புளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி உட்பட பல பெயர்களில் வலம் வந்த கல்யாண ராணியான நடிகை!

புளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி உட்பட பல பெயர்களில் வலம் வந்த கல்யாண ராணியான நடிகை!

பலரை கணவராக்கிய 'கல்யாண ராணி'-சிக்கினார் துணை நடிகை ஆன்சி.2அனூப் ஜோசப், ஆன்சியுடன் சென்னைக்கு போன வழியில் வெளிப்பட்ட விவகாரங்கள்: சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் அனூப் ஜோசப் [Anup Joseph (32)]. இவர் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர். இவர் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த அன்சி என்ற பெண்னை [Filominal alias Ansi] 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்[1]. ஒரு வாரம் கழித்து, ஒருவேலை விஷயமாக தனது பெற்றோர் மற்றும் மனைவி ஆன்சியுடன் சென்னைக்கு கிளம்பியுள்ளார். செல்லும் வழியில், அவரின் மனைவி ஆன்சி, திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஒரு வேலை இருப்பதாக கூறி சென்றுள்ளார்[2]. இதுபற்றி அவரிடம் அனூப் விசாரித்த போது அவரிடம் ஆன்சி கோபமாக பேசியுள்ளார். சந்தேகம் அடைந்த அனூப், நீதிமன்றத்தில் ஆன்சியை பற்றி விசாரித்துள்ளார்[3]. அப்போது அவருக்கு பிலோமினா, மீனா என பல பெயர்கள் இருப்பதும், இதற்கு முன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரை திருமணம் செய்தவர் என்பதும், மேலும் அவரின் 15 வயது மகள் மற்றும் 9 வயது மகன் ஆகியோரை விஷம் கொடுத்து ஆன்சி கொலை செய்த விவகாரமும் அனூப்பிற்கு தெரியவந்தது[4]. மேலும், ஆன்சி மீது பல வழக்குகள் நிழுவையில் இருப்பதும், அவர் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்பதும், அவர் மீது விபச்சார வழக்கு மற்றும் தேனியில் ஒரு நகை கடையில் திருடியதாக ஒரு வழக்கும் காவல் நிலையங்களில் இருப்பதை தெரிந்து கொண்ட அனூப்பிற்கு தலை சுற்றியது[5]. ஆனால், சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் ஆள், விசயம் தெரிந்தவராகத்தானே இருந்திருக்க வேண்டும்? பிறகு எப்படி, இப்படி ஏமாந்தார் என்று தெரியவில்லை.

பலரை கணவராக்கிய 'கல்யாண ராணி'-சிக்கினார் துணை நடிகை ஆன்சி.3நொந்து போன அனூப் ஜோசப் போலீஸாரிடம் புகார் கொடுத்தது: கூட வந்த பெற்றோரிடம் விவகாரங்களைச் சொன்னவுடன், அவர்கள் திகைத்து விட்டனர். மகனின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று கொதித்து விட்டனர். இதனால், நொந்து போன அனூப் ஜோசப் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். கேரளா கோட்டயம் மல்லப்பள்ளியை சேர்ந்த அனுஜோசப், 32, திண்டுக்கல் போலீசில் அளித்த புகார் மனு[6]: “சென்னையில் 2014ல் நான் டிராவல்ஸ் நடத்தி வந்தேன். அங்கு ஆதரவற்றோர் ஆசிரமத்தில் தங்கி இருந்த திண்டுக்கல் ஆன்சி, 39, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம், ‘எனக்கு திருமணமாகவில்லை. நான் ஒரு அனாதைஎன்றார். இதையடுத்து 2015ல் கோட்டயத்தில் கிறிஸ்தவ முறைப்படி அவரை திருமணம் செய்தேன். அப்போது அவர் சர்ச்சில் தாக்கல் செய்த உறுதிமொழி படிவத்தில், ‘எனக்கு திருமணமாகவில்லைஎன கூறியிருந்தார். ஏழு நாட்கள் என்னுடன் வாழ்ந்த நிலையில் எனது நகைகளை திருடிக் கொண்டு சென்னை சென்று விட்டார். பிறகு என் மீது கேரளாவில் குடும்ப வன்முறை புகார் கொடுத்து வழக்கு பதியப்பட்டது. அவர் குறித்து விசாரித்த போது பெயர்பிலோமினாஎன்றும், ஏற்கனவே அவருக்கு பலருடன் திருமணமாகி இருந்ததும், பலரை ஏமாற்றியதும் தெரிந்தது. இதுகுறித்து நான் கேட்டதற்கு அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நான் தற்போது திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்டு பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே சென்றபோது, 3 பேர் என்னை வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்[7]. என்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருமணம் செய்து ஏமாற்றி மோசடி செய்த ஆன்சி மற்றும் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்[8].

பலரை கணவராக்கிய 'கல்யாண ராணி'-சிக்கினார் துணை நடிகை ஆன்சி2014-15 ஆன்சி ஆதரவற்றோர் ஆசிரமத்தில் தங்கி இருந்தது: 2013ல் தேனியில் நடந்த நகைக்கடை கொள்ளையில், பரமதுரை என்பவர் சிக்கினார். இவருக்கும் ஆன்சிக்கும் தொடர்பு உள்ளதை போலீசார் உறுதி செய்தனர் என்றபோது, 2014ல் எப்படி சென்னையில் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார் என்று தெரியவில்லை. மேலும் இங்கு அந்த “ஆதரவற்றோர் ஆசிரமம்” பற்றிய விவரங்களும் கொடுக்கப்படவில்லை. இவர்கள் கிருத்துவர்கள் என்பதனால், அது கிருத்துவ ஆசிரமமாகத்தான் இருக்க வேண்டும். விசயங்கள் மறைக்கப்படுகின்றன என்றுதான் தெரிகிறது.

பலரை கணவராக்கிய 'கல்யாண ராணி'-சிக்கினார் துணை நடிகை ஆன்சி. The Hindu2009 ஜூலை 20ல் பெற்ற குழந்தைகளையே விஷம் கொடுத்துக் கொன்றாள்: ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரை திருமணம் செய்தவர் என்பதும், மேலும் அவரின் 15 வயது மகள் மற்றும் 9 வயது மகன் ஆகியோரை விஷம் கொடுத்து 2009 ஜூலை 20ல் ஆன்சி கொலை செய்தது, அவ்வழக்கு இன்னும் நடந்து வருவது முதலிய விவகாரமும் அனூப்பிற்கு தெரியவந்தது[9] என்று செய்திகள் கூறுகின்றன. சப்-இன்ஸ்பெக்டரின் குழந்தைகள் எனும்போது, அவர் அவளை எப்படி விட்டார் என்று தெரியவில்லை. ஆகவே, விஷம் கொடுத்துக் கொல்லக்கூடிய அளவில் குற்றமனது கொண்ட பெண்ணாக இருந்திருக்கிறாள் என்பது திகைப்பாக இருக்கிறது. பிறகு அப்படி பட்ட பெண், எப்படி சென்னையில் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள், அங்குளவளுக்கு இடம் கொடுக்கப்பட்டது முதலியவை வியப்பாக இருக்கிறது. மேலும் கொலை வழக்கு எனும் போது, ஜாமீன் பெற்று தான் வந்திருக்க வேண்டும். ஆக அத்தனை விசயங்களையும் அவள் மறைத்தாளா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

பிளோமினாள் என்ற ஆன்சி சாலிகிராமத்தில் கைது: அவரது புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆன்சியை தேடி வந்தனர். ஆனால் மதுரை, சென்னை அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் அவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். கடைசியில், சென்னை சாலிகிராமத்தில் அவர் பதுங்கியிருந்த போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  போலி பெயர்களில் பலரை திருமணம் செய்து ஏமாற்றிய சினிமா துணை நடிகை ஆன்சி என்ற பிலோமினாவை, 39, திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்[10]. இவ்வழக்கு தொடர்பாக ஆன்சி உள்பட 4 பேர் மீது திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி தலைமையிலான போலீசார், சென்னை சாலிகிராமத்தில் தலைமறைவாக இருந்த ஆன்சியை கைது செய்தனர்[11].  பிறகு திண்டுகல் போலீஸார், அவளை திண்டுகல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பாட்டாள்[12].

 

சினிமா துணை நடிகை[13]: சினிமா துணை நடிகையான ஆன்சி, திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். இவர்  நடிகர் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’, ‘எங்கேயும் எப்போதும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். போலி பெயர்களில் திருமணம் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி கூறியதாவது: “ஆன்சி கடந்த 1996ல் மதுரை புவனேஷ்குமாரை திருமணம் செய்தார். அவருக்கு துர்கா என்ற குழந்தை பிறந்தது. அவரிடம் இருந்து விலகிய நிலையில், திண்டுக்கல்லில் பக்கத்து வீட்டினருடன் ஏற்பட்ட தகராறு குறித்து புகார் அளிக்க, மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற போது எஸ்.., சீனிவாசனுடன் காதல் ஏற்பட்டது. அவரை 2003ல் திருமணம் செய்தார். அவர்களுக்கு சூர்யா என்ற ஆண் குழந்தை பிறந்தது. பின், முதல் மற்றும் இரண்டாவது கணவருக்கு பிறந்த குழந்தைகளை, கடந்த 2009 ஜூலை 20ல் விஷம் வைத்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது[14]. கடந்த 2013ல் தேனியில் நடந்த நகைக்கடை கொள்ளையில், பரமதுரை என்பவர் சிக்கினார். இவருக்கும் ஆன்சிக்கும் தொடர்பு உள்ளதை போலீசார் உறுதி செய்தனர். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விளக்கம் அளித்தார்.
அதன்பின், மனுதாரர் அனுஜோசப்பை திருமணம் செய்துள்ளார். ஆன்சியை, அனுஜோசப் திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்த போது, காரை நிறுத்தி விட்டு அவர் மட்டும் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்றார். அப்போதுதான், ஆன்சி மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்பு அனுஜோசப்பிடம் ரூ.50 லட்சம், 100 பவுன் நகை கேட்டு மிரட்டினார். புளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி உட்பட பல பெயர்களில் வலம் வந்தார். தற்போது கைது செய்துள்ளோம்”, இவ்வாறு அவர் கூறினார்.

புளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி உட்பட பல பெயர்களில் வலம் வந்தபோது யார்யார் மாட்டிக் கொண்டனர்?: மலருக்கு மலர் தாண்டும் வண்டு என்று ஆண்களை சொல்வார்கள், ஆனால், இப்படி பல ஆண்களைத் தேடி சென்ற இப்பெண்ணை என்னென்பது?

  1. 1996ல் மதுரை புவனேஷ்குமாரை திருமணம் செய்தார்[15]. பிறகு விவாகரத்து செய்தார்[16].
  2. …………………………???????????????????
  3. 2003ல் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற போது எஸ்.ஐ., சீனிவாசனுடன் காதல் ஏற்பட்டது.அவரை திருமணம் செய்தார்.
  4. 2013ல் தேனியில் நடந்த நகைக்கடை கொள்ளையில், பரமதுரை என்பவர் சிக்கினார். இவருக்கும் ஆன்சிக்கும் தொடர்பு உள்ளதை போலீசார் உறுதி செய்தனர்.
  5. 2015ல் அனூப் ஜோசப்பை கல்யாணம் செய்து கொண்டார்.

புளோரா, மீனா, ஹெலன், ஆன்சி, ஷைனி உட்பட பல பெயர்களில் வலம் வந்தபோது யார்-யார் மாட்டிக் கொண்டனர் என்று தெரியவில்லை. இன்னும் செய்திகள் வரும்!

© வேதபிரகாஷ்

16-02-12016

[1] தமிழ்.வெப்துனியா, அப்பாவியை ஏமாற்றி மூன்றாவதாக திருமணம் செய்த நடிகை கைது, செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (11:37 IST).

[2]  மாலைமலர், சென்னை வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகை கைது, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 16, 8:01 AM IST.

[3] http://www.maalaimalar.com/2016/02/16080157/supporting-actress-arrested-ma.html

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/co-artist-arrested-for-cheating-and-threatning-116021600015_1.html

[5] தினகரன், அடியாட்கள் மூலம் நகை, பணம் கேட்டு கணவரை மிரட்டிய துணை நடிகை கைது, பதிவு செய்த நேரம்:2016-02-16 01:55:21

[6] தமிழ்.ஒன்.இந்தியா, என் மனைவி கொலைகாரிகொள்ளைக்காரி”- கேரள வாலிபரை ஏமாற்றி மணந்த திண்டுக்கல் பெண், Posted by: Vijayalakshmi, Published: Saturday, January 23, 2016, 12:33 [IST].

[7] தினத்தந்தி, தன் மீதான கொலை, திருட்டு வழக்குகளை மறைத்து கேரள வாலிபரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மகளிர் போலீசார் விசாரணை, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜனவரி 22,2016, 1:42 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜனவரி 22,2016, 1:42 AM IST.

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/lady-traps-dindigal-cheating-case-245113.html

[9] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/co-artist-arrested-for-cheating-and-threatning-116021600015_1.html

[10] தினமலர்,  பலரை கணவராக்கியகல்யாண ராணி‘: சிக்கினார் துணை நடிகை ஆன்சி, பிப்ரவரி.16, 2016.

[11] http://m.dinakaran.com/detail.asp?Nid=196463

[12] Acting on a complaint, the police secured Ansi from Saligramam in Chennai and produced her before the Dindigul Court. It remanded her to 15 days judicial custody. Police sources said that real name of the accused was Filominal.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/tv-artiste-held-in-dindigul/article8242664.ece

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=1457713

[14] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2016/01/22014229/On-her-murder-theftHiding-casesYoung-married-KeralaWomen.vpf

[15] The police also suspected that she might be involved in jewellery shop robbery case in Theni in 2013. She had married Bhuvaneswar in 1996 and divorced him. Again, she reportedly married a police inspector in Dindigul in 1999. Later, she went to Chennai to act in films and serials, the police added.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/tv-artiste-held-in-dindigul/article8242664.ece

[16] She had married Bhuvaneswar in 1996 and divorced him. Again, she reportedly married a police inspector in Dindigul in 1999.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tv-artiste-held-in-dindigul/article8242663.ece

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: