ரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை: சினிமாக்காரனின் அறிவு அப்படித்தான் இருக்கும், இதில் என்ன ஆச்சரியம், வருத்தம் வேண்டிக் கிடக்கிறது – இன்னொரு “டாக்டர்” பட்டம் கொடுத்தால் போயிற்று!

ரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை: சினிமாக்காரனின் அறிவு அப்படித்தான் இருக்கும், இதில் என்ன ஆச்சரியம், வருத்தம் வேண்டிக் கிடக்கிறதுஇன்னொருடாக்டர்பட்டம் கொடுத்தால் போயிற்று!

விஜயுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம் மார்ச் 2016

மார்ச்.20 முதல் 23 வரை என்ன செய்து கொண்டிருந்தாகள்?: கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தெறி. இயக்குநர் அட்லி இயக்கி வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசைமைத்துள்ளார்[1].  ‘தெறி’ இசை வெளியீட்டு விழா சென்னையில் 20-03-2016 ஞாயிற்றுக் கிழமை அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது[2] என்று விகடன் போன்ற பத்திரிக்கைகள் போற்றித் தள்ளின. இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தன்னுடைய பேச்சுக்கு இடையே இரண்டு குட்டிக் கதைகளைச் சொன்னார். அதில் ரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதை என்று ஒரு கதையைக் குறிப்பிட்டார். மாவோ சீன தேசத்து தலைவர், ரஷ்ய தலைவர் அல்ல, என்று செய்திகள் வெளியாகின. மார்ச் 20 முதல் 23 வரை கண்டுகொள்ளாமல், பிறகு காம்ரேடுகள் கொதித்து எழுந்துள்ளார்கள் என்று தெரிகிறது.

Vijay and Mao - getti ng into controversies March 2016மாவோவை அவமதிக்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டு விட்டது (23-03-2016): மதன் என்ற காமரேட் கொத்திது, இவ்வாறு பதிவு செய்துள்ளார், “இதில் வேடிக்கை அல்ல வேதனை என்னவென்றால்விஜய் சொன்ன கதையில் குறிப்பிட்ட மாவோ ரஷ்ய தலைவர் அல்ல, சீனாவின் தலைவர். மாவோ பற்றி விஜய்க்கு தெரியாததைப்போலவே அவரது ரசிகர்களுக்கும் மாவோ யார் என்று தெரியாதது செம பொருத்தம். சீனாவை தவறுதலாக ரஷ்யா என்று குறிப்பிட்டுவிட்டதாக விஜய் பின்னர் விளக்கம் அளித்திருக்கிறார். அது ஒருபக்கம் கிடக்கட்டும், தான் சொன்ன கதையில் மாவோவை அவமானப்படுத்தும் வகையில் அதாவது மக்களின் செல்வாக்கை இழந்தவர் என்பதுபோல் கதைவிட்டிருக்கிறாரே விஜய்[3]. தேர்தல் நேரம் என்பதால் கம்யூனிஸ்ட்டுகள் பிஸி. இல்லை என்றால் செமத்தியாக சிக்கி இருப்பார் விஜய். யுவர் ஹானர்சேகுவேரா பற்றி சீமான்களும், மாவோ பற்றி விஜய்களும் பேசுவதை உடனடியாய் தடை செய்ய வேண்டும்”, என்று நீதிமன்றத்தில் முறையீடும் செய்துள்ளார்[4].  ஆனால், செய்துள்ள எச்சரிக்கையும் நோக்கத்தக்கது.

சைனா 1962ல் படையெடுத்தது - மாவோவின் சதிரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதைநடிகன் சொன்னது[5]: இப்பொழுதெல்லாம் கதை சொல்லும் வியாதி பிடித்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதா, ரஜினிகாந்த போன்றோர் அதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அரசியல் ஆசை கொண்ட விஜய், அப்படியே இறங்கி விட்டார் போலும்! ஒரு நாள் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியான மாவோ, சாலையில் போகும்போது ரோட்டோரமாக ஒரு சிறுவன் அவருடைய போஸ்டர்களை வைத்து விற்பனை செய்வதைப் பார்த்தார். அந்தச் சிறுவனின் அருகில் சென்று பார்த்தபோது, அங்கேயிருந்த அனைத்து போஸ்டர்களுமே தன்னுடையதுதான் என்று தெரிந்து கொண்டார். அந்தச் சிறுவனிடம், ‘இனிமேல் என் போஸ்டரை மட்டும் போடாதப்பா.. மத்த தலைவர்களின் போஸ்டர்களையும் போட்டு விற்பனை செய்யுப்பா..’ என்றார். அதற்கு அந்தச் சிறுவன்.. ‘மத்தவங்க போஸ்டரெல்லாம் வித்திருச்சு.. இதுதான் விக்காதது..’ என்றானாம்.  எனவேதான் சொல்றேன்.. வாழ்க்கைல கர்வப்படவே கூடாது.”  என   மாவோவை  ரஷ்ய தலைவர் என்று  கதையில்  நடிகர் விஜய் ஒரு கதையைக் குறிப்பிட்டார்.

News-paper-headlines-during-1962-Indo-china-warரஷ்ய தலைவர் மாவோ பற்றிய கதைவிகடன் சொன்னது[6]: விகடன் நிருபர் மாவோ ஆதரவாளர் போலிருக்கிறது, பொறிந்து தள்ளி விட்டார், “ஆனால் மாவோ உண்மையில் சீனாவின் தலைவர். மாவோஎனும் மாசேதுங் நவீன சீனாவை வடிவமைத்ததும்,   கம்யூனிஸத்தின் கீழ் சீனப் பேரரசை நிறுவியதும் இவரே. சீனாவின் முதல் கம்யூனிஸ்ட் ஜனாதிபதியாக திகழ்ந்தவர். தான் சாகின்றவரையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்கியவர். இப்போதும் உலகம் தழுவிய பொதுவுடமை பேசும் அனைத்து வகையான கம்யூனிஸ்ட்களுக்கும், இப்போது உலகப்பொது உடமை சித்தாந்தங்கள் பேசுகிறவர்கள் மாவோவை பற்றி குறிப்பிடாமல் பேச முடியாது. அந்தளவுக்கு மக்களுக்காக உழைத்த தலைவர்,” என்று புகழ்ந்து தள்ளி விட்டார், ஆனால், 1960-62களில் மாவோ எப்படி இந்திய எல்லைகளை ஆக்கரமித்துக் கொண்டு, படையெடுத்து, இந்தியர்களுக்கு துரோகம் செய்து, ராணுவ வீரர்களைக் கொன்று குவித்தார் என்பதைப் பற்றியெல்லாம் குறிப்பிடவில்லை. ஆக, இந்தியாவில் நாட்டுப்பற்றி இப்படித்தான் வேலை செய்யும் போலிருக்கிறது, அதாவது, மாவோவுக்கு வக்காலத்து வாங்கும், இந்திய ஊடகக்காரர்கள்!

Nehru failure in containing Chinese aggressionதவறான பேச்சுக்கு விஜய் வருத்தம் தெரிவித்தது: விஜய்யின் பேச்சைக் குறிப்பிட்டு இணையத்தில் பலரும் அவரைக் கலாய்த்து வந்தார்கள். விஜய்யின் பேச்சில் இருந்த தவறு குறித்து அவரது நெருங்கிய நபர்கள் விஜய்யிடம் தெரிவித்தார்கள். இது தொடர்பாக விஜய் தரப்பில் இருந்து அளித்த விளக்கத்தில் “சுட்டிக்காட்டப்பட்ட தவறை விஜய் அறிந்தார். கதை சொல்லும்போது பெயரைத் தவறாக சொன்னதற்காக வருத்தப்பட்டார்[7]. தன் ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லும்போது, தெரியாமல் நடந்த தவறு அது[8]. மேடையில் பேசும்போது அத்தகைய தவறுகள் வருவதுண்டு என்று அவர் கூறியதுடன், இனி கவனத்துடன் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்[9]. “ஆமா.. மாவோ மேட்டர் தவறுதான்….. ஆனா கருத்து சரிதானே!- விஜய் வருத்தம்,” என்று தமிழ்.பிளிம்.பீட்டில் நியாயப்படுத்தியதாகவும் செய்தியுள்ளது[10]. அதாவது கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்கிறார் போல! சரி, அப்படியென்ன, விஜய் மாவோ பற்றி கூறி விடப்போகிறார்?

நடிகனுக்கு “பொது அறிவு” – ஜெனரல் நாலேட்ஜ் – தேவையா?: ஆங்கில நாளிதழ்கள் விஜயின் “பொது அறிவை” வெளுத்து வாங்கி விட்டன[11]. கிண்டலையும் சேர்ந்து அவரது அபாரமான “பொது அறிவை” வெளிப்படுத்தியன[12]. இப்பொழுது எது நாட்டினம், தேசிய இனம் (nation), நாட்டினவாதம், தேசியவாதம் (nationalism), நாட்டின அரசு, தேசிய அரசு (nation-state), நாட்டவன், சுதேசி (native), நாட்டுப்பற்று, தேசப்பற்று, தாயகப்பற்று (patriotism), போன்ற விவாதங்கள் எல்லாம் நடந்து கொண்டிருப்பதனால், மாவோ எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது கூட தெரியாமல் இருக்கிறாரே என்று கூட நக்கலடித்தன[13]. இத்தகைய அறிவு ரசிகர்களை பாதித்துள்ளதாகவும் விளக்கியுள்ளன[14]. இது குழப்பமா, அறியாமையா என்றெல்லாம் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. நடிகனுக்கு பொது அறிவு தெரிந்திருக்க வேண்டிய அவசியமா இல்லையா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்,

shankar-vijay-mgr-universityடாக்டர் விஜய் இப்படி உளறலாமா?: ஒரு நடிகனுக்கு இதெல்லாம் தேவையா, கூடாதா என்றெல்லாம் கூட வாதம்-விவாதங்கள் செய்ய முடியாது, ஏனெனில், அவர்கள் இப்பொழுது, எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கின்றனர். போதாகுறைக்கு, நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் இவர்களுக்கு “டாக்டர்” பட்டம் கொடுத்து, கௌரவித்துத் தூக்கி ஏங்கோ விடுகின்றனர். 27.08.07 அன்று டாக்டர் பட்டம் பெற்றுவிட்டதால், இப்படி உளறுவது, அப்பட்டத்திற்கே கேவலமாகி விடுகிறது. திரையுலகில் எத்தனையோ ஹீரோக்கள் இருக்க விஜயை தேர்ந்தெடுத்தது ஏன்? என்று ஆகஸ்ட் 2007ல் கேட்டபோது, ஏ.சி.சண்முகம் (A.C.Shanmugam), துணைவேந்தர், “நடிப்புத்திறன், உணர்ச்சி வெளிப்பாடு, துறுதுறுப்பு, ஊக்கம், சேவை மனப்பான்மை, சினிமாவில் சமூக அக்கறை ஆகியவற்றை பிரதிபலிப்பதால் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்குவது பொருத்தமானது. மேலும், காதலுக்கு மரியாதை படத்தில் காதலை விட பெற்றோர்களே உயர்ந்தவர்கள் என்ற கருத்தை சொன்னதற்காகவும், லவ் டுடே, சிவகாசி போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்த ரோல்களுக்காகவும்தான் “, என்றாராம்[15].  இதனால் தான், அவர்கள் அதிகபிரசங்கித் தனமாக பேசவும், கருத்துக் கூறவும் ஆரம்பித்து விடுகிறார்கள். சினிமா மோகம், மயக்கம், போதைகளில் ஆட்கொள்ளப்பட்டுள்ள சிறுவர்-சிறுனியர், மாணவ-மாணவியர், இளைஞர்கள் எல்லோருமே இவர்களை “ரோல்-மாடல்” அல்லது, ஏதோ பின்பற்றப்பட வேண்டியவர் என்பது போல மாயையில் உழல்வதால், இவர்கள் சொல்வதைத்தான் கேட்பார்கள் அல்லது உண்மை என்று நம்புவார்கள். இதனால், மற்ற சித்தாந்திகள் கண்டு கொள்ளாமல் இருந்தாலும், கம்யூனிஸ்டு காம்ரேடுகள் அரண்டு பொய்ய் விட்டனர் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

23-03-2016

[1] தினமணி, மாவோ குறித்த கதை: வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய், By  சென்னை, First Published : 23 March 2016 12:23 AM IST

[2]http://www.dinamani.com/cinema/2016/03/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/article3341109.ece

[3] தமிழ்.டாக்கிஸ், மக்களின் செல்வாக்கை இழந்தவரா மாவோ? – விஜய்யின் வேடிக்கை பேச்சுக்கு கண்டனம், By Madhan, Cinema News, 23 March 2016

[4] http://thetamiltalkies.net/2016/03/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/

[5] விகடன், தெறி பாடல்விழாவில் நடந்த தவறுவருத்தம் தெரிவித்தார் விஜய், Posted Date : 15:36 (22/03/2016).

[6] http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/61049-vijay-says-sorry-for-saying-wrong-story.art

[7] தி.இந்து, தெறிவிழா பேச்சில் பிழை: தவறுக்கு வருந்திய விஜய்!, Published: March 22, 2016 14:42 ISTUpdated: March 22, 2016 14:42 IST

[8] http://tamil.filmibeat.com/heroes/vijay-regrets-his-mistake-theri-stage-039387.html

[9] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/article8384434.ece

[10] tamil.filmibeat.com, ஆமா.. மாவோ மேட்டர் தவறுதான்.. ஆனா கருத்து சரிதானே!- விஜய் வருத்தம், Posted by: Shankar, Published: Tuesday, March 22, 2016, 7:59 [IST]

[11] Times of India, For Vijay, Mao Zedong is a Russian leader!, TNN | Mar 22, 2016, 01.00 AM IST

[12] http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/For-Vijay-Mao-Zedong-is-a-Russian-leader/articleshow/51494528.cms

[13] Filimibeat, OH NO! Ilayathalapathy Vijay’s Confusion Over Mao’s Nationality Irks Fans, Gets Trolled Online, By: Avinash Gopinath, Published: Tuesday, March 22, 2016, 11:12 [IST]

[14] http://www.filmibeat.com/tamil/news/2016/vijay-s-confusion-over-mao-s-nationality-irks-fans-gets-trolled-online-220050.html

[15] http://www.koodal.com/tamil/movies/hotnews/448/vijay-and-director-shankar-get-doctorate

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: