குஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் – திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு!

குஷ்புநமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ்திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு!

நமீதா-திருமலை-விஜயம்.2

ஜெயலலிதாவின் வெற்றியைக் கொண்டாடும் பக்தர்கள், ரசிகர்கள், தொண்டர்கள்: ஜெயலலிதா வெற்றிப் பெற்றதற்கு, தொண்டர்கள் பலவழிகளில் நேர்த்திக் கடன் செய்து வருகிறார்கள். ஒருவர் தனது விரலை வெட்டிக் கொடுத்துள்ளார். மொட்டை அடிப்பதெல்லாம் சாதாரணமான விசயமாகி விட்டது. இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகை நமீதா, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் நமீதா, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்[1]. இந்நிலையில் அந்த நேரத்தில் அவருடைய பிறந்தநாள் வந்ததால் திருப்பதி சென்று வழிபட்டார் நமீதா[2]. அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நமீதா, இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறி இருந்தார்[3]. ஆனால், தேர்தல் கூட்டங்களில் பிரச்சாரம் செய்ய இவருக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை[4].

நமீதா-திருமலை-விஜயம்.1பிரச்சாரத்தில் குஷ்புவும், நமீதாவும்: நமீதவுக்கு தமிழ் பேச வராது, ஒருவேளை நடிகை என்ற முறையில் கூட்டம் வந்தாலும், ஓட்டு கிடைக்கும் என்று சொல்ல முடியாது, மேலும், ஏற்கெனவே, நடிகை விந்தியா ஓரளவுக்கு திராவிட பேச்சாளார்களுக்கு இணையாக பேசி வருவதால், நமீதாவை உபயோகப்படுத்த வேண்டாம் என்று முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், குஷ்பு முன்னர் திமுகவுக்கும், இப்பொழுது காங்கிரஸுக்கும் ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார். இவருக்கும் தமிழ் ஒழுங்காக பேச வராது. இருப்பினும், இவரைப் பார்ப்பதற்கு கூட்டம் வருகிறது. திராவிட கட்சிகளைப் பொறுத்தவரையில், கவர்ச்சி அரசியல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. சினிமாவை வைத்துக் கொண்டுதான், அத்தகைய கவர்ச்சி அரசியல் நடத்தப் பட்டது. நடிகர் வருகிறார் என்றால் அப்பொழுது கூட்டம், நடிகை வருகிறார் என்றால் இப்பொழுது கூட்டம்! நடிகையாதலால், பார்ப்பது மட்டுமல்லாது, தொடவும் ஆசைப்படுவார்கள். அவர்களும் சமாளித்து, செல்வார்கள்.

kushboo, சோனியா, இளங்கோநமீதாவின் திருமலை விஜயம்: நடிகைள் திருமலைக்கு போவது ஒன்றும் விசித்திரமான காரியம் அல்ல, ஆனால், நமீதா அதை அரசியலாக்கி இருக்கிறார் என்று தெரிகிறது. உடனே, தமிழ் ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசியுள்ளன. நமீதவும் சந்தர்ப்பத்தை விடவில்லை. இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் 21-05-2016 அன்று குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். எப்படித்தான் ஊடகக்காரர்கள் கேமராக்களுடன், அங்கு சென்று, தயாராக, போட்டோ எடுக்க நின்றனர் என்பததை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தகவல் கிடைத்தால், மழை-வெயில் என்றெல்லாம் கூட பார்க்காமல் காத்துக் கிடக்கும் ஜீவிகள். சாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலை விட்டு வெளியே வந்த நமீதாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களை பார்த்து நமீதா இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். ஊடகக்காரர்கள் விடுவார்களா, அவர்களும் சூழ்ந்தார்கள்.

kushboo-rahul-ilangaovanவேண்டியபடி ஜெயலலிதா மறுபடியும் முதலமைச்சர் ஆனதால் வேண்டுதல்: அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது[5], ‘தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றிய நலத்திட்டங்களால் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது[6]. முதலமைச்சர் ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்[7]. அவரது நல்லாட்சி தொடர்வதற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்[8]. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என நான் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்தேன்[9]. எனது வேண்டுதலை ஏழுமலையான் நிறைவேற்றி உள்ளார். தற்போது, எனது பிரார்த்தனை நிறைவேறியதை தொடர்ந்து, ஏழுமலையானை தரிசித்து நன்றி சொல்லவே இங்கு எனது குடும்பத்துடன் வந்துள்ளேன்“, என்றார்[10]. அதாவது, முன்னர் தான் சொன்னது நடந்து விட்டது என்று கூறிக்கொள்கிறார். ஜெயலலிதா தான் ஜெயிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும், தனக்கும் தெரியும் என்று ஆரூடம் போல சொல்லிக்கொள்கிறார் போலும்!. நமீதா நிலை இவ்வாறிருக்க, குஷ்பு நிலை வேறு மாதிரி இருக்கிறது.

குமரி அனந்தன், குஷ்பு பிரச்சாரம்தோல்வியால் அதிர்ச்சியில் குஷ்பு – அவரது ஆரூடம் பொய்த்து விட்டது: நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். மோடி முதல் ஜெயலலிதா வரை விமர்சித்தார். ஜெயலலிதவை எதிர்த்து போட்டியிடுவேன் என்றெல்லாம் முன்னர் வாய்சவடால் விட்டது ஜாபகம் இருக்கலாம். தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையும் வெளியிட்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவரது கணிப்புக்கு எதிராக அமைந்து விட்டன. அதாவது குஷ்புவ்ன் ஆரூடம் ஒய்த்து விட்டது. அ.தி.மு.க வென்று ஆட்சியை தக்கவைத்து இருக்கிறது. இது குஷ்புவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தது போன்று வராவிட்டாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டுள்ளார் குஷ்பு என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[11]. ஆரவாரமாக இருந்த அவர் அமைதியாகி விட்டார். தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்க போனில் தொடர்பு கொண்டும் அவரை பிடிக்க முடியவில்லை[12]. நமீதாவை திருமலையில் மலையேறு போட்டோ பிடித்து, பேட்டி எடுத்த ஊடகக்காரர்கள், உள்ளூரில் குஷ்புவை இடிக்க்க முடியவில்லை என்பது ஆச்சரியம் தான்!! ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றது, குறிப்பாக விஜயதாரிணி வெற்றி பெற்றது குறித்து கூட மூச்சு விடவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது[13]:

ஆௐஆஆ, ௐஊஶ்ஊடுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்து மறைந்து விட்ட குஷ்பு: ‘‘சிலருக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு தோல்வி கிடைக்கும். இதுதான் வாழ்க்கை சக்கரம். தேர்தலில் வென்ற .தி.மு..வுக்கு வாழ்த்துக்கள். மேலும் தேர்தலில் வெற்றிபெற்ற மம்தா, நரேந்திர மோடி, கேரள இடதுசாரி கட்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான், பலர் உயரத்துக்கு போனதை பார்த்து இருக்கிறேன். உயரத்தில் இருந்து கீழே விழுந்து விடாமல் உங்களை காத்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பதை விட என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு முக்கியம். எனது குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு கிளம்புகிறேன். அவர்கள் விடுமுறையில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடப்போகிறேன்.’’  இவ்வாறு டுவிட்டரில் குஷ்பு கூறியுள்ளார்[14]. வெளிநாடு போகிறேன் என்றதை தமிழ்.வெப்துனியா, “நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா?” என்று ஏதோ செய்து விட்டது மாதிரி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[15]. ஆங்கில ஊடகங்கள் குஷ்புவுக்கு தேவையில்லாமல் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனால், இவ்விசயத்தில் கண்டுகொள்ளவில்லை.

குஷ்பு, குமரி அனந்தன்நடிகர்-நடிகையர் தேர்தல் பிரச்சாரம் எடுபடவில்லை: நடிகை என்பதினாலே, பிரச்சாரம் எடுபடாது என்று இத்தேர்தல் காட்டுகிறது. காங்கிரஸ் குஷ்பு, நக்மா என்று பட்டியல் இட்டது. ஆனால், ஏதோ காரணத்திற்காக நக்மா பிரச்சாரம் செய்யவில்லை. பிஜேபி கூட சினிமாகாரர்களை சேர்த்துக் கொண்டது. நெப்போலியன் என்ன காரணத்திற்காகவோ பிரச்சாரம் செய்யவில்லை என்று தெரியவில்லை, ஆளும் காணாமல் போய் விட்டார். அழகிரி ஆதரவு என்பதனால், திமுகவுக்கு சங்கடத்தை எற்படுத்த பிஜேபியில் சேர்ந்தது போல காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், இம்முறை தமிழகத்தில் நடிகர்-நடிகையர் பிரச்சாரம் எடுபடவில்லை என்றே தெரிகிறது. விஜய்காந்த் நடிகராக இருந்தும், படுதோல்வி அடைந்துள்ளார். சந்திரசேகர் மற்றும் கருணாஸ் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்கள்.


© வேதபிரகாஷ்

24-05-2016

[1] தினபூமி, .தி.மு.. தேர்தல் வெற்றிக்காக நடிகை நமீதா திருப்பதியில் குடும்பத்தினருடன் வேண்டுதல் நிறைவேற்றினார் , May 22, 2016

[2] தமிழ்.வெப்துனியா, ஜெயலலிதாவுக்காக, வேண்டுதலில் இருக்கும் நமீதா: நிறைவேறியதால் திருப்பதி பயணம், திங்கள், 23 மே 2016 (10:00 IST)

[3] http://www.thinaboomi.com/2016/05/22/56438.html

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/namitha-went-to-tirupati-again-for-jayalalithaa-s-win-116052300004_1.html

[5] விகடன், ஜெயலலிதா வெற்றிதிருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றிய நமீதா!, Posted Date : 11:44 (23/05/2016).

[6] தினத்தந்தி, .தி.மு.. வெற்றி பெற்றதையடுத்து நடிகை நமீதா திருப்பதியில் சாமி தரிசனம் வேண்டுதலை நிறைவேற்றியதாக பேட்டி, மாற்றம் செய்த நாள்:

திங்கள் , மே 23,2016, 3:18 AM IST; பதிவு செய்த நாள்: திங்கள் , மே 23,2016, 3:18 AM IST.

[7] தமிழ்.ஒன்.இந்தியா, அம்மா வெற்றி…. திருப்பதி போய் நன்றி சொன்ன நமீதா!, By: Shankar, Published: Monday, May 23, 2016, 10:24 [IST]

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/namitha-s-thanks-giving-visit-tirumala-254334.html

[9]  http://www.dailythanthi.com/News/State/2016/05/23031829/Actress-Namitha-darshan-at-Tirupati.vpf

[10] http://www.vikatan.com/news/tamilnadu/64480-jayalalitha-victory-namita-went-to-tirupathi.art

[11] தமிழ்.ஒன்.இந்தியா, ஜெயலலிதாவை வாழ்த்திவிட்டு நாட்டை விட்டு கிளம்பும் குஷ்பு, By: Siva, Published: Friday, May 20, 2016, 17:52 [IST]

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/khushbu-wishes-jayalalithaa-254210.html

[13] தினத்தந்தி, சட்டமன்ற தேர்தல் முடிவு பற்றி நடிகை குஷ்பு கருத்து, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, மே 22,2016, 3:21 AM IST.

[14] http://www.dailythanthi.com/News/State/2016/05/22032120/Actress-Khushboo-opinion-about-the-results-of-legislative.vpf

[15] தமிழ்.வெப்துனியா, நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா?, Last Modified: ஞாயிறு, 22 மே 2016 (09:58 IST).

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actress-khushboo-congratulate-admk-government-116052200003_1.html

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: