குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

குஷ்பு, நக்மா, விஜயதாரிணிதமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

ஜெயலலிதா, பெரியார்

ஜெயலலிதா, பெரியார்

சினிமாஅரசியல், அரசியல்சினிமா, திராவிட அரசியலுல் ஒன்றுதான்: தமிழக அரசியல் என்றுமே சினிமா அரசியலாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும், பகுத்தறிவு பேசும் திராவிடக் கட்சிகளின் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாத அளவில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. பெரியார் சினிமாவை எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டாலும், ஆதரவு கொடுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட அவர், சித்தாந்தத்தைப் பரப்புவதில் எத்தகைய யுக்தியையும் கடைபிடிக்கலாம் என்று வற்புருத்தினார். “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” நாடகத்தில் நடித்த கணேசனுக்கு “சிவாஜி” பட்டம் கொடுத்தார். ஜெயலலிதா நாட்டியங்களைக் கண்டு ரசித்துள்ளார். அண்ணாதுரை சினிமாவில் ஊறியவர் என்பதால் ஒன்றும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கருணாநிதி, எம்ஜியாரை “கூத்தாடி” என்றும் “கூத்தாடி அரசியல்” செய்கிறார் என்றும் கிண்டலடித்து உண்டு.  திமுகவினரும் அவ்வாறே பேசி-எழுதி தூஷித்துள்ளனர். அதே நேரத்தில் தனது மகன், மு.க. முத்துவை எம்ஜியார் போல நடிக்க வைத்து படங்கள் எடுக்கப்பட்டன[1]. பிறகு, ஸ்டாலினை பிரபலப்படுத்த டிவி-சீரியலிலும் நடிக்க வேண்டியதாயிற்று. ஆனால், அத்தகைய சினிமா-அரசியலைத்தான் திராவிடத் தலைவர்கள் எல்லோருமே செய்து வந்துள்ளனர்.

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

கவர்ச்சி அரசியலில் உழலும் திராவிடக் கட்சிகள்: நேற்றைய திக, திமுக, அதிமுக, ஆனாலும், இன்றைய தேமுதிக முதலியவற்றை எடுத்துக் கொண்டாலும், சினிமா நடிகர்கள்-நடிகைகள் தாம் உள்ளனர். இன்றைக்கு “கூத்தாடி” என்று யாராவது சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், சம்யம் வரும்போது, கருணாநிதி, ஜெயலலிதாவை சினிமாபை வைத்துக் கொண்டு சாடுவதில் தயங்குவதில்லை. தனது கைவரிசையை, “முரசொலியிலும்” அவ்வப்போது காட்டுவார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் வசனம் பேசிக் கொண்டு, நடித்துக் கொண்டுதான் வருகின்றனர். சினிமாவில், ஓவ்வொருவருக்கும் ஒன்றிற்கு மேலாக ஹீரோயின்கள் இருப்பது போல, நிஜவாழ்விலும் மனைவி, துணைவி என்றெல்லாம் வகைப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளனர். குடும்ப வாழ்க்கையினை நடத்துகின்றனர். அவ்வகையில் பார்த்தால், பாமக ஆரம்பித்திலிருந்தே, சினிமா-அரசியலை எதிர்த்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்[2]. தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செய்கிறது. தமிழக மக்களுக்கு இலவசங்கள், மது, சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது[3].

சிவாஜி, பெரியார்

சிவாஜி, பெரியார்

இன்றைக்கு சோனியா காங்கிரஸ் நடத்தும் சினிமா அரசியல்: அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் தமிழகம், பீகார் மற்றும் புதுவை மாநிலங்களின் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 20-1-2015 அன்று புதுவை சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து 22-10-2015 அன்று (வியாழக்கிழமை) சென்னையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் மாநில மகளிர் காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பு, விஜயதாரணி, திருநாவுக்கரசர், யசோதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்[4]. அரசியல்வாதிகள் சொல்லும் வார்த்தைகளை வைத்தே ஒரு வாரத்திற்கு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கிண்டலடிப்பார்கள் நம் வலைஞர்கள். அதிகம் கிண்டலடிக்கப்படுவது விஜயகாந்த்தான். சிலகாலம் ஸ்டாலின் மாட்டினார். இன்று சிக்கியிருப்பது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். விடுவார்களா நம்மவர்கள் சும்மா புகுந்து விளையாடிவிட்டனர்.

சிவாஜி, கருணாநிதி

சிவாஜி, கருணாநிதி

தமிழக காங்கிரஸ் தலைவரின் நடிகையைப் பற்றி அழகு, இளமை வர்ணனை: சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா வந்திருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கலந்துகொண்டார். கூடவே, விஜயதாரணி, குஷ்பு ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய இளங்கோவன், “சினிமாவில் நக்மா, அவ்வளவு அழகாக தெரியவில்லை. ஆனால் நேரில், நல்ல அழகாகவும்; இளமையாகவும் இருக்கிறார். இதை நான் புகழ்ச்சிக்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன், என்று கூறினார்[5]. நக்மா பேசுகையில், “அரசும், அமைச்சர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜர், கக்கன் போன்றோர், உதாரணமாக இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். கோஷ்டிகள் இல்லாத, காங்கிரசை வளர்க்க வேண்டும் என்றார்[6]. காங்கிரஸின் தலைவராக இருக்கின்றவர், சினிமா நடிகைகள் கட்சிக்குள் வர ஆரம்பித்தவுடன், ரசனையும் மாறிவிட்டது போலும்[7]. நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்[8], சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம் என்றெல்லாம் தலைப்பிட்டு, இதனை செய்தியாக வெளியிட்டிருப்பது காங்கிரஸுக்கு அழகா, அவமானமா என்று தெரியவில்லை.

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

திரிஷா இல்லைன்னா நயன்தாராவா, குஷ்பு இல்லைன்னா நக்மா: இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. விடுவார்களா நம்மவர்கள். சும்மா புகுந்து விளையாடிவிட்டனர். இதுநாள்வரை குஷ்புவை புகுந்த இளங்கோவன் இப்போது நக்மாவை புகழவே, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்[9]. இதுதான் அழகுல மயங்குறதா என்று கிண்டலடித்துள்ள வலைஞர்கள் டுவிட்டரில் சும்மா சகட்டு மேனிக்கு கிண்டலடித்துள்ள வலைஞர்கள் மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர் என்று தமிழ்.ஒன்.இந்தியா எடுத்துக் காட்டுகிறது [10]. அரசியலின் ஒழுக்கம், நாணயம், முதலியவை இந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறதே என்று அத்தகைய வலைஞர்-மேதாவிகள் ஏன் கவலைப்படவில்லை என்றால், நிச்சயமாக, அத்தகைய வர்ணனைகளை அவர்களும் ரசிக்கிறார்கள் என்ரு தெரிகிறது. இதே, வெறெந்த பெண் அரசியல்வாதி நியமிக்கப்பட்டு, அவர் பதவியேற்று, விழாக்களில் கலந்து கொண்டால், இளங்க்கோவன் அல்லது வெறெந்த அரசியல்வாதியும் இவ்வாறு ரசித்து, வர்ணிப்பாரா என்று தெரியவில்லை. நடிகை என்பதினால் தான் அவ்வாறான விமர்சனம் வந்துள்ளது, அதனை தமிழக ரசிகர்கள் நசிக்கிறார்கள்.

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

இளங்கோவன், நடிகை குஷ்பு, நக்மா உருவப்படங்கள் எரிப்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் குளக்கரை சாலையில் திரண்ட அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்கள் தமிழக  காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோரின் உருவபடங்களையும் தீயிட்டு கொளுத்தினர்[11]. ஆக அந்த அளவுக்கு, இந்த நடிகைகளும் உயர்ந்து விட்டார்கள். நேற்று சத்தியமூர்த்தி பவனில் பேட்டி அளித்த இருவரும் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தி பேசியதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்[12].

© வேதபிரகாஷ்

25-10-2015

[1] பூக்காரிபிள்ளையோ பிள்ளைசமையல்காரன், அணையாவிளக்கு என்ற படங்களில் மு. க. முத்து, எம்ஜியாரை காப்பியடித்து நடித்தார். எம்ஜியாரைப் போலவே மஞ்சுளாவை முதல் படத்திலேயே ஜோடியாக நடிக்க வைக்கப்பட்டார்.

[2]  தினமணி, திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான்: ராமதாஸ், By Venkatesan Sr, சென்னை; First Published : 10 February 2013 03:02 PM IST.

[3] http://www.dinamani.com/latest_news/article1457932.ece

[4] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=153570

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம், Posted by: Veera Kumar, Published: Saturday, October 24, 2015, 12:37 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/nagma-looks-beautiful-congress-chief-elangovan-238332.html

[7]  தமிழ்.வெப்.துனியா, நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (15:15 IST)

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/evks-talk-about-actress-nagma-115102300042_1.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, நக்மா இல்லைன்னா குஷ்பு…. இளங்கோவனை கிண்டலடிக்கும் வலைஞர்கள், Posted by: Mayura Akilan, Updated: Saturday, October 24, 2015, 17:39 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/social-networkers-critizes-evks-elangovan-238365.html

[11] தினமணி, குஷ்பு, நக்மா உருவப்படம் எரிப்பு: தமிழர் முன்னேற்றப் படையினர் போராட்டம், By DN, சென்னை,First Published : 23 October 2015 05:41 PM IST.

[12]http://www.dinamani.com/tamilnadu/2015/10/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF/article3093693.ece

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!”

  1. நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் -செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)! | சினிமா Says:

    […] [4] https://evilsofcinema.wordpress.com/2015/10/25/sonia-congress-following-dravidian-glamour-politics-w… […]

  2. நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் -செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)! | சினிமா Says:

    […] [4] https://evilsofcinema.wordpress.com/2015/10/25/sonia-congress-following-dravidian-glamour-politics-w… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: