அமலாபால்-விஜய்: சினிமா தொடர்பு, காதல் இணைப்பு, திருமண பந்தம், மதமாற்ற பிரச்சினை வகையறாக்கள்!

அமலாபால்-விஜய்: சினிமாதொடர்பு, காதல்இணைப்பு, திருமணபந்தம், மதமாற்ற பிரச்சினை வகையறாக்கள்!

 

விஜய் - அமலா பால் ஜோடி காதலா, மதமா?

விஜய் – அமலா பால் ஜோடி காதலா, மதமா?

காதல் போட்டு உடைக்கப் பட்டதாம்: முதலில் அமலாபால்-விஜய் ஜோடி நாங்கள் காதலில் இல்லை என்று கூட மறுத்து வந்தனராம்[1].  ஆனால், இயக்குனர் விஜய் நடிகை அமலா பாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வந்தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. சமீபத்தில் நடந்த சைவம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் இவர்களது காதலை போட்டு உடைத்தார். பார்த்திபன் என்னமோ காதலை மதிக்கும் ஆராதிக்கும் புனிதர் போலும்!  சீதாவைப் படுத்திய பாடு அவரது மனசாட்சிக்குத் தெரியும்.  ஆனால்,  இவரைப் போன்றவர்கள் காதலுக்கு பாதை காட்டுகின்றனராம். விஜய் காதலுக்குப் பிறகு அமலா பால் எங்கள் திருமணம் குறித்து இருவரும் முறைப்படி தெரிவிப்போம் என்று அறிவித்தார்.  அமலா பாலுக்கும்,  விஜய்க்கும் காதல் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், அவர்களின் உறவு நிச்சயம் தான் என்று உறுதிப் படுத்தினாராம்[2]. பிறகு அமலா பாலுக்கும், டைரக்டர் விஜய்க்கும் திருமணம் முடிவாகியுள்ளது,   இது காதல் திருமணம் ஆகும் என்று ஊடகங்கள் ஏதோ புதியதாகக் கண்டு பிடித்தது போல வர்ணிக்க ஆரம்பித்தன.  

காதல் வெளிப் பட்ட பிறகு, நிச்சயதார்த்தம் திருமணம்: விஜய் இயக்கிய  ‘தெய்வத் திருமகள்’,  ‘தலைவா’ படங்களில் அமலா பால் நடித்தார்.  அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.  இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.  ஜூன் 7ந்தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும், 12–ந்தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது என்றும் செய்திகள் வந்தன.  ஆனால் விஜய் கூறும் போது, அமலா பால் படங்களில் பிசியாக நடிக்கிறார். எனக்கு  ‘சைவம்’  படத்தை ரிலீஸ் செய்ய வேண்டி உள்ளது.  இதெல்லாம் முடிந்த பிறகு எங்கள் திருமணம் நடக்கும் என்றார்.  ஆனால், விஜய் 28-04-2014 அன்று  அமலா பாலுடனான திருமணம் குறித்து அறிவித்தார் என்ற செய்தியும் வந்துள்ளது.  இருவருக்கும் ஜூன் 12–ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மஹாலில் திருமணம் நடக்க உள்ளது[3].  இப்படி “ரன்னிங்கமென்ட்ரி” ரீதியில் செய்திகள் வெளியிடப் படுகின்றன.

 

சினிமாவில் இதெல்லாம் சகஜம் தானே, இதில், இது செக்யூலரிஸம் தான்!

சினிமாவில் இதெல்லாம் சகஜம் தானே, இதில், இது செக்யூலரிஸம் தான்!

சினிமாவும், காதலும், மதமும்: பால் வர்கீஸ் மற்றும் அன்னீஸ் பால் என்பவர்களுக்குஅமலா பால் 26-10-1991ல் பிறந்தவர். ஆரம்பித்திலிருந்து கிருத்துப் பள்ளி, கல்லூரி என்று படித்து வந்துள்ளார். அவரது தந்தைக்கு, அமலா சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை, எதிர்த்தார். ஆனால், அமலாவின் சகோதரர் அபிஜித் சினிமாவில் நடிப்பதை ஆதரித்தார், அமலாவின் ஆசைக்கும் நீரூற்றி வந்தார். பெயர், புகழ், பணம் வந்தபோது குடும்பம் சமரசம் ஆனது போலும். அந்நிலையில் தான் காதல் விவகாரம் வந்தபோது, கிருத்துவவர்கள் என்ற ரீதியில் எதிர்த்திருக்கலாம். மகளும் காதலிக்கிறாள் என்ற நிலையில் மதம் மாற வேண்டும் என்ற பிரச்சினை எழுந்தது ஆச்சரியம் இல்லை.

 

இதுவும் செக்யூலரிஸம் தான்!

இதுவும் செக்யூலரிஸம் தான்!

மதமாற்றப் பிரச்சினை காதலனின் முடிவு: விஜய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அமலா பால் கிறிஸ்தவ மதம்.  திருமணத்துக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விடும்படி விஜய்யை அமலா பாலும் அவரது பெற்றோரும் வற்புறுத்துவதாக செய்திகள் வெளி வந்தன[4]. அமலா பால் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்[5].  விஜய் இந்துமதத்தை சேர்ந் தவர்.  ஆனால், தன் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி கிறிஸ்தவ மதத்துக்கு மாற விஜய் தயங்குகிறாராம்.  அவரவர் மதம் அப்படியே இருக்கட்டும்.  நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று அவர் அமலாவிடம் கூறினாலும், அதை ஏற்கதயாராக இல்லையாம்[6].  இது இரு தரப்பிலும் ஒரு குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளதாம். விஜய் மாறுவாரா.. அல்லது அமலா பால் இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டு விடுவாரா?  இது குறித்து விஜய்யிடம் கேட்ட போது மறுத்தார்.  எந்த ஆதாரமும் இல்லாம் இந்த செய்தி பரவி உள்ளது. என் மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு நான் மாற மாட்டேன் என்றார்[7].  இவையெல்லாம் வெறும் வதந்திகள் தான் என்கிறார்[8]. 

 

இதையெல்லாம் கம்யூனலிஸம் ஆக்காதீர்கள்

இதையெல்லாம் கம்யூனலிஸம் ஆக்காதீர்கள்

காதலித்த இயக்குனர்-நடிகை ஜோடிகளும், விவகாரங்களும்: இயக்குனர்களுக்கும், நடிகைகளுக்கும் என்றுமே நெருக்கமான உறவுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை அலுவலகங்கள், லொகேஷன்கள் என்றெல்லாம் இல்லாமல், எல்லைகளைக் கடந்து பார்ட்டிகள், கேளிக்கை விருந்துகள் என்றெல்லாம் இக்காலங்களில் சென்றுள்ளன. அத்தகைய நெருக்கங்களில், திருமணம் செய்து கொண்டவர்கள் இவ்வாறு உள்ளனர்:

 

  1. சோனியாஅகர்வால்-செல்வராகவன்.
  2. ரேவதி-சுரேஷ்மேனன்.
  3. குஷ்பு-சுந்தர்
  4. பூர்ணிமா-பாக்கியராஜ்
  5. சீதா-பார்த்திபன்
  6. ரம்யாகிருஷ்ணன்-கிருஷ்ணவம்சி
  7. ராதிகா-பிரதாப்போத்தன்.

 

ஆனால், இத்தம்பதிகள் எல்லோருமே இல்லறத்தில், தாம்பத்திய தர்மத்தில் ஒழுங்காக உள்ளனரா, வெற்றிகரமாக அதனை தொடர்கின்றனரா, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளனரா என்று பார்த்தால், இல்லை என்றாகிறது. இருப்பினும், இவர்களைப் பற்றிய செய்திகளைக் கொடுத்து, ஏதோ மக்களுக்கு இவையெல்லாம் அவசியம் வேண்டும் அல்லது தெரியப் படுத்த வேண்டும் என்ற ரீதியில் ஊடகங்கள் உள்ளன. தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில ஊடகங்களிலும் இதைல் சளைக்காமல், வாரி வழங்கி வருகின்றனர். மேலுள்ள பட்டியல் டைம்ஸ் ஆப் இந்தியா தான் புகைப்படங்களுடன் கொடுத்துள்ளது[9].

இது நடுநிலையாக்கும்

இது நடுநிலையாக்கும்

இது வெறும் சினிமா பிரச்சினை என்றால், அவர்களுக்குள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இவர்கள் பல நேரங்களில் சமூகத்தின் மீது தாக்குதலை ஏற்படுத்துகின்றனர், மற்றும் தங்களது நிலைகளை மறந்து அறிவுரை கொடுக்கும் அந்தஸ்த்திற்கு வலுக்கட்டாயமாக வருகின்றனர். ஆகையால், மற்றவர்களும் இவர்களது முறைகளை, நடவடிக்கைகளை அறிய வேண்டியுள்ளது. பார்ப்போம், இவர்கள் வெற்றி பெறுகிறார்களா என்று!

© வேதபிரகாஷ்

30-04-2014

 

[1] http://www.deccanchronicle.com/140409/entertainment-kollywood/article/amala-paul-wed-vijay

[2] http://www.thehindu.com/news/cities/chennai/director-vijay-confirms-rumours-to-wed-amala-paul/article5951630.ece

[3]http://www.dinamani.com/latest_news/2014/04/28/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/article2194180.ece

[4]தினமணி, அமலாபாலுக்காகமதம்மாறுகிறேனா?: விஜய்விளக்கம், By dn, சென்னை

First Published : 28 April 2014 04:37 PM IST

[5] http://tamil.oneindia.in/movies/news/vijay-denies-reports-about-his-conversion-christianity-199452.html

[6] http://tamil.oneindia.in/movies/news/amala-paul-compelling-vijay-convert-christian-199213.html

[7]மாலைமலர், அமலாபாலுக்காககிறிஸ்துவமதத்துக்குமாறமாட்டேன்: டைரக்டர்விஜய், 27-04-2014

http://cinema.maalaimalar.com/2014/04/28144022/Not-change-in-Christian-direct.html

[8] However, the director clarified that he is not going to convert his religion. “These are all baseless rumours,” he said.http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news-and-interviews/Director-Vijay-will-not-embrace-Christianity-for-Amalas-sake/articleshow/34365472.cms

[9] http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Amala-Paul-drowned-in-love-drenched-in-care/articleshow/34235204.cms

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: