குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)!

குஷ்பு, நக்மா, விஜயதாரிணிதமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)!

காங்கிரஸ் சண்டை - குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

காங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

காங்கிரஸும் நடிகைகளும்[1]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும்  எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.

ஐயையே! சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்!

ஐயையே! சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்!

நக்மாஜோதிகா சகோதரிகளால் சகோதர நடிகர்களும் இழுக்கப்படுவார்களா?: நடிகை நக்மா மூலம், தமிழக காங்கிரசிற்கு வருமாறு நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்து, மகிளா காங்கிரசாரை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை வலியுறுத்தி பேசினார். தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர் மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பி உள்ளது. அப்படியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது.

இளங்கோவுடன் - முத்தேவியர்- 2015

இளங்கோவுடன் – முத்தேவியர்- 2015

காங்கிரஸின் விரியும் சினிமாவலை: இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட்சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[2], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். ஆனால், அந்த கருத்தை சூர்யா குடும்பத்தினர் எதிர்க்காததால், அது நடக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது. நடிகை நக்மாவின் முயற்சிக்கு பலன் கிடைத்து, நடிகர் சூர்யா காங்கிரசில் இணைந்தால், கட்சி கட்டாயம் வலுபெறும். ஏற்கனவே, நடிகர் விஜயை கட்சியில் இணைக்க, சிலர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக, கட்சியின் துணைத் தலைவர் ராகுலை, நடிகர் விஜய் சந்தித்தார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

இளங்கோ- முத்தேவியர்- 2015

இளங்கோ- முத்தேவியர்- 2015

சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட்[3]: கடந்த 16-ம் தேதி சென்னை வருகை தந்த நக்மா நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தார். தற்போது காங்கிரஸ் மேலிடம் நக்மாவிற்கு ஸ்பெஷல் அசைமண்ட் கொடுத்துள்ளது, அதன்படி தமிழ் சினிமா நட்சத்திரங்களை காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக மீது அதிருப்தியில் உள்ள சரத்குமார் திமுக பக்கம் போகமுடியாத நிலை உள்ளதால், காங்கிரஸை சரத்குமார் ஆதாரிக்க வைப்பது, இதேபோன்று தனது தங்கை ஜோதிகாவின் கணவர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, அப்பா சிவகுமார் ஆகியாரை காங்கிரசை ஆதரிக்க செய்யும் முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளார். இதற்காக கடந்த 2 தினங்களாக திநகர் ஜோதி வீட்டில் நக்மா முகாமிட்டுள்ளார். இதே போன்று நடிகர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமாரையும் நேற்று நக்மா சந்தித்து பேசியுள்ளார். அவரின் மூலம் சில நடிகர்களையும் காங்கிரஸை ஆதரிக்க முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[4].

நக்மாவின் அழகை ரசிக்கும் இளங்கோவன்

நக்மாவின் அழகை ரசிக்கும் இளங்கோவன்

தமிழக ஊடகங்களும் இந்த கவர்ச்சிஅரசியலுக்கு ஜால்ரா போட்டு வருகின்றன: நமீதாவை வைத்துக் கொண்டு, எப்படி தமிழக ஊடகங்கள் கவர்ச்சி-செய்திகளை உருவாக்கின என்று முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன்[5]. நமீதாவைப் பொறுத்த வரையில் தமிழில் அவரால் சரியாகப் பேச முடியாது. எல்லா வார்த்தைகளையும் தமிழில் சொல்ல முடியாததால், ஆங்கிலத்தை உபயோகிப்பார். நமது தமிழ் ஊடகர்கள் அதனை அரைகுறையாகப் புரிந்து கொண்டு செய்திகளை வலிய உருவாக்கி, வெளியிட்டு கதை செய்துள்ளன என்று தான் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நமீதா கவர்ச்சியைக் காட்டினால் காசு கிடைக்கிறது என்பது போல, இவர்கள் இப்படி செய்திகளைக் காட்டினாலும் காசு கிடைக்கும் என்றுதான் அலைகிறார்கள்[6]. பாராளுமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிரசாரம் செய்த ராக்கியை யாரும் மறந்திருக்க முடியாது. ‘சினிமா கவர்ச்சியை வைத்து அரசியல் நடத்த முடியாது’ என்று ராக்கியை காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் விமர்சித்தார். ‘அடுத்தவர்களை ஏமாற்றும் அரசியல் கவர்ச்சியைவிட சினிமா கவர்ச்சி எவ்வளவோ மேல். திக் விஜய் சிங்கிற்கு வயதாகிவிட்டது. அவர் கவர்ச்சியை பற்றி விமர்சிக்கும் வயதை தாண்டிவிட்டார்’ என்று சூடாக பதிலளித்தார் ராக்கி. ஆனால், சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டு கலக்கியிருக்கிறார். ஆக காங்கிரஸ்காரர்கள் வயதானாலும், அழகான, இளமையான பெண்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் போலும். இந்த விளக்கம் எல்லாம் அரசியல் களத்தில் / காலத்தில் தான். சினிமாவில் ராக்கி தொடர்ந்து கவர்ச்சி காட்டிவருகிறார். குத்தாட்டமும் போடுகிறார். ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிப்பதில் இவர் எப்போதுமே முன்னணியில்தான் இருக்கிறார்[7]. ஆனால், குஷ்புவும், நக்மாவும் அவ்வாறு செய்ய முடியாது. அவ்வகையில், ராகுல் தனது திட்டத்தில் கவர்ச்சி அரசியலை சேர்த்துள்ளார் போலும். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத்தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு  இளைஞர்கள்  போராட்டம்  நடத்துவது  புதுவிதமானது. கடந்த  காலங்களில்  தேர்தலில்  போட்டியிட  சீட்  பெறுவதற்காக அந்த  பெண்கள்  புதுவிதமாக ரகசிய  போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[8]. திக் விஜய் சிங் போன்று அனுபவ அரசியல்வாதியாகக் கூறியுள்ளாரா அல்லது தமாஷாக கமென்ட் அடித்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அம்மணிகள் கொத்தித்து போயுள்ளார்கள்.

© வேதபிரகாஷ்

25-10-2015

[1] https://evilsofcinema.wordpress.com/2015/10/17/congress-infight-due-to-actresses-dominating-affairs-in-tamilnadu/

[2]  இருவர்களுக்கும் தந்தை ஒன்று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும்.

[3] தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.

[4] http://www.dinamalarnellai.com/web/news/150

[5] https://evilsofcinema.wordpress.com/2014/01/08/news-manufacture-with-the-clamorous-actress-namita-new-remix-of-politics-unethical-journalism/

[6] https://evilsofcinema.wordpress.com/2014/01/13/news-manufactured-involving-sexy-actresses-with-political-parties-now-namita/

[7] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2014/10/19172736/GlamourOtherwiseDevelopment.vpf

[8] https://indiancommunism.wordpress.com/2015/10/20/women-stripped-naked-for-seat-in-congress/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)!”

  1. நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் -செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)! | சினிமா Says:

    […] […]

  2. நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் -செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)! | சினிமா Says:

    […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: