நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் -செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)!

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)!

குஷ்பு, நக்மா, நமீதா - தாங்குமா காங்கிரஸ்

குஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்

கவர்ச்சி அரசியலுக்கும் திராவிட அரசியலுக்கும் தொடர்பு இருந்தாலும், ஊடகங்கள் இப்படி கிசு-கிசுக்களை செய்தியாக்க பார்ப்பது தமாஷாகத்தான் இருக்கிறது[1]. ஒரு வருடத்திற்கும் மேலாக ஊதிக்கொண்டிக்கும் செய்தி இன்னும் நிஜ-செய்தியாகவில்லை போலும்[2]. நக்மா வருகிறார் என்றதுமே இருக்கின்ற இருபெரும் நடிகைகள் குஷ்பு மற்றும் விஜயதாரிணி (அரசியல் நடிகை) சந்திக்க பிரச்சினைகள் இருந்ததாக செய்திகள் வந்தன[3]. இனி இளங்கோவனுக்குக் கொண்டாட்டம் தான் போல! நக்மாவைப் பற்றி கமென்ட் அடித்தது போல, நமீதா பற்றி என்ன கமென்ட் அடிப்பார் என்று பார்க்க வேண்டும்[4]. நடிகையை வைத்து, இன்னொரு நடிகையைப் பிடிப்பது என்றெல்லாம் சாதாரணமான அளவில் தான் அரசியல்வாதிகளுக்கு சிந்தனையுள்ளது எனும்போது திகைப்பாக உள்ளது[5]. நல்லவேளை அக்கா நடிகையை வைத்து, தங்கை நடிகையை பிடிப்போம் என்ற அளவுக்கு இருக்கிறது. செய்திகள் தயாரிக்கப்படுகின்றனவா என்ற அளவுக்கு, படிப்பவர்களுக்கு சந்தேகம் வருகின்றது.

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

மறுபடியும் நமீதாசெய்திகளை அள்ளிவீசும் ஊடகங்கள்: குஷ்பு, நக்மாவை தொடர்ந்து, நடிகை நமீதாவையும், காங் கிரசில் சேர்க்கும் முயற்சிக்கு, டில்லி மேலிடம் பச்சைக் கொடி காட்டி உள்ளது[6]. இதையடுத்து, நமீதா தரப்புடன் பேச்சு நடந்து வருவதாக, கட்சி வட்டாரம் தெரிவித்தது. செப்டம்பரில் நமீதா அரசியலில் குதித்து, அமைச்சராகி, மக்களுக்கு சேவை செய்யப் போவதாக செய்தி வெளிவந்தது[7]. அந்த அளவுக்கு தமிழக அரசியல் நிலை மாறிவிட்டது[8]. தமிழக காங்கிரசில், சினிமா நட்சத்திரங்களை சேர்க்க, டில்லி மேலிடம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்றதும், நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து, வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கார்த்திக்கை காங்கிரசில் இணையும்படி வலியுறுத்தினர். அதற்கான முயற்சியில், காங்., மீடியா ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி இறங்கினார். சட்டசபை தேர்தலுக்கு முன், தன் முடிவை அறிவிப்பதாக கூறிய கார்த்திக், ‘எஸ்கேப்’ ஆகி விட்டார். இருப்பினும் நடிகர், நடிகையரை இழுக்கும் முயற்சி தொடர்கிறது.

Secular Kusgboo with all religious saris

குஜராத் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நமீதா: முதலில், நடிகை குஷ்புவை இணைத்தனர். அவருக்கு, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே காங்கிரசில் சேர்ந்திருந்த, நடிகை நக்மாவுக்கு, கடந்த மாதம், அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலர் பதவி அளித்து, தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக்கினர். இதை பார்த்ததும், நடிகை நமீதாவுக்கும் அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது; அதை, நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். அதையடுத்து, அவரை, தி.மு.க.,வுக்கு இழுக்க சிலர் முயன்றனர்; அவர் பிடிகொடுக்கவில்லை. தற்போது, பிரபல நடிகர் ஒருவர் மூலமாக, நமீதாவை காங்கிரசில் சேர்க்க, பேச்சு நடக்கிறது[9]. ‘காங்கிரசில் நமீதா இணைந்தால், அவரது சொந்த மாநிலமான குஜராத் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்படுவார்’ என, வாக்குறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அகில இந்திய காங்., மீடியா ஒருங்கிணைப்பாளர், எஸ்.வி.ரமணி கூறுகையில், ”நமீதாவை காங்கிரசில்சேர்க்க, பேச்சு நடக்கிறது. அவர் காங்கிரசில் இணைந்தால், அவர் மூலம், தமிழக காங்கிரசை வலுப்படுத்தும் திட்டமும் உள்ளது,” என்றார்.

காங்கிரஸ் சண்டை - குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

காங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

மே 2014லிலிருந்து செய்யப்பட்டு வரும் முயற்சியா?: தமிழக காங்கிரஸ், 2016 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் என, அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் அறிவித்து விட்டதால், கட்சியை பலப்படுத்தவும், கவர்ச்சி அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், நடிகர்கள் கார்த்திக், பாண்டு, நடிகைகள் நமீதா, தேவயானியை காங்கிரசில் சேர்ப்பதற்கான பேச்சு நடந்து வருகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலில், தமிழக காங்கிரஸ், 39 தொகுதிகளில், தனித்து போட்டியிட்டது. நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக், சமூக சமத்துவ படையின் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவளித்து, அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக, சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் சிரிப்பு நடிகர் பாண்டு ஆகியோரும், பிரசார களத்தில் குதித்தனர்.

இளங்கோவுடன் - முத்தேவியர்- 2015

இளங்கோவுடன் – முத்தேவியர்- 2015

திராவிட கவர்ச்சி அரசியலை பின்பற்ற தீர்மானித்த காங்கிரஸ்: நடிகர், நடிகைகளின் பிரசாரத்திற்கு, காங்கிரஸ் கட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், அ.தி.மு.க., தி.மு.க.,வில் இருக்கும் நட்சத்திர பட்டாளங்களால் வெளிப்படுத்தப்படும் கவர்ச்சி அரசியலைப் போல, தமிழக காங்கிரசிலும் கொண்டு வர வேண்டும் என, இளைஞர் காங்கிரசார் விருப்பம் தெரிவித்தனர். நாடாளும் மக்கள் கட்சியை கலைத்து விட்டு, காங்கிரஸ் கட்சியில், நடிகர் கார்த்திக் இணைந்தால், அவருக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படும் என்றும், அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டது[10]. இதற்கிடையில் நடிகைகள் நமீதா, தேவயானி ஆகிய இருவரையும், தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரசார் அழைத்தனர். ஆனால், அவர்கள் இருவரும், சின்னத் திரை படப்படிப்புகளில் பிசியாக இருந்ததால், பிரசாரத்திற்கு வர முடியாது என, மறுத்து விட்டனர். இருந்தாலும், கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான ரஞ்சன் குமார், நடிகைகள் இருவரிடமும், காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

பிஜேபிகாரகளுடன் சண்டை போட்ட குத்து ரம்யா

பிஜேபிகாரகளுடன் சண்டை போட்ட குத்து ரம்யா

காங்கிரஸின் சினிமா கவர்ச்சி அரசியல் திட்டம்[11] (மே.2014): இதுகுறித்து, தமிழக காங்கிரசார் கூறியதாவது: “லோக்சபா தேர்தல் முடிவில், காங்கிரசின் ஓட்டு சதவீதம் அதிகமாக இருக்கும். அதனால், அடுத்த சட்டசபை தேர்தலில், எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க, திராவிடக் கட்சிகள் போட்டி போடும். ஆனால், 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என, ராகுல் கூறிவிட்டார்.எனவே, கட்சியை பலப்படுத்த, பலதரப்பு மக்களையும் கவரும் வகையில், சினிமா, விளையாட்டு போன்ற புகழ்மிக்க துறையில் பணியாற்றுபவர்களை, கட்சியில் சேர்க்கும் திட்டத்தை வகுத்துள்ளோம். முதல் கட்டமாக, நடிகர்கள் கார்த்திக்கையும், பாண்டுவையும் கட்சியில் சேர்ப்போம். கர்நாடகாவில் இப்படித்தான் நடிகை குத்து ரம்யாவை கட்சியில் சேர்த்து, கட்சிக்கு பலம் சேர்த்தனர். அவருக்கும் எம்.பி.,யாகும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தி நடிகை நக்மாவுக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல், நமீதா காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், தேவயானி அல்லது அவரது கணவருமான இயக்குனர் ராஜகுமாரனுக்கு, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். எனவே, லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், காங்கிரசில் நடிகர், நடிகைள் பலர் சேருவர்”, இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்

இதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்

குஷ்புவிடம் ஆலோசனை கேட்ட நமீதா (ஏப்ரல்.2014): கடந்த ஏப்ரல் 2014ல் தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் ஒருவழியாக தென் சென்னை லோக்சபா தொகுதியில் வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ். ஒருகட்டத்தில் நடிகை நமீதாவை வேட்பாளராக்கவும் காங்கிரஸ் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டதாக கூறப்பட்டது[12]. தமிழகத்தில் கூட்டணி கட்சி எதுவும் இல்லாமல் தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் கட்சியால் தென் சென்னை தொகுதிக்கு வேட்பாளரை கடைசிநிமிடம் வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தொகுதியில் போட்டியிட ராஜாஜியின் பேரன் கேசவன், ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் சி.கே. பெருமாள், மயிலை பெரியசாமி ஆகியோர் விருப்பம் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை நமீதா தாம் அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்த கையோடு குஷ்புவிடம் ஆலோசனை கேட்டதாகவும், அவரோ, மீரட் தொகுதியில் போட்டியிடும் நக்மாவை பிடித்தால் காங்கிரஸில் சேரலாம் என்று அட்வைஸ் செய்தாராம். நக்மா மூலமாக சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் தொடர்பு நமீதாவுக்குக் கிடைத்தது[13]. ஆனால், முடிவாக எதுவும் நிகழவில்லை.

© வேதபிரகாஷ்

01-11-2015

[1] https://evilsofcinema.wordpress.com/2014/01/08/news-manufacture-with-the-clamorous-actress-namita-new-remix-of-politics-unethical-journalism/

[2] https://evilsofcinema.wordpress.com/2014/01/13/news-manufactured-involving-sexy-actresses-with-political-parties-now-namita/

[3] https://evilsofcinema.wordpress.com/2015/10/17/congress-infight-due-to-actresses-dominating-affairs-in-tamilnadu/

[4] https://evilsofcinema.wordpress.com/2015/10/25/sonia-congress-following-dravidian-glamour-politics-with-actresses/

[5] https://evilsofcinema.wordpress.com/2015/10/25/why-sonia-treads-the-path-of-dravidian-politics-of-cinema/

[6] தினமலர், குஷ்புநக்மாநமீதாநடிகையரைத் தேடி காங்., பயணம், அக்டோபர்.31, 2015.00.29.

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-be-getting-into-politics-namitha-234869.html

[8] தமிழ்.ஒன்.இந்தியா, அரசியலில் குதித்து அமைச்சராக ஆசைஅறிவித்த நமீதா, Posted by: Mayura Akilan, Updated: Thursday, September 3, 2015, 9:14 [IST]

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1376277

[10]  தினமலர், நடிகைகள் நமீதா, தேவயானிக்கு காங்கிரஸ் திடீர் வலை, மே.3, 2014:01.14.

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=966346

[12] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகை நமீதாவை தென் சென்னை வேட்பாளராக்க முயற்சித்த காங்கிரஸ்!!, Posted by: Mathi,Updated: Saturday, April 5, 2014, 13:05 [IST]

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-namitha-will-contest-south-chennai-lse-197314.html#slide54628

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: