இரண்டு பெண்டாட்டிக் காரன் மூன்றாவதை வைத்துக் கொண்ட நேரத்தில், பிரச்சினை எழ கொலை செய்தது! நடிக-நடிகையர் ஆனாலும், எல்லாமே நிஜம் தான்!!!

இரண்டு பெண்டாட்டிக் காரன் மூன்றாவதை வைத்துக் கொண்ட நேரத்தில், பிரச்சினை எழ கொலை செய்தது! நடிகநடிகையர் ஆனாலும், எல்லாமே நிஜம் தான்!!!

சசிரேகா, ரமேஷ், லக்கியா

குப்பை தொட்டியில் பெண் பிணம் கண்டெடுக்கப்பட்டது (05-01-2016)[1]: சென்னை போரூர்-மவுண்ட் சாலையில் சின்ன போரூர், ராமாபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த குப்பைத் தொட்டி அருகே கடந்த மாதம் 5-ந்தேதி, 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை துண்டிக்கப்பட்டு இருந்தது. நிர்வாணமாக கிடந்த அவரது உடலில் போர்வை மட்டும் சுற்றப்பட்டு இருந்தது. குப்பைகளை அள்ள வந்த மாநகராட்சி துப்புரவு பணியாளர் சுப்பையா, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராயலா நகர் போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார் என்பது அடையாளம் தெரியாமல் இருந்தது. அவரது தலையும் எங்கு வீசப்பட்டு உள்ளது என்பது தெரியாமல் போலீசார் தேடி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அந்த பெண்ணை அடையாளம் காண்பதற்காக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மாயமான பெண்களின் புகைப்படத்தை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

செப்டம்பர் 2015ல் புகார் அளித்தவர் மாயம்[2]: முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காணாமல் போன இளம் பெண்கள், திருமணமாகி கணவரை பிரிந்தவர்கள், ஆதரவற்ற இல்லங்களில் காணாமல் போனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் மாயமானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் திரட்டினார்கள். பிணமாக கிடந்த பெண்ணின் கைரேகைகளை பெங்களூருக்கு எடுத்துச் சென்று, தமிழகத்தில் உள்ள ஆதார் அட்டைகளில் உள்ள பெண்களின் கைரேகைகள் ஏதாவது ஒன்றுடன் அவை ஒத்துப்போகிறதா? என்று சோதனை செய்தனர். ஆனால் அதில் தகவல்கள் வர காலதாமதம் ஏற்பட்டதால் சென்னையில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து விசாரிக்க தொடங்கினர்.  அப்போதுதான் மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சினிமா துணை நடிகை சசிரேகா என்பவர் தனது மகனை கடத்தி வைத்துக்கொண்டு தன்னை வைத்து குறும்படம் எடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் பறித்து, தன்னை ஏமாற்றிய கணவர் ரமேஷ்சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்து இருந்தார் என்பது தெரியவந்தது. ஆனால் அதன்பிறகு அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது.

சசிரேகாவை காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்: தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க சசிரேகா படப்பிடிப்பு விஷயமாக வெளியே சென்று என்றும், வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி ரோசனை 05-01-2016 அன்று சசிரேகாவின் பெற்றோரிடம் விட்டுச்சென்று விட்டனர். சசிரேகாவின் பெற்றோர் ஜனவரி முதல் வாரத்திலிருந்து அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை எனும் போது, சந்தேகம் எழ ரமேஷிடம் கேட்டுள்ளனர். ஆனால், தனக்கு தெரியாது என்றவுடன், சசிரேகாவை காணவில்லை என்று பெற்றோர் ஏற்கெனவே போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்[3]. அவர்கள் சசிரேகாவின் புகைப்படதையும் கொடுத்திருந்தனர். இந்நிலையில் தான், போரூர் அருகே குப்பைத் தொட்டியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண், சினிமா துணை நடிகை என்பது ஒரு மாதத்துக்கு பிறகு அடையாளம் தெரிந்தது. இது தொடர்பாக அவரது கணவர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்[4].

சினிமா துணை நடிகை: ஒரு மாதத்துக்கு பிறகு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது. கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த பெண், போரூரை அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்த சசிரேகா (வயது 32) என்பது தெரியவந்தது. சினிமா துணை நடிகையான சசிரேகா, குடும்ப பிரச்சினை காரணமாக மடிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்து இருந்தார். ஆனால் அதன்பிறகு அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலையும், போலீஸ் நிலையத்தில் இருந்த சசிரேகாவின் புகைப்படத்தையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் பிணமாக கிடந்தவர் துணை நடிகை சசிரேகாதான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சசிரேகாவின் கணவரும், துணை நடிகருமான ரமேஷ் சங்கர் (35) மற்றும் அவருடைய கள்ளக்காதலி லக்கியா கசிவ் [Lawkiiyaa Kashiiv (30)] ஆகியோரை பிடித்து நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்[5]. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

2011ல் முதல் திருமணம்[6]: மனைவியை கொலை செய்தது ஏன் என்று ரமேஷ்சங்கர் காவல்துறையினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். “எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னை குரோம்பேட்டை அனகாபுத்துாரில் எனது மனைவி மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தேன். ஏலச்சீட்டு தொழில் செய்து வந்த எனக்கு கடன் சுமை ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த எனது மனைவி, மாமியார் ஆகியோர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். [இதுவே சந்தேகத்தில் தான் உள்ளது] தனிமைப்படுத்தப்பட்ட நான் வடபழனியில் உள்ள எனது சித்தப்பா வீட்டில் தங்கினேன். பணத்தேவை ஏற்பட்டதால் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பல நபர்களிடம் ரூ.70 லட்சம் வரையில் வசூல் செய்துவிட்டு காவல்துறையினர் தேடியதால் தலைமறைவாகினேன். [அப்படியென்றால், போலீஸாரிடம், இவனைப்பற்றிய விவரங்கள் ஏற்கெனவே இருந்தது என்றாகிறது] இதன் பின்னர் சினிமா ஆசையில் விருகம்பாக்கத்தில் வந்து தங்கிய எனக்கு லக்கியாவின் தொடர்பு கிடைத்தது”.

லக்கியாவின் தொடர்பும், பிரச்சினைகளும்: ரமேஷ் தொடர்ந்து சொன்னது, “தாய்தந்தையை இழந்த இவர் கேரளாவை சேர்ந்தவர். 17 வயதில் அவருக்கு பாட்டி திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததால் அவர் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். கதாநாயகியாக ஆக்குவேன் என்று அவரிடமும் ஆசை காட்டினேன். இதனால் லக்கியா என்னுடனேயே எப்போதும் இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சசிரேகாவை மடிப்பாக்கத்தில் வைத்து சந்தித்தேன். அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். எனக்கு சினிமா பிரமுகர்கள் பலரிடம் பழக்கம் இருந்து வந்ததால் அவருக்கு ஓரிரு படங்களில் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்தேன். இந்தப்பழக்கம் எங்களுக்குள் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். லக்கியாவை தங்கை என்று சசிரேகாவிடம் கூறியிருந்தேன்[7]. உள்ளுக்குள் பென்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த ஆளுக்கு இருக்கிறது என்பது தெளிவாகிறது. முதல் மனைவி தற்கொலை, இரண்டாவது மனைவியுடன் சண்டை என்ற நிலையில், தங்கை என்று சொல்லி மூன்றாவது பெண்ணுடன் தொடர்பு வைப்பானேன்?

சசிரேகாவை இரண்டாவது திருமணம்: சினிமா துணை நடிகரான ரமேஷ்சங்கர், “நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்” என்ற சினிமா படத்தில் நடித்து உள்ளார். ஏற்கனவே திருமணமான அவர், மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் சசிரேகாவை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். சசிரேகாவும் ஏற்கனவே சாலமன் பிரபு என்பவருடன் திருமணமானவர். அவருக்கு ரோஷன் (7) என்ற ஒரு மகன் இருக்கிறான். இவர்கள் சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் வசித்து வந்தனர். சசிரேகாவும் “நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்” படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இதற்கிடையில் ரமேஷ் சங்கருக்கு கேரளா துணை நடிகையான லக்கியாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் சசிரேகாவுக்கும், ரமேஷ்சங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைப்பற்றி ஊடகங்கள் மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கின்றன. 07-02-2016 வரை அத்தகைய விவரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

வேதபிரகாஷ்

07-02-2016

[1] தினத்தந்தி, தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் சினிமா துணை நடிகை கணவர், கள்ளக்காதலி கைது, மாற்றம் செய்த நாள்: சனி, பெப்ரவரி 06,2016, 3:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, பெப்ரவரி 06,2016, 12:24 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/State/2016/02/07110519/sasirekha-actress-murderFrightened-New-Information.vpf

[3] http://indianexpress.com/article/india/india-news-india/headless-body-recovered-in-chennai-is-that-of-actress-husband-his-girlfriend-arrested/

[4] http://www.ndtv.com/chennai-news/headless-body-found-in-chennai-is-of-tv-actor-sasirekha-husband-arrested-1274628

[5] Arun Janardhanan,  Headless body recovered in Chennai is that of actress; husband, his girlfriend arrested,  Indian Express, Chennai | Published:February 7, 2016 4:10 am

[6] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகையின் தலையை வெட்டி குப்பை தொட்டியில் வீசிய வில்லன் நடிகர்!!, Posted by: Mayura Akilan, Updated: Saturday, February 6, 2016, 13:23 [IST]

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/case-headless-woman-s-body-solved-246172.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: