trouble. Case has been filed by K.C.Ravi Devan in civil court. He states that he registered one of his movie name as “Kalla Thupaki” in the year 2009. Vijay’s father Chandrasekar has registered the name Thupakki using his wealth only a year before.

http://newscorbee.blogspot.in/2012/06/vijayss-thuppakki-in-trouble.html

K.C.Ravi Devan says “in future it will create controversy like that I am making  fun after Vijay movie”. So he filed case against this title.

[14] There’s a 21-year-old woman from Poland who wants to have sex with 100,000 men, which would definitely be a world record.  She wants to have sex with each of them for 20 minutes, which comes out to three years and 10 months of sex.  She says her boyfriend wasn’t thrilled with her plan, but, quote, “had to come to terms with it.”

http://www.huffingtonpost.com/2013/08/28/ania-lisewska_n_3831495.html?utm_hp_ref=weird-news

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “செக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது”

  1. காமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் – முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறு Says:

    […] […]

  2.  இளம்பெண்களை சினிமா ஆசை காட்டி ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிய “சண்டை” நடிகர் கைது! – சென்னையி Says:

    […] [4] https://evilsofcinema.wordpress.com/2014/03/15/sex-tablets-business-advertisement-degrading-womanhood… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: